Showing posts with label ப மு க. Show all posts
Showing posts with label ப மு க. Show all posts
Monday, March 28 45 comments

ப .மு.க.கூட்டணி முடிவு + தேர்தல் அறிக்கை...




நேற்று திடீர் என்று எனக்கு ஒரு போன் வந்தது யார் நம்பர் என்றே தெரியவில்லை ...நானும் போனை எடுக்கவில்லை போன் வருவதும் நிற்க வில்லை மணி தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது...யார் தான் அது என்று போனை ஆன் செய்தேன். பேச்சு குரல் கேட்டவே இல்லை...அழுகுரல் மட்டும் வந்தது...நானோ யார் நீங்க ஏன் அழுகுறீங்க என்றேன்....சிறிது மெளனத்திற்கு பிறகு நான் தான் தம்பி T.R பேசுறேன் சொல்லுங்க சார் ஏன் அழுவுறீங்க...தேர்தல்வந்தும் என்னை எவனும் கண்டுக்க மாட்டுறான். அதான் தம்பி எங்க கட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம். 


நான் : சார் சும்மா காமெடி பண்ணாதீங்க சார்...உங்களுக்கு ஏது கட்சி. நீங்க தேர்தலை புறக்கணிக்கிறேன் சொல்லுங்க நான் நம்புறேன்.  உங்களுக்கு கட்சி இருக்கான்னு யாருக்கும் தெரியாது அப்பறம் எப்படி கூட்டணி பேசவருவாங்க...சார் நீங்க ஏன் தேர்தலில் நிக்கல உங்களுக்கு உங்க பையன் கூட ஓட்டு போட மாட்டான் அதானே காரணம்.

TR : என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க ஏய் டண்டனக்கா... ஏய் டனக்கணக்கா நான் பாட்டு பாடினா போதும் ஓட்டு எல்லாம் எனக்கு தான்...விழும் 

நான் : பின்ன ஓட்டு போடலேன்னா பாடியே கொன்னுடுவீங்க அதுக்கு ஓட்டே போட்டு தொலைச்சிடலாம்.....

TR : தம்பி இங்க பாருங்க நான் எப்படி வாயிலே மியூசிக் போடுறேன் பாருங்க...

நான் : சார் சார் நிறுத்துங்க போதும் அப்பறம் கொலை கேஸ்லே உள்ளே போயிடுவீங்க  

சரி சரி எதுக்கு போன் பண்ணீங்க அதை சொல்லுங்க முதல் 

TR : என்னை யாரும் கூட்டணி சேர்க்கல நீங்க உங்க கட்சியில் கூட்டணி சேர்த்து கொள்ளுங்க.....

நான் : இல்லைங்க முடியவே முடியாது நாங்க ஆண்டவனிடம் மட்டும் தான் கூட்டணி வைச்சுக்குவோம் போங்க சார் வேற கட்சி பாருங்க.

இப்படியே ஒரு ரெண்டு மணிநேரம் போனில் மொக்க போட்டார் TR அப்படியே அதை கட் பண்ணி போனை வைச்சா மறுபடி போன் வந்தது அட இது யார் 

நான் : ஹலோ 

ஹாய் ஹ லோ வ ந்து...நான் தான் ஹி ஹி 

 நான் : ஹலோ சார் நீங்க பேசுறது சரியா கேக்கலை நல்லா பேசுங்க 

ஏய் என்ன...என்ன... தெரியலையா...

நான் : யார் சார் நீங்க...????

ஏய் கூல் கூல் நான் தான் கார்த்திக் பேசுறேன் 

நான் : சார் சொல்லுங்க சார் என்ன வேண்டும் உங்க மாமா சந்திர மெளலி எப்படி இருக்கார்..??

கார்த்தி : இஸ் பைன் சௌந்தர்...ரொம்ப முக்கியமான விஷயம் நீங்க எங்க கட்சிக்கு அதரவு தெரிவிக்கணும் அப்படி செய்தால் எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கும். 


நான் : கார்த்திக் எப்போ கட்சி ஆரம்பித்தீங்க சொல்லவேயில்லை...சரி உங்களுக்கும் அந்த கூட்டணிக்கும் என்ன பிரச்னை...???

கார்த்தி : அது வந்து...வந்து...வடிவேல் சொன்னாரே ஒரு பேச்சு வார்த்தை அதில் எங்களை உள்ளே சேர்க்கவில்லை...நாங்க எல்லாம் சின்னப்பங்கச சொல்லி வெளிய நிக்க வைச்சுடாங்க...எங்களை மதிக்கவேயில்ல அதனால நாங்க வெளிய வந்துட்டோம்...உங்க பமுக கட்சி எங்களை ஆதரிக்கணும்....

நான் : சரி சரி கார்த்திக் இதை பற்றி நம்ம நெக்ஸ்ட் மந்த பேசுவோம் 

கார்த்தி : சௌந்தர் நெக்ஸ்ட் மந்த தேர்தல் முடிஞ்சுடும் எங்க கட்சியை விட உங்க கட்சி ரொம்ப தூங்கும் போல

நான் : சரி சரி நாளைக்கே பேசுவோம் ...

சரி கூட்டணி குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்னனு அம்மாவை பார்க்க போன தலைவரை போன் செய்து பேசினேன் 

நான் : வணக்கம் தலைவரே என்ன ஆச்சி உங்க தோழி கூட்டணி 

தலைவர் : நான்  வருத்தப்படத வாலிபர்  சங்க  தலைவர்  கைப்புள்ள  பேசுறேன் , யார்  பேசுறது?

நான் : இப்பொழுது நீங்க தனியா தேர்தலில் நின்னா நீங்க தான் அடுத்த முதல்வர் ..

தலைவர் : இப்படி உசுப்பு எத்தி ஏத்தி ஒடம்ப ரணகளமா ஆக்குறீங்க தம்பி முடியல என்ன விட்டுங்க தம்பி...

நான் : என்ன தலைவரே நீங்க தேர்தலில் நிற்க கூடாது என்பதற்காக 1000 கோடி லஞ்சம் கொடுத்ததா சொல்றீங்க இது ஓவரா தெரியல 100 கோடி கொடுத்தா நீங்களே தேர்தலில் நிக்க மாட்டிங்க...!!!


தலைவர் : தம்பி உண்மையெல்லாம் இப்படி வெளிய சொல்ல கூடாது..எனக்கு சுயமரியாதையை தான் முக்கியம்...(சூனா பானா இப்படியே மைட்டேன் பண்ணு... போ போ போ.)...

நான் : சரிங்க தலைவரே உங்ககிட்ட நான் அப்பறம் பேசுறேன்...!!!

தற்போதைய நிலைமையை பார்த்து செயற்குழு ஒரு முடிவு எடுத்து உள்ளது நாங்கள் யாருடனும் கூட்டணியில்லை தனித்து களம் காண உள்ளோம்...என்பதை தெரிவித்து கொள்கிறோம்  

ப.மு.க தேர்தல் அறிக்கை 

*  அனைவருக்கும் தினம் இலவசமாக பின்னூட்டம் போடப்படும்....

*  வலைதளத்தை யாரும் ஹக் செய்யாமல் இருக்க பாதுகாப்பு படை அமைக்கப் படும் 


*  கணினி பழுது ஆனால் வீட்டிற்கே வந்து சர்விஸ் செய்து தரப்படும் 

*  தங்கள் பதிவுகளை புத்தகமா வெளியிடும் செலவை அரசே ஏற்று கொள்ளும் 

*  இணையம் இணைப்பு இலவசமாக வழங்கப்படும்...

*  மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும் 

*  58 வயதிற்கு மேற்பட்டோர் எந்த ப்ரோசின் சென்டர் சென்றாலும் இலவசம்   

*  பதிவுலக சண்டைகள் அடிக்கடி நீர்த்துப் போவதால் மாதம் இரண்டு புதிய சண்டைகள் கட்சியின் சார்பில் அமலாக்கப்படும். அதில் சேர்ந்து சண்டையிட்டுப் பிறவிப்பயனடையலாம்

எந்த எந்த தொகுதியில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பின்னர் வெளியிடுவோம்....ஆகவே பதிவர்களே மன்னிக்க மக்களே உங்களது பொன்னான வாக்குகளை ப .மு.க கட்சிக்கு அளித்து நாடு வளம்பெற உதவுங்கள்


Wednesday, July 14 216 comments

பதிவர்கள் முன்னேற்ற கழகம்....



                                                        
                                                      
எதற்கு உங்களை இங்கு அழைத்தேன் என்றால் நீண்ட நாட்களா என்னை எப்போது கட்சி தொடங்க போறிங்கனு  கேட்டு வந்தார்கள்  என் தொண்டர்கள்.   நானும் மேல இருப்பவன் சொல்லவேண்டும் என்று சொல்லி வந்தேன். இப்போது தான் எங்க வீட்டு மேல இருப்பவர் சொன்னார் நீங்கள் இப்போ கட்சி தொடங்கலாம் என்றார் அதனால்  உடனே கட்சி தொடங்கலாம் என்று முடிவு எடுத்து விட்டேன், மேல இருப்பவன் சொல்லி தான் நான் எதையும் செய்வேன். அறிமுக மாநாடு அன்று உங்களை சந்திக்கிறேன்.. கட்சி பெயர் ப.மு.க. (பதிவர்கள் முன்னேற்ற கழகம்).        








பதிவர்கள் முன்னேற்ற கழகம். அறிமுக மாநாடு.        
வரவேற்புரை:கோமாளி செல்வா 
இங்கு வந்து இருக்கும் அனைவருக்கும் என் முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எதையாவது தொலைத்து விட்டு தேடிக்கொண்டு இருக்கும் அரபு நாடு தேவா அவர்களே... சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் செந்தில் அவர்களே...சுடுதண்ணி புகழ் ஜெய்லானி அவர்களே.... நாஞ்சில் எக்ஸ்பிரஸ் ஓட்டி கொண்டு இருக்கும் நாஞ்சில் அவர்களே... திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி அவர்களே.... பெண்களுக்கு சமைக்க தெரியாது என்று தெரிந்து சமயல் குறிப்பு தரும் (US) உழவர் சந்தை அன்புடன் ஆனந்தி அவர்களே.....மற்றும் ஜெயமாறன் அவர்களே, வில்சன் அவர்களே, ஜீவன் அவர்களே, ரொம்ப நல்லவன் ரமேஷ் அவர்களே, அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.... 



அடுத்தாக தேவா அவர்கள் பேசுவார்...

நான் நம்ம தலைவர் அவர்களை எப்போதோ இருந்து சொல்லிவருகிறேன். நமக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்துக்கு நாம் தான் 2011 ஆட்சியை புடிப்போம், என்று சொல்லி வந்தேன். தலைவர் எனக்கு போன் செய்து நான் கட்சி தொடங்க போவதாக சொன்னார், என் தேடலை ஒத்தி வைத்து விட்டு  வந்து விட்டேன்.   நிச்சயம்  2011 நமது ஆட்சி தான், வளர்க ப.மு.க... வளர்க தலைவர் குடும்பம்...நன்றி வணக்கம்.....என் தேடல் தொடரும்....




அடுத்து செந்தில் அவர்கள் பேசுவார்....

மேடையில் அமர்ந்து இருக்கும் என் நண்பர் தேவா அவர்களே, மற்றும் இங்கு அமர்ந்து இருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிர்க்கும் மேலான தலைவர் அவர்களே.... நீங்கள் கட்சி தொடங்க போவதாக என்னிடம் சொன்னீர்கள்... அப்போது  நான் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டு இருந்தேன் உடனே அந்த முதலாளியை விடுமுறை கேட்டேன் அவன் இல்லை என்றான் நான் அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தேன்.வருடம் முழுவதும் விடுமுறை கொடுத்து விட்டான். தலைவரே உங்களுக்காக என் வேலையை தியாகம் செய்து இருக்கிறேன்; அந்த 40 கோடியில் எனக்கும் எதாவது செயுங்கள் தலைவரே...


எங்கள் தலைவன், கருமை நிற கண்ணன் பேச்சிலே மன்னன், சிந்தை சிற்பி, சயனைடு குப்பி, செயல் சிங்கம், பிரச்சர பிரங்கி, ஒருவாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்க கூடிய போர் குணம் கொண்ட போர் வாள்,என்று போற்ற படும் எங்கள் தலைவர்.. இப்போது பேசுவார்..

பெரியோர்களே தாய்மார்களே,மற்றும் என் வலை பதிவு உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம், எனக்கு ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதால் என்னை கட்சி தொடங்கும் படி நீங்கள் வற்ப்புறுத்தி கேட்டு கொண்டதால் இந்த கட்சி தொடங்கினேன், எனக்கு பதவி ஆசை கிடையாது.. ஓரு 40 கோடி 50 கோடி வாங்கி விட்டு, ஆண்டவன் கிட்ட தான் கூட்டணி என்று சொல்வேன்...மேலும் இப்படி ஓரு கட்சியை ஆரம்பித்து மக்களை குழப்புவது தான் எங்கள் திட்டம்.
           

தலைவர்:சௌந்தர்          
துணை தலைவர்:விஜய் 
பொருளாளர்: தேவா 
செயலாளர் :கே.ஆர்.பி.செந்தில்   
கொள்கைபரப்பு செயலளர்:நாஞ்சில் பிரதாப்

மற்ற பதவி எல்லாம் யார் யார் எவ்வளவு பெட்டி தருவிர்களோ அவர்களுக்கு பதவி தரப்படும்...



மாநாட்டு தீர்மானம்
1 அனைவருக்கும் இனைய செலவு அரசே ஏற்க்க வேண்டும்

2 வைரஸ் வராமல் தடுக்க அனைவர் வீட்டுக்கும் சென்று அவர்கள் கணினி மீது ப்ளீசிங்  பவுடர் அடிக்க வேண்டும்.

3 பதிவுகளுக்கு அரசே ஆட்களை வைத்து ஓட்டு போட வைக்க வேண்டும்    

4 பதிவர்களுக்கு z பிரிவு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் 

5 பதிவர்களுக்கு பாரத ரத்தனா விருது வழங்க வேண்டும் 

6  பதிவிற்கு மாதம் 1000 ஊக்க தொகை தரவேண்டும் 

7 எங்கள் அரபு நாட்டு தேவா எதையோ தொலைத்து விட்டு தேடி கொண்டு இருக்கிறார் அதை கண்டு பிடித்து தரவேண்டும். 

8 நாங்கள் ஆட்சியை அமைக்க நீங்கள் ராஜனாமா செய்து விட்டு எங்களுக்கு பதவி பிரமானம் செய்து 
வைக்க வேண்டும்.
9 செந்தில் அவர்களின் பதிவுகளை நாட்டுடமை ஆக்க வேண்டும்.



ஜெயமாறன்: இப்போது நன்றி உரை 
மைக்ரோசப்ட் துறைக்கு நன்றி, இனைய சேவை அளிக்கும் b,s,n,l மற்றும் மின்சார துறைக்கு நன்றி,இந்த மாநாட்டுக்கு வந்த  அணைவருக்கும் நன்றி நன்றி நன்றி........  


















 
;