Monday, June 20 22 comments

உனக்குள் நான்...






உனக்குள் நான் இருக்க 
வெளியில் எங்கெங்கோ 
தேடி கொண்டுயிருக்கிறாய்..
என்னை..!!

*****

உன் நேசத்தின் ஆழத்தை 
காண கோபம் கொள்கிறேன்
உன்னிடம்...


கடலை விட ஆழமானது 
உன் நேசம்..!!!

என் பொய் கோபம் 
அறியாத முட்டாள் 
பெண் நீ..!!!

********

நேசம் என்னும் புயலால் 
உன்னை தாக்கி சென்று விடுவேன்..!! 

நான் வந்த தடத்தோடு 
நிலைமாறாமல் ...
நீ..!!

******

உன்னை காண வேண்டுமென்றேன் 
ஒளியாய் வந்தாய் 
நான் விட்டில் பூச்சியாய் 
வருவதை அறியாமல்..!!! 
உன்னை கண்ட அக்கணமே 
உயிரற்று போனேன்..!!

*****

என் வீட்டு அறையெங்கும் 
உன் வாசம்
நீ சென்ற பின்பும்...!!! 

உன் குரல் கேட்டு மயங்கிய குயிலுக்கு
உயிர் கொடுக்க மீண்டும் 
ஒரு முறை வந்து விட்டு போ..!!! 

******




என் நேசம் என்றும் பொய்யல்ல 
                                                 உன்னை போல்..!!!!





Wednesday, June 15 26 comments

காதல் தேவைதானா..???





இப்பொழுது அனைவரும் முனு முணுத்துக் கொண்டுயிருக்கும் வார்த்தை காதல் திருமணம் செய்ததால் இப்படி அநியாயமா கொலை பண்ணிட்டாங்களே. அந்த பையனை கொலை செய்து விட்டு ஒரு ஆறு மாதமோ ஒரு வருடதிலோ வேறு ஒரு திருமணம் செய்து வைத்து விடலாம் என்ற நினைப்பு, என்ன ஒரு வில்லத்தனம்...!! இவனுங்க எல்லாம் மனுசனா இவ்வாறு சாமானிய மக்கள் பேசி கொள்கிறார்கள்.

காதல் திருமணம் செய்தால் இப்படியா கொலை செய்வது..??? இதே போல்  வட மாநிலத்தில் இப்படி ஒரு முறை நடந்து இருக்கிறது. கிராமங்களில் இப்படி நடைப் பெற்றுள்ளது என கேள்வி பட்டிருப்போம், அவையெல்லாம் கோவத்தில் நடந்திருக்கலாம்.  ஆனால் இப்படி திட்ட மிட்டு கொலை செய்வது இதுவே முதல் முறையென எனக்கு தோன்றுகிறது.

நாம் வாழும் தேசத்தில் காதல் என்றால் ஏதோ தகாத வார்த்தை போல் பார்கின்றார்கள்காதல் என்ற வார்த்தைக்கு இங்கு பல நல்ல  அர்த்தங்கள் இருந்தாலும் அவையெல்லாம் கண்ணுக்கு  தெரியாது, ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே தெரியும்.

நம் வீட்டில் உள்ளவர்களுக்கு, சினிமாவிலும் நாடகத்தில் வரும் காதல் பிடிக்கும். அதே காதல்  நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது. எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை பின்பற்றும்  நம்  மக்கள் ஏன் இந்த காதல் விஷயத்தில்  மட்டும் வெளிநாட்டினரை பின்பற்ற மறுக்கிறார்கள்..??.  

திருமணம் செய்து விட்டார்கள் என்றால் அந்தநேரம் அமைதியாக இருப்பதே சிறந்தது. நம் வீட்டில் ஒருவர் காதல் திருமணம் செய்தால் கோபம் வரலாம், ஆனால் கொலை செய்யும் அளவுக்கு வர கூடாது,

ஏன்னென்றால் பிள்ளைகள் நம்முடன் 25 வருடம், தான் வாழ போகிறார்கள். மீதி இருக்கும் 60 வருடங்கள் அவர்கள் சேர்ந்து வாழ போகிறார்கள், அவர்கள் சேர்ந்து வாழ போகும் வாழ்க்கை அவர்கள் தீர்மானிப்பதில் என்ன தவறு இருக்க போகிறது. நம் பிள்ளைகள் காதல் செய்கிறார்கள் என்றால், அவர்கள் விரும்பும் நபருக்கே திருமணம் செய்து வைத்து விடலாம்.


காதலர்களும் தவறு செய்கிறார்கள், அவர்கள் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்வது தவறு, முதலில் வீட்டில் தங்கள் விருப்பத்தை சொல்ல வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியும் கேட்கவில்லை என்றால் தான், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ய வேண்டும்.


காதல் திருமணத்தை பணக்காரர்கள் தான் அதிகம் எதிர்கிறார்கள், அடி தட்டுமக்கள் எல்லாம் அவ்வளவாக  எதிர்ப்பதில்லை. நடுத்தர மக்கள் சிலர் ஏற்றுகொண்டும், சிலர் ஏற்றுகொள்ளமலும் இருக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை காதல் திருமணங்கள் ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இவையெல்லாம் மாறுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம்.   

ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல் தேவைதானா..??? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது

Monday, June 6 6 comments

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!



இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.


    இப்படத்தை உங்கள் வலைபக்கத்தில் கெஜட்டில் சேர்த்து கொள்ளுங்கள் 

ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.

இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள். குழந்தைகளையும் அழைத்து வாருங்கள் அவர்களுக்கு ஈழ  நிகழ்வைப் பற்றி அடுத்த தலைமுறைக்கும் தெரியவரும்.  

இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.





மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.


நன்றி : கும்மி 




வேண்டுகோள் : இந்தப்பதிவை பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .



 
;