Monday, August 30 35 comments

குட்டிக் குறும்பின் பிறந்த நாள்...

பரத்குமார் 


கட்டிக் கரும்பின் பிறந்த நாள்...
குட்டிக் குறும்பின் பிறந்த நாள்...
விளையாட்டாய் வளர்ந்து
ஒரு வயதை எட்டிப் பிடித்த திரு நாள்
செல்வ சிறப்போடு வாழ வாழ்த்திடுவோம்...

Friday, August 27 32 comments

புகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...


புகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்று விட்டு வெளியே வரும் உணவை நாம் மறு படி உண்பது இல்லை, அதை போல் தான் வெளியே வரும் புகையும் ஒரு கழிவு.


ஆனால் புகை பிடித்து வெளியே விடுவார் அதை மீண்டும் அவர் சுவாசிப்பார்...அவர் பக்கத்தில் இருப்பவரும் அதை சுவாசிக்க வேண்டும்  அவர்கள் வெளியே விடும் புகை மற்றவர்கள் சுவாசிப்பதால் அவர்களுக்கும் கெடுதல் வீட்டில் குழந்தை இருக்கும் அப்படியே இவர்களும் புகை பிடிப்பார்கள்...நான் தான் புகை புடிக்கின்றேன் குழந்தைக்கு எதுவும் ஆகாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை சிறு வயதில் இருந்தே இந்த புகை உடலுக்கு சென்றால் எதிர் காலத்தில் மிக கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது..

                                                                    
புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல்நலத்துக்கு எதிரி என்பதை நன்கு அறிந்துகொண்டிருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். புகை பிடிக்காமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்த பலரை அவர்கள் பொதுவாக உதாரணம் காட்டுவார்கள்.அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள்

புகை பிடித்தல் என்பதொரு நடைமுறைப் பழக்கம். அதில் ஒரு பொருளாக மிகப் பெரும்பாலும் புகையிலை எரிக்கப்பட்டு அதன் புகை சுவைக்க அல்லது உள்ளிழுக்கப்படுகிறது. இது முதன்மையாக மனம் மகிழ்விக்கும் போதைப் பயன்பாட்டினை நிர்வகிக்கும் வழிமுறையாக நடைமுறையிலுள்ளது. அப்போது எரிதலுக்குள்ளாகும் பொருள் போதைப் பொருளிலுள்ள நிகோடின் போன்ற சுறுசுறுப்பான பொருட்களை வெளியிடுகிறது. அவற்றை நுரையீரல் வழியாக உறிஞ்சப்பட்டு கிடைக்கச் செய்கிறது.

                                                                        
சிகரெட்டிற்காக ஒரு பெரும்தொகையினை, புகை பிடிப்பவர்கள் அவர்களை அறியாமலே செலவிடுகின்றனர். அதாவது, காசு கொடுத்து, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். தாம் பாடுபட்டு வேலை செய்த பணத்தைத் தம் உடம்பைக் கெடுத்துக் கொள்ளப் பயன்படுத்துவதை விடப்பெரிய அறிவீனம் ஏதும் உண்டா?

புகை பிடிப்பதால் வரும் தீமைகள் 

*  அடிகடி உடற் சோர்வு ஏற்படும்


*  வேலையில் கவனமின்மை,புகை பிடிக்க அடி கடி வெளியே செல்வார்கள் 

*  ஆஸ்துமா பிரச்னை வரும் 

*  உங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண் இருந்தால் பிறக்கும் குழந்தை ப்ரீமெச்சூர் பேபியாக பிறக்கும் புத்தாண்டு முதல் அல்லது வரும் பிறந்த நாள் முதல் சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்திவிடுவேன் என்று சபதம் எடுப்போம் எல்லாம் மறு நாளே முடிந்து விடும் நம் மனதிற்கு நம்மே கட்டுபாடு வைத்து கொள்ள வேண்டும் 


                                                                    
புகை புடிப்பதை விடுவதற்கு சில வழி முறைகள் 

மற்றவர்கள் புகை பிடித்துக்கொண்டு இருந்தால், அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். புகை அலர்ஜி என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

*  சிகரெட்டிற்குப் பதிலாக, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களைக் குடிக்கலாம். 

*  குழந்தைகளுடன் விளையாடலாம். விளையாடினால் நேரம் செல்வதே தெரியாது

*  காலையில் யோகா,தியானம், மாலை வாக்கிங்,  

*  புகை பிடிப்பதால் நமக்கு மட்டும் பிரச்னையில்லை நம் குடும்பத்திற்கும் பிரச்னை என்று நினைக்க வேண்டும். 

நீ மறைந்த பிறகுதான் வைப்பார்கள் கொள்ளி ஏன் உயிருடன் இருக்கும் போதே தினமும் வைத்து கொள்கிறாய் கொள்ளி 

Thursday, August 26 21 comments

இளைஞர்களின் புதிய இயக்கம்..


                                                      
இனி ஒரு..இனி ஒரு விதி செய்வோம் விதியினை மாற்றும் விதி செய்வோம்


இளைஞர்கள் சேர்ந்து தொடங்கி இருக்கும் மாயா இந்தியா இயக்கம் ஆகஸ்ட் 15. 2009 அன்று தோற்றுவிக்கப்பட்டது இளைஞர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது 

அதற்காக ஒரு வலைபதிவு தொடங்கி இருக்கிறார்கள் எப்படி நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்," என்று விவேகானந்தர் கேட்டாரோ அதை போல மாயா இந்தியா இளைஞர்களை கேட்கிறது..


நாட்டில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கிறது அதில் இதுவும் ஒன்று என்று நினைத்து விடாதீர்கள் ஒரு சின்ன தீ பொறி இருந்தால் அதை வைத்து பெரிய தீ பந்தம் உருவாக்கி விடலாம்...  இளஞர்கள் அதரவு இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் வாருங்கள் மாயா இந்தியாவிற்கு 

இந்தியாவை முன்னேற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களை ஒன்று சேர்ப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்

நீங்கள் எங்கே இருந்தாலும் சரி.எந்த நாட்டில் இருந்தாலும் சரி,எந்த ஊரில் இருந்தாலும் சரி. நீங்கள் அங்கு இருந்தபடியே உங்கள் சேவையை நம் நாட்டிற்கு அர்ப்பணிக்கலாம், உங்கள் தொண்டை நம் இயக்கத்திற்கு செய்யலாம். உங்களின் நாட்டிற்காக சேவை செய்யும் நல்ல உள்ளம் மட்டுமே இப்போது தேவை என்று கேட்கிறது மாயா இந்தியா


மாயா இந்தியா குறிக்கோள்கள் 

*  இந்தியாவை கயவர்களின் கையில் இருந்து எடுத்து நம் இந்திய மக்களுக்கே பரிசளிப்பது.

*  அனைத்து தரப்பு மக்களையும் உண்மையான சுதந்திர காற்றை சுவாசிக்க செய்வது

*  தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவுதல்.

*  கண் எதிரே நடக்கும் அநீதிகளையும் காதால் கேட்கும் அநீதிகளையும் நேரில் சென்று நியாயம் பெற்றுத் தருவது.  

*  அனைவரும் சாக்கடை என்று சொல்லும் அரசியலில் துணிந்து இறங்கி சுத்தம் செய்வது 

*  அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச சட்ட உதவி பெற்றுத் தருவது 

*  அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழி செய்வது

*  எல்லாவற்றுக்கும் முதல் செயலாக நம் இந்தியாவை முன்னேற்ற துடிக்கும் அனைத்து இளைஞர்களையும் ஒன்றினைப்பது 


மேலும் இந்த இயக்கத்தில் எப்படி இணைவது இயக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த வலைதளத்தை பார்க்கவும்..மாயா இந்தியாTuesday, August 24 141 comments

எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்...


                                                                             


வம்சம் என்ற உடன் கலைஞரின் வம்சம் பற்றிய படம் என்று வெறும் வாயை மென்று இருப்பிர்கள்...ஆனால் கதை அது கிடையாது 

தேவர் சமுகத்தில் மொத்தம் 11 வம்சம் அதில் 'எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்' என்ற வம்சத்தில் ஒரே ஒரு ஆண் மகன் தான் இருக்கிறார் அவரையும் கொலை செய்ய பார்கிறார்கள்...கதையின் கரு 


படத்தின் முதல் காட்சி காவல் நிலையத்தில் ஆரம்பிக்கிறது....திருவிழாவிற்கு பாதுகாப்பு அதிகமா போட வேண்டும் என்று.. பேசிக் கொள்கிறார்கள்.. 

திருவிழா காட்சி ஒவ்வொரு வம்சத்தில் இருந்தும் 150 பேர், 200 பேர், என்று வருகிறார்கள் நம்ம அருள் நிதி மட்டும் ஒரு ஆளாய் வருகிறார்...அப்போது வில்லனை பார்த்து கொண்டே செல்கிறார்...வில்லன் ஜெயப்ரகாஷ்..இந்த திருவிழாவுக்குள்ளே.. கருவறுத்திரணூம்”என்று சொல்கிறார் பன்னிகறியும் பட்ட சாராயம் குடிக்க வேண்டும் என்று சொல்வார்...கதை பின்னோக்கிச் செல்கிறது

ஊருக்குள் குடியிருந்தால் மற்றவர்களை போல மகனும் சண்டை சச்சரவுகளில் இறங்கிவிடுவானோ என்று ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வாழ்கிறார் ஹீரோ அருள்நிதியின் அம்மா. அப்படியிருந்தும் வலிய வந்து சேர்கிறது சண்டை....

ஒரு கும்பல் வேனில் வந்து இது (அருள் நிதி அப்பா) ரவுடி ரத்தினம் வீடா? என கேட்கிறார்கள் எங்க அப்பா சாக இழுத்துக் கொண்டு கிடக்கிறார் அவரின் கடைசி ஆசை   என்னனு கேட்டேன் அதற்கு 25 வருடத்திற்கு முன்பு ரவடி ரத்தினம் என் கையை வெட்டிடான் அவன் குடும்பத்தின் ஒருத்தன் கை வேண்டும் என்று சொல்றார் எங்க அப்பா கடைசி ஆசையை நிறை வேற்ற வேண்டும் சொல்வாங்க...அருள் நிதியின் அம்மா இதைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்னு சொல்லுவாங்க....எங்க அப்பா கடைசி ஆசை நிறைவேற்றியே தீர வேண்டும் சொல்வார்கள் அன்பஅரசு ஓடு ஓடு மாமா கிட்ட ஓடு சொல்வாங்க ஹீரோ ஓடுவர் இது ஹீரோ கதாபாத்திரம் 

                                                                             
வில்லன் தன் வீட்டில் வேலை செய்தவன் வேலை புடிக்க வில்லை என்று சொல்லி போய்விடுவான் அவனை கூப்பிட்டு கொண்டு வருவார் வில்லன் ஜெயப்ரகாஷ்..அவனை வேலைக்கு அழைத்து வந்து இனி யாரும் இவனை திட்டாதீர்கள் போய் வேலை செய் சொல்வார்  ஜெயப்ரகாஷ்..சிறிது நேரத்தில் இவன் வேலை செய்வதே சரி இல்லையே நி வேலை பார்ப்பது திருப்தி இல்லை வேலைக்கு வேண்டாம் சொல்வார்...

அந்த வேலை கரனை பார்த்து நீ எண்டா சீனி கண்ணு தேவர் சரி இல்லை வேலைய விட்டு நின்னுட்டேன் சொல்றது நான் சொல்றேன் நீ வேலைக்கு வேண்டாம் இப்போ போய் சொல்லு நான் வேலைய விட்டு எடுத்துட்டேன் சொல்லு எதையும் நான் தான் முடிவு செய்வேன்...சொல்வார் அப்போது அவர் துண்டு கிழே விழுந்து விடும் அதை ஒருவர் எடுத்து தருவார்....என்னை மதிக்காத துண்டு எனக்கு தேவை இல்லை தூக்கி போட்டு வேற துண்டு கொடு சொல்வார் இது வில்லன் குணம் 

ஆசையாக வளர்த்த பசுவை அண்டை கிராமத்திற்கு விற்க, அதுவோ பிறந்த இடம் தேடி அவ்வப்போது திரும்ப ஓடி வருகிறது. ஒப்படைக்கப் போகிற நேரத்தில் மாட்டுக்கு சொந்தக்காரி சுனைனா மீது காதலே வந்துவிடுகிறது அருள்நிதிக்கு. அப்புறம் என்ன? இவரே பசுமாட்டை களவாடி திரும்ப திரும்ப ஒப்படைக்கப் போகிறார். அருள் நிதி காதலுக்கு மாடு தூது போகும், கஞ்ச கருப்பு காதலுக்கு பூனை தூது போகும்செல்போன் சிக்னல் கிடைக்க அந்த கிராமம் மொத்தமும் மரத்தின் உச்சியில் ஏறி ஹலோ சொல்வதெல்லாம் செல்போன் வைத்து செய்யும் நகைசுவை அருமை 


முதல் படத்திலே தன்னை அன்னார்ந்து பார்க்கக்கூடிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் அருள்நிதி. அம்மாவுக்கு கட்டுப்பட்ட மகனாக, அதே சமயம் படித்த விவசாயியாக வளம் வரும் அருள்நிதி, சுனைனாவிடம் காதல் வயப்படுவதிலும் சரி, தனது காதலிக்காக களத்தில் இரங்கி வில்லன்களை ரவுண்ட் கட்டுவதிலும் சரி, அட்ரா சக்கை என்று சொல்ல வைக்கிறார். 


அருள்நிதியின் அப்பாவாக வரும் கிஷோர், ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அசத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் கிஷோரின் நடிப்பும் அபாராம். அருள்நிதியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுபம்குமாரின் பாத்திரமும் மனதில் நிற்கும் விதத்தில் இருக்கிறது. கஞ்சா கருப்பு வரும் காட்சிகள் சிரிப்புக்கு உத்திரவாதம் கொடுக்கின்றன

                                                                       
சுனைனா, நல்ல நடிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் நட்ட நடுரோட்டில் ஊர் பெரிய மனுஷனை சாணியை கரைத்து முகத்தில் ஊற்றியதோடல்லாமல் விளக்குமாற்றாலும் அடி கொடுப்பது திடுக்கிடும் திருப்பம், ஒரு காட்சியில் அருள் நிதியும் சுனைனா  காட்டில் பேசி கொண்டு இருப்பார்கள் அப்போது வில்லன் ஆட்கள் சுனைனா  அடிக்க வருவார்கள் அப்போது சுனைனா இடுப்பில் வைத்து இருக்கும் சைக்கிள் சையினை எடுத்து அடிக்க போவார்ஹீரோயின். ஹீரோ..ஹீரோயின் கையை பிடித்து கொண்டு ஓடுவார் அருள் நிதி.. படத்தில் பார்த்தல் இன்னும் அருமையா இருக்கும். 

பாடல்கள் மன்னாதி மன்னரு... மருதாணி பூ பாடல்கள் அருமை காதல், கலாட்டா, காமெடி என்று ஒரு வினாடி கூட தொய்வு ஏற்படவில்லை...மொத்தத்தில் வம்சம் பார்த்தல் உங்கள் வம்சம் நினைவுக்கு வரும் 


Monday, August 23 27 comments

மணிமாறன்....

                                                                       
                                                                  

பொழுது விடிந்தது. சூரியன் அவனைத் தொட்டுப் பார்த்தது, மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கினான் மணிமாறன். குளித்து விட்டு..வந்தான். எப்போதும் கோவிலுக்கு சென்று விட்டு வேலைக்குச் செல்வது அவன் வழக்கம்..கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்தான்...

நண்பர்கள் வெளியே காத்திருந்தனர்....வெளியே வந்த மணிமாறன் இன்று நமக்கு எங்க வேலை என்று கேட்டான்..ஒரு ஆள் கையை வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்...கூட இருக்கும் இன்னொரு நண்பன் என்ன விசயம் அவன் கையை மட்டும் எடுக்க சொல்லி பணம் வந்து இருக்கு...மணிமாறன் டேய் கையா இருந்தா என்ன தலையா இருந்தா என்ன நமக்கு பணம் வந்தால் சரி.... அவர்கள் வேலையை முடித்து விட்டு வந்தார்கள்....


மாலை நேரம் செல் போன் மணி அடிக்க எதிர் முனையில் அவன் தம்பி அசோக் அண்ணா என்ன எப்போதும் நீயே போன் செய்து பேசுவாய் என்ன ஆச்சு உனக்கு...ஒன்றும் இல்லை அசோக் கொஞ்சம் வேலையா வெளியே போய்விட்டேன்..அப்படியே மறந்தது விட்டேன்....உனக்கு கல்லூரியில் எல்லாம் வசதியா இருக்கா விடுதியில் சாப்பாடு எல்லாம் நல்லாயிருக்கா ...இருக்கு அண்ணா நீ தான் எனக்கு எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கியே எனக்கு என்ன கவலை?


டாக்டருக்கு படிப்பது என்றால் பெரிய விசயம் என்று எல்லோரும் சொல்றாங்க நீ ரொம்ப நல்லா படிக்கணும் அது தான் என்னுடைய ஆசை...மணிமாறன் எப்போது பேசினாலும் இந்த வார்த்தை சொல்வது வழக்கம்..சரி அண்ணா தினமும் எனக்கு போன் செய் நல்லா சாப்பிட்டு தூங்கு நான் நாளைக்கு பேசுறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டான் அசோக்.

சில நாட்களுக்கு எந்த வேலையும் அவனுக்கு வரவில்லை....சிறிது நாள் கழித்து ஒரு கொலை செய்ய வேண்டும் என்று ஒரு அரசியல்வாதி மூலம் வேலை வருகிறது அவனுக்கு கொலை செய்வது ஒன்றும் புதியது இல்லை ஏற்கனவே கொலை செய்து இருக்கிறான்...கொலை செய்ய போகிறான் மணிமாறன் அவன் கத்தியை வைத்து அவனை குத்தி விட உடம்பில் இருந்து ரோஷத்துடன் ரத்தம் வெளியே வருகிறது ஏனோ அதை மணி மாறனால் பார்க்க முடிய வில்லை..அந்த இடத்தை விட்டு உடனே சென்று விட்டான்... 


நேரம் எட்டு மணியை காட்டியது அவன் தம்பியிடம் இருந்து போன் வரும் இன்னும் வரவில்லையே என்று புலம்பி கொண்டு இருந்தான்...மணிமாறன் போன் செய்தாலும் எந்த தகவலும் இல்லை மணி மட்டும் அடித்து கொண்டு இருந்தது...நேரம் பன்னிரெண்டை தொட்டது கைபேசி மணி ஒலித்தது கண் விழித்து பேசினான் அதிர்ச்சியான செய்தி கேட்டு ஆடி போனான்..அவன் தம்பிக்கு விபத்து நடந்து மருத்துவமனையில் இருப்பதாக தகவல் கேட்டு உடனே அங்கு சென்றான்...தலையில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது..


மருத்துவர்கள் உடனே AB- இந்த வகை குருப் ரத்தம் தேவை படுகிறது என்று சொல்கிறார்கள் டாக்டர் எனக்கும் அந்த வகை ரத்தம் தான் என்று சொல்கிறான் உடனே ரத்தம் கொடுக்க செல்கிறான் ரத்த வங்கியில் நீங்க குடித்து இருக்கிங்களா என்று கேட்கிறார்கள் தயங்கி கொண்டே ஆமா என்று பதில் சொல்ல குடித்து இருந்தால் 24 மணி நேரத்திற்கு ரத்தம் எடுக்க கூடாது நீங்க வேறு யாராவது ரத்தம் கொடுங்கள் இல்லை என்றால் தனியார் ரத்த வங்கியிடம் வாங்கி வாருங்கள்

எந்த வங்கியில் கேட்டும் பலன் இல்லை இந்த வகை ரத்தம் கிடைப்பது மிகவும் சிரமம் எங்கும் ரத்தம் கிடைக்கவில்லை நேற்று தான் என் கண் முன்னால் ரத்தம் தண்ணிரை போல வீணாக ஓடியது என்று நினைத்து பார்த்தான் மணிமாறன், தான் செய்த பாவம் தன் தம்பியை பலி வாங்கி விடுமோ என்று பயந்தான், ரத்தத்தின், மதிப்பும் உயிரின் மதிப்பும் இப்போது நன்றாகவே தெரிந்து கொண்டான், ஏதோ ரத்த வங்கியில் இந்த வகை ரத்தம் இருப்பதாக தகவல் கிடைத்து சந்தோசம் அடைந்தான். ரத்தம் வரவழைக்கப்பட்டது....

ஒரு நல்ல முடிவை எடுத்தான் மணி மாறன் என் தம்பி என்றவுடன் என் மனம் பதறியது, உடல் நடுங்கியது எத்தனை பேருக்கு நான் கெடுதல் செய்து இருக்கிறேன் இனி நான் புதிய மனிதனாக வாழப்போகிறேன் என்ற முடிவுக்கு வருகிறான்..மறுநாள்...தன்னுடைய ரத்தம் தன் தம்பி போல வேறு யாருக்காவது உதவும் என்று ரத்தம் கொடுக்க சென்றான், ரத்தம் கொடுத்து விட்டு வெளியே வந்த அவனுக்கு தன் உடம்பில் இருந்த கெட்ட ரத்தம் எல்லாம் போனது போல உணர்வு ...திடீர் என்று யாரோ ஒருவன் மணிமாறனை கத்தியால் குத்தி விடுகிறான் கிழ விழும் ரத்தத்தை பூமாதேவி ருசி பார்க்கிறாள் என்ன நினைத்ததோ பூமா தேவி அவன் ரத்தத்தின் ருசி பிடித்து விட்டது போல உடலையும் சேர்த்து ருசி பார்த்து விட்டது..

கெட்டவனாக இருக்கும் வரை பூமி தேவிக்கு மேல் இடம் கிடைக்கும் நல்லவர்களா மாறிய பின்பு பூமி தேவி மடியில் இடம் கிடைக்கும்..

Friday, August 20 32 comments

கொசு கவிதை...


இது நான் எழுதிய கவிதை இல்லை என் நண்பர் எழுதிய கவிதை. தொடர்ந்து அவர் கவிதை வரும் 

கொசு கவிதை

நான் நன்றாக இருக்கும் போது வந்து கடித்தாய், 

என் ரத்தத்தை குடிப்பதற்கு 

இன்றோ நலம் குன்றி இருக்கின்றேன், 

இன்றும் வந்து கடிக்கின்றாய் 

எடுத்த ரத்தத்தை கொடுப்பதற்கா ?

குடிசை 

மழைக்காலம் வந்தாலே...

எனக்கு ஒரே சந்தேகம் தான்..

நான் வீட்டுக்குள் இருக்கின்றேனா.. ?

இல்லையா... ? 

     
எழுதியது 
 வெற்றி


Wednesday, August 18 13 comments

உமா சங்கர் அவர்களுக்கு பதிவுலக அதரவு                                                                    
பதிவர் திரு. தருமி அய்யா அவர்கள்,  திரு உமாசங்கர் இ.ஆ.ப அவர்களின் மேல் பழிவாங்கும் நோக்கில்,  
எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பதிவுலக நண்பர்களின் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.இந்திய ஆட்சிப் பணியில் 1990ம் ஆண்டு சேர்ந்தவர் உமா சங்கர் இவர் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்ததாக அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டு. 


உமா சங்கர் விளக்கம் 
தான் ஐ ஏ எஸ் தேர்வு எழுதிய பிறகு மத்திய தேர்வாணையம் தான் அளித்த ஜாதி சான்றிதழை உறுதி செய்த பிறகே தனக்கு அரசால் பணியாணை வழங்கியதாகவும் உமா சங்கர் குறிப்பிட்டார்14 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார். அதிமுக ஆட்சியின் போது சுடுகாட்டு கூரை ஊழல் அம்பலபடுத்தியவர் இதற்காகவே அவர் பழிவாங்க பட்டார். பின் ஆட்சி மாறியதும் கலைஞர் தன் சொந்த ஊரான திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமித்தார்,  தனது அதிரடி நடவடிக்கையால் மக்களிடம் நல்ல பெயர் வாங்கினார்.   


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர், அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்தார். அப்போது, ஒரு சில சேனல்களுக்கு மட்டுமே ஏகபோக சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதை அனைத்துச் சேனல்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுத்தார்.  அப்போதே மாறன் குடும்பத்திற்கு கடுப்பை ஏற்படுத்தியது அதற்குப் பழிவாங்கும் விதத்தில் உமாசங்கர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.எனவே தமிழக அரசை கண்டித்தும்.. உமா சங்கருக்கு ஆதரவாகவும் அனைவரும் இன்று ஒரு நாள் சிறப்பு இடுகை எழுத வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்
Tuesday, August 17 68 comments

பெண்களின் புதிய கலாச்சாரம்...

பண்ணை வீட்டில் நள்ளிரவில்  நடனத்துடன் நடந்த மது விருந்தில் பங்கு கொண்ட 20 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி செய்திகள் தினம் தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது..

ஆண்களே குடிக்க கூடாது என்று சொல்லி கொண்டு வந்தோம் இப்போது பெண்கள் குடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..இன்றைய இளைய தலை முறை பெண்களுக்கு. மது குடிப்பதும் புகை பிடிப்பதும் ஒரு தவறு என்று தோன்றுவதே இல்லை..

வெளி நாட்டில் தானே பெண்கள் குடிக்கிறார்கள் என்று நாம் அதை கண்டு கொள்ளாமல் இருந்தோம், அது மெல்ல நகர்ந்து வட இந்தியாவிற்கு வந்தது,,அப்படியே நகர்ந்து இப்போது நம் தமிழ் நாட்டிலும் இந்த கலாச்சாரம் வந்துள்ளது..இந்த கலாச்சாரத்தால் நாட்டிற்க்கு மட்டும் கெடுதல் இல்லை வீட்டிற்கும் கெடுதல் .. அந்த பெண்ணின் உடல்நலத்திற்கும் கெடுதல் ....இந்த கலாச்சாரம் நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம்...சில பெண்கள் குடிப்பதால் அனைத்து பெண்களுக்கும் அது கெட்ட பெயர் வாங்கி தருகிறது... 


வீட்டில் குழந்தைகள் முன்னாடி குடிக்கும் ஆண்கள் முதலில் இதை நிறுத்த வேண்டும். குழந்தைகள் முன்னாடி குடித்தால் அவர்களுக்கு குடிப்பது தவறு என்று தெரியமாலே போய் விடும்..


சீரியல் பார்க்கும் பெண்களே, அதை தட்டி கேட்க்க முடியாத ஆண்களே  செல்லமே சீரியலில் பெண் குடிக்கும் காட்சி தினம் தோறும் வருகிறது அதை உங்கள் குழந்தைகளும் உங்கள் வீட்டு அம்மணியும் பார்த்தால் ஒரு நாள் அவர்களும் அதை செய்வார்கள்..இந்த மாதிரி காட்சி வரும் போது குறைந்த பட்சம் அந்த சேனலை மாற்ற வேண்டும்..      

                                                                      
மது குடிக்கும் பெண்களுக்கு முகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் கல்லீரலில் ஏற்படும் பிரச்சினைகள். ஆண்களை விட பெண்களின் கல்லீரல் ஆல்கஹால் தாக்கத்தின் காரணமாக விரைவில் கெட்டுவிடும். ஆல்கஹாலின் தாக்கத்தால் கல்லீரல் சுருங்கி, கொழுப்பு அதிகமாகி விடுவதால், என்சைம்களில் அதிக சிக்கல் உண்டாகும். ஆண்களைவிட பெண்களுக்கு கொழுப்பு அதிகம் என்பதால், வெகுவிரைவில் கல்லீரல் கெட்டு, ரத்தத்திலும் மதுவின் தன்மை அதிகம் கலந்து விடும். சில நேரங்களில் மரணம் ஏற்படும் அபாயமும் உண்டு


                                                                         

மதுவின் தாக்கம், பெண்களுக்கு கல்லீரலோடு, இதயத்தையும் சேர்த்து தாக்கும். பெண்களுக்கு மன அழுத்தமும், மதுவின் தாக்கமும் ஒன்றுசேர, இதயநோய் அழையா விருந்தாளியாக வந்து பாடாய் படுத்தும். மது குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயத்தை பலவீனபடுத்தும். இதனால் ரத்த அழுத்தத்தை தாங்காமல் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் வீங்கும்.
சிலருக்கு அழுத்தம் அதிகமாகும்போது வெடித்து விடும் அபாயமும் உண்டு. இல்லாவிட்டால் இதயத்தில் அழுத்தம் தாங்காமல் ஓட்டை விழும். தேவையில்லாமல் இதயம் அதிகமாக துடிப்பதும், இல்லாவிட்டால் மெதுவாக துடிப்பதும் இதயநோய்க்கான அறிகுறிகள். மேலும் உடல் எடை அதிகரித்து, அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்படையும்.


                                                                     
                                                                         


விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்த பழக்கம் நாளடைவில் விட முடியமால் தவிக்கிறார்கள் பெண்கள்..இப்போது சில பெண்கள் நாளை?????
  
Thursday, August 12 29 comments

சஞ்சயின் ஐந்து அம்சத் திட்டம்...


எமர்ஜென்ஸியில் நடந்த சிறு தொகுப்பு மட்டுமே நான் சொல்கிறேன். இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பம்..ஆனால் 1976 ஆண்டே சில நடவடிக்கை எடுத்து உள்ளார் சஞ்சய் ...அதை படித்தால் உங்களுக்கு சிறு நகைப்பு தான் வரும் சும்மா சுற்றி திரியும் வாலிபர்களை பிடித்து குடும்பக்கட்டுப்பாடு செய்தால் வல்லரசு ஆகிவிடுமா, அல்லது குடிசைகளை அழித்தால் வல்லரசு ஆகிவிடுமா... 


                                                                
எமர்ஜென்ஸி பிரளயத்தில் சஞ்சய் காந்தியின் பங்களிப்பு மிக அதிகம் மிசா சட்டத்தைப் பக்க பலமாக வைத்துக்கொண்டு இந்திராவின் அரசியல் எதிரிகளின் முதுகெலும்பை ஒடித்த அவருடைய கைகளில் இப்போது ஐந்து அம்சத்திட்டம் இருந்தது...1 ஒவ்வொருவரும் ஒரு முதியவருக்கும் கல்வி கற்பித்து முதியோர் கல்வியை வளர்ப்போம்.

2 வரதட்சணையை முற்றிலுமாக ஒழிப்போம் 


3 சாதி அமைப்பைத் தகர்ப்போம் 

4 குடிசை ஒழிப்பு மற்றும் மரம் நடுதலுக்கு முன்னுரிமை கொடுத்து சுற்றுச்சூழலை அழகு படுத்துவோம் 

5 குடும்பக் கட்டுப்பாட்டில் புரட்சியை அமல் படுத்துவோம்..இந்த ஐந்து அம்சங்களையும் மனதில் நிறுத்திக்கொண்டு டெல்லி வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் சகிதம் டெல்லியைச் சுற்றி பார்க்கச் சென்றார் சஞ்சய். பழைய டெல்லியில் இருக்கும் துர்க்மான் கேட்டுக்கு அருகில் வந்த போது சஞ்சயின் முகம் சட்டென்று சுணங்கியது.

என்ன என்று பதறிப்போய் விசாரித்தார் ஜக்மோகன். சில நொடிகள் அங்கிருந்த குடிசைப் பகுதிகளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சற்றே நிதானித்து விட்டு அவரே பேசினார்.


என்ன செய்வீர்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாது துர்க்மான் கேட்டில் இருந்து பார்த்தால் வெறும் ஜீம்மா மசூதி மாத்திரம்தான் தெரிய வேண்டும். அவ்வளவுதான்..புறப்பட்டு விட்டார் சஞ்சய்.


ஏப்ரல் 13. 1976 டெல்லி வளர்ச்சிக்குழுமத்துக்குச் சொந்தமான புல்டோசர்கள் துர்க்மான் கேட் பகுதியை ஆக்ரமித்தன. சில மணித்துளிகள் அங்கிருந்த குடிசைகள் அனைத்தும் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. வெகுண்டெழுந்த குடிசைவாசிகள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தன. ரத்தமும் சதையுமாக யமுனை நதிக்கரையில் ஒதுக்கப்பட்ட மாற்று இடங்களுக்கு சென்று மூச்சுவிடத் தொடங்கினர் குடிசை வாசிகள்.


நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் குடிசை அகற்றும் பணி மின்னல் வேகத்தில் நடக்கத் தொடங்கியது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்களுடைய குடிசைகளின் மீது புல்டோசர்கள் உருளத் தொடங்கலாம் என்பதால் பயமும் மிரட்சியுமாகவே தங்கள் பொழுதுகளை கழித்தனர். குடிசை ஒழிப்புத் திட்டத்தை கோணல் சிந்தனையில் பார்த்த சஞ்சயின் அத்து மீறல்கள் எமர்ஜென்ஸியின் போது எல்லை மீறின ஆனால் அதை பற்றி எவரும் கவலைப்படவில்லை இந்திர உள்பட.

சஞ்சய் அடுத்த குறி குடும்பக்கட்டுப்பாடு திட்டம் இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கும் வல்லரசு நாடாக மாற முடியாமல் போவதற்கும் இந்த பாழாய்ப்போன மக்கள் தொகைதான் காரணம் என்பது சஞ்சயின் கணிப்பு மக்கள் தொகையைத் தடுத்து நிறுத்த முடிந்தால்? விபரீதம் இங்கே தொடங்கியது குடும்பக்கட்டுப்பாட்டு முறை நாடு முழுக்க அமல்படுத்தப் பட்டது ..


அப்பாவி ஆண்கள் அழைத்துவரப்பட்டு அவர்களுக்கு வலுகட்டாயமாக வாசக்டமி என்ற குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தாமாக விரும்பி அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஊக்கத்தொகை, பரிசுப்பொருகள் எல்லாம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதிக அளவில் ஆண்கள் வராததால் வலுக்கட்டாயமாகத் துக்கிவரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


முக்கிய நகரங்கள் அனைத்திலும் அறுவை சிகிச்சை மையங்கள் அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்டன. குடிசைப் பகுதிகளை நோக்கி நடமாடும் அறுவை சிகிச்சை மையங்கள் சென்றன. சிகிச்சைக்கு ஆட்களை அழைத்து வரும் பொறுப்பு சம்பந்தப் பட்ட பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையும் தன் பங்குக்கு பிச்சைக்காரர்கள், அநாதைகள் மற்றும்ஏழை எளியவர்களைப் பிடித்து வந்து அறுவை சிகிச்சை செய்து அனுப்பினர்.


குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கு நூற்றியிருபது ரூபாய் பணம், ஒரு டின் சமையல் எண்ணெய், ஒரு ரேடியோ அல்லது கடிகாரம் இலவசமாக வழங்கப்பட்டன ஒரு நாளுக்கு வெறும் முந்நூற்றி சொச்ச அறுவை சிகிச்சைகள் நடந்த டெல்லியில் திடீரென ஆறாயிரம் பேர் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.


ஆட்டோக்காரர்களைக் குறிவைத்து மிரட்டினர் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

லெஸ் டாக் வொர்க் மோர் என்பது தான் சஞ்சய் நெருக்கடி நிலையின்போது அருளிய வாசகம்.


புது டெல்லி கன்னாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கும் காபி ஹவுஸில் நிறைய பேர் அறிவுசார் விசயங்கள் பற்றி தீவிர விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். அப்போது அரசியலும் அலசப்படும் இந்த மாதிரியனான கூட்டங்களில் எமர்ஜென்ஸிக்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்ககூடும் என்பதால் கூட்டம் சேர்ந்து பேசுவதற்குத் தடை போட நினைத்தார் சஞ்சய்.
ஜக்மோகனைப் பார்த்தார். அப்படியே ஆகட்டும் என்பதுபோலத் தலையசைத்தார் ஜக்மோகன். அடுத்த சில நாள்களில் காபி ஹவுஸ் தரை மட்டமாக்கப்பட்டது.

இப்படி நித்தம் ஒரு அத்துமீறல்களால் எமர்ஜென்சி காலம் இந்திய மக்களின் தூக்கங்களை கெடுத்துக்கொண்டிருந்தது ...

  
Tuesday, August 10 29 comments

வளர்ச்சி....

                                                            
                                      


                                                                          


                                                              


                                                              


                                                                              


                                                                            


                                                                      


                                                          


                                                                        


                                                                    


                                                                              


                                                                            


                                                                


                                                                            


                                                                  


                                                                            


                                                                                                                                                


                                                                          


                                                                            


                                                                              


                                                                              


 


                                                                                                                      
Monday, August 9 136 comments

கடவுளும் நானும்.....                                                                


கடவுளும் நானும் என்ற தலைப்பை கொடுத்து அப்பாவி தங்க மணி  அக்கா ஓரு தொடர் பதிவை எழுத அழைத்தார் நானும் அதை தொடர்கிறேன்....


நான் ஏழாம் வகுப்பு படித்த பொழுது...என் பள்ளி அருகில் ஓரு ஆஞ்சநேயர் கோவில் இருந்தது அங்கு சென்று விட்டு பள்ளிக்கு செல்வோம்...சாமியை வணங்குவதற்கு இல்லை செந்தூரம் நெற்றியில் வைப்பார்கள் ஆரஞ் நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும்.... அதற்கு தான். 


கார்த்திகை மாதம் வந்து முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்வோம் மாலை போட்டால் ஓரு மரியாதை பள்ளியில் ஆசிரியை அடிக்க மாட்டார்....அது சின்ன வயசு கடவுள் இருக்கிறரா இல்லையா தெரியாது.... ராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாலை போட்டு விரதம் தொடங்கும்...பச்சை நிற உடை அணிந்து இருக்க வேண்டும்..


முப்பது நாள் கழித்து இடும்பனுக்கு பூஜை செய்து விட்டு அவர்கள் ஓரு எலும்மிச்சை பழம் ஒன்று தருவார்கள் அதை இடுப்பில் கட்டி கொள்ளவேண்டும் எதற்கு என்றால் பேய் வந்து நம்மளை அடித்து விட கூடாது என்பதற்காக..காப்பு கட்டி விடுவார்கள் அப்போது முதல் எந்த வாகனத்தையும் தொட்டு கூட பார்க்க கூடாது...
பாதயாத்திரை புறப்படுவோம் மாலை அணிந்த அதே கோவிலில் இருந்து....  

ராயபுரம் முதல் கந்த சாமி கோவில் வரை நமது சொந்தகாரர்கள் வந்து வழி அனுப்பி விடுவார்கள்...மாலை மூன்று மணி வந்துவிடும்..ஐந்து மணி வரை ஓய்வு எடுத்து விட்டு புறப்படுவோம் 13 நாட்கள் தொடர்ந்து நடந்து பழனிக்கு செல்வோம்.... அது எனக்கு முதல் வருடம் மற்ற சாமிகள் எனக்கு பேய் கதைகளை சொல்வார்கள்...பேய் வந்து நம்மளை அப்படியே எங்காவது அழைத்து சென்று விட்டு விடுமாம்...
அப்படி பேய் பிடித்தால் குரு சாமி ஓரு பிரம்பு வைத்து இருப்பார்....அதை வைத்து அடிப்பார் என்று சொல்வார்கள்....அப்போ சாமி வந்து நம்ளை காப்பாற்றாதா.....இருந்தால் தானே வருவதற்கு....  


13 நாட்கள் நடந்து செல்வது ஜாலியாக தான் இருக்கும்...ஓரு நாளைக்கு 40 கிலோ மிட்டர் நடந்து செல்ல வேண்டும் காலை நான்கு மணிக்கே எழுந்து நடந்து செல்வோம் ஜனவரி மாதம் பனி பொலிவு இருக்கும்
எங்கள் மூச்சு காற்று வெளிவருவது எங்களுக்கு அப்படியே தெரியும் அளவுக்கு பனி பொலிவு இருக்கும்..அரட்டை அடித்து கொண்டே செல்வோம்...நான் கையில் நான்கு அடி நீளத்திற்கு வேல் வைத்து இருப்பேன்..என்னை பார்த்து என் காலில் விழுந்து அவர்களே பணம் தருவார்கள்...இப்படி தான் சாமியார்களை மக்கள் உருவாக்குகின்றனர் .....


பழனி சென்று அடைந்தோம் நான் சிறுவனாக இருந்து 480 கிலோ மிட்டர் நடந்து வந்துவிட்டேன் என்று ஆச்சரியம் பட்டார்கள்...ஓரு நாள் ஓய்வு எடுத்து விட்டு மருநாள் காலை எழுந்து சண்முக நதிக்கு சென்று மொட்டை அடித்து குளித்து விட்டு சண்முக நதியிலே வேல் குத்துவார்கள்... எனக்கும் வேல் குத்த பட்டது சிறிது அளவு கூட வலி கிடையாது...அதற்க்கு ஓரு ஹார்மோன் தான் காரணம் என்று சமீபத்தில் ஓரு tv  நிகழ்ச்சி பார்த்து தெரிந்து கொண்டேன்.. 

சிலர் சாமீ வந்தது போல சீன் போடுவார்கள் அவர்களுக்கும் வேல் குத்துவார்கள் அப்படியும் அவர்கள் இன்னும் பயங்கரமாக ஆட...இன்னொரு வேல் எடுத்து குத்துவார்கள் அதற்க்கு பிறகு தான் அடங்குவார்கள்...எனக்கு ஒன்றும் சாமீ வரவில்லை சும்மா சாமீ வருவது போல ஆட எனக்கு தெரியாது ....அடுத்த வருடம் இதே போல் வேல் குத்தும் இடத்தில் சென்ற வருடம் சாமி  வந்து வந்தவர்களுக்கு அந்த இடத்தில் மட்டும் சாமி வரவில்லை அந்த இடத்தை விட்டு கொஞ்சம் சென்ற உடன் அவர்களுக்கு சாமி வரும்...இதில் இருந்தது தெரிந்து கொண்டேன் சாமி வருவது எல்லாம் பொய் என்று தெரிந்து கொண்டேன்....


கடவுள்... பயம் கொண்டவர்களால் உருவாக்க பட்டவர் தான் இந்த கடவுள்... கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு எதுவும் கிடைக்காதா ஏன் அவர்கள் தினமும் உணவு உண்பது இல்லையா, உங்களுக்கு எதாவது தேவை என்றால் கடவுளிடம் சென்று எனக்கு இதை தா அதை தா என்று சொல்வது...

ஓரு கதை சொல்கிறேன் நாரதரும், நாராயணனும், பேசி கொள்கிறார்கள்...நாராயணன் கேட்கிறார் நாரதரே.. என்னை யார் எப்போதும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.... தெரியுமா...நாரதர்:நான் தான் சாமி உங்களை எப்போதும் உங்கள் பெயரை உச்சரித்து கொண்டு இருக்கிறேன்... நான் தான் சாமி என்று நாரதர் சொல்கிறார்....உடனே நாராயணன்.. பூமியை காண்பித்து...ஓரு உழவன காலை எழுந்தவுடன் நாராயண என்று சொல்லி தன் வேலையை பார்க்க செல்வார்...இரவு..தூங்கும் போது நாராயணா என்று சொல்லி தூங்க செல்வார் ..இவர்தான் என்னை உண்மையாக நினைத்து கொண்டு இருப்பவர்...அது எப்படி என்று நாரதர் கேட்கிறார்...அந்த உழவன மனதில் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்னை வணங்குகிறார்...  இப்படி இந்த கதை செல்லும் 
கடவுள் எதாவது செய்வார் என்பதற்காக அவரை நினைத்து கொண்டு இருப்பது கடவுள் பக்தி கிடையாது.....

பிரதோஷம் இருக்கும் அன்று மட்டும் தான் சாமிக்கு சக்தி அதிகம் இருக்குமா ஏன் மற்றநாள் எல்லாம் அவருக்கு சக்தி இருக்காதா..அன்று விரதம் இருந்தால் வாழ்கை கஷ்டம் என்பது இருக்காது என்று சொல்வார்கள்...ஓரு ஏழை குடும்பம் வறுமை காரணத்தால் குடும்பமே உணவு உண்ணாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த கடவுள் வரம் தர மாட்டார... 

எப்போதும் கடவுள்.... கடவுள்.....அனைத்தும் கடவுள் என்று சொல்பவர்களை முட்டாள் என்றுதான் சொல்வேன்...பயம் இருப்பவர் மட்டும் தான் கடவுளை வணங்குவார்கள்...எதாவது பாவம் செய்து விட்டு காசிக்கு செல்வார்கள்.....ஏன் இந்த கடவுள் கணபதி முருகன் ஜப்பன் இவர்களுக்கு பிறகு எந்த கடவுளுக்கும் குழந்தேயே பிறக்க வில்லையா....விந்தைமனிதன் ,  தொடர்வார்கள்...


Thursday, August 5 39 comments

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?நாம் தெருவில் நடந்து போகும் போது, ஓரு நோட்டீஸ் கொடுத்து.. இதே போல் 100 பேருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள், கொடுக்க வில்லை என்றால் உங்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என்று சொல்வார்கள், ஆனால் நடுத்தெருவில் நின்று கொண்டுதான்  அந்த நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருப்பான்  அதே போல பதிவுலகத்தில் இப்போது தொடர் பதிவு என்று வந்துள்ளது,

தொடர் பதிவு மற்றவர் வலைப்பதிவை பார்க்க சென்றால் அங்கே நமது பெயரை போட்டு தொடர வேண்டும் என்று போட்டு இருப்பார்கள்... பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்? நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் அதனால் அருண் நம்மளை தொடர் பதிவெழுத சொன்னார் தொடர்கிறேன்....

 1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ரசிகன்
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

 என் உண்மையான பெயர் சௌந்தரபாண்டியன். ரசிகன் என்று வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து வைத்தேன், ரசிகன் என்ற பெயரில் ஏற்கனவே மூன்று வலைபதிவு இருப்பதை பிறகு தெரிந்து கொண்டேன்...3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

இப்படி வலைபதிவுகள் (blog) இருப்பதே எனக்கு தெரியாது... திடீர் என்று தொடங்கியது தான் ஒன்றும் பெரிய விசயம் இல்லை4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்றும் செய்ய வில்லை தமிழிஷ் இணைத்தேன் அவ்வளவு தான். (நல்லவேளை என் ரகசியத்தை வெளியே சொல்லவில்லை )


,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னை பற்றி எழுதியது கிடையாது, என்னை பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லை.  எனக்கு தெரிந்தவர்களை பற்றி எழுதியிருக்கிறேன், இதுவரை எந்த விளைவும் இல்லை..... 


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆமாம் பொழுதுபோக்குக்காக எழுதுகிறேன்...நிறைய நண்பர்கள் மற்றும் எழுதும் அறிவை சம்பாதித்து வைத்து இருக்கிறேன்...(இதுவரை ரெண்டு கோடி லாபம் வந்து இருப்பதை சொல்லவில்லை...)


7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

முதலில் ஒன்றுதான் இருந்தது, இப்போது நண்பர் தேவா, விஜய், இவர்களுடன் சேர்ந்து கழுகு என்று வலைபதிவு தொடங்கி உள்ளோம், (குறிப்பு: தேவா அண்ணா என்று சொன்னால் அவருக்கு புடிக்காது)8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்? 

மற்ற பதிவர்கள் போல வரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. பொறாமை இல்லை கோபம் வரும் அளவுக்கு எந்த பதிவும் இல்லை....


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

எங்க அண்ணன் தான் சொன்னார் இந்த வலைபதிவுக்கு அவர் தான் எடிட்டர்
Jay சொன்னது…
Good Start

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

இது பெரிய கடல் பத்து நாள் பதிவு எழுதவில்லை என்றால் காணமல் போய்விடுவோம்.


lk தொடர சொல்லியும் இன்னும் தொடராமல் இருக்கும் தேவா, கௌசல்யா இன்னும் இரண்டு நாளில் தொடர வில்லையென்றால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்
அடுத்து தொடர போகும் ஆடுகள்  
;