ஸ்ரீஅகிலா அக்கா பெயர் மீது காதல் என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத சொல்லி அழைத்திருந்தார்கள். பெயர் மீது காதல் நீ வேற எதையாவது எழுதி மானத்தை வாங்கிடாதே என்றார்கள்...
என் முழு பெயர் சௌந்தரபாண்டியன்....நாங்கள் பாண்டி சாமி கும்பிடுவோம், அதனால் குடும்பத்தில் ஒருவருக்கு பாண்டி என வருவது போல பெயர் வைக்க வேண்டுமாம் அதனால் எனக்கு சௌந்தரபாண்டியன் வைத்தார்கள். எங்க பாட்டி தான் இந்த பெயரை தேர்வு செய்ததாக எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. அனைவரும் என்னை சௌந்தர் என அழைப்பார்கள்.
இந்த ஏன் வைத்தார்கள் மாற்றி வைத்திருக்கலாமே என தோன்றியதில்லை, எனக்கு வேறு என்ன பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்து பார்த்ததும் இல்லை .நான் எங்கு சென்றாலும் என் பெயரில் ஒருவர் இருப்பார். நான் படிக்கும் போதும் அப்படி தான் என் வகுப்பில் இரண்டு பேர் இருந்தார்கள், ஒருவன் சௌந்தர்ராஜன், இன்னொருவன் சௌந்தரபாண்டியன் இப்பொழுது பதிவுலகிலும் ஒருவர் வந்து விட்டார்.
இப்படி பெயர் மாற்றம் இருப்பதால் பள்ளியில் பல குழப்பங்கள் வரும் அவனுடைய விடைத்தாளை என்னிடம் கொடுத்து விடுவார்கள் என் விடைத்தாள் வேற ஒருவரிடம் போய்விடும்.....பள்ளியில் யாரவது சௌந்தரபாண்டியன் தேடி வந்தால் போதும் நாங்கள் இருவரும் எழுந்து நிற்போம், யாராவது எங்கள் பெயரை சொல்லி தேடி வந்தால் இருவரும் வெளியே சென்று சுத்தி விட்டு வருவோம்....டீச்சர் அடிக்கும் பொழுது பெயர் சொல்லி கூப்பிடுவாங்க அப்பொழுது நாங்கள் உஷாராகி யார் டீச்சர் என கேட்டு உறுதி செய்து கொள்வோம் அவ்வளவு உஷார் நாங்க!
என்பெயரை அனைவரும் மாற்றி மாற்றி கூப்பிடுவார்கள் மாற்றி மாற்றி எழுதுவார்கள் சுந்தர்,சவுந்தர், சவுந்தர்ராஜா..கூப்பிடுவாங்க அட டா என்பெயரை சரியா சொல்லுங்க என்பேன் மீண்டும் அப்படி தான் கூப்பிடுவாங்க..என்னிடம் நன்கு பழகியவர்கள் என்னை சௌந்தர் என்றே அழைப்பார்கள் புதியதாக பார்ப்பவர்கள் சௌந்தரபாண்டியன் என்று அழைப்பார்கள்...எனக்கும் சௌந்தர் என்று அழைப்பது தான் பிடிக்கும்...சௌந்தரபாண்டியன் என்றால் அர்த்தம் என்ன பார்த்தேன் அதில் சௌந்தர் என்றால் அழகு பாண்டியன் என்றால் பண்டைய என அர்த்தம் வருகிறது....எனக்கு ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறார்கள்...
என்பெயருக்கு என்ன பலன் என்று பார்த்தேன் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
சௌந்தரபாண்டியன்
பெயர் விளக்கம்: பழமையான அழகு
பெயர் விளக்கம்: பழமையான அழகு
விளக்கம்: இப்பெயரை உடையவர்கள் கலகலப்பாக பழகுபவர்களாகவும் நன்கு பேசுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் பிடிக்கும். இவர்கள் கற்பனைத்திறன் உடையவர்களாகவும் பல விசயங்களை செய்து பார்க்க முயற்சிப்பார்கள். எதையும் ஆர்வத்துடனும் அறிவுபூர்வமாகவும் அணுகுவார்கள். இவர்கள் நேர்மறையான மனோபாவத்துடனும் பலவித விசயங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள். எதையும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்ய முயற்சிப்பார்கள். சுதந்திரத்துடனும் புது இடங்களில் தயக்கமில்லாமலும் பழகுவார்கள். வேலையில் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு தலைமைப் பண்புகள் இருக்கும். அதே சமயம் இவர்களுக்கு அடக்கியாள்வது மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் வீண் செலவு செய்பவர்களாகவும் நடிப்பவர்களாகவும் நடந்து கொள்ளலாம். சில சமயங்களில் பொறுமையில்லாதவர்களாகவும் மற்றவர்களை டாமினேட் செய்யலாம். சில சமயங்களில் முரட்டுத்தனமாக கூட நடந்துகொள்ளலாம்.....
இந்த பலனில் வருவது 75 சதவிகிதம் உண்மை...என் பெயரை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லிவிட்டேன்.....தொடர் பதிவு யாராவது கூப்பிட வேண்டும் என அகிலா சொன்னாங்க அதனால் நான் நாலுபேரை மாட்டிவிடுகிறேன். நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்லை..!!!
பெயர் விளக்கம் மற்றும் பலன் தேடிதந்த எஸ்.கே அவர்களுக்கு நன்றி...
இம்சை அரசன் பாபு (இதெல்லாம் ஒரு பேரு)
அருண்பிரசாத் (என்னை எத்தனை தொடர் பதிவுக்கு மாட்டி விட்டிங்க)
அன்புடன் ஆனந்தி (சீக்கிரம் எழுதிடுவாங்க ரொம்ப சுறு சுறுப்பு)
கல்பனா ( பதிவே எழுதுறது இல்லை இதுல தொடர் பதிவு வேற)
Tweet | |||||