Wednesday, March 9

ஹார்ட் டிஸ்க்...


இன்றைய உலகில் கணிப்பொறி என்பது அவசியமாக தெரிந்து கொள்ள கூடிய ஒன்றாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட கணிப்பொறிக்கு மூளை போல் இருக்கும் விசயம் தான் ஹார்ட் டிஸ்க். அந்த ஹார்ட் டிஸ்க்கின் வளர்ச்சியை பற்றி காண்போம்!


முதல் ஹார்ட் டிஸ்க் 1956-ல் IBM என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் IBM 305 RAMAC ஆகும். இதில் 5 எம்பிக்கள் வரை சேமிக்க கூடிய வசதி இருந்தது. இது ஐம்பது 24 அங்குலம் விட்ட தட்டுக்களை கொண்டிருந்தது! 


ஹார்ட் டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், டிரம் போன்ற இயக்கிகள் இருந்தன. 1950ல் மின்னோபாலிஸ் பொறியியல் ஆய்வு நிறுவனம் அமெரிக்க கடற்படைக்காக, முதல் வணிகரீதியான காந்த டிரம் சேமிப்பு பகுதியை கட்டுமானம் செய்தது. இதில் ஒரு மில்லியன் பிட்கள் தகவலை சேமிக்க முடியும்.


1980ல்தான் முதல் ஜிபி அளவுள்ள ஹார்ட் டிஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கிட்டதட்ட ஒரு ரெஃப்ரிஜெரேட்டர் அளவில் 250 கிலோ எடையுடன் இருந்தது. அதன் விலை 40000 டாலர்களாக இருந்ததாம்!!! எண்பதுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகமானபோது இண்டர்னல் ஹார்ட் டிரைவின் பயன்பாடும் அதிகமானது.

ஹார்ட் டிஸ்க் உற்பத்தியை பொறுத்த வரை Seagate, Western Digital, Hitachi, Samsung, Toshiba ஆகிய ஐந்து நிறுவனங்கள் பெருமளவில் ஹார்ட் டிஸ்க் இருக்கின்றன.


இத்தனை வருடங்களில் இது 5 எம்பி (5,000,000 பைட்கள்) அளவுள்ள 52 அடி விட்டமுள்ள பூதாகரமான வன் தட்டிலிருந்து இன்றைய 400 ஜிபி (400,000,000,000 பைட்கள்/குறியீடுகள்) கொண்ட 3 /12 அங்குல அகலமுள்ள இயக்கிகள் வரை பெரிதளவில் மாற்றமடையுள்ளது. அதேசமயம் 87.9 கன அடி இருந்த ஹார்ட் டிஸ்க் இன்று 2 ½ அங்குலம் வரை கூட குறைந்துள்ளது.

இன்று பெருமளவில் இண்டர்னல் ஹார்ட் டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்ட போதும் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்கை பயன்படுத்துவதும் உள்ளது. இதனால் பெருமளவில் தகவல்களை சேர்த்து விருப்பப்பட்டவாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடிகின்றது.
ஹார்ட் டிஸ்க் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள்:

  1. உங்கள் கணிணி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருக்கும்போது அதை நகர்த்தாதீர்கள்
  2. கணிணிக்கு அருகே சூடான எதையும் (எலக்ட்ரானிக் பொருட்கள்/அயர்ன் பாக்ஸ் போன்றவை) கொண்டு வராதீர்கள். 
  3. கணிணியில் ஈரம் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அறையில் நல்ல காற்று வசதி உள்ளதா என கவனிக்கவும். உணவுப் பொருட்களை அருகே கொண்டு செல்லாதீர்கள். தூசி அதிகம் படியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  4. கூடியவரை யுபிஎஸ் இல்லாமல் கணிணியை பயன்படுத்தாதீர்கள்.
  5. ArgusMonitor மற்றும் Disk Utility போன்ற S.M.A.R.T. டூல்களை பயன்படுத்தலாம். இவை கணிணியில் ஹார்ட் டிஸ்க்குகளை தானாக கண்காணித்து அதில் ஏற்படும் பிழைகளை சுட்டிகாட்டும் செய்யும்.
  6. பெரும்பாலான விண்டோக்கள்/மேக் சிஸ்டங்கள் ஹார்ட் டிஸ்க் பிழைகளை சரி செய்யக் கூடிய வசதிகள் உள்ளன. அதற்கான செட்டிங்களை செய்வது நல்லது.
  7. டிஸ்க் ஃபிராக்மெண்டேசன், டிஸ்க் கிளினீங் போன்றவற்றை 3-4 வாரங்களுக்கு ஒரு முறை செய்வது நல்லது. 
  8. நீண்ட நேரம் கணிணியை எதுவும் செய்யாமல் வைத்திருப்பதை விட அதனை ஷட் டவுன் செய்யுங்கள். சிலர் கணிணியை அப்படியே ஆன் செய்த நிலையிலேயே விட்டு விடுவார்கள்.
  9. கூடிய வரை யுபிஎஸ் இல்லாமல் கணிணியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டு கணிணி ஆஃப் ஆகும்போது ஹார்ட் டிஸ்க்கில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. 
  10. எப்போது உங்கள் கணிணியில் உள்ள தகவல்களை பேக்கப் செய்து கொள்ளுங்கள்.

24 comments:

எஸ்.கே said...

ஹார்ட் டிஸ்க் பற்றிய தகவல்களுக்கு நன்றி!

மாணவன் said...

மச்சி தொழிட்நுட்ப பதிவு கலக்குற...

மாணவன் said...

ஹார்ட் டிஸ்க் பாதுகாப்பாக பயன்படுத்த தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி மச்சி :)

வைகை said...

ஹார்ட் டிஸ்க் பற்றி தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹார்ட் டிஸ்க் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள்:///

1. ஹார்ட் டிஸ்க்கே வாங்கலைன்னா அதுக்கு பாதிப்பு ஏற்படாது..
2. ஹார்ட் டிஸ்க்க்கு சாஃப்ட் டிஸ்க்ன்னு பேர் மாத்தலாம்

ஜெய்லானி said...

//ஹார்ட் டிஸ்க் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள்://

சொந்தமா வாங்கினாதானே இந்த தொல்லை..ஆஃபீஸ் கம்ப்யூவை வீட்டுக்கும் கொண்டு வந்துட்டா நோ பிராப்ளம் எப்பூடீ.....!! :-))

ஜெய்லானி said...

நல்ல தகவல்கள் :-)

ராஜ ராஜ ராஜன் said...

சூப்பர் பதிவு... அருமை. நன்றி.

பிரவின்குமார் said...

//அப்படிப்பட்ட கணிப்பொறிக்கு மூளை போல் இருக்கும் விசயம் தான் ஹார்ட் டிஸ்க். // அப்படியா..!!??? எங்க ஊர்ல.. RAM, ROM இதைத்தான் கணினியின் மூளையின் சொல்லி ஏமாத்துறாங்க... தல..!!

பிரவின்குமார் said...

வன்வட்டு கணினியின் உடல்பகுதி என கூறலாம். அதனை குறித்து விரிவான தகவல் பகிர்வுக்கு நன்றி சவுந்தர்..!!!

Balaji saravana said...

விரிவான மற்றும் தெளிவான விளக்கங்கள் மச்சி! :)

சமுத்ரா said...
This comment has been removed by the author.
சமுத்ரா said...

good one..thanks:)

அருண் பிரசாத் said...

இந்த ஹார்ட் டிஸ்க்குக்கு ரீசார்ஜ் ஏதாவது பண்ணனுமா?

Madhavan Srinivasagopalan said...

நல்ல தகவல்கள்.. மிக்க நன்றி சௌந்தர்.

Madhavan Srinivasagopalan said...

//அருண் பிரசாத் சொன்னது…

இந்த ஹார்ட் டிஸ்க்குக்கு ரீசார்ஜ் ஏதாவது பண்ணனுமா? //

கடையில வாங்கச்சே.. சார்ஜ் பண்ணுவாங்க (காசு கேப்பாங்க)
ரீ-சார்ஜ் ( மறுபடி.. மறுபடி சார்ஜ் )பண்ண வேணாம்..

Sriakila said...

நல்லாருக்கு செளந்தர். உன்னோட கவிதையைக் கொட்டாம கணிணியோட மூளையைக் கொட்டிட்டியே...

Chitra said...

விரிவான நல்ல தகவல் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றிங்க...

கக்கு - மாணிக்கம் said...

very good posting thanks.

ப்ரியமுடன் வசந்த் said...

good post..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல போஸ்ட் சௌட்ந்தர்...!

FOOD said...

நல்ல பல விஷயங்களை சொல்லியிருக்கீங்க. சில தளங்களுக்கு லிங்கும் சேர்த்து கொடுத்தால் பதிவிறக்க சுலபமாயிருக்கும். நன்றி

விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

கோமாளி செல்வா said...

ஹார்ட் டிஸ்க் பத்தி எளிமையா சொல்லிட்டே .. ஹி ஹி

 
;