இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் தான் இந்த காமன்வெல்த் கூட்டமைப்பு, இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன், இங்கிலாந்து ராணி தான் எப்போதும் காமன்வெல்த் போட்டிகளை தொடங்கி வைப்பார், இந்த முறை நீங்கள் இந்தியாவிற்கு சென்றால் அது தான் கடைசி பயணம் என்று ஏதோ ஒரு ஜோசியகாரன் கூறியதால் அவர் வர வில்லை, அவருக்கு பதில் அவரது மகன் சார்லஸ் வருகிறார்
70,000 ஆயிரம் கோடி ரூபாயில் செலவில் உருவாகப்பட்டு இருக்கிறது காமன்வெல்த் போட்டிகள், 72 நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த வாய்ப்பை பெற்றது இந்தியா, அரசே லஞ்சம் கொடுக்கும் பொழுது மக்களை குறைசொல்லி என்ன பயன். மூன்று வருடமாக இவர்கள் மைதானம் அமைக்கும் பணியை செய்துவருகிறார்கள் எப்போது தான் மைதானத்தை தயார் செய்வார்களோ, இது வரை முழுமையாக தயார் ஆகவில்லை என்பது தான் உண்மை. நமது நாட்டு அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று தான் கணக்கு போடுவார்கள், தவிர அந்த பணியை எத்தனை நாளில் முடிக்கலாம் என்று எப்போதும் கணக்கு போடமாட்டார்கள்
வரும் அக்டோபர் மூன்றாம் தேதி காமன்வெல்த் போட்டிகள் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. சென்ற வாரம் வரை எதையும் உறுதியாக கூறமுடியவில்லை, ஆனால் இப்போது எப்படியோ போட்டி நடைபெற போகிறது என்ன இருந்தாலும் இந்தியாவால் இந்த போட்டியை நல்ல முறையில் செய்ய முடியவில்லை என்ற பெயர் தான் இருக்கும். எப்படியோ தட்டுதடுமாறி போட்டியை முடித்தது என்ற பெயர் வரும். யாருக்கு தெரியும் போட்டி நடைபெறும் போது யார் தலையில் என்ன விழ போகிறதோ என்ற பயத்துடன் தான் வீரர்கள் விளையாட வேண்டும்
அமெரிக்கா நாட்டு உளவு அமைப்புகளும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அல்கொய்தா, லஷ்கர் -இ- தொய்பா இயக்கம் வெளிநாட்டு வீரர்களை தாக்கபோகிறார்கள் என்று இவர்கள் வேறு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார்கள் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்கினர் அப்போ இவர்கள் உளவுதுறை என்ன செய்து கொண்டு இருந்தது, அமெரிக்காவிற்கு வேறு வேலை, இல்லை நான் சொல்வது தான் இந்த உலகத்தில் நடக்கிறது என்று எண்ணம்
சீனா ஒலிம்பிக் போட்டியை சர்வசாதாரணமாய் நடத்தி விட்டது உலக நாடுகள் பாராட்டையும் பெற்றது , இந்தியாவில் ஒரு காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாட்டை ஒழுங்காக செய்ய முடியவில்லை, போட்டி தொடங்கும் நாளை எண்ணி இப்பவே மக்களுக்கு கண்ணை கட்டுது. அரசியல்வாதிகளின் சுயநலம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவிற்கே கெட்டபெயர்.
Tweet | |||||
37 comments:
me the firstuuuuuuuuuuuuuuuu
alva enakku.............
இங்கே என்ன கூளா ஊத்துறாங்க... first வரதுக்கு..
//நீங்கள் இந்தியாவிற்கு சென்றால் அது தான் கடைசி பயணம் என்று ஏதோ ஒரு ஜோசியகாரன் கூறியதால் அவர் வர வில்லை//
அங்கயும் இதே கதைதானா? :)
//இங்கே என்ன கூளா ஊத்துறாங்க... first வரதுக்கு.. //
athukku than alva nnu potiruken verumbaya
என்னது அல்வாவா... அவனா நீ...
இப்படி கோடி கொடியா கொள்ளியடிக்கிரவங்களுக்கு... அஞ்சும் பத்தும் வாங்குற போலீஸ் எவ்வளவோ மேல்...
இவனுங்க திருந்தவே மாட்டானுங்க...
//இப்படி கோடி கொடியா கொள்ளியடிக்கிரவங்களுக்கு... அஞ்சும் பத்தும் வாங்குற போலீஸ் எவ்வளவோ மேல்//
ஏன்யா சீப்பு போலீஸ் அ வம்புக்கு இழுக்கிற ....அவனே டிக்கெட் கிடைக்காத வயத்து எரிச்சல குப்புற படுத்து அழுதுட்டு இருக்கான் .......
இப்போ சுரேஷ் 'கள்ளமாடி' சொன்னதை நீங்க கேட்கலியா?! இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முயற்சிக்க வேண்டுமாம். அப்பதானே இன்னும் அதிகமா கொள்ளையடிக்கலாம். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம எப்படி இவனுங்களால பேச முடியுது?!
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
ஏன்யா சீப்பு போலீஸ் அ வம்புக்கு இழுக்கிற ....அவனே டிக்கெட் கிடைக்காத வயத்து எரிச்சல குப்புற படுத்து அழுதுட்டு இருக்கான்
//
மனச தளர விட வேண்டாமுன்னு சொல்லுங்க... எப்படியும் அடுத்த வாரத்தில கிடைச்சிரும்... கொஞ்சம் கவனமா பாத்துக்குங்க,,, ஏதாவது தப்பான முடிவு எடுத்திர போறாரு..
kavisiva சொன்னது…
இப்போ சுரேஷ் 'கள்ளமாடி' சொன்னதை நீங்க கேட்கலியா?! இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முயற்சிக்க வேண்டுமாம். அப்பதானே இன்னும் அதிகமா கொள்ளையடிக்கலாம். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம எப்படி இவனுங்களால பேச முடியுது?!
//
ப்ரீயா விடுங்க... வெக்கம் மானம் சூடு சொரண இல்லாதவங்க என்ன வேணுமின்னாலும் பேசலாம்...
தம்பி இதைதானே தினமும் டீவில சொல்லிட்டு இருக்காங்க... புதுசா எதாவது சொல்லுப்பா
அருண் பிரசாத் சொன்னது…
தம்பி இதைதானே தினமும் டீவில சொல்லிட்டு இருக்காங்க... புதுசா எதாவது சொல்லுப்பா
//
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சுன்னு சொல்லலாமா...
//72 நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த வாய்ப்பை பெற்றது இந்தியா, //
அப்படியா? யார்ப்பா சொன்னது
@ வெறும்பய
//இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சுன்னு சொல்லலாமா...//
செள்ந்தர் சொன்ன மேட்டரவிட இது புதுசா இருக்கே!
இந்த கொடுமைய சொல்லி மாளாது ..!
:-(
கிளம்புறேன் ,, ஆணி அதிகமா போச்சு ..!!
தர பட்டியலில் இரண்டாம் இடத்தை இந்தியா பிடித்துவிடும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறதாம். அதைவிட போட்டிகள் அனைத்தும் நல்ல விதமாக நடந்து முடிந்தாலே போதும் என்பதுபோல் இருக்கிறது. நல்லதே நினைப்போம்.
Present Sir..!!
*/வரும் அக்டோபர் மூன்றாம் தேதி காமன்வெல்த் போட்டிகள் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. சென்ற வாரம் வரை எதையும் உறுதியாக கூறமுடியவில்லை, ஆனால் இப்போது எப்படியோ போட்டி நடைபெற போகிறது என்ன இருந்தாலும் இந்தியாவால் இந்த போட்டியை நல்ல முறையில் செய்ய முடியவில்லை என்ற பெயர் தான் இருக்கும். எப்படியோ தட்டுதடுமாறி போட்டியை முடித்தது என்ற பெயர் வரும். யாருக்கு தெரியும் போட்டி நடைபெறும் போது யார் தலையில் என்ன விழ போகிறதோ என்ற பயத்துடன் தான் வீரர்கள் விளையாட வேண்டும் /*
Pinna India na summavaa................
இந்த முறை நீங்கள் இந்தியாவிற்கு சென்றால் அது தான் கடைசி பயணம்
Hahaaha :)
இலங்க்கையிலும் இதைபட்டி தான் ஒரே கதை
ஊழல் நாடு இந்திய
Enthiran is super hit movie...
எவனாவது இது சௌந்தர் ப்ளாக் அதான் அமைதியா போறேன். ரஜினி என்ன விருந்துக்கு கூப்டாரான்னு கமெண்ட் போட்டா பிச்சுபுடுவேன்
எல்லாம் செய்தி நிறுவனங்கள் செய்த சதி...சீனா ஒன்றும் சாதரணமாக நடத்தவில்லை...அவர்களது ஊடகத்தை கட்டுபடுத்தி வைக்க முடிந்தது...
எனது நண்பர்கள் சென்றுவந்தார்க்ள..மிக அருமையாக இருக்கிறதாம்..நான் புகைப்படமும் பார்த்தேன்...
உங்களுக்கு தெரியுமா வெளிநாடுகளில் இருந்து வந்த வீரர்கள் இதைவிட சிறப்பாக இருக்க முடியாது என்றே சொல்லுகிறார்கள்...
லஞ்சம ஏன்? நம்மிடம் இருக்கும் சிறிய செல்வ அளவுக்கு கண்டிப்பாக சிறு தொகையை எப்போதாவது லஞ்சமாக கொடுத்தே இருப்போம்...அப்போது யோசிக்கமால்..இப்போது மற்றவர்களை குறைசொல்லுவது என்னை பொறுத்த வரை தவறு..நாமும் ஒரு காரணம்..
எல்லாம் முடிந்த பிறகு பாருங்கள்..கெட்டபெயர் யாருக்கு என்று...
மற்றபடி கண்டிப்பாக நல்லா முறையில் நடந்தே திரு..அதில் என்னதான் பணம் ஊழல் செய்து இருந்தாலும்...நல்லதே நினைப்போம்..
மறக்க வேண்டாம்..நான் இதை எழுதுவதும்..இந்தியாவில் இருந்துதான்.
தவறு இருப்பின் மன்னிக்கவும்...
நம்ம நாடுகளின் லட்சணம் இதுதான் சௌந்தர் !
@@@ganesh மன்னிப்பு எதற்கு எனக்கும் இந்த போட்டி நன்றாக நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் நீங்கள் சொல்வது நல்ல தகவல் அதுவும் டெல்லியில் நீங்கள் இருப்பதால் உங்களுக்கு தெரிந்து உள்ளது நல்ல தகவலுக்கு நன்றி ganesh
@@ganesh..
//தவறு இருப்பின் மன்னிக்கவும்..//
பெரிய வார்த்தை எதற்கு கணேஷ்....? எல்லோரும் ஆதங்கத்தை தான் வெளிபடுத்துகிறோம், குறை என்று பொருள் இல்லை.....
//எல்லாம் செய்தி நிறுவனங்கள் செய்த சதி...சீனா ஒன்றும் சாதரணமாக நடத்தவில்லை...அவர்களது ஊடகத்தை கட்டுபடுத்தி வைக்க முடிந்தது.//
இந்த தகவலுக்கு நன்றி. நிறைவாய், சிறப்பாய் முடியவேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பும் கூட....
I agree there could be some mishaps. But I think media is exaggerating a bit. Hopefully it won't be ruined anymore. Nice post
நல்ல பகிர்வு செளந்தர் நான் மனதில் நினைத்தை நீங்கள் பகிர்ந்துள்ளீர்கள்
//அரசியல்வாதிகளின் சுயநலம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவிற்கே கெட்டபெயர்.//
நண்பா! இந்த வரிகள்ல பதிவோட மொத்த சாரத்தையும் சொல்லிட்டீங்க அப்பு! காலம் மாறத்தான் போகுது. பார்த்துக்கிட்டே இருங்க! நல்ல காலம் சீக்கிரம் வருதா இல்லையான்னு! நல்ல காலம் பிறக்கிற காலம் வந்தாச்சின்னேன்.
Me Present Sirrr :)
இந்திய துணைக்கண்டத்தில் எல்லா நிகழ்வுகளின் பின்புலத்திலும் பலத்த அரசியல் இருக்கும். அதிக தகவல்கள் எனக்கு காமன்வெல்த் போட்டிகள் பற்றி தெரியவில்லை தம்பி....இனிமேல்தான் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
, இந்த முறை நீங்கள் இந்தியாவிற்கு சென்றால் அது தான் கடைசி பயணம் என்று ஏதோ ஒரு ஜோசியகாரன் கூறியதால் அவர் வர வில்லை, //
சூப்பரா சொன்னீங்க...ஜோசியக்காரன் சொல்ல வேண்டியதில்லை..அந்த ஊர் மீடியாவே இதைத்தான் சொல்கிறது
மொத்தம் 87000 கோடி செலவாம்..டிக்கெட் விலை 1000 ரூபாயாம்
970 கோடி செலவில் ஸ்எடியம் புதுப்பிக்கப்பட்டதாம் இதில் புது ஸ்டேடியமே கட்டி விடலாமாம்
இங்கே என்ன கூளா ஊத்துறாங்க... first வரதுக்கு//
ஹாஹாஹா
good post pa.........
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
Post a Comment