Wednesday, January 19

சிறுத்தை பயம் அறியாதவன் ...

ரவிதேஜா, அனுஷ்கா, நடித்த தெலுங்கில் வெளி வந்த விக்ரமார்குடு படத்தின் தமிழ் ரீமேக்தான் சிறுத்தை. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தை தெலுங்கில் பார்த்து இருக்கிறேன்...அந்த படத்தை விட எனக்கு சிறுத்தை படமே ரொம்ப பிடித்து இருக்கு....

நாம ரொம்ப அறிவாளி நிறைய கேள்வி கேட்போம் என்று டைரக்டர்க்கு..தெரிந்து இருக்கும் போல! ஏன் ஆந்திராவில் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்கு அதைப் பற்றி டைட்டில் கார்டிலேயே போட்டு விடுறாங்க. ரத்தினவேல் பாண்டியன் உயிரோடு இருக்கிறான் என்று ஒருவன் தேவி பட்டினத்திற்கு போன் செய்து சொல்கிறான், அவனை ஒருவர் கொலை செய்து விடுகிறார், இப்படி சஸ்பென்ஸாக ஆரம்பிக்கிறது....


ஆந்திராவின் தேவி பட்டினத்தில் ஒரு ரவுடிக் குடும்பம் கொடுமைப்படுத்தி கொண்டிருக்கிறது. யாராவது வந்து நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்குகிறார்கள். முறுகிய மீசையோடு தேவிபட்டினத்திற்கு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (டிஎஸ்பி கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை ஒடுக்கி மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார். ஆனால் வில்லனுடைய தாக்குதலில் படுகாயம் அடைகிறார் டிஎஸ்பி கார்த்திக்...கார்த்திக் இறந்து விட்டதாக நினைத்து கொண்டு வில்லன் கும்பல் சென்று விட..அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வருகிறார்கள்..... 


இன்னொரு கார்த்திக்   திருடன். அவரும் சந்தானமும் திருடர்கள். சேட்டுவீட்டில் திருட செல்கிறார்கள் சந்தானமும் கார்த்திக்கும்...அங்கு கார்த்திக்கிற்கு தமன்னா மீது காதல் வருகின்றது...சந்தானம் அனைத்தையும் திருடி கொண்டு ஓடுகிறார்...சந்தனத்தை பிடித்து கொடுத்து...தமனாவிடம் நல்ல பெயர் வாங்குகிறார்....கார்த்திக் எதை சொன்னாலும் அதை நம்பி விடுகிறார் தமனா... பெரிய பொருளா திருடி விட்டு இனி திருட கூடாது என்று முடிவுக்கு வந்து கடைசியாக ஒரு பெட்டியை திருடுகிறார். அதில் ஒரு குழந்தை இருக்கிறது, அந்த குழந்தை கார்த்திக்கை அப்பா என்று சொல்கிறது...அது யார் குழந்தை என்று கண்டு பிடிக்கிறார் திருடன் கார்த்திக். அப்புறம் போலீஸ் கார்த்திக் என்ன ஆனார், அவர் மீண்டும் சென்று வில்லனை அழித்தாரா என்பதே மீதி கதை.


கார்த்திக் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்...இரட்டை வேடத்தில் நன்றாகவே நடித்து இருக்கிறார்...முதல் முறை இப்படி இரட்டை வேடங்களில் கலக்கி இருப்பது பாராட்டுக்குரியது....பருத்திவீரனுக்கு பிறகு வந்த படங்களில் அந்த சாயல் கொஞ்சம் இருந்தது, சிறுத்தையில் தான் அந்த சாயல் துளியும் இல்லை. போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்...திருடனாக வந்து சென்னை தமிழ் பேசுகிறார்...(திருடன் கார்த்திக் ராக்கெட் ராஜா)

படம் ஆரம்பம் முதல் சிறுத்தை வேகத்தில் பறந்து கொண்டு செல்கிறது... கார்த்திக்கும் சந்தானமும் சேர்ந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்கள், சந்தானம் பேசும் போது விழுந்து,விழுந்து சிரிக்கலாம். கார்த்திக்கிற்கு இணையாக சந்தானம் நடித்து இருக்கிறார்....


இரு விதமான பாடி லாங்குவேஜ் நன்றாக செய்து இருக்கிறார் கார்த்திக். போலீஸ் வேடத்தில் வரும் பொழுது அவர் மீது மரியாதையே வருகிறது...ஒரு காட்சியில் சீனியர் ஆபிசர் இவரிடம் ட்யூட்டியில் இருக்கும் போது பயம் இருக்கணும் பக்தி இருக்கணும் உனக்கு பயப்பட்டு பழக்கம் இல்ல போல" என்பார் 

 கார்த்திக் சொல்வார். "எனக்கும் பயம் இல்லைன்னு யார் சொன்னது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு நொடியும் நான் பயந்து கொண்டு தான் இருக்கேன்  ஏழு வருசத்திற்கு முன்னாடி ட்யூட்டில சேர்வதற்கு முன்னாடி கடமைக்காக தான் என் உயிரையும் தருவேன் சத்தியம் செய்தேன், ஏதோ ஒரு நாள் என் சாவு வந்தே தீரும் அந்த நாள் சாவை நேருக்கு நேரா பார்க்குற அந்த நிமிஷம் நாட்டுக்காக செய்து கொடுத்த சத்தியம் காப்பற்ற முடியாம போயிடுமோ பயந்து கொண்டு தான் இருக்கேன்" சொல்வார்....

படம் முழுவதும் கார்த்திக்கின் ஆதிக்கமே இருக்கிறது....திருடன் கார்த்திக், போலீஸாக வரும் கார்த்திக் நடிப்பு பிரமாதம் மீசையை முறிக்கி கொண்டு பேசும் வசனங்கள் "தீ" பறக்கிறது....பாடல்கள் அனைத்து அருமையாக இருக்கிறது....ஆராரோ ஆரிராரோ பாடல் அந்த குழந்தைக்கு தாயாகவே வருகிறது...அந்த பாடல் வரிகள் மிகவும் அற்புதம்...

மூச்சி பட்டா நோகும்ன்னு மூச்சி அடக்கி முத்தமிட்டேன் 
நிழலுபட்டால் நோகும்ன்னு நிலவு அடங்க முத்தமிட்டேன் 

ஒரு ஐந்து நிமிடம் கூட தொய்வு இல்லாமல் படம் செல்கிறது.....இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து கார்த்தி அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார்... தமனா கார்த்திக் ஜோடி இந்த படத்திலும் நன்றாக இருக்கிறது, எல்லா படத்தை போலவே ஹீரோயின்க்கு அதிக வேலை இல்லை கார்த்திக்கை தன் இடுப்பை கிள்ள சொல்கிறார். பாடல் காட்சிக்கு வருகிறார்..போலீஸ் கார்த்திக் பாதியில் விட்ட வேலையை திருடன் கார்த்திக் முடித்து வைக்கிறார்... சந்தானம் கார்த்திக் நகைச்சுவையில் வயிறுகுலுங்க சிரிக்கலாம் ....பொங்ககுக்கு  வெளிவந்த படங்களில் சிறுத்தை முன்னணியில் சென்று கொண்டு இருக்கிறது....
சிறுத்தை பயம் அறியாதவன் 46 comments:

யாதவன் said...

மற்றவர்கள் மத்தியில் விதியாசமாக தெரிகிறாய்

எஸ்.கே said...

கார்த்தியின் கேரியரில் இது முக்கியமான படமா இருக்கும்!

சி.பி.செந்தில்குமார் said...

good review sowndhar

சி.பி.செந்தில்குமார் said...

>>>.ஒரு ஐந்து நிமிடம் கூட தொய்வு இல்லாமல் படம் செல்கிறது.....இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து கார்த்தி அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார்... தமனா கார்த்திக் ஜோடி இந்த படத்திலும் நன்றாக இருக்கிறது, எல்லா படத்தை போலவே ஹீரோயின்க்கு அதிக வேலை இல்லை கார்த்திக்கை தன் இடுப்பை கிள்ள சொல்கிறார்


100 % correct

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//சிறுத்தை பயம் அறியாதவன்//

இந்த லைன் படிக்கிறவரை நல்ல விமர்சனம் அப்படினு போடலாம் தான் இருந்தேன். என்ன கருமம் இது? சொந்த ஸ்டைல்ல எழுது. பெரிய சன் டீவி கடைசில பஞ்ச் வைக்கிறாரு....

MANO நாஞ்சில் மனோ said...

படம் உடனே பாக்கணும் பாஸ்...

Madhavan Srinivasagopalan said...

வலது சைடு பாரில், வைத்திருக்கும் பாடல் தேவையா ?
என்னைப் போன்ற சிலர் பட்ஜெட் இன்ட்ட்நேர் வைத்திருப்பவர்கள். தேவையில்லாமல், டவுன்லோடு ஆகிறது அந்தப் பாடல், உங்கள் வலைப்பூவிற்கு விஜயம் செய்தால்.

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு பாத்துடவேடியது தான்

Madhavan Srinivasagopalan said...

நன்றி சவுந்தர். (பாடலை நீக்கியமைக்கு)
அடேடே.. யாருடா அது, நெகடிவ் ஒட்டு போட்டது..

மாணவன் said...

விமர்சனம் அருமை அண்ணே

படமும் நல்லாருக்கு நேத்துதான் பார்த்தேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விக்ரமார்க்குடு நான் முதன் முதலா தியேட்டர்ல பார்த்த தெலுகு படம். சிறுத்தையும் நல்ல ஸ்பீட் மூவிதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@சௌந்தர்

//சிறுத்தை பயம் அறியாதவன்//

இந்த லைன் படிக்கிறவரை நல்ல விமர்சனம் அப்படினு போடலாம் தான் இருந்தேன். என்ன கருமம் இது? சொந்த ஸ்டைல்ல எழுது. பெரிய சன் டீவி கடைசில பஞ்ச் வைக்கிறாரு....///

நீ முதல்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதி தொலை. அப்புறம் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணு

ஷர்புதீன் said...

ரைட்டு பாத்துடவேடியது தான்1
:)

sakthistudycentre-கருன் said...

Nice

சங்கவி said...

நல்ல விமர்ச்சனம்...

இரவு வானம் said...

அருமையான விமர்சனம், நன்றாக உள்ளது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிறுத்தை பயம் அறியாதவன்....!////

அப்போ பயம் படம் பார்க்கறவங்களுக்குத்தான்......?

இம்சைஅரசன் பாபு.. said...

என்ன இருந்தாலும் காவலன் கிட்ட வருமா ......நம்பர் 1 காவலன் தான் அடுத்தது சிறுத்தை .......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
விக்ரமார்க்குடு நான் முதன் முதலா தியேட்டர்ல பார்த்த தெலுகு படம். சிறுத்தையும் நல்ல ஸ்பீட் மூவிதான்/////

ஆமா இவரு பெரிய அமேரிக்க ஜனாதிபதி, இவரு மொதல்ல பாத்த படம்னு மெடல் கொடுக்கப் போறாங்க..... படுவா படத்தப் பார்த்தமா, வந்தமான்னு இல்லாம, ஏன் இந்த வேல?

இம்சைஅரசன் பாபு.. said...

சிறுத்தை விமர்சனம் நல்ல இருக்கு சௌந்தர் ,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
என்ன இருந்தாலும் காவலன் கிட்ட வருமா ......நம்பர் 1 காவலன் தான் அடுத்தது சிறுத்தை ......./////

போ போ... டாகுடரு அடுத்த மாசம் கட்சி ஆரம்பிக்கறாராம், போயி எடத்தப் புடி... சோறு போடுவாங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா, தறுதலை பயலுகளையே ஹீரோயினுக தேடித் தேடி லவ் பண்றாளுகளே, இந்தக் கண்றாவியப் பத்தி ஒண்ணும் சொல்லலையா?

இம்சைஅரசன் பாபு.. said...

///////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
என்ன இருந்தாலும் காவலன் கிட்ட வருமா ......நம்பர் 1 காவலன் தான் அடுத்தது சிறுத்தை ......./////

போ போ... டாகுடரு அடுத்த மாசம் கட்சி ஆரம்பிக்கறாராம், போயி எடத்தப் புடி... சோறு போடுவாங்க....!//
பன்னி உனக்கும் சேர்த்து வாங்கி வச்சி விடுகிறேன் ....நீ வேற ஊருக்கு வரேன் ன்னு சொல்லி இருக்க ..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பார்ரா.. இதுக்கும் எவனோ மைனஸ் ஓட்டுப் போட்டிருக்கான்.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
///////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
என்ன இருந்தாலும் காவலன் கிட்ட வருமா ......நம்பர் 1 காவலன் தான் அடுத்தது சிறுத்தை ......./////

போ போ... டாகுடரு அடுத்த மாசம் கட்சி ஆரம்பிக்கறாராம், போயி எடத்தப் புடி... சோறு போடுவாங்க....!//
பன்னி உனக்கும் சேர்த்து வாங்கி வச்சி விடுகிறேன் ....நீ வேற ஊருக்கு வரேன் ன்னு சொல்லி இருக்க ..........////

சாப்பாட்ட அவ்வளவு நாளு வெச்சிருந்தா கெட்டுப்போயிடும் ராசா, அதுனால் எனக்கும் சேர்த்து நீயே தின்னுடு.... வேணும்னா சிரிப்பு போலீச கூப்பிட்டுக்க, ஓசிச் சோறுன்னா அது உகாண்டாவுக்குக் கூட வரும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே சொன்னது… 2
கார்த்தியின் கேரியரில் இது முக்கியமான படமா இருக்கும்!////

என்ன எஸ்கே, கேரியர்ல சாப்பாடுதானே வெப்பாங்க, படமுமா வெப்பாங்க?

Kousalya said...

விமர்சனம் நன்றாக இருக்கிறது.

எஸ்.கே said...

//பிளாகர் பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////எஸ்.கே சொன்னது… 2
கார்த்தியின் கேரியரில் இது முக்கியமான படமா இருக்கும்!////

என்ன எஸ்கே, கேரியர்ல சாப்பாடுதானே வெப்பாங்க, படமுமா வெப்பாங்க?//

டைப் பண்ணும்போதே நினைச்சேன். இப்படி யாராவது கேப்பாங்கன்னு!
அது பப்படம் ராம் சார்! அதான் கேரியர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// எஸ்.கே கூறியது...
//பிளாகர் பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////எஸ்.கே சொன்னது… 2
கார்த்தியின் கேரியரில் இது முக்கியமான படமா இருக்கும்!////

என்ன எஸ்கே, கேரியர்ல சாப்பாடுதானே வெப்பாங்க, படமுமா வெப்பாங்க?//

டைப் பண்ணும்போதே நினைச்சேன். இப்படி யாராவது கேப்பாங்கன்னு!
அது பப்படம் ராம் சார்! அதான் கேரியர்!////////

சுட்டதா, பொறிச்சதா?

எஸ்.கே said...

//சுட்டதா, பொறிச்சதா?//

ரீமேக் உரிமை வாங்கியிருக்காங்கல்ல! அப்ப சுட்டதில்ல. பொறிச்சதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே கூறியது...
//சுட்டதா, பொறிச்சதா?//

ரீமேக் உரிமை வாங்கியிருக்காங்கல்ல! அப்ப சுட்டதில்ல. பொறிச்சதுதான்!/////

பலதடவ யூஸ் பண்ண ஆயில்ல பொறிச்சுட்டாங்கன்னு நெனைக்கிறேன்.... பாத்து சாப்புடுங்க அஜீரணமாயிடப் போகுது!

கோமாளி செல்வா said...

//நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தை தெலுங்கில் பார்த்து இருக்கிறேன்...அந்த படத்தை விட எனக்கு சிறுத்தை படமே ரொம்ப பிடித்து இருக்கு...//

தெலுங்கு எல்லாம் தெரியுமா ?

கோமாளி செல்வா said...

//அது யார் குழந்தை என்று கண்டு பிடிக்கிறார் திருடன் கார்த்திக். அப்புறம் போலீஸ் கார்த்திக் என்ன ஆனார், அவர் மீண்டும் சென்று வில்லனை அழித்தாரா என்பதே மீதி கதை.
//

இப்படிஎல்லாமா கதை விட்டுருக்காங்க ?

கோமாளி செல்வா said...

//ஏதோ ஒரு நாள் என் சாவு வந்தே தீரும் அந்த நாள் சாவை நேருக்கு நேரா பார்க்குற அந்த நிமிஷம் நாட்டுக்காக செய்து கொடுத்த சத்தியம் காப்பற்ற முடியாம போயிடுமோ பயந்து கொண்டு தான் இருக்கேன்" சொல்வார்..//

செம வசனமா இருக்கு

கோமாளி செல்வா said...

//சந்தானம் கார்த்திக் நகைச்சுவையில் வயிறுகுலுங்க சிரிக்கலாம் ....பொங்ககுக்கு வெளிவந்த படங்களில் சிறுத்தை முன்னணியில் சென்று கொண்டு இருக்கிறது...///

சிரிப்பு இருக்குதுனா நான் கண்டிப்பா பார்ப்பேன் .. ஏன்னா எனக்கு அது மட்டும்தான் பிடிக்கும் ..

ஆனந்தி.. said...

படம் அப்போ பார்க்கலாம் போலே...:)

Chitra said...

Good review.

Anonymous said...

நானும் படம் பாத்தேன் ரொம்ப நல்ல இருந்துச்சு

நல்ல விமர்சனம் சௌந்தர்

Sriakila said...

சிறுத்தைப் படம் போலாமா? வேண்டாமான்னு யோசிச்சிட்டிருந்தேன்...

விமர்சனம் பார்த்துட்டேன்..பார்க்கலாம்னு நெனைக்கிறேன்.

விமர்சனம் நல்லாருக்கு செளந்தர்.

வெறும்பய said...

பிரபல பிரபல பிரபல பதிவர் சௌந்தர் வாழ்க... (மைனஸ் ஓட்டு போட்டிருக்காங்களே)

நான் இன்னும் படம் பார்க்கல நண்பா..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நீ முதல்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதி தொலை. அப்புறம் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணு//

U are a Bloody Fool, idiot, nonsense, begger dog, stupid.... மச்சி! ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா? :)

ஆமினா said...

விமர்சனம் அருமையா இருக்கு

சுசி said...

படம் பார்த்துட்டு படிக்கறேன் சௌந்தர்.

அப்பாவி தங்கமணி said...

Karthik & Thammannaa - so kandippa papen....unga vimarsanamum kalakkal thaan

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்க விமர்சனம், படம் பார்க்கத் தூண்டுகிறது..!

நேத்து, சிறுத்தை ட்ரைலர் பார்த்தேன்.. சந்தானம் நடிப்பு செம தான்.. :-)

தேங்க்ஸ்..

Balaji saravana said...

:))

 
;