அன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற்பட்டு இருப்பது சந்தோசமான விஷயம். லஞ்சம் கொடுத்து கொடுத்து ஏங்கி போய் இருந்த மக்களுக்கு யாரவது இந்தியன் தாத்தா போல் வந்து தட்டி கேக்க மாட்டார்களா என எதிர்பார்த்து கொண்டுயிருந்த நமக்கு கிடைதவர்தான் அன்னா ஹசாரே.
யார் இந்த அன்னா, இவர் என்ன தவறு செய்தார் இவர் நல்லவரா, கெட்டவரா, என்பதையெல்லாம் விட்டு விட்டு அரசாங்கத்தையே கேள்வி கேட்கும் அளவிற்கு, ஒருவர் வந்திருக்கிறார் என நாம் நினைக்க வேண்டும் இவர் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல திணறி கொண்டிருப்பதே அரசின் நிலைமையை எடுத்து காட்டிவிடுகிறது.
இப்போது எங்கு சென்றாலும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற வேண்டுமென்ற போராட்டம் காட்டுத் தீயாய் பரவிகொண்டிருகிறது இந்தஅளவிற்கு போராட்டம் நடைபெற என்ன காரணம். எங்கும் லஞ்சம், எதிலும் ஊழல், என பார்த்து பார்த்து கொடுத்து கொடுத்து, மக்கள் பெரும் கோபத்துடன் இருப்பதையே இந்த எழுச்சி காட்டுகிறது.
ஆனால் அரசோ இந்த விஷயத்தில் இருந்து எப்படியாவது தப்பி ஓட பார்த்தது, அன்னா மீது பழி போட பார்த்தது, பதுங்கப் பார்த்தது, போராட்டங்களை ஒடுக்க பார்த்தது, இந்த முறையும் மக்களை ஏமாற்றி விடலாமென்று நினைத்து. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இப்பொழுது அரசு நிற்கிறது, மக்கள் இப்பொழுது தனக்கு கிடைத்த ஆயுதத்தை இறுகப் பிடித்து கொண்டனர், அதுவே அரசுக்கு விழுந்த மிகப் பெரிய அடி.
வெளியில் எங்கு சென்றாலும் இளைஞர்களும், முதியவர்களுக்கும், உண்ணாவிரத போராட்டங்கள், ஊர்வலங்கள் என இந்த மசோத பற்றி பரப்புரை செய்து கொண்டுயிருகின்றனர், அடித்தட்டு மக்களும் இப்பொழுது இச் சட்டம் பற்றி பேச தொடங்கி விட்டனர், இனி ஊழல் செய்ய முடியாது, என்னென்றால் ஊழல்வாதிகளை கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களிடம் வர போகிறது.. இனி ஊழல் செய்து வழக்கை வாய்தா வாங்கி ஒட்டி விடலாமென்ற நிலை இருக்காது. ஊழல் செய்த பணத்தில் வாங்கிய அனைத்து சொத்துக்களும் பறிக்கப்படும், ஊழல் புகார் நிருபிக்கப்பட்டால் அந்த நபரை இரண்டு ஆண்டுக்குள் சிறைக்கு அனுப்ப முடியும்,
என்ன சொல்கிறது ஜன் லோக்பால்
ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.
இதன் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசிட முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது.
எந்த ஒரு அரசியல் சாயமின்றி போராடுவதே இந்த எழுச்சிக்கு காரணம், மக்கள் அரசியல் வாதிகளை நம்பி நம்பி ஏமார்ந்து கொண்டிருந்தான் இப்பொழுது ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது, நம் இளஞ்ர்களால். அப்துல்கலாம் சொன்னதை போல் இளஞ்ர்கள் கையில் இந்தியா இருப்பது நம் கண் முன் தெரிகிறது.. இந்த போராட்டத்தை திரளாக கலந்து கொண்டு போராடும் இளஞர்களை பாராட்டுவோம். இன்னமும் இந்த அரசு தப்பித்து ஓடவே பார்க்கிறது... நம் விடாமல் போராடுவோம்.
ஊழல்லற்ற நாடாக மாற்றுமா இந்த ஜன் லோக்பால் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
தகவல் உதவி : webdunia
Tweet | |||||
2 comments:
நாம் விடாமல் போராடுவோம்.
ஊழல்லற்ற நாடாக மாற்றுமா இந்த ஜன் லோக்பால் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Post a Comment