சகோதர பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ரக்ஷாபந்தன் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கையில் ராக்கி என்ற கயிறைக் கட்டுவது இந்நாளில் சிறப்பு. ரக்ஷா என்றால் பாதுகாப்பு, பந்தன் என்றால் உறவு என்று பொருள்.
உறவினர்களாக இல்லாத இருவர் ஒரு கயிறின் மூலம் சகோதர சகோதரிகளாக மாறுவது இந்த கயிற்றின் சிறப்பு. இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே கொண்டாடிவந்த இந்த விழா இப்போது தென்மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ரக்ஷாபந்தன் விழா புராண காலத்தில் இருந்தே தொடர்கிறது.
ரக்ஷாபந்தன் கயிற்றை தன் சகோதரன் கையில் சகோதரி கட்டுவதன் மூலம் அவளைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்த சகோதரனுக்கு கிடைத்து விடுகிறது. ராக்கி கயிறு கட்டப்பட்ட பிறகு எந்த காரணத்தைக் கொண்டும் அந்த புதிய சகோதரியை ஆயுள் முழுக்க காப்பாற்றுவது என்று கட்டுப்பாட்டிற்குள் சகோதரர் வந்து விடுகிறார். ஆடி மாதத்தை சிரவன மாதம் என்றழைக்கும் வட மாநிலத்தவர்கள், அந்த மாதத்தின் பௌர்ணமி நாளில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். ராக்கி கயிறு கட்டும் சந்தோஷ நிகழ்வின் பொழுது இருவரும் இனிப்பை பரிமாறி கொள்வார்கள்.
மகாபாரத காலம் தொடங்கி இப்போது வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் கையின் மணிக்கட்டில் ரக்ஷாபந்தன் கயிறுகட்டும் பழக்கம் மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளதென்றும் கூறப்படுகிறது. போரின் போது கையின் மணிக்கட்டில் கிருஷ்ணருக்கு காயம் ஏற்பட்டுள்ளதைப் பார்த்ததும் திரெளபதி, தன் பட்டுச்சேலையின் முந்தானையைக் கிழித்து அந்த துண்டுதுணியை கிருஷ்ணர் மணிக்கட்டில் விடுகிறாள். இந்த அன்பான செயலை பார்த்து வியந்த கிருஷ்ணர், திரளபதியை தன் சகோதரியாக பாவிக்கிறார். அவளுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்குகிறார். அதனால் தான், துரியோதனன் சபையில் துயில் உறியப்படும்போது தன்னைக் காப்பாற்றுமாறு திரெளபதி வேண்டவே கிருஷ்ண பகவான் சேலையை வழங்கி மானத்தை காப்பாற்றுகிறார்.
சாதாரண கயிறு இவ்வளவு பெரிய பந்தத்தை, உறவை ஏற்படுத்துவதால், புராண கால சம்பவங்களைப் பின்பற்றும் மக்களும் இந்த பழக்கத்தை இப்போதும் பின்பற்றுகிறார்கள் இதற்கு பல வரலாற்று சம்பவங்கள் உதாரணமாக உள்ளன. இந்த விழாவிற்கு பாலிவா என்ற பெயரும் உண்டு. வாலி மன்னனை போற்றும் விதமாக பாலிவா என்று அழைக்கப்படுகிறது வைகுண்டத்தைக் காப்பற்றச் சென்று விட்ட கணவர் விஷ்ணு பகவானைக் காணாத லட்சுமி தேவி அவருக்கு எந்த தீங்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மாமன்னர் வாலியின் கையில் ராக்கி கயிற்றை கட்டுகிறாள். அதற்கு பிறகு, சகோதரியின் கணவர் விஷ்ணுவை காப்பாற்றும் பொறுப்பு மன்னன வாலிக்கு வந்து விடுகிறது. அதை நினைவு கூரும் விதமாகவே பாலிவா என்று இந்த விழா அழைக்கப்படுகிறது.
எம ராஜனின் சகோதரியான யமுனா நதி, தன் சகோதரன் கையில் ராக்கி கயிற்றைக் கட்டுவதன் மூலம் யமனுக்கு மரணமில்லா பெருவாழ்வை பெற்று தருகிறாள் அதற்கு பிராயசித் தமாக, கையில் ராக்கி கட்டி இருப்பவர்களை எமன் எதுவும் செய்வதில்லை என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்த போது புருஷோத்தமன் மன்னருக்கும் அலெக்சாண்டருக்கு சண்டை நடந்தது அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனா, மன்னர் புரோஷோத்தமனுக்கு ராக்கி கயிற்றை கட்டிவிடுகிறாள். போர்க்களத்தில் அலேக்சாண்டரைக் கொல்வதற்கு வாளை உருவிய புருஷோத் ராஜா, தற்செயலாக தன் கையில் கட்டப்பட்டிருந்த ராக்கியைப் பார்த்ததும் மனம் மாறி அலேக்சாண்டரை கொல்லாமல் விட்டுவிடுகிறார். அவ்வளவு பெரிய விமோசனத்தை இந்தச் சிறு கயிறு அலேக்சாண்டருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. சித்தூர் ராணி கர்னவதி, முகலாய மன்னர் ஹிமயூனுக்கு கயிற்றை அனுப்பி கட்டச் செய்கிறாள் அந்த சகோதர பாசத்திற்காக கர்ணவதியைக் காப்பாற்றும் பொறுப்பு ஹிமாயூனுக்கு வந்து விடுகிறது குஜராத் மன்னர் பகதூர் ஷா, சித்தூர் மீது படையெடுத்து அந்த நாட்டைக் கைபர்ர்ரியதும், போர் தொடுத்துச் சென்ற ஹிமாயூன் நாட்டை மீட்டு, இறந்த சகோதரி கர்ணவதியின் மகன் விக்ரம்ஜித்சிங்கிடம் ஒப்படைத்தாக வரலாறுகள் கூறுகிறது.
இப்படி ஏரளாமான புராண, வரலாற்று காலசம்வங்களை உதாரணமக கொண்ட ரக்ஷாபந்தன் நாளில், தென்மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களும் ராக்கி கயிறைக் கட்டிக் கொள்கின்றனர். ராக்கி கயிறு வெறும் கயிறு தான் ஆனால் ஒரு புதிய சொந்ததையே தருகிறது..என்பது தான் மிக சிறப்பு, ராக்கி கயிறு ஆண் பெண் இருவருக்குமே நல்ல பாதுகாப்பை தருகிறது..வருடா வருடம் ரக்ஷாபந்தன் விழாவை கொண்டாடி உறவை மேம்படுத்தி வருகிறோம்...
பதிவுலகம் கொடுத்த உறவு கௌசல்யா, ஆனந்தி, மகேஸ்வரி, ரேவதி அக்காக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். புடவை சுடிதார், பணம் எல்லாம் கேட்க கூடாது..!!
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்
Tweet | |||||
5 comments:
ரக்ஷாபந்தன் பின்னிருக்கும் பொருளை உன் பதிவை படிக்கையில் நான் தெரிஞ்சுகிட்டேன்.... விளக்கங்கள் நல்லா இருக்கு சௌந்தர்...உன் அன்பின் வரிசையில் உன் சகோதரியாய் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி...அதோட கிப்ட் கொடுக்காம ஏமாத்திடேல...பதிவு சகோதர உறவுகளின் வலிமையையும், உரிமையையும் சொல்லும் படியாய் அமைந்தது, ஒரு நல்ல உறவை கொடுத்த இந்த பதிவுலகத்திற்கு நன்றி...வாழ்த்துக்கள் தம்பி
புடவை சுடிதார், பணம் எல்லாம் கேட்க கூடாது..!!//
அவ்வ்வ்வ்வ்வ் எலேய்........
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்
ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்
கயிற்றிற்குப்பின்னால் இம்புட்டு விசயங்களா?
Post a Comment