Monday, May 9

ஆசைக்கும் ஓர் அளவுண்டு (கனிமொழி)

இப்பொழுது அனைவரும் முனு முனுக்கும் வார்த்தை...ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு தொடர்பு இல்லை. ஆ.ராசாவே முழுப்பொறுப்பு" என்று கூறியது தான், பரபரப்பு செய்தி. தன் கட்சிக்காரரை காப்பாற்றினால் போதும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்று நினைத்து விட்டார் போல ராம் ஜெத்மலானி.

ஸ்பெக்டரம் விவகாரத்தில் முதல் காரணம் கனிமொழி தான் என ராம்ஜெத்மலானிக்கு தெரியாமலா இருக்கும்.... இப்பொழுது இந்த ராம் ஜெத்மலானி பற்றி பார்ப்போம் இவர் வாதாடிய பிரபல வழக்குகள்.

1. ஹர்சத் மேத்தா என்பவர் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 


2. கேதான் ப்ரேக் என்பவர் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 


3.நம் பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குரு என்பவருக்கு ஆதரவாக 


4. இந்தியாவையே உலுக்கிய ஜெசிக்கா என்ற பெண்ணை கொலை செய்த மனுஷர்மா என்பவனுக்கு ஆதரவாக

5. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல இந்திரா காந்தியை கொலைசெய்தவர்களுக்கு ஆதரவாக இந்த வழக்குகளில் எல்லாம் குற்றவாளி யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இவர் எப்போதும் குற்றவாளிகளுக்கு மட்டும் தான் ஆஜர் ஆவாரா...?

கனிமொழிக்கு சில கேள்வி...

1.75 லட்சம் கோடி ஊழல் செய்தால்...மாட்டிக்கொள்வோம் என்பது தெரியாதா உங்களுக்கு...???

நீங்கள் சொல்லி தானே ராஜா..ஊழலுக்கு துணை நின்றார் இப்பொழுது அவரை தனியே விட்டு விட்டீர்களே..???


இப்பொழுது ராஜா தான் முழு காரணம் என்று உங்கள் வக்கீல் சொல்கிறாரே உங்களுக்கெல்லாம் பங்கு வந்து விட்டதால் தானே..???


கலைஞர் பொண்ணாக இருந்தும் எப்படி ஊழல் செய்ய வேண்டுமென்று உங்களுக்கு தெரியவில்லையே ஏன்..??

இப்பொழுது எதற்காக இவ்வளவு பணம் கொள்ளையடித்தீர்கள் உங்களுக்கு அடுத்த வேளை சோற்றுக்கா பஞ்சம்...???

ஏதோ மனதில் இருக்கும் கேள்விகள் இது இவையெல்லாம் அவர்கள் செவிக்கு எட்டாது என்பது எனக்கு தெரியும், இருந்தாலும் கேட்டு தான் பார்ப்போம் என்று ஒரு ஆசை தான்.

கனி மொழி மேடம் உங்கள் கட்சிகாரர்கள் தான் உங்களால் சிறை செல்கிறார்கள் என்றால் உங்கள் டிவியில் வேலை பார்ப்பவர்களும்...சிறை சென்று விடுவார்கள் போல, இனி உங்கள் தொலைக்காட்சிக்கு பணிபுரிய வந்தால் முன் பிணையுடன் தான் வேலைக்கு வரவேண்டும் போல.  

ஆசைக்கும் ஒரு அளவுண்டுஇப்படி பெருந்தொகையை கொள்ளை அடித்தால் சிறை செல்லாமல் எங்கு செல்வார்கள், பெண்ணின் ஆசை மிகப் பெரியது என்பதை நீங்கள் நிறுபித்து உள்ளீர்கள். ஜெயலலித்தாவையே மிஞ்சி விட்டீர்கள்...!!!

சிறை செல்லும் முன் உங்கள் தந்தையிடம் பயிற்சி பெற்றுகொள்ளுங்கள் சி பி ஐ விசாரணை முன்பு  எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதில் அவர் அனுபவசாலி...

டிஸ்கி : இந்த ஸ்பெக்டரம் ஊழல் வெளிவர காரணமாய் இருந்த சன்டிவிக்கு ஏதாவது இருக்கிறதா..???24 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

அவர்களுக்கு இலலை..

சன் டிவிக்கா ஏதோ பார்த்த கொடுப்பார்கள்...

தேர்தல் முடிவுக்கு பிறகு எல்லாம் மாறும்...

Balaji saravana said...

"அப்பன் புத்தி தப்பாம புள்ள பொறந்திருக்குன்னு" கிராமத்தில சொல்வாங்க.. இப்போ நிரூபணமாகுது!
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்", பொறுத்திருப்போம்.

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த வழக்குகளில் எல்லாம் குற்றவாளி யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இவர் எப்போதும் குற்றவாளிகளுக்கு மட்டும் தான் ஆஜர் ஆவாரா...?//

பின்னே எந்த யோக்கியத்தில் கனிமொழிக்காக வாதாடுகிரார்னு நல்லா புரியுது. பணம் பணம்...

MANO நாஞ்சில் மனோ said...

//1.75 லட்சம் கோடி ஊழல் செய்தால்...மாட்டிக்கொள்வோம் என்பது தெரியாதா உங்களுக்கு...???///


எங்கப்பன் குதிலுக்குள் இல்லை....

ராஜ நடராஜன் said...

டிஸ்கி:)

ரேவா said...

நண்பர் கவிதை வீதி சௌந்தர் சொன்னது போல, தேர்தல் முடிவுக்குப்
பின் இன்னும் நிறைய தெருக்கூத்துக்கள் இருக்கிறது...அதையும் தான் பார்ப்போமே சகோ :-)

அரைகிறுக்கன் said...

நம்ம பிரேமானந்தா சாமியாருக்கும் இவருதான வந்தாரு.

பாவம் கலி தின்னே செத்தான் சாமியாரு.

பிரவின்குமார் said...

ம்ம்.. சிந்திக்க வைக்கும் கேள்விகள்..! பொறுத்திருந்து பார்ப்போம்.. இன்னும் 3 நாட்கள்..!!

பிரவின்குமார் said...

//1.75 லட்சம் கோடி ஊழல் செய்தால்...மாட்டிக்கொள்வோம் என்பது தெரியாதா உங்களுக்கு...???//

இந்திய அரசாங்க ஆட்சியே.. எங்க கூட்டணிலதான் நடக்குது அப்புறமென்ன..?? தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கைதான்.

யோஹன்னா யாழினி said...

kalavaani payalkalukku kalavani payal than vakkeel..

kasu koduthaal vakkeelkal yarukkaagavum vaathadupavarkal thaane...

kanimozhi,kalaignar tv ivargalodu sun tv-yum serthu ulle sentral than nandu konjamaavathu uruppadum.

nalla velai...anjaa nenjanukku english,hindi theriyalai.. kalaignar ithuvishayathil thappichame entru iruppar.

ithanai vishayangalum ethuvume theriyaama maraichuttaanga entru kalaignar solvathu nalla naadagam.

Anonymous said...

ipa arasiyala... mm kalakku

Mohamed Faaique said...

ஆசைக்கும் அளவுண்டு... இல்லைங்க...ஆசைக்கு அளவே இல்லை..
மனிதன் ஒரு தங்க காடு கிடைத்தால், இன்னொரு தங்க காட்டுக்கு ஆசைபடுவான்

Azhagan said...

You are also committing the same mistake most people and media are doing. 1.76lac croe is supposed to be REVENUE LOSS to the Govt., there could have been a scam, but the amount involved would not be 1.76L crores.

dheva said...

தேர்தல் முடிவு வந்த உடனே அதுக்கு ஏத்த மாதிரி மத்திய அரசு தாளம் வசிக்கும் என்பது மட்டும் உறுதி.

Chitra said...

இந்த வழக்குகளில் எல்லாம் குற்றவாளி யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இவர் எப்போதும் குற்றவாளிகளுக்கு மட்டும் தான் ஆஜர் ஆவாரா...?


..... இப்படியெல்லாம் மக்கள் கேள்வி கேட்கப்படாது.... அப்புறம் அதற்கும் வழக்கு போடுவாங்க போல. ஹி,ஹி,ஹி,ஹி....

ஷர்புதீன் said...

பணம் பணம்... money,

all are depends on money, money MONEY ONLY ( you or me everybody have some selling price, somebodies may be worth for one small kiss from whom they are like)

:)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

They have power! they will do and say anything!but people?

asiya omar said...

இதுவும் கடந்து போகும் என்றில்லாமல் கேள்வி கேட்ட சௌந்தருக்கு பாராட்டுக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

அப்ப அவர் வாதாடினா கேஸ்ல எல்லாம் வெற்றி பெற்றாரா தோற்றாரா?

ஆனா எனக்கு விவரம் தெரிஞ்சு எந்த அரசியல்வாதியும் ஊழல் பண்ணினதுக்காக தண்டனை அனுபவிச்சதா ஞாபகம் இல்லை. பார்ப்போம்.

vasan said...

தின‌க‌ர‌ன் தீ, மூவ‌ர் ப‌லி, மாற‌ன் ப‌த‌வி வில‌க‌லுக்குப் பின், "ஸ்பொக்ட்ர‌ம்" என்ற‌ வாயில் நுழையாத‌ வார்த்தையை, ப‌ட்டி, தொட்டியிலுள்ள‌ ம‌க்க‌ளின் காதுக‌ளில் திணித்தது இந்த‌ 'ச‌ன் டிவி' தான். அப்புற‌ம் ம‌த்திய‌ அர‌சு தேர்த‌ல்வ‌ர‌ முகவின் "க‌ண்க‌ள் பனிக்க‌, நெஞ்ச‌ம் இனிக்க‌" குடும்ப‌ இணைப்பு வ‌ந்தபின்பு தான் ச‌ன் குரலை மாற்றிய‌து.

மாலதி said...

//1.75 லட்சம் கோடி ஊழல் செய்தால்...மாட்டிக்கொள்வோம் என்பது தெரியாதா உங்களுக்கு...???///கேள்வி கேட்ட சௌந்தருக்கு பாராட்டுக்கள்.

கடம்பவன குயில் said...

என்ன கேட்டு என்ன செய்ய? எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்?

ரொம்ப கேள்விஎல்லாம் கேட்காதீங்க சௌந்தர். வீட்டுக்கு சம்மன் வந்துடப்போகுது......

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

Anonymous said...

இந்த கட்டுரையை உங்களுக்கு யார் எழுதி கொடுத்தது சௌந்தர் சார்?

 
;