Tuesday, May 10

என்னுள் பிறந்து கரைந்தவள் நீ....காதல் கனவில் என்னுள் பிறந்து 
கரைந்தவள் நீ தானே!!!!
சிரித்தே கொல்லும் 
இராட்சசி நீ தானே !!
நொடிக்கொரு முறை கண்ணை மூடி திறக்கிறாயே
என்னை கைது செய்யவா?????
உன் பாதம் பட்ட சருகுகளும் 
உயிர்தெழுகிறதே...
கருவிழி மேகம் கொண்டு 
என்னில் நேச மழை பெய்தவளே!! 
பேசி பேசி தீர்த்தாலும் 
மீண்டும் கேட்க துடிக்கிறதே மனம்
குரலில் மாயம்செய்தவளே!!


உன் உள்ளங்கையில்
ஆயுள் முழுவதும் 
ஆயுள் ரேகையாக நான்...!!


உன் நேசத்தை உன் கண்களில் 
பார்கிறேன்...!!
உன் கண்கள்
என்னை காண்பிப்பதால்...!!! 


ஒரு முறை பூத்து 
ஓராயிரம் அர்த்தம் சொன்னவள் .....
மீண்டும் என்னுள் பூக்க துடிக்கிறாள்
அது ஏனோ..!!


உன் விழி பேசும் 
மொழிஅறியாமல் 
நான்..!!!!

உன் விழியிடம்
பாடம் கற்க வந்த 
என்னை ....

உன் இமையால் 
கைது செய்து
தர மறுக்கிறாயே
ஏன்..!!?? 


25 comments:

dheva said...

என்ன பண்ணலாம்...???? ம்ம்ம்ம் என்ன என்னமோ பண்ணுதே இந்தப் பொண்ணு?

ஒரே காதல் மழையா இருக்கே...

ஒரு குடை கொடுங்கண்ணாவ்!!!!

மாணவன் said...

நீ கலக்கு மச்சி :)

சௌந்தர் said...

dheva சொன்னது…
என்ன பண்ணலாம்...???? ம்ம்ம்ம் என்ன என்னமோ பண்ணுதே இந்தப் பொண்ணு?

ஒரே காதல் மழையா இருக்கே...

ஒரு குடை கொடுங்கண்ணாவ்!!!!////

எந்த பொண்ணு...????

உங்களுக்கு இல்லாத குடையா...??

சௌந்தர் said...

மாணவன் கூறியது...
நீ கலக்கு மச்சி :)///

தேங்க்ஸ் மச்சி :)))

cheena (சீனா) said...

அன்பின் சௌந்தர்

கவிதை அருமை - ஒற்றுப் பிழை தவிர்க்கலாமே ! முன்னிலையில் பேசிக் கொண்டே வந்து திடீரென் படர்க்கைக்குச் சென்று மீண்டும் முன்னிலைக்கு வருவதேனோ ? நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

காதல் மழை சொட்டுதே...
கலக்குங்க.. :)

Chitra said...

lovely pictures.

Chitra said...

காதல் ரசம் சொட்ட சொட்ட, கவிதை நல்லா வந்து இருக்குது. சூப்பர், சௌந்தர்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஒரு வேலை விழியிடம் பாடம் இமைகளால் கைது...


இதற்கு அந்த வயசுதான் காரணம்...

அருமையான காதல் கவிதை..
வாழ்த்து சொல்றது
கவிதை வீதி செளந்தர்...

கடம்பவன குயில் said...

//உன் உள்ளங்கையில்
உன் ஆயுள் முழுவதும்
ஆயுள் ரேகையாக நான்...!!//

கவிதை இனிமை. வாழ்த்துக்கள்.

பிரவின்குமார் said...

கலக்கல் கவிதை நண்பா..!! ரொம்ப அருமையான சிந்தனை.. அம்புட்டும் அனுபவித்து எழுதுவது போன்று உள்ளது. உண்மையா மக்கா..??? ஹி..ஹி..ஹி..ஹி.. ரைட்டு.

வெள்ளிநிலா said...

நாராயணா, இந்த கவிதை கொசு தொந்தரவை தாங்க முடியல நாரயணா
( சும்மாவே கவிதைக்கும் நமக்கும் தூரம் ., லவ் கவிதைனா இன்னும் தூரம் ) நீ கலக்கு சித்தப்பு

Anonymous said...

அழகான காதல் கவிதை ..

Mohamed Faaique said...

ரொம்ப உருகு இருக்கீங்க தல.....

mmm..நடத்துங்க பாஸ்...

அப்பாவி தங்கமணி said...

Nadathuga nadathunga...:))))

Balaji saravana said...

மச்சி ஊருல வெயில் ரொம்ப ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன்! நீ மட்டும் எப்படி இப்படி கூல் கவிதை போடுற?! ;)

பாலா said...

உங்களை இப்படி ஆக்கிய அந்த பொண்ணு யாருங்க?

ரேவா said...

உன் பாதம் பட்ட சருகுகளும்
உயிர்தெழுகிறதே...

அட அட கவித கவித

ரேவா said...

கருவிழி மேகம் கொண்டு
என்னில் நேச மழை பெய்தவளே!!

சூப்பர் லைன்

ரேவா said...

பேசி பேசி தீர்த்தாலும்
மீண்டும் கேட்க துடிக்கிறதே மனம்
குரலில் மாயம்செய்தவளே!!

பார்டா... பொல்லாத மாயக்காரியா இருப்பாங்க போல :-)

ரேவா said...

என்ன சகோ காதல் கவிதை எல்லாம் பலமா இருக்கு...அந்த பொண்ணு யாருன்னு மட்டும் சொல்லு அம்மா கிட்ட சொல்லி நான் சம்மதம் வாங்கித் தரேன்...ஆனா அதுக்கு தனியா கவனிக்கணும்... ஹி ஹி...கவிதை சூப்பர் தம்பி...

இராஜராஜேஸ்வரி said...

மிக அருமையான இதயம் தொட்ட கவிதைக்குப் பாராட்டுக்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

யாரு கண்ணுக்குள்ள சௌந்தரைக் கைது செய்தது..:))

Jaleela Kamal said...

கவிதை அருமை, யாரு யாரு யாரு அந்த பொண்ணு, என் கிட்ட மட்டும் சொல்லுங்க, நான் பிளாக்க்ல போட்டுரேன்

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

very very nice soundar..

 
;