Sunday, July 18

டிப்ஸ்......

பிள்ளையாரப்பா...இந்த வெயில்ல ஜனங்க எல்லாம் என் கடையில வந்து தாகம் தீர்த்துக்கணும்..கடை கல்லாவும் நிறையணும்..சொல்லிக்கொண்டே பூவை சாமிக்கு போட்டார் குமாரசாமி. ஏம்ப்பா செந்தில் மணி ஒன்பது ஆச்சு... வியாபாரம் நடகிற நேரம் இந்த சேகரை எங்க காணோம்...?

அரை மணி நேரத்துல வந்துடறேன்னு சொன்னார் அண்ணாச்சி.. சரி சரி வர்ற ஆளுங்களை சுறு சுறுப்பா கவனி...அண்ணாச்சி கடை உபசரிப்புலதான் இந்த பழமுதிர்ச்சோலை இருபது வருஷமா நல்லா ஓடிட்டிருக்கு ஆமா...ஓடி.. ஓடி..வேலை செஞ்சாலும் பேட்டாவை ஏத்திப்புட போறியாக்கும்... எவனாவது டிப்ஸ் வைச்சான்னாக்கவே கண்ணு வைப்ப என்று மனதிற்குள் முனகிய செந்தில், பழங்களை அடுக்கி வைத்தான்.

நைந்த வேட்டியும், ஒட்டுச் சட்டையும் போட்ட கிராமத்து ஆசாமி கடைக்குள் நுழைந்து நாற்காலி நுனியில் உட்கார்ந்தவாறு செந்திலை பார்த்தான். ம் காலையில் வந்துடுச்சி பாரு சப்ப ...கிராக்கி... என்று நினைத்த செந்தில், அவன் டேபிள் அருகே வர...அதற்குள் திபு திபு வென்று காரை விட்டு இறங்கிய டிப் டாப் ஆசாமிகள் கூட்டம் மூன்று டேபிளை அடைந்தார்கள்.

ஆஹா இன்னைக்கு டிப்பு-டாப்புதான் என குஷியான செந்தில் கிராமத்தானை விட்டு விட்டு அவர்களிடம் சென்று சார் என்ன வேணும்? செயற்கை புன்னகைத்தான் எல்லாம் அவங்கவங்க மெனுவை சொல்லுங்க..ஸபாரி சொல்ல..கஸாட்டா, ப்ருட் சாலட்,பைனாப்பிள் என ஐஸ்கிரீம்களும், ஜூஸும் பறந்தன. 'செந்தில்..அங்க பாரு அவரு ரொம்ப நேரமா உட்கர்ந்துதிருக்கார்... என்ன வேணும்னு விசாரி..? உரிமையாளர் குமாரசாமி சொல்ல..."ம் என்ன வேணும்? கிராமத்தானிடம் சலித்துக் கொண்டான் அந்த ஐஸ்கிரீம் எவ்வளவுப்பா...? இருபது ரூபா.. 

கிராமத்தான் பாக்கெட்டை துழாவிசில்லறை கொட்டி எண்ணிப் பார்த்தான்...சரியாக இருபது ரூபாய் இருந்தது அதுவே சின்ன கப் எவ்வளவுப்பா...? கடுப்பான செந்திலு...பதினாறு ரூபா..என்றான் அதையே குடுப்பா... என்றவன் ஐஸ்கிரீமை பொறுமையாக சுவைத்தான். டிப் டாப் கும்பல் சாப்பிட்டு முடித்திருக்க, பில்முன்னுத்தி அறுபதை நீட்டினான். ஜானு..வெயிட்டருக்கு இரண்டு ரூபா சில்லறை இருக்கா...? என்கிட்ட நோட்டதான் இருக்கு ஸ்பாரி கிசு கிசுக்க...கழுத்து நிறைய நகைகளுடன் இருந்த அவள் பதிலுக்கு, சில்லறை இல்லாட்டி விடுங்க...அதுக்காக பத்து ரூபாய் தூக்கி வெச்சிடாதீங்க...கிசு கிசுத்தாள்.

கும்பல் காலியானதும் ஏமாற்றத்துடன் பிளேட்டுக்களை எடுக்க செந்தில் கிராமத்தான் டேபிளுக்கு திரும்பியதும்..அறைந்தார் போல் நின்றான்....கிராமத்தான் பிளேட்டில் டிப்சாக நான்கு ரூபாய் சில்லறைகளை விட்டுச்சென்றிருந்தான்.இருப்பதை கொடுத்து மற்றவர்களை சந்தோஷப்படுத்த நினைத்த அவன் இப்போது நாகரீகமானவனாய் தெரிந்தான்...!


இது நான் படித்த கதை எனக்கு மிகவும் புடித்து இருந்ததால் உங்களிடம் பகிர்கிறேன் 

22 comments:

Unknown said...

நல்ல கதை சௌந்தர். அவசர அவசரமா கதை சொன்னிங்க போல....

நிறைய எழுத்துப் பிழை...
//உட்கார்ந்து தவாறு செந்திலை செந்திலை பார்த்தான். //
//பேட்டாவை எத்திப்புட போறியக்கும்.//
//நைந்த வெட்டியும், ஓட்டுச் சட்டையும்//

சரி செய்யவும்.

Karthick Chidambaram said...

அருமையான கதை ....
படித்ததை பகிர்ந்ததை வரவேற்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கதை சௌந்தர்...
படித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி.....

Prasanna said...

என்ன பண்றது டிப்பு டாப்புக்குதான் எப்போமே மவுசு..

எல் கே said...

pagirvukku nandri

ஜெய்லானி said...

நல்ல கதைதான்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அருமையான கதை ....thanks for sharing

Anonymous said...

அருமையான கதை.

இது பைபிளில் வரும் ஒரு கதையின் தழுவல் ... இருந்தானும் ... சூப்பர்.

Riyas said...

ம்ம்ம் நல்லாருக்கு

Unknown said...

கதை எளிமையாக இருக்கிறது... பாராட்டுக்கள்..

SShathiesh-சதீஷ். said...

கதை கதையாம் காரணமாம் சொல்லுங்கோ சொல்லுங்கோ

School of Energy Sciences, MKU said...

தன்னிடம் மிகுதியாய் இருப்பதில் கொடுப்பதை விட இருப்பதை அப்படியே கொடுப்பது எப்பேர்பட்ட உயர்ந்த தானம்??. அருமையான பகிர்வு சவுந்தர்

ஹேமா said...

நல்ல கதை சௌந்தர்.மிக்க நன்றி.

jothi said...

good one.

சீமான்கனி said...

நல்ல கதை சௌந்தர்...பாராட்டுக்கள்..

ஜில்தண்ணி said...

சின்ன கதை- நல்ல கதை
பகிர்வுக்கு நன்றி :)

Jey said...

கிராமத்தனுக்கு எப்பவும் வெள்ளை மனசுயா..:).

கதை நல்லாருக்கு.

Prathap Kumar S. said...

நல்லாத்தான் ராசா யோசிக்கிறே... நல்லாருக்கு கதை...
இதை பைபிள்லேருந்து சுட்டதுன்னு யாரோ சொல்றாங்க...அப்ப மணிரத்னம் ரேன்சுக்கு போய்ட்டிய்யா...??

செல்வா said...

கதை அருமை சவுந்தரு..!! நானும் கூட என்னோட ப்ளாக் ல டிப்ஸ் கொடுக்கிறேன் ஆனா யாரும் என்னை நல்லவன்னு நம்ப மாட்டேங்கிறாங்க ..

விஜய் said...

மிக அருமையான கதை சௌந்தர்....

இந்த அழகான கதையை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு உங்களுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும் சௌந்தர்..

மிக்க நன்றி,

இது போன்ற நல்ல கருத்துள்ள கதைகளை எங்களிடம் கொண்டு வந்து சேருங்கள் ...

வாழ்த்துக்கள்

Chitra said...

டிப்ஸ் பற்றிய கதை. நல்லா இருக்குதுங்க. பகிர்வுக்கு நன்றி.

நகைச்சுவை said...

டிப்ஸ் எவ்வள்வு தருவீங்க

 
;