Saturday, June 12

மது நாட்டுக்கு லாபம் வீட்டுக்கு நஷ்டம் ...

                                                                   


நேத்து பேப்பர் படித்தேன் அதில் ஒரு மருத்துவக் கல்லுரி மாணவன் ஒருவன் கொலை செய்தான் என்று படித்தேன் ஒரு மருத்துவ படிப்பு படித்து விட்டு இப்படி கொலை செய்து விட்டானே என்று நினைத்தேன் இது மது வால் வந்த வினை.

அந்த மாணவர் பெயர் சதீஷ் ,மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார், அந்த மாணவரின் பெற்றோர்கள் இங்கு இல்லை அவர்கள் அமெரிகாவில் வசித்து வ்ருகிறாக்கள்.அந்த மாணவரை பார்த்து கொள்ள உறவினர் இருந்துள்ளார் அவரை தான் கொலை செய்து விட்டார் இந்த மாணவர் இந்த கொலைக்கு காரணம், மது அருந்தியது தான். ஏன் குடித்து விட்டு வந்து இருக்கிறாய் என்று கேட்டு திட்டி உள்ளார், இதனால் அத்திரம் அடைந்த அந்த மாணவர் கொலை செய்து விட்டார், குடித்ததால் வந்த வினை,மருத்துவம் படித்து டாக்டர் ஆக வேண்டிய இந்த மாணவன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது. எல்லாம் மது செய்த வினை.

கல்லூரிகளில் தங்கிப் படிக்கும் இளைஞர்கள் உள்பட 19 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் மது அருந்துவது சமீப ஆண்டுகளில் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் மது அருந்துவதற்காக தங்கள் வருமானத்தில் 27 சதவீதம் வரை செலவிடுகின்றனர். அதேசமயம் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் மது அருந்த தங்கள் வருமானத்தில் 38 சதவீதம் வரை செலவிடுகின்றனர்.

மது அருந்துவதில் பஞ்சாப் மற்றும் ஆந்திரப்பிரதேசத்தை அடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தமிழகத்தில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தெரிவித்துள்ளது. 2004 முதல் 2008 வரையிலான ஆண்டுகளில் தமிழகத்தில் மது விற்பனை 61 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மது அருந்துபவர்கள் பிராந்திக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ரம், விஸ்கி ஆகியவை அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. தமிழகத்தில் 2007, 2008 ஆம் ஆண்டில் மட்டும் எப்போதும் இல்லாத அளவுக்கு 30 மில்லியன் பெட்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2004, 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பெட்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதை ஒப்பிடுகையில் 60.9 சதவீதம் மதுபான விற்பனை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு 80 சதவீதம் பிராந்தி, விஸ்கி போன்ற கடினரக மதுபானங்கள் மூலமாகவும், 20 சதவீதம் பீர் போன்ற மென் மதுபானங்கள் மூலமாகவும் வருமானம் கிடைப்பதாக டாஸ்மாக் விற்பனைப் பிரிவு தெரிவித்துள்ளது 

ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் தனது சம்பாத்தியத்தின் முக்கால் பகுதியான 75 ருபாயை டாஸ்மாக்கில் செலவு செய்கிறான். வீட்டில் பசியோடு காத்திருக்கும் மனைவியும் குழந்தைகளும் மீதமுள்ள 25 ரூபாயில் தான் மூன்று வேளை உணவு உண்டு பிற செலவுகளையும் செய்ய வேண்டும். பணம் போதவில்லை என்று மனைவி கேட்டுவிட்டால் அடி, உதை தான்.

மது என்பது வீட்டை, நாட்டை அழிக்கும் அரக்கன் என்பதும் ஆனால் அதற்கு எதிர்ப்புகள் அவ்வளவாக இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இது நஞ்சு கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். 




15 comments:

Unknown said...

எங்களை திருத்தவே முடியாது.., அப்புறம் அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் பில் தருவதில்லை..
ஏன் அதனை யாரும் கண்டிக்கவில்லை..

Jeyamaran said...

இன்றைய வாழ்கையில் பிரச்சனைக்கு காரணம் மது கால் மாது முக்கால் ரெண்டுமே உயிரை குடித்துவிடும்
so be careful

Riyas said...

//மது என்பது வீட்டை, நாட்டை அழிக்கும் அரக்கன் என்பதும் ஆனால் அதற்கு எதிர்ப்புகள் அவ்வளவாக இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.// correct.

dheva said...

தம்பி,.... அருமையான பதிவு....! மது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும்!

வாழ்த்துக்கள் தம்பி!

AkashSankar said...

உண்மை..உண்மை..உண்மை..உண்மை..

Jayadev Das said...

பெற்றோர்கள் குழந்தைகளை பேணி, நல்வழிப்படுத்துவது போல ஒரு அரசன் தன் மக்களை காத்து நிற்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழகத்தில், பொற்கை பாண்டியன், மனு நீதி சோழன், கரிகால் சோழன், கர்ம வீரர் காமராஜர் போன்றோர் ஆண்ட பொது அங்ஙனமே மக்களைக் காத்தனர். ஒரு தகப்பனே தன் பிள்ளைக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை தினமும் குடிக்கச் சொல்லிக் கொடுத்து, அதைப் பார்த்து உள்ளூர மகிழ்ந்தால் என்னவாகும்? குடிப்பது குடிமகனாக இருந்தாலும் அதை, [விளைவுகள் எல்லாம் தெரிந்திருந்தும்] விற்று பணம் பார்ப்பது, மக்களைக் காக்க வேண்டிய அரசு அல்லவா? யாரிடம் போய்ச் சொல்லி அழுவது?

நேசமித்ரன் said...

அருமையான பதிவு

ஜெயந்தி said...

அவசியமான, தேவையான பதிவு. ரொம்ப நன்றி.

Swengnr said...

வணக்கம், என்னுடைய முதல் பதிவு போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

Unknown said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

தமிழ் மதுரம் said...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இது நஞ்சு கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.//


தத்துவத்துடன் கூடிய பதிவு. தத்ரூபமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள் தோழா. காலத்திற்கே பதிவு.

தமிழ் மீரான் said...

சமூகத்திற்கு அவசியமான பதிவு.. நன்றி

விஜய் said...

கலக்கிட்ட நண்பா,தேவையான அலசல், தொடரட்டும் உன்னுடைய சேவை ....வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் சௌந்தர் - குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் நாட்டைக் கெடுக்கும். - தெரிந்தே தான் தவறு செய்கிரார்கள். அரசும் வருவாயை மனதில் வைத்துக் கொண்டு கட்டுப்படுத்த மறுக்கிறது. நல்ல தொரு சிந்தனையில் எழுதப்பட்ட இடுகை. சமுதாய சிந்தனை வாழ்க சௌந்தர். நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சௌந்தர் - குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் நாட்டைக் கெடுக்கும். - தெரிந்தே தான் தவறு செய்கிரார்கள். அரசும் வருவாயை மனதில் வைத்துக் கொண்டு கட்டுப்படுத்த மறுக்கிறது. நல்ல தொரு சிந்தனையில் எழுதப்பட்ட இடுகை. சமுதாய சிந்தனை வாழ்க சௌந்தர். நட்புடன் சீனா

 
;