Friday, June 25

பங்கு சந்தை என் அனுபவம்

                                                                                
                                                                              
பங்குசந்தை ஒரு கடல் போல, பலர் பயந்து இந்த பக்கமே வருவது கிடையாது, எப்போது சுனாமி வரும், எப்போது புயல் வரும் என்று யாராலும் சொல்லமுடியாது. நான் ஒரு சிறு முதலீட்டாளர் தான் .பத்து ஆயிரம் இருந்தால் ஒரு லட்சம் வரை பங்குகள் வாங்கி கொள்ள முடியும் . 
பங்கு சந்தையில், இது தான் என் முதல் அனுபவம். நான் முதலில் 100 ரூபாய் வைத்து intraday செய்தேன்  (intraday என்றால் அன்றே ஒரு பங்கை  வாங்கி அந்த பங்கை அன்றே விற்பது தான் intraday) நான் முதலில்  வாங்கிய பங்கு  ispat  இதன் விலை அப்போது  20 ரூபாய்.14 ரூபாய் லபாம் எடுத்தேன்  பலர் கோடி கணக்கில் intraday செய்வார்கள் நானும்  ஒரு நாள் செய்வேன்  என்று நினைத்து கொண்டேன்.


ஒரு  நாள் intraday செய்து 100 ரூபாய் லாபம் எடுத்து விட்டால், மறு நாள் 300 ரூபாய் நஷ்டம் வந்து விடும். விட்டதை புடிக்கலாம் என்றால் மறுபடி அடிதான் கிடைக்கும். பிறகு அந்த பங்கை குறை சொல்லுவோம், சீசீ  இந்த பழம் புளிக்கும் கதை மாதரி இனி intraday செய்ய கூடாது என்று  முடிவுக்கு வருவேன். ஆனால் மறுபடி intraday செய்து லாபம் எடுப்போம், மறுபடி நஷ்டம், மறுபடி லாபம் மாறி மாறி வரும். வந்த லாபத்தை பங்குகளாக வைத்து கொண்டால் நல்லது அது பணமாக வைத்து இருந்தால் வந்த லாபம் போய்விடும் இப்படி சேர்த்து தான் நான் இப்போது 2000 ரூபாய்க்கு பங்கு சேர்த்து வைத்து இருக்கிறேன்.


Short Term; (என்றால் ஒரு பங்கை வாங்கி மூன்று மாதம் அல்லது நான்கு மாதம் நல்ல லாபம் வரும் போது விற்கலாம்) பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி வைத்து கொண்டு அந்த பங்கு விலை உயர்ந்த உடன்  அந்த பங்கை விற்கலாம் என்று நினைத்தேன்  அப்படி வாங்கி வைத்தால் அந்த பங்கு விலை மட்டும் குறையும். மற்ற பங்கு விலை எல்லாம் ஏறும் அட என்னடா இது நம்ம வாங்கிய பங்கு மட்டும் விலை குறையுதே. என்ன தப்பு செய்தோம் என்று யோசிப்பேன்  எதனால் இந்த பங்கு விலை மட்டும் குறையுது என்று தெரியாது.  நான் ஒரு பங்கை வாங்கினால் போதும் நல்லா இருக்கும் பங்கின் விலை கூட குறைந்து விடும். என்ன இது சோதனை என்று  நான் நினைப்பேன் நமக்கு மட்டும் தான் இப்படி நடக்குதா என்று  புலம்புவேன்.



ஹிண்டல்கோ பங்கை குறைந்த விலையில் வாங்கினேன் 1000 ரூபாய் லாபம் வரும் போது அதை விற்கவில்லை பிறகு பங்குசந்தை குறைந்தது உடனே என் பங்கு விலையும்  குறைந்தது எங்கே நஷ்டம் வந்து விடுமோ என்று பயந்து  450 லாபத்திற்கு விற்று விட்டேன். இப்படி பல பேர் லாபம் வரும் போது விற்க மாட்டோம். குறைந்த லாபத்திற்கு அல்லது நஷ்டத்திற்கு விற்று விடுவோம்.

லாங் டைம் (என்றால் ஒரு பங்கை ஒரு வருடத்திற்கு மேல் வைத்து இருந்தால் அது லாங் டைம்) ஒரு வருடத்திற்குமேல் ஒரு பங்கு வைத்து இருந்தால் அந்த பங்கு மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி கிடையாது. என்ன இருந்தாலும் நான் பங்குசந்தையில் லாங் டைம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நான் இப்பொழுது தெரிந்து கொண்டேன்.
எனக்கும் நல்ல லாபம் கிடைத்து உள்ளது.

பங்கு சந்தையில் நான் செய்த ஒரே சாதனை ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கு மேல்  intraday செய்தது உள்ளேன் இது தான் சாதனை. இப்போது நிறைய கற்று கொண்டு எதோ லாபம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.

முக்கிய குறிப்பு: இதை யாரும் வருமானவரிதுறையிடம் சொல்ல கூடாது ஹா ஹா ஹா 

 
 


26 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த கேட்ட பழக்கம் வேற இருக்க உங்ககிட்ட..

Unknown said...

அப்ப பங்கு சந்தை பற்றி உங்களிடம் நிறைய தெரிந்து கொள்ளலாம்

செல்வா said...

அப்படினா உங்ககிட்ட நிறைய தெரிஞ்சிக்கலாம் போல இருக்கே ... வாழ்த்துக்கள் ...

விஜய் said...

சௌந்தர் அருமையான பதிவு, கொஞ்சம் அறிவும், தைரியமும் இருந்தா கலக்கலாம் சௌந்தர்.நிச்சயம் உங்கள் இலட்சியத்தை எட்ட முடியும், உங்களை பார்த்து பிரம்மித்து போனவங்கள்ள நானும் ஒருத்தன்... உங்களால முடியும் சௌந்தர் , வாழ்த்துக்கள்

Thomas Ruban said...

பங்கு சந்தையில், (பேராசை படாமல்) இன்னமும் அதிகம் லாபம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

Feros said...

ஆஹா ஆஹா பங்கு சந்தையிமா???
வாழ்த்துக்கள்

Jeyamaran said...

நான் உங்களிடம் கேட்க நினைத்ததை பதிவாக எழுதியதற்கு மிக்க நன்றி விரைவில் என்னையும் நீங்கள் இதில் காணலாம்

Jay said...

சௌந்தர் இப்பொழுதுதான் கரையில் நீந்த கற்றுகொன்டுள்ளார். விரைவில் ஆழ்கடளுக்குள் சென்று முத்தெடுப்பார்.

ஜெய்லானி said...

எனக்கும் ஆசை இருக்கு ஆனா பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நிறைய இருக்கு...!! வாழ்த்துக்கள்..!!

ஜெய்லானி said...

//முக்கிய குறிப்பு: இதை யாரும் வருமானவரிதுறையிடம் சொல்ல கூடாது ஹா ஹா ஹா //

இந்த வரி நான் படிக்கல...ஹி..ஹி..

dheva said...

என்ன என்னம்மோ சொல்றியப்பா..! ஒண்ணும் புரியல..ஆனா ஒண்ணு மட்டும் புரியுது...உங்கிட்ட கத்துக்கணும் பங்கு பத்தி..சொல்லிக்கொடுப்பியாப்பா? நல்ல பயனுள்ள கட்டுரை தம்பி...!

ஜெயந்தி said...

பார்த்து தம்பி. சூதானமா இருந்துக்க.

தமிழ் அமுதன் said...

;;)))

பனித்துளி சங்கர் said...

சகலகலா வல்லவன்

KANA VARO said...

பங்குசந்தை ஒரு கடல் போல//

அது தான் எனக்கும் புரியல போல

Riyas said...

சௌந்தர் பின்ரிங்க நீங்க ஒரு சகல கலா வல்லவன்

சீமான்கனி said...

அட பார்ரா...கலக்குறீங்க சௌந்தர்...வாழ்த்துக்கள்...

ஹேமா said...

இதுபற்றி எனக்குத் தெரியவில்லை.
விருப்பமும் இல்லை சௌந்தர்.

ராஜா பேசுகிறேன் ... said...

ஆனா நா நிறய நஷ்டம் பன்னியிருகேன்....

பின்னோக்கி said...

பங்குச்சந்தையில் லாபம் பார்த்ததற்கு வாழ்த்துக்கள்.

Shafees Marikkar said...

sooper epadithan jamaikirangaloa...........
melum munnere vaalthukkal

Ramesh said...

Good post. keep it up

Jey said...

அண்ணே , ஈரோப்பு இருக்கிற இருப்பு சரியில்லாம தெரியுது, கொஞ்சம் சாக்கிரதயா இருங்க சொல்லிபுட்டேன் ஆமா.

Jey said...

எல்லோருக்கும் புரியிற மாதிரி கோர்வையா எழுதி இருக்கீங்க.

சௌந்தர் said...

வெறும்பய

இந்த கேட்ட பழக்கம் வேற இருக்க உங்ககிட்ட//
இது கேட்ட பழக்கமா எனக்கு தெரியாது.

கே.ஆர்.பி.செந்தில் …
அப்ப பங்கு சந்தை பற்றி உங்களிடம் நிறைய தெரிந்து கொள்ளலாம்//
அண்ணா எனக்கு தெரிந்த விஷயம் சொல்லித்தரேன்


கண்டிப்பா சொல்லிதரேன் செல்வக்குமார்

நன்றி விஜய்

நன்றி: Thomas Ruban

நன்றி Feros

வாங்க வாங்க Jeyamaran

ஜெய்லானி சொன்னது…
//முக்கிய குறிப்பு: இதை யாரும் வருமானவரிதுறையிடம் சொல்ல கூடாது ஹா ஹா ஹா //
இந்த வரி நான் படிக்கல...ஹி..ஹி.//
நல்ல வேலை இதை நீங்கள் படிக்க வில்லை

@தேவா அண்ணா எனக்கு தெரிந்த விசயத்தை சொல்லித்தரேன்

@ஜெயந்தி நீங்க இருக்கும் போது என்ன பயம் அக்கா

நன்றி தமிழ் அமுதன்

நன்றி பனித்துளி சங்கர்

@KANA VARO நன்றி உங்கள் வருகைக்கு

Riyas சொன்னது…
சௌந்தர் பின்ரிங்க நீங்க ஒரு சகல கலா வல்லவன்//

நானும் இப்பொது தான் தெரிந்து கொள்கிறேன்.

நன்றி seemangani.

உங்கள் கருத்துக்கு நன்றி ஹேமா.

ராஜா பேசுகிறேன் ... சொன்னது…
ஆனா நா நிறய நஷ்டம் பன்னியிருகேன்.//
நஷ்டம் எல்லாம் இதில் சாதாரணம் ராஜா.

நன்றி பின்னோக்கி.

நன்றி ஷ.மரிக்கார்

நன்றி றமேஸ்-Ramesh

நன்றி Jey

ஆனந்தி.. said...

ரொம்ப useful சௌந்தர்..நான் படிச்சிட்டேன்..புரிஞ்சது..ஆனால் புரியலே..புரிஞ்சது..ஆனால்..இதை பார்ட்-2 னு ஏன் தொடர கூடாது சௌந்தர்??

 
;