Thursday, June 3

கலைஞர் பிறந்த கதை...

                                                                       
திருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தூரத்திலிருக்கிறது அந்த ஊர்.திருக்குவளை. திருவாரூரில் இருந்து கச்சனம் என்கிற ஊர் வரைக்கும் தான் பஸ் வசதி. இப்போதிருப்பது போல் அப்போ தெல்லாம் மினி பஸ் என்ன, மாட்டு வண்டி கூட கிடையாது. நடராஜா சர்வீஸ் தான்.கச்சனத்தில் இறங்கி காலரா நடக்க ஆரம்பித்தால் அரை மணி நேரத்துக்குள் திருகுவளைக்கு வந்துவிடலாம். 


முனீஸ்வரன் கோயில் போகும் வழியில் அங்காளம்மன் தெருவில் நெருக்கி அடித்தாற்போல் இருக்கும் நாலைந்து வீடுகள்.அதில் ஒரு விடுதான் கருணாநிதியின் வீடு. இப்போது அந்த வீடு திருக்குவளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியாக இருக்கிறது இந்தப்பள்ளிக் கூடம் தான் கருணாநிதியின் வீடு. சுமாரான குடுபம்தான். முத்துவேலருக்கு மூன்றாவதாகப் பிறந்தவர் கருணாநிதி.


திருக்குவளையில் முத்து வேலரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை வேளாளர்  குடுபத்தைச் சேர்ந்த இவர், திருக்குவளையின் அதிகாரபூர்வமற்ற டாக்டர்.லேசான தலைவலியாக இருந்தாலும் சரி, பாம்புக்கடியாக இருந்தாலும் சரி. இவரிடம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும். எந்த வியாதியாக இருந்தாலும் மருந்து என்ற பெயரில் இவர் தரும் வஸ்து, விபூதி மட்டுமே. அதையும் பய பக்க்தியோடு வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு போவர்கள். இங்கே பீஸ் கொடுக்காவிட்டாலும் ட்ரீட்மெண்ட் உண்டு. சிக்கலான வியாதியாக இருந்தால் இடும்பன் சாமிக்குப் பூஜை போடச் சொல்வார்.கொஞ்சம் காஸ்ட்லிதான்.ஒரு கள்ளுப் புட்டி, நாலு பீடி தவிர,கோழியைப் பலி கொடுக்க வேண்டியிருக்கும்.


சின்ன வயதிலேயே முத்து வேலருக்குக் கல்யாணமாகி விட்டது. காதல் கல்யாணம்தான். குஞ்சம்மாள் என்ற குத்துவிளக்கு கொஞ்ச நாளைக்கு மட்டுமே எரிந்தது. கல்யாணம் முடிந்து சில வருஷ்ங்களிலேயே குஞ்சம்மாள் உயிரிழந்தார். அடுத்ததாக முத்துவேலர் வேதம்மாளை கல்யாணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை மூன்றாவதாக
அவர் திருமணம் செய்து கொண்டார் அவர் தான் அஞ்சுகம் அம்மாள்.

குடும்ப வாழ்கை என்னவோ சந்தோஷமாகவே போய்க் கொண்டு ருந்தது. முத்து வேலருக்குத்தான் குழந்தையில்லாத குறை நெருடலாக இருந்தது ஏற்கனவே இரண்டு முறை மனைவியை இழந்த சோகம் வேறு அவரிடம் மிச்சமிருந்து, குழந்தை வேண்டி ஏறி இறங்காத கோவில் இல்லை. அதற்குப் பரிசாகக் கிடைத்தவை, இரண்டு பெண் குழந்தைகள் வாரிசு இல்லையே என்று வருத்தத்தில் இருந்த முத்துவேலருக்கு ஆறுதலாக இருந்தாலும் இதில் மனநிறைவு இல்லை, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பெரிய நாயகத்தம்மாள், சண்முகம் சுந்தரம்மாள் என்று பெயர் வைத்தார்கள்.

முத்துவேலரின் கவலை தீரும் நாள் வந்தது 1924-ம் வருஷம் ஜூன் மாதம் முன்றாம் நாள் கருணாநிதி பிறந்தார். முத்துவேலர் வைத்த பெயர் தட்சிணா மூர்த்தி. 


இன்று 87 வது பிறந்தநாள் காணும் அய்யா கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை வணங்குகிறேன்.      




                    

14 comments:

Vijays said...

இன்று 87 வது பிறந்தநாள் காணும் அய்யா கலைஞர் திரு மு.க. கருணாநிதி அவர்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை வணங்குகிறேன்.

உடன்பிறப்பு said...

உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்

Unknown said...

கட் அவுட் வைக்கலியா..
அது என்னங்க வாழ்த்த வயதில்லை..? இது அக்மார்க அரசியல் வியாதிகள் வார்த்தை..

வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை, மனம் இருந்தால் போதும்..

நான் அவரை வாழ்த்துகிறேன்...

விஜய் said...

இன்னும் சிறந்த நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள், அவர்களை பற்றி எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் ....வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

@கே.ஆர்.பி.செந்தில்: உங்களுக்கு வயது இருக்கிறது நீங்கள் வாழ்த்தலாம்

Jeyamaran said...

என்னப்பா இவருக்கு மாதம் 15000 ரூபாய் சம்பளம் இருக்குமா? ஆனால் இவரோட சொத்து மதிப்பு எவ்வளவுன்னு உனக்கு தெரியுமா? 4500 கோடியாம் எப்படி இவர் சிறந்த தலைவர். இவர் மட்டும் இல்ல அரசியல்வாதிகளின் சொத்துகள கணகெடுத்து பார்த்தல் இந்தியா ஏழை நாடுன்னு யாராலையும் சொல்ல முடியாது. இது என்னுடைய கருத்து மட்டுமே...................

Anonymous said...

Jeyamaran காற்று அடிக்கும் போதே தூற்றி கோல் என்பது பழமொழி. அதை நம் நாட்டில் ஒருவர் மட்டும் பின் பற்றுகுறார் போலும்.

Anonymous said...

onnu theriyuma dinakaram paperla potu irunda news Barack Obama sothu madipu varum 50 kodiam ஆனா..........

Jay said...

நவீன், நீங்க எல்லாம் நேர்மையான வழியில் தான் உங்களுடைய சொத்துக்களை சேர்தீர்களா...?

நாம் யாரும் இங்கு ஒழுங்கு இல்லை, நமக்கு நம்மிடம் அந்த அளவு சொத்து இல்லை என்கிற ஆதங்கம்...

ஒரு மனிதருக்கு வாழ்த்துக்கள் சொல்ல கூட முடியாத அளவுக்கு அப்படி என்ன தான் காழ்புணர்சியோ ......

Anonymous said...

To Jay: நீங்கள் சொல்வது சரி தான். அவர் இன்னும் சில நூற்றாண்டுகள் (??) வாழ நானும் வாழ்த்துக்கிறேன்.
நவீன் கேட்டதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.
// நீங்க எல்லாம் நேர்மையான வழியில் தான் உங்களுடைய சொத்துக்களை சேர்தீர்களா.? // நீங்கள் சேர்க்கும் சொத்துக்கும், பொது வாழ்க்கையில் உள்ளவர் சேர்க்கும் சொத்துக்கும் வேறுபாடு இருக்கிறது.
உங்கள் தலைவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
இன்றைய தி.மு.க., நீதிக்கட்சியாக தான் உதயமாகியது. நீதிக்கட்சியில் இருந்து அண்ணா பிரிந்து வந்த போது, ஒரு சாதா ஆளாக தான் இருந்தார். எப்படி தலைவர் ஆனார் என்பதன் வரலாறு அழிந்து விட்டது.
இந்துக்களின் மனதை புண் படுத்தி தன்னை ஒரு நாத்திகன் என்று கூறிக்கொள்கிறார். ஏன் "தி.க" ஆரம்பித்த பெரியார் கூட இவரை போல் அறிக்கை விட்டது கிடையாது. நாத்திகன் என்றால், கடவுள் இல்லை என்று சொல்பவன் தானே. இவரால் கிருத்துவர்களுக்கு எதிராக ஒரு அறிக்கை விட சொல்லுவது தானே. இவர்(ம்) ஒரு அரசியல் சாணக்கியர்.

தமிழகத்துக்கு கிடைத்த மாணிக்கம்!

Jeyamaran said...

நான் ஆரமிச்ச பஞ்சயது இன்னும் முடியல போல

tamil4true said...

தழிழ் தழிழென்று கூறி கூறியே இந்த கருணா இன்று ஏசியா கோடிஸ்வரர். பாவம் தமிழர்கள் மட்டும் அப்படியே. இலவசங்களை எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்களாய். தமிழனின் சாபக்கேடு இந்த கருணா.

Anonymous said...

iavanalathan nnaadu urupadama pochu..nattai keduthu kutti chuvarakkiya naya vanchagan...kudupathukaga nattai vithavan..tamil peyarai solli pizhaikkum paradesi...arasiyal vibachari..panathukaga, pathavikaga ethaium seyyum tamil throgi..!!!

santhakumar said...

you stupid. unnala un pearai kooda solla thairiyamilla. apram ethuku intha vaai unaku.

 
;