Monday, June 21

என்னத்த சொல்ல

நேத்து நைட்டு ஒரு 12 மணிக்கு போன் வந்தது, யாரு இந்த நேரத்தில் போன் பண்றதுனு பார்த்தா நம்ம T.R.
என்ன சார் இந்த நேரத்தில் போன்? என்று கேட்டேன். அது வந்து தம்பி, என்னைய இப்போ யாருமே கண்டுக்கவே இல்லை. என் பையன் கூட என்ன மதிக்கறது இல்லை, ரோட்டுல நடந்து போனா கரடி பொம்மை வருது வாங்கி தாங்கனு குழந்தைகள் சொல்லுராங்க,  இந்த சின்ன பையன் விஜய் பத்தி நீங்க பதிவு போடுறிங்க என்ன பத்தி ஒரு பதிவு போடனும் என் பெயரும் விஜய T ராஜேந்தர். என்னோட பேரிலும் விஜய் இருக்குன்னு சொன்னாரு. நானும் சரி நான் உங்களை பத்தி ஒரு பதிவு போடுறேன் நீங்க அழுவாதிங்க. சொல்லி போனை கட் பண்ணேன்.
                                 மீண்டும் ஒரு போன் வந்தது அட இது யார்ன்னு பார்த்தா நம்ம விஜயகாந்த். சொல்லுங்க சார் எப்படி இருக்கு சோனியா கொடுத்த 40 கோடி இருக்கா இல்லை காலி ஆயிடுச்சானு கேட்டேன். இல்ல தம்பி அதுல இன்னும் 10 கோடி இருக்கு தம்பினு சொன்னரு, எதுக்கு போன் பண்ணிங்கனு கேட்டேன். என்ன பத்தி ஒரு பதிவு போடனும் தம்பி, அதுவும் வருங்கால முதல்வரே அப்படின்னு போடனும் அப்படின்னு சொன்னாரு. 

                                   
அட நீங்க வேற சார் இப்படி போட்ட காமிடியா இருக்கும் அது எனக்கும் தெரியும் தம்பி அப்பத்தான் வர தேர்தல்ல இன்னும் ஒரு நாப்பது கோடி தருவாங்க சோனியா. ஒன்னு மறந்துட்டேன் தம்பி என் பெயரும் விஜய் தான் அப்ப கண்டிப்பா என்னை  பத்தி பதிவு போடுவிங்கள் அப்படித்தானே என்றார். சரி பதிவு போட எனக்கு எதாவது தாங்கனு கேட்டேன் அவரு உடனே ராயபுரம் பகுதி செயலாளர் பதவி தரேன்னு சொன்னாரு ஐயோ எனக்கு ஏதும் வேண்டாம் சார் சொன்னேன் உடனே அவரு சொன்னாரு அப்போ போனை வைக்கட்டுமா, அங்ங்ங்ங்ங்ங்...
                               
நான் பதிவு போட்டு கொண்டு இருக்கும் போது ஒரு போன் வந்தது அட இது யாரு கேட்டேன் நான் தான் சரத்குமார் சொன்னாரு நான் யாரு சரத்குமார் ஓஹ..... அந்த ராதிகா வோட மூனவது புருஷன் தானே தெரியும் தெரியும் என்ன சொல்லுங்க சார் இல்லை  தம்பி நீங்க எங்களை பற்றி பதிவு போட்டா சோனியா 40 கோடி தாருவாங்கலாமே ?அப்படியா அட பாவி பசங்களா இப்படி ஒரு புரளிய யார் கிளப்புனது அப்படியல்லாம் கிடையாது, இது யாரு செய்த சதினு கேட்டேன்.  சரத்குமார் சொன்னாரு நீங்க என்ன பத்தி பதிவு போட்டா கலைஞர் கிட்ட பேசி நான் 10 கோடி வாங்குவேன் பாருங்க என்னை பற்றி சௌந்தர் ஒரு பதிவு போட்டு இருக்காருனு சொல்லுவேன்.சரி சரி நான் பதிவு போடுறேன் சொல்லி வைத்தேன் 
                               மறுபடி T.R. போன் பண்ணாரு மக்களுக்கு நல்ல செய்தி சொல்ல மறந்துட்டேன் நான் வீரசாமி பார்ட் 2 எடுக்கலாம் இருக்கேன் இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்லிவிடுங்கள் என்றார். சொல்லிவிட்டேன் மக்களே... இனி உங்கள் பாடு TR பாடு......  


                                    
                                

19 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

சிரிச்சு ...சிரிச்சு ...செத்துகிட்டு இருக்கேன் ...
காமெடியான சிந்தனை ... வரவேற்கிறேன் ...

LK said...

auto varuthu

Anonymous said...

பஞ்சே வச்சு தேச்ச குட ஏறும நிறம் வெளுக்காதே.....

vijay said...

தைரியமா சொல்லி இருக்கீங்க சௌந்தர் .... வாழ்த்துக்கள்

Feros said...

சிரிச்சு ...சிரிச்சு ...செத்துகிட்டு இருக்கேன் ..
அய்யோ என்ன காமெடி........

இப்படியல்லாம யோசிக்கிறாங்க என்று விஜய் கூட்டணி ரூம் போட்டு பேசுராங்கப்பா...

சௌந்தர் கவனம்

ப.செல்வக்குமார் said...

sathiya supernka... enna vida romba nalla comedy pannureenka... vazhthukkal...

தமிழ் மதுரம் said...

என்ன ரசிகன்! கனவிலை தான் இவ்வளவு பேரும் வந்தாங்களா? நல்லா வேளை நிஜத்திலை வரவில்லை. சிரியுங்கோ.. சிரியுங்கோ...!


பதிவு கலக்கல்.. நிஜம் கலந்த நகைச்சுவை.

வெறும்பய said...

காமெடியான சிந்தனை ,,,

வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்
LK @ இப்போ சுமோ தான் வருது
நன்றி விஜய் நீங்கள் இருக்கும்போது என்ன பயம்

நன்றி Feros

நன்றி செல்வக்குமார் உங்க நாட்டாமை பதிவு சூப்பர்

தமிழ் மதுரம்: இது கனவு இல்லை கற்பனை

நன்றி வெறும்பய

பிரவின்குமார் said...

அட அருமையான கற்பனை..! இது ஒன்றும் நடப்பதற்கு வாய்ப்பில்லாதவைகள் அல்ல அனைத்தும் யதார்த்தமாக யோசித்து வெளிப்படையாக சொல்லியிருக்கீங்க..! படித்து ரசி்த்து சிரித்தேன் நண்பரே..! நகைச்சுவை மிக்க கற்பனை திறன் உங்களுக்கு...! பாராட்டுகள் நண்பரே..!

Jeyamaran said...

மறுபடி T.R. போன் பண்ணாரு மக்களுக்கு நல்ல செய்தி சொல்ல மறந்துட்டேன் நான் வீரசாமி பார்ட் 2 எடுக்கலாம் இருக்கேன் இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்லிவிடுங்கள் என்றார். சொல்லிவிட்டேன் மக்களே... இனி உங்கள் பாடு TR பாடு......

மறுபடியுமா!!!!!!!!!!!

ஹேமா said...

நகைச்சுவை கலக்குறீங்க சௌந்தர்.
இண்ணைக்குதன் முதன் முதலா பாக்கிறேன்.வாழ்த்துகள்.

Riyas said...

கலக்கல்.. சவுந்தர்.. கலக்குங்க..

ராதிகாவோட மூனாவதா.. சொல்லவேயில்ல..

seemangani said...

//பதிவு போட்டா சோனியா 40 கோடி தாருவாங்கலாமே ?அப்படியா அட பாவி பசங்களா இப்படி ஒரு புரளிய யார் கிளப்புனது அப்படியல்லாம் கிடையாது, இது யாரு செய்த சதினு கேட்டேன். //

அட கடவுளே என்ன கொடுமை சௌந்தர் இது...அவன் யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க...அட இது அரசியல் பதிவா...ஐ யம் எஸ்கேப்பு ...

dheva said...

எப்டிப்பா இப்படி எல்லாம்... வயிறு வலிக்குது... இந்த டி. ராஜேந்தர்...ஹா...ஹா ஹா.. இந்த வருடத்தின் இணையற்ற பதிவு இது...தம்பி.....!

எல்லோரையும் சிர்ப்பா சிரிக்க வச்சுட்ட....!


வாழ்த்துக்கள்!

Ananthi said...

hahaha :D :D D
superrrr...

veerachamiiii part II aaaa?? :O :O :O

mummmmmy naa escapeeeeeeeeeeeee...!!

சௌந்தர் said...

நன்றி:பிரவின்குமார்

நன்றி: Jeyamaran

உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஹேமா

நன்றி:Riyas

நன்றி seemangani

நன்றி: தேவா அண்ணா

நன்றி: ஆனந்தி

mkr said...

அருமையான கற்பனை.அதிலும் உண்மை இருப்பது போல் இருக்கிறது.(எதோ நம்மாள் முடிஞ்சது) ஆனாலும் பாவம் டி.ஆர்

dumminy said...

vazhga vijay pugazh; valarga vijay in SMS

 
;