Monday, February 21

சபரி மலை சற்று சிந்திப்போம்..!
சபரிமலையில் விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல.1952 ம் ஆண்டு சபரிமலையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 66 பேர் உடல் கருகி இறந்தனர். அதன் பிறகு 1999ம் ஆண்டு அதே ஜனவரி 14ம் தேதி அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 52 பக்தர்கள் உயிர் இழந்தனர். இப்படி அங்கு விபத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது, பெரிய அளவில் விபத்து நடந்தால் அது வெளியே தெரிகிறது. வருடா வருடம் ஒரு சிலர் சபரிமலையில் உயிரிழந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதைத் தவிர சபரிமலையில் இருந்து வரும் பொழுதும் போகும்பொழுதும் விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


இப்போது சபரிமலையில் விபத்து நடப்பது மூன்றாம் முறை. என்ன தான் விபத்துகள் நடந்தாலும் கூட்டம் குறையப் போவதில்லை. மேலும் அதிகரிக்கும்.. இப்படி விபத்துக்கள் நடந்தாலும் கேரளா அரசு விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த கால நிகழ்வுகளை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை  எடுத்திருந்தால் புல்மேடு விபத்தைத் தவிர்த்து இருக்கலாம்.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட விழாக் காலத்தில் சபரிமலையைப் போல் வேறு எந்த கோவிலுக்கும் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் கூடுவது கிடையாது. இரண்டு மாதங்கள் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கோடிக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தைச் சமாளிக்கக் கூடிய வகையில் சபரிமலையில் போதிய அடிப்படைக் கட்டுமான வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ, சுகாதார வசதிகளோ கிடையாது. சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது. அதற்கு முக்கியமான ஒரே காரணம் நிலப் பிரச்னை. இந்த கோவில் பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியில் தான் அமைந்துள்ளது . எனவே கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வனத்தை அழித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன் மகரவிளக்கு பூஜை சீசனின் போது சர்தார் பூட்டா சிங் தலைமையிலான பாராளுமன்ற குழு சபரி மலைக்கு சென்று பார்வையிட்டு, அங்கு பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததை சுட்டிகாட்டி அவற்றை மேம் படுத்தும் மாறு கூறியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திறந்த வெளியில் படுத்துக் கிடப்பதைக் கண்ட குழுவின் தலைவர் பூட்டா சிங் இது போன்ற ஒரு காட்சியை நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை என்று கூறினார். சபரிமலை வனப்பகுதியில் சுற்றுச் சுழலுக்கு பாதிப்பு ஏற்படாமல், அங்கு பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்' ஒன்றை செயல் படுத்துமாறு கோரி சில சிபாரிசுகளை அந்த குழு அரசுக்கு வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் பிரச்னைகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பது பற்றி ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அங்குள்ள சூழ்நிலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

பதினெட்டு படியேறி ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் கால் கடுக்க 15 முதல் 20 மணிநேரம் வரிசையில் காத்து நிற்கிறார்கள். இந்த நேரத்தில் இயற்கை உபாதைகளை சமாளிக்க கூட அங்கு அவர்களுக்கு எந்த வசதியும் கிடையாது. சாப்பிட எதுவும் கிடைக்காது, குடிக்க தண்ணீரும் கிடையாது. கால வலித்தால் உட்காரவும் முடியாது. குழந்தைகள் மற்றும் வயதான பெண் பக்தர்களின் நிலைமை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

மேலும் அங்கு பல பிரச்னைகள் இருக்கிறது இதற்கு எல்லாம் என்ன தான் தீர்வு..? தற்காலிகமாக அங்கு ஓலைகளால் ஆன கூரையால் கூடாரங்கள் அமைத்து அவற்றில் பக்தர்களைத் தங்க வைத்து குடிநீர், உணவு ஆகியவற்றை வழங்கலாம். அந்தக் கூடாரங்களில் இருக்கை வசதி செய்து தரலாம். சீசன் முடிந்த பிறகு அந்த   கூடாரங்களை பிரித்து விடலாம். 
                                         இங்கு தான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது 

*  பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் வாகன போக்குவரத்தை சீர்படுத்தவும் போதிய காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்

*  வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பக்தர்கள் சிரமமின்றி சென்று வர புதிய பாதை உருவாக்கப்பட வேண்டும் .

*  மக்கள் சபரிமலை சீசன் மட்டும் அங்கு செல்லாமல் எப்போதெல்லாம் சபரிமலை நடை திறக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் சபரிமலைக்குச் சென்று வரலாம் ...


*  மூன்று வருடம் சபரிமலைக்குச் சென்றவர்கள்...மூன்று வருடம் இடைவெளி விட்டு சென்று வரலாம் இதனால் கூட்டம் குறையும் விபத்துகள் தவிர்க்கப் படலாம் 


இந்த விபத்து நடந்த பொழுதெல்லாம் மகரஜோதி தன்னால் தோன்றுவதா..? இல்லை மனிதர்களால் ஏற்ற படுகிறது என்ற விவாதம் வருகிறது. மகர ஜோதி மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறது, மகரநட்சத்திர மட்டும் தன்னால் தோன்றுகிறது என்று தேவசம் போர்டு கூறியுள்ளது. மகரநட்சத்திரம் தோன்றும் அங்கு ஐயப்பன் வந்திருப்பதாக கருதி அதற்கு தீபம் காட்டுவார்கள் அதுவே மகர ஜோதி.

 மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்பதே உண்மை. ஆனால் இதையெல்லாம் தேவசம் போர்டு விளக்கமாக கூறிய பிறகும் நம் மக்கள் மகர ஜோதி தன்னால் தோன்றுகிறது என்று வாதாடுகின்றனர். ஐயப்பனே நேரில் வந்து மகர ஜோதி மனிதர்காளால் ஏற்றப்படுவது என்று சொன்னால் கூட நம்ம மாட்டார்கள் போல... ஆனால் மகர ஜோதி அன்று அங்கு எப்படி கருடன் வருகிறது என்பது எனக்குப்  புரியாத புதிராகவே இருக்கிறது 


32 comments:

dheva said...

கட்டுரையில் உள்ள நடைமுறை சீர்களை ஆரசு செய்யத்தான் வேண்டும். கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது...!

சரி கட்டுரை இருக்கட்டும்....

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாயாய்...இந்த வார தமிழ்மணம் ஸ்டார் தம்பிக்கு என் வாழ்த்துக்கள்!

சீரிய கட்டுரைகள் சமைக்கும் அற்புதவாரமாய் இது அமையட்டும்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அக்கறையான பதிவு சௌந்தர்.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

தமிழ் மனம் ஸ்டார் சௌந்தர்-க்கு வாழ்த்துக்கள்.. :-)

இம்சைஅரசன் பாபு.. said...

சுவாமியே சரணம் ஐயாப்ப ...
பதினெட்டாம் படி வாசனே சரணம் ஐயப்பா ..
எருமேலி வாசனே சரணம் ஐயப்பா..
சரம் குத்தி வாசனே சரணம் ஐயப்பா...
பாபர் சாமியே சரணம் ஐயப்பா...
பம்பா நதியே சரணம் ஐயப்பா...
பந்தழத்து ராசனே சரணம் ஐயப்பா...
புலி மேல் வீற்று இருபவனே சரணம் ஐயப்பா..

இரு முடி கட்டு ப்ரியன சரணம் ஐயப்பா..

பஞ்சாமிர்த ப்ரியனே சரணம் ஐயப்பா..
அப்ப ப்ரியனே சரணம் ஐயப்பா..

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் இந்த பையன் செய்த தவறை காத்து ரத்ச்சிக்கும் பகவானே ..சரணம் ஐயப்பா..

எஸ்.கே said...

வாழ்த்துக்கள் சௌந்தர்! இனிமையே அமையட்டும் இவ்வாரம்!

எஸ்.கே said...

அரசு சற்று கவனம் எடுத்து பிரச்சினைகளை சரி செய்தால் இது போன்ற விபத்துகள் மீண்டும் நிகழாது!

வேடந்தாங்கல் - கருன் said...

தமிழ் மனம் ஸ்டார் சௌந்தர்-க்கு வாழ்த்துக்கள்..

Chitra said...

தமிழ்மணம் நட்சத்திரம் - வாழ்த்துக்கள்!

மாணவன் said...

“தமிழ்மண நட்சத்திர பதிவர் இந்த வாரம்”

வாழ்த்துக்கள் மச்சி :)

யாதவன் said...

நன்றாக உள்ளது பெருமைக்கு உரியது தமிழ்மணம் நட்சத்திரம் வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan said...

// ஆனால் மகர ஜோதி அன்று அங்கு எப்படி கருடன் வருகிறது என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது //

மாலை போட்டுக்கிட்டா, போட்டுக்காமலா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிழ்மணம் நட்சத்திரம் - வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

அருமை சவுந்தர்....
வாழ்த்துகள் வாழ்த்துகள்....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ்மணம் நட்சத்திரம் வாழ்த்துக்கள் கலக்குங்க

கோமாளி செல்வா said...

எது எப்படியோ சில விசயங்களை மக்கள் நம்புறதுக்கு நேரம் ஆகுது. அதுமாதிரிதான் மகர ஜோதி மனிதர்களால் ஏற்படுது அப்படிங்கிறதையும் நம்ம மக்கள் நம்புறதுக்கு தாமதம் ஆகும். அதே மாதிரி அங்க சரியான கட்டுமான வசதிகள் இல்லை அப்படின்கிறதும் உண்மைதான் ..போறவங்க ஜாக்கிரதையா போனாலும் சில விபத்துக்கள் அவுங்களையும் மீறி நடந்திடுது ..

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள். அவசியம் சீர்தூக்கி சிந்தித்து அரசு ஆவன செய்ய ஐயப்பனைப் பிரார்த்திக்கிறோம்.

DrPKandaswamyPhD said...

இந்திய ஜனத்தொகை இப்படியே போனால் எல்லா இடங்களும் இப்படித்தான் ஆகும்.

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.

வைகை said...

அரசை குறை கூறுவதைவிட மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்.... ஆண்டவன் ஜோதியாய் தரிசனம் தருவது உண்மையென்றால் வீட்டு பூஜை அறை தீபத்தில் கூட இருப்பார்... வீட்டில் காணாத தெய்வத்தை காட்டில் தேடினால்..?

Karthick Chidambaram said...

தமிழ் மனம் ஸ்டார் சௌந்தர்-க்கு வாழ்த்துக்கள்.. :-)

ஜில்தண்ணி said...

நட்சத்திரமாய் மேலும் மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

சபரிமலைப்பற்றி அறிய தகவல்கள் தந்துள்ளீர்.. வாழ்த்துக்கள்..

தமிழ்மணம் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தரமக்கு பாராட்டுகள்..

தொடர்ந்து வருவேன்..

ஜீவன்சிவம் said...

இந்த சம்பவங்களால் பாதிக்கபடுவது மலையாளி அல்ல. தமிழனும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் தான். அவர்களின் உண்டியல் பணம் தான் அவர்களுக்கு முக்கியமே தவிர உயிரை பற்றி அவர்களுக்கென்ன அக்கறை.
அறிவில்லாத மடையர்கள் தான் அங்கே போய், அடிபட்டு மிதிபட்டு சாவது. மகரவிளக்கு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மனிதர்காளால் தான் ஏற்றபடுகிறது. ஆனால் இன்னமும் அது ஐயப்பன் மகிமை என்று தான் அவர்களால் பிரச்சாரம் செய்யபடுகிறது. என்று தொலையுமோ..இந்த மூடநம்பிக்கை.

எல் கே said...

நட்சத்திர வாரதிர்க்கு வாழ்த்துக்கள் சௌந்தர்.

எல் கே said...

ஒரு சில விஷயங்கள் சொல்கிறேன்

கோவிலிலோ இல்லை அங்கு வரும் மற்ற பக்தர்களோ ஜோதிக்கு முக்கியம் அளிப்பது இல்லை . அவர்களுக்கு வானில் உதயம் ஆகும் மகர நட்சத்திரம் தான் கணக்கு. மகர நட்சத்திரம் டோன்றியப் பிறகே மலையில் ஜோதி ஏற்றப்படும்.

ஜோதியை பற்றி தவறான தகவலை பரப்பியது ஊடகங்களே

எல் கே said...

சபரி மலையை பற்றி சில மாதங்களுக்கு முன் சுவாமி ஓம்கார் அவர்கள் சிலப் பதிவுகளை எழுதி இருந்தால். சுட்டிக் கிடைத்தால் பகிர்கிறேன்

பாலா said...

ஒரு சில இயற்கை நிகழ்வுகளுக்கு சுவாரசியம் கூட்ட ஊடகங்கள் செய்த சித்து விளையாட்டே இது. கருடன் வருவது ஒரு புரியாத புதிர்தான். அதுவும் ஆபரண பெட்டி பயணம் செய்யும் பாதைகளில் தொடர்ந்து வருவது ஆச்சர்யம்.

Madhavan Srinivasagopalan said...

// மூன்று வருடம் சபரிமலைக்குச் சென்றவர்கள்...மூன்று வருடம் இடைவெளி விட்டு சென்று வரலாம் இதனால் கூட்டம் குறையும் விபத்துகள் தவிர்க்கப் படலாம் //

சரியான கருத்து.. நண்பரே.. நானும் இப்படி நினைப்பதுண்டு....

என்னைப் பொறுத்த வரையில், கடவுள் எங்கும் இருக்கிறார்.... பல இடங்களுக்கும் சென்று உருவ வழிபாடுதல் செய்வது நமது இன்பத்திற்காகவே..

ஜோதிஜி said...

ஒரு வருடம் தான் ஆகின்றதா? ஆச்சரியம். முயற்சிகள் நன்றாக தெரிகின்றது. வாழ்த்துகள் சௌந்தர்.

ம.தி.சுதா said...

மனிதன் தன்னைத் தானே அழிப்பது போதாதென்று கடவுளையும் அல்லவா அழிக்கிறான்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

சௌந்தர் said...

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

குணா said...

மகரஜோதி மனிதனால் ஏற்றப்படுவது என்பதை நக்கீரன் தெளிவாக சொல்லி விட்டார். இன்னமும் மக்கள் ஏமாறுகிறார்கள் என்றால் அந்த ஐய்யப்பனே மக்களை மன்னிக்க மாட்டார்

 
;