Saturday, February 26

நகரத்தை நோக்கி...






இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்பது உண்மையா??? பச்சை பசும் வயல்களும் அழகான இயற்கையையும் நாம் திரைப்படங்களில் ரசிக்கிறோம். ஆனால் அங்கேயே வாழும் வாழ்க்கையை நாம் அனைவரும் விரும்புகின்றோமா? 

என் நண்பர் ஒருவர் சொன்னது. அவரின் தம்பி சிறுவனாக இருந்தபோது குடும்பத்துடன் அவரின் சொந்த கிராமத்துக்குச் சென்றபோது அந்த வீட்டினுள் நுழைய மறுத்து விட்டானாம். அவருக்கும் அவரின் சகோதரர்களுக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை. மீண்டும் நகரத்திற்கே செல்ல விரும்பினார்களாம். கிராமத்திலிருந்து நகரத்திற்கு தொழிலுக்காக இடம்பெயர்ந்த குடும்பங்கள் எத்தனையோ! ஆனால் அவர்கள் தத்தம் ஊர்களையே விரும்பாமல் நகரத்தை நோக்கி விரும்பக் காரணம் என்ன?.

கிராமங்களில் இருந்து நகரத்திற்கு நகரும் ஆசைகளில் பொருள் ஈட்டவேண்டும் என்ற ஆசையிருந்தது என்னவோ உண்மைதான்...ஆனால் மனிதர்கள் கொண்டு தொழில் நடத்தி, மனிதர்களுக்காக உற்பத்தி செய்யும்  எல்லாமே ஏன் நகரங்களிலேயே இருக்கவேண்டும் என்ற ஆதங்கம் எழுந்ததிற்கு பதிலை யார்தான் சொல்லுவார்கள்...?
6 1/2 கோடியை கடந்து நிற்கும் எம் தமிழ் மக்களின் ஜனத்தொகையில், 3 கோடி பேருக்கு மேல் கிராமப்புறங்களில் வசிக்கும் போது அவர்களின் வாழ்வாதரத் தேவைகளை ஏன் அந்த அந்த பகுதிகளில் உற்பத்தி செய்ய முடியாது..?அரிசியும், பருப்பும், சக்கரையும், காய்கறிகளும் விளைவிக்குமிடம் கிராமங்களாய் இருக்கும் பொழுது, உற்பத்தியை ஊக்குவிக்கும் செயல்கள் நடக்கின்றனவா..?

மனிதர்கள் வாழும் நில அமைப்பிற்கு ஏற்றபடி தேவைகளுக்கு ஏற்றப்படி உற்பத்தியை பெருக்கும் உக்தியை அரசு மனிதர்களுக்கு ஏன் ஒரு விழிப்புணர்வூட்டும் செயலாக செய்யவில்லை. வெங்காயத்தின் விலை உயர்ந்து போனதற்கு பெட்ரோல் டீசலின் விலை உயர்வை காரணம் காட்டினாலும், அதை உற்பத்தி செய்யும் வேகம் தேவைக்கு ஏற்ப இருந்ததா?

வெறுமனே மழையில்லை என்று சொல்லிக் கொண்டு, ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்று சொல்லிக் கொண்டும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயரும் மக்களுக்கு வேளாண்மை தொழில் நுட்பங்கள் சொல்லிக் கொடுக்கப்படாமல் இருப்பதும், சிறு தொழில்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் மக்களின் கைகளுக்குச் சென்று சேராமல் இருப்பதும் தானே காரணம்.



3000 பேர் வசிக்கும் ஒரு கிராமத்தின் தேவைகளை ஏன் அங்கேயே இருக்கு சிறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் மக்கள் வாங்குவது இல்லை? எது வாங்க வேண்டுமானாலும் தூரமாய் இருந்தாலும் போய் அதை நகரத்தில் வாங்கும் மோகத்தை விதைத்தது யார் ? உள்ளூர் வியாபாரிகளிடம் தேவைகளைச் சொல்லி பொருட்களை அவரிடமே வாங்கத்தொடங்கினால் பணப்புழக்கம் உள்ளூரிலேயே கூடும்தானே.....

உதாரணமாக :நாங்கள் வசிக்கும் ஊரின் இருக்கும் சுற்றுப்புற கிராமங்களும் சரி மற்ற எந்தப் பகுதியின் கிரமமாய் இருந்தாலும் உள்ளூர் வியாபரிகளை மதிப்பதே இல்லை. கைலி எடுக்கவேண்டுமெனில் திருச்சிக்கு போவோம்... பட்டுப்புடவை வேண்டுமெனில் சென்னைக்கு போவோம்.. என்று படையெடுத்து செல்லும் ஒரு போக்கு இருக்கும் போது உள்ளூரில் நமக்காக ஒரு வியாபாரி கடை விரித்து அமர்ந்திருப்பாரே அவர் பூட்டிவிட்டுதானே செல்லவேண்டுமா? ஒரு மனோதத்துவ ரீதியான ஒரு மூளைச் சலவையை நமக்கு நாமே செய்துகொண்டு உள்ளோம் ....உள்ளூரில் வாங்கினால் நமக்கு திருப்திகிடைப்பதில்லை....திருப்தி என்று எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறோம்...

ஒரு பட்டு புடவை வாங்க செல்கிறோம் என்றால் எதற்கு காஞ்சிபுரதிற்கோ, சென்னைக்கோ செல்லவேண்டும், தங்கள் ஊரிலோ அல்லது அருகிலோ நெசவாளி இருப்பாரே அவரிடம் ஆர்டர் கொடுத்து புடவையை நெய்து தர சொல்லலாம் அப்படி செய்தால் ஒரு நெசவாளிக்கு நீங்கள் உதவி செய்தது போல் இருக்கும் பொருளும் நல்ல தரமானதாகவும் இருக்கும். ஆனால் உள்ளூர்காரன் தான் ஏமாற்றுவான் என்ற மனோநிலை இன்னும் நீடிக்கிறது, 


கவர்ச்சி ஒளி கிராமப்புற வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கி மனிதர்களை நகரங்களை நோக்கி இழுத்துச் செல்கிறன? தொழிலின் பொருட்டுதானே நகரம் நோக்கி நகர்கிறோம்... ? கிராமங்களில் செய்யும் தீப்பட்டியும்  சவுக்காரமும், டொரினோ காளிமார்க் கலர்களும் இழுத்து மூடவேண்டிய கட்டாயத்துக்கு வந்ததற்கு காரணம்....ஏதோ ஒரு கிரிக்கெட் பிளேயரும், சினிமா நடிகனும் போட்டுக் குளிக்கும் சோப்பும், உறிஞ்சு குடிக்கும் குளிர்பானமும் நம்மை மயக்கி வைத்திருப்பதுதானே காரணம்? இது எல்லாம் நாகரீக வளர்ச்சி...என்றும் இதை தவிர்க்க முடியாது என்றும் வாதிடுபர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

பல கிராமப் பொருட்கள், கைத்தொழில்கள் அழியக்காரணம் அவற்றை ஊக்குவிக்காததாலேயே. அதற்கு முக்கிய காரணம் நகர/நாகரீக மோகம் என்பதை மறுக்க இயலாது. நாகரீக அறிவியல் வளர்ச்சிகள் தேவைதான். ஆனால் அதேசமயம் பழமையையும் புராதானமான விசயங்களையும் பாதுகாப்பதும் நம் கடமையாகும். 

நாகரீக வளர்ச்சி என்ற பேரில் கிராமப்புற மேம்பாடுகளும் வேளாண்மை தொழிநுட்பங்களும், உள்ளூர் தொழில்களை ஊக்குவித்தாலும் இன்னும் அதிகமாய் அரசு மட்டும் கவனம் செலுத்தினால் போதாது...மனிதர்களாகிய நாமும் மனதளவில் மாற வேண்டியுள்ளது...

20 comments:

மாணவன் said...

வணக்கம் மச்சி இரு படிச்சுட்டு வரேன்.. :)

சக்தி கல்வி மையம் said...

ஒரு பயனுள்ள பதிவு..

இம்சைஅரசன் பாபு.. said...

நகர வாழ்க்கை ..நரக வாழ்க்கை ..என்னை பொறுத்த வரை ..மற்றவர்களுக்கு எப்படின்னு தெரியாது

மாணவன் said...

தெளிவான பார்வையுடன் சூப்பரா எழுதியிருக்க மச்சி :)

வாழ்த்துக்கள்

மாணவன் said...

//கைலி எடுக்கவேண்டுமெனில் திருச்சிக்கு போவோம்... பட்டுப்புடவை வேண்டுமெனில் சென்னைக்கு போவோம்.. என்று படையெடுத்து செல்லும் ஒரு போக்கு இருக்கும் போது உள்ளூரில் நமக்காக ஒரு வியாபாரி கடை விரித்து அமர்ந்திருப்பாரே அவர் பூட்டிவிட்டுதானே செல்லவேண்டுமா? ஒரு மனோதத்துவ ரீதியான ஒரு மூளைச் சலவையை நமக்கு நாமே செய்துகொண்டு உள்ளோம்///

முற்றிலும் உண்மையான கருத்து இன்று நிறைய பேர் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்...

பாலா said...

கிராமத்து சூழலை அனுபவித்து விட்டால் அதை விட்டுவிட்டு போக யாருக்கும் மனசு வராது. நல்ல பதிவு.

Unknown said...

நான் மறுபடியும் கிராமம் போகலாமா என யோசிக்கிறென்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கிராமங்கள் தான் நாட்டின் முதுகொலும்பு என்றால் மகாத்மா..
உன்மைதான் என்னதான் நகரங்களில் வாசித்தாலும் நான் உண்ணும் உணவு சேற்றில் விளைந்தது தானே..

அந்த சேற்றை நாம் மறக்க கூடாது..

கிராமங்களை மதிப்போம்..

நல்ல பதிவு..

தங்களில் ஸ்டார் அந்தஸ்த்து இன்னும் உயர்ந்திருக்கிறது..

செல்வா said...

//ஆனால் அங்கேயே வாழும் வாழ்க்கையை நாம் அனைவரும் விரும்புகின்றோமா?
/

நான் விரும்புறேன் மச்சி .. ஹி ஹி

செல்வா said...

//உள்ளூரில் நமக்காக ஒரு வியாபாரி கடை விரித்து அமர்ந்திருப்பாரே அவர் பூட்டிவிட்டுதானே செல்லவேண்டுமா?/

இது உண்மைதான் ..உள்ளுரில வாங்கின விளையும் கொஞ்சம் கம்மியா இருக்கும் . ஆனா வகைகளும் கம்மியா இருக்கு அப்படின்கிறதும் உண்மைதான் .

செல்வா said...

//தங்கள் ஊரிலோ அல்லது அருகிலோ நெசவாளி இருப்பாரே அவரிடம் ஆர்டர் கொடுத்து புடவையை நெய்து தர சொல்லலாம் அப்படி செய்தால் ஒரு நெசவாளிக்கு நீங்கள் உதவி செய்தது போல் இருக்கும் பொருளும் நல்ல தரமானதாகவும் இருக்கும்.//

டாய் இதெல்லாம் முடியாதுயா .. புடவை அப்படிங்கிறது நெசவாளி மட்டுமே தயாரிக்கரதில்லை .. அதுக்கு நிறைய வேலை இருக்கு .. ஆனா நீ சொல்லவரது புரியுது ..

செல்வா said...

நீதான் எழுதுனியா ? ஹ ஹி ..
அவ்ளோ நல்லா இருக்கு மச்சி ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோசிக்க வேண்டிய விஷயம்தான். நகரமயமாக்கலில் நல்லவற்றை விட தீங்கே அதிகமாக ஏற்பட்டு வருகிறது. அரசும் மக்களும் திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆனால் இப்போதைய் அரசியல் சூழலில்...?

VELU.G said...

நல்ல கருத்துள்ள பதிவு நாமும் மனதளவில் மாறவேண்டி இருக்கிறது

நகரத்தை நோக்கி என்பதை விட

இப்போது கிராமத்தையே ந(ர)கரமாக்கி வருகிறார்கள்

சி.பி.செந்தில்குமார் said...

நகரத்துல இருக்கறவங்க கிராமத்தை நினைச்சு ஏங்கறதும், கிராமத்துல இருக்கறவங்க நகர வாழ்வுக்கு அலைவதும் மனிதனின் மனவியல் ரீதியான அலைக்களிப்பே..

MANO நாஞ்சில் மனோ said...

சிந்தனையை தூண்டும், சிந்திக்க வேண்டிய விஷயம் இது....
செம அலசல்...

Nagasubramanian said...

good article.

எஸ்.கே said...

சிபி அவர்கள் சொல்வதும் உண்மைதான். அவரவர் மனம் சார்ந்தது இது. ஆனால் அவர்கள் நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும்!

அன்பரசன் said...

//ஒரு பட்டு புடவை வாங்க செல்கிறோம் என்றால் எதற்கு காஞ்சிபுரதிற்கோ, சென்னைக்கோ செல்லவேண்டும், தங்கள் ஊரிலோ அல்லது அருகிலோ நெசவாளி இருப்பாரே அவரிடம் ஆர்டர் கொடுத்து புடவையை நெய்து தர சொல்லலாம் அப்படி செய்தால் ஒரு நெசவாளிக்கு நீங்கள் உதவி செய்தது போல் இருக்கும் பொருளும் நல்ல தரமானதாகவும் இருக்கும்//

யோசிக்க வைக்கும் விசயம்.

எஸ்.கே said...

நல்ல கட்டுரை!

 
;