Tuesday, April 17

தண்ணி... தண்ணி...

இந்த மேனேஜர் தொல்லை தாங்க முடியலைங்க... வீட்டுக்கு கிளம்புற நேரத்துலதான் அத செஞ்சியா இதை செஞ்சியான்னு கேட்டு உயிரை வாங்குறார். ச்சே... முதல்ல இந்த ஆபிஸ விட்டு தொலைஞ்சு போகணும்... ஆபிஸ் விட்டு வரும் போது இப்படிதாங்க எப்பயும் புலம்பிட்டே வருவேன்.

வண்டிய ஸ்டார்ட் பண்றேன். ஸ்டார்ட் ஆகவே இல்லை.இந்த மேனேஜர் தான் இப்படி உயிரை வாங்குறான்னா இந்த வண்டிவேற...எப்போ பாரு இப்படிதான் மக்கர் பண்ணுது. என்னான்னு கீழே இறங்கி பார்த்தா நான் சாவியே போடல. அவசரத்துல அண்டாக்குள்ளேயே கைய விட்டாலும் உள்ள போகாதுன்னு என் மைன்ட் வாய்ஸ் வேற...  வாட்ச்மேன் வேற என்ன பார்த்து தலையிலே அடிச்சுகிட்டார்...  விடுறா.. விடுறா... சூனா பானா. நீ போயிட்டே இருன்னு வண்டிய விருட்டுன்னு கிளப்புனேன்.

செம பசி. மணி வேற 11 ஆச்சு...எங்கயாவது நம்ம சரவணபவன் இருக்கான்னு பார்த்துட்டே போனேன்.எங்க தேடியும் கடை இல்ல. என்னடா இப்படி நம்மள எல்லாரும் அலைய விடுறாங்களேன்னு நினைச்சுட்டு இருக்கும்போது ஒரு கடை இருந்துச்சு. கடை மட்டும் தான் இருந்துச்சு. ஆளையே காணோம். பக்கத்துல சுத்தி முத்தி பார்த்தா யாரும் காணோம். பசி வேற உயிர் போகுது. நம்மளே எடுத்து போட்டு சாப்பிடலாம்ன்னு கிட்ட போனா திடீர்ன்னு கிழே இருந்து ஒரு ஆள் எழுந்திருச்சு தம்பி என்ன வேணும்ன்னு கேட்க அப்படியே நான் பயந்தே போயிட்டேன்.  

நான் அப்படியே முழிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன். மறுபடியும் கனத்த குரல். தம்பி...இட்லி ஆவியோட இருக்கு.வேணுமா..?? என்ன ஆவியா..?? அண்ணேன்னு நான் பதற.. தம்பி இட்லி தான்.

சரிங்கண்ணா... நாலு இட்லி சால்னாவோட தாங்க... மணிய பார்த்தா 11.45. பயந்ததுல பசியே போச்சு. மணிய பார்த்து அதுக்கு மேல சாப்பாடு இறங்கலே... எப்படியோ சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்புவோம்ன்னு அவசர அவசரமா சாப்ட்டுட்டு இருந்தேன்

அப்போ ஒரு ஸ்கூட்டி வந்து நின்னுச்சு. ஒரு பொண்ணு அவ பாட்டுக்கு வந்தா... 2 தோசை கொடுங்க... இட்லி கொடுங்கன்னு சொல்லி கடகடன்னு சாப்பிட ஆரம்பிச்சா.

என்னடா... இந்த நேரத்துக்கு இவபாட்டுக்கு வந்து சாப்ட்டுட்டு இருக்காளே..?! எங்கயாவது கால் சென்டர்ல வேலை செய்வா போலன்னு தோணிச்சு.

அவ என்ன பார்த்து கேட்டா... என்ன நீங்க சாப்பிடலையா..?! அப்போதான் நான் சாப்பிடாம அவளையே பார்த்துட்டு நிக்குறேன்னு புரிஞ்சுது. 

இதோ அதோன்னு உளறி கைல இருந்த இட்லிய கீழே போட்டுட்டேன்.நான் இட்லிய கீழே போட அவ என்ன பார்த்து அப்படியே சிரிச்சிட்டா... அவளே எனக்காக வேற இட்லி இருக்கான்னு கேக்க கடைகாரன் இல்லைங்கன்னு சொன்னான். இவளே எல்லாத்தையும் தின்னுட்டு இன்னும் இருக்கான்னு கேக்குறா...எங்க இருந்து வந்தாளோ என் பசிய கெடுக்க.. 

சரி. வாங்க... நான் வேற இடத்துல வாங்கி தரேன்னு அவளே காச கொடுத்துட்டு என்ன கூட்டிட்டு போனா... நானும் பின்னாடியே போனேன். ரொம்ப நேரமா இல்லாத கரன்ட் திடீர்னு வந்த மாதிரி எனக்கு பசி வந்துருச்சு.. அவ வேற என்ன பார்த்து பார்த்து சிரிச்சு கடுப்பு ஏத்தினா...அவளே ஒரு ஓட்டலுக்கு கூப்பிட்டு போய் எனக்கு சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்தா..  

அவ பொறுமையா பேச்சு கொடுத்தா... ஏங்க சாப்பாடுக்கு 12 மணி வரைக்கும் சுத்துறதுக்கு வீட்டுக்கு போய் நிம்மதியா சாப்பிடலாமே..? 

நான் எப்பயும் 12 மணிக்கு மேலதாங்க வீட்டுக்கு போவேன். அதுக்குள்ள சாப்பாடு கெட்டு போய்டும். அதான் வெளிய சாப்பிடுறேன். 

ஓ... அப்படியா..?! நீங்க வெளிய சாப்பிடுறது எனக்கு நல்லதா போச்சு.

என்ன.. என்ன சொன்னீங்க..?! நல்லதா..?! ஏன் அப்படி சொல்றீங்க..??

அத அப்புறம் சொல்றேன். விடுங்க...

அப்புறமா..?? அப்போ நாம இன்னொரு தடவை சந்திப்போமா..?? 

எனக்கு ஒண்ணுமே புரியலை. யார் இவ என்ன பேசுறா... ஒரு மார்க்கமாவே இருக்காளே..?! ஒரு வேளை பேயா இருப்பாளோ..?! நைட் 12 மணிக்கு மேல சுத்துறா...
 நம்மளும்தான் 12மணிக்கு மேல சுத்துறோம். நான் என்ன பேயான்னு எனக்கு நானே கேள்வி கேட்டுட்டு அவ கூட போனேன்.    

அவ முன்னாடியே போயிட்டு வாங்கன்னு குரல் கொடுத்தா..நான் பயந்துட்டே பின்னாடியே போனேன்.. நான் மெதுவா வண்டிய ஒட்டுறதை பார்த்துட்டு அவ எனக்காக காத்திருந்தா..

என்னங்க இப்படி மெதுவா வரீங்க... வாங்க வேகமா போகலாம்.   
 
சரிங்க... வேகமாதானே... போவோமே... 

ஒரு ஐடியா. நம்ம ரேஸ் போலாமா..?!

என்ன ரேஸா..?? நான் பொம்பளைங்க கிட்ட எல்லாம் போட்டி போடுறது இல்லைங்க.

அட... பயமா இருந்தா பயம்ன்னு சொல்லிட்டு போங்க... அதுக்கு ஏன் இப்படி ஒரு பில்டப். 

என்ன... எனக்கு பயமா..?! வாங்க ரேஸ் விட்டுக்கலாம்.

அவ எனக்கு முன்னாடி சட்டுன்னு பறந்தா... இதுக்கு மேலயும் நாம சும்மா விட கூடாதுன்னு நானும் வண்டிய வேகமா ஓட்டினேன்.

அவ முன்னாடி போக... நான் முன்னாடி போக... இப்படியே போயிட்டு இருக்கும் போது எங்களுக்கு நடுவுல ஒரு லாரி வந்துருச்சு. அவ அத பாக்காம நேரா லாரிய நோக்கியே போனா... நான் தடுக்கலாம்ன்னு பின்னாடியே வேகமா போனேன்.எங்க ரெண்டு பேரையும் லாரி அடிச்சு தூக்கிருச்சு.

தண்ணி தண்ணின்னு முணங்கிட்டே இருந்தேன்.யாரோ சிரிக்குற சத்தம் கேட்டுச்சி... யாருன்னு பார்த்தா என் கூட வந்த பொண்ணு.அவ பின்னாடி பார்த்தா பிரியா கண்ணீர் அஞ்சலின்னு போட்டு இருந்துச்சு...  எனக்கு ஒண்ணுமே புரியல... நான் தண்ணி தண்ணி முணங்கிட்டே இருந்தேன். 

அப்போ தான் ஒரு குரல் கேட்டுச்சு... டேய்... தண்ணிய எடுத்து குடிச்சிட்டு படுடான்னு.... 

அது எங்க அம்மா குரல்.

நான் படுக்கைய விட்டு எழுந்து தண்ணிய குடிச்சிட்டு மறுபடியும் போய் படுத்துட்டேன்.

13 comments:

பாலா said...

நல்ல சுவாரசியமான பகிர்வு. கனவு நனவாகாமல் இருந்தால் சரி....

Harini Nathan said...

கதை சுவாரசியமா இருக்கு சௌந்தர்
உண்மைக்கும் நீ காணலையே அந்த கனவ :p

வெறும்பய said...

எதோ த்ரில்லர் படம் பாக்குறது மாதிரியே சுவாரஸ்யமா இருந்திச்சு சௌந்தர்..

வெறும்பய said...

கேட்க்க மறந்திட்டேன் இது நீ கண்ட கனவு தானே..

சைதை அஜீஸ் said...

//நான் படுக்கைய விட்டு எழுந்து தண்ணிய குடிச்சிட்டு மறுபடியும் போய் படுத்துட்டேன்//
இத சொல்ல என்ன ஒரு பில்டப்!
நடத்துங்க!

இருந்தாலும் உங்க நாணயம் எனக்கு பிடிச்சிருக்கு!
//நான் வேற இடத்துல வாங்கி தரேன்னு அவளே காச கொடுத்துட்டு என்ன கூட்டிட்டு போனா... நானும் பின்னாடியே போனேன்//

சௌந்தர் said...

பாலா said...
நல்ல சுவாரசியமான பகிர்வு. கனவு நனவாகாமல் இருந்தால் சரி....///

தேங்க்ஸ் பாலா நனவு ஆகாது டோன்ட் வொரி ;)

சௌந்தர் said...

Harini Nathan said...
கதை சுவாரசியமா இருக்கு சௌந்தர்
உண்மைக்கும் நீ காணலையே அந்த கனவ :p///

இது கதையா அவ்வ்வ்வ் சரி சரி சரி... ம்ம்ம்ம் நான் காணலை இந்த கனவை.... இனி மேல் வருதான்னு பார்க்கலாம் :))

சௌந்தர் said...

வெறும்பய said...
எதோ த்ரில்லர் படம் பாக்குறது மாதிரியே சுவாரஸ்யமா இருந்திச்சு சௌந்தர்..///

கலாய்கலையே...???? :))) ரொம்ப தேங்க்ஸ் :)))

வெறும்பய said...
கேட்க்க மறந்திட்டேன் இது நீ கண்ட கனவு தானே..///

இது நான் கண்ட கனவு இல்லன்னு சொன்னா நீ நம்ப மாட்டியே...!!!

தேங்க்ஸ் ஜெயந்த...

சௌந்தர் said...

சைதை அஜீஸ் said...
//நான் படுக்கைய விட்டு எழுந்து தண்ணிய குடிச்சிட்டு மறுபடியும் போய் படுத்துட்டேன்//
இத சொல்ல என்ன ஒரு பில்டப்!
நடத்துங்க!

இருந்தாலும் உங்க நாணயம் எனக்கு பிடிச்சிருக்கு!
//நான் வேற இடத்துல வாங்கி தரேன்னு அவளே காச கொடுத்துட்டு என்ன கூட்டிட்டு போனா... நானும் பின்னாடியே போனேன்//


உங்க நாணயம் அத விட பிடிச்சு இருக்கு..... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் னா..

கடம்பவன குயில் said...

என்ன ஒரு விறுவிறுப்பான கதை சௌந்தர்!!. ரொம்ப நல்லா இருந்தது.
தொடர்ந்து முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்.....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க !

Anonymous said...

கதை சுவாரசியமா இருக்குங்க... பலிக்காமல் இருந்தால் சரி...-:)

ranga rajan said...

Super Story...!!

Keep rocking..!!

 
;