Friday, October 11

மீண்டும் நான்.....





அனைவருக்கும் வணக்கம் எல்லோரும் நலமா..?நெடுநாள் கழித்து பதிவெழுத வந்திருக்கிறேன். குடும்ப சூழல் காரணமாகவும் இணைய இணைப்பு காரணமாகவும் பதிவெழுதாமல் இருந்தேன்.   இணைய இணைப்பு இல்லாததும் ஒரு வழியில் நல்லதாகப் போனது, தான் யார் என்பதையும் தன்னை சுற்றியிருப்பவர்களையும் யார் என்பதையும் நன்கு உணர்த்தியது.

இந்த துண்டிப்பு பலவற்றை கற்றுகொடுத்தது, பலவற்றில் இணைய நட்பை பற்றி மட்டும் இப்போது பார்போம் இணையம் எப்போது துண்டிக்கப்படுகிறதோ அப்போதே இணையநடப்பும் துண்டிக்கப் பட்டுவிடும் இதுவே இணைய நடப்பு....

அப்படியென்றால் இணையத்தில் உள்ளவர்கள் யாரும் உண்மையான நட்பு கொண்டவர்கள் இல்லையா என்ன கேட்காதீர்கள்... உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள்... இணையம் துண்டித்தாலும் நட்பில் தொடர்பவர்களை  இணைய நண்பர்கள் என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை அவர்களை நண்பர்கள் என்றே கூறுவேன் ஏனென்றால் அவர்களே நம்மீது உண்மையான நட்பு கொள்கிறாகள்


நான் இணையத்தில்  இல்லாமல் இருந்தாலும் என் தொடர்பில் எப்போதும் இருந்தவர்.. தான் கௌசல்யா அக்கா அவர்கள். இணையம்
இருக்கும் பொழுது எப்படி நட்பில் இருந்தாரோ அப்படியே தன் நட்பை தொடர்ந்தார்,

அக்கானு மரியாதையை கூட இல்லையா என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டதும் உண்டு...(ஜில்லாவுக்கே  கலெக்ட்டராக இருந்தாலும் நமக்கு அக்கா தானே பாஸ்...) பல சமயங்களில்  எங்களுக்குள் சண்டைகள் வந்தாலும் அக்கா போய் தொலை டா சௌந்தர் என்று என்னை மன்னிப்பதும் உண்டு...  நிறைய விசயங்களில் என்னை மாற்றியவரும் அக்கா தான் நான் என்ன செய்யவேண்டும் என்பது முதல் என்ன செய்ய கூடாதென்பது வரை எனக்கு அடிகடி அறிவுரைகளை வழங்குவர் நான் கவிதை என்ற பெயரில் உங்களை சாகடிகிறேன் என்றால் அதற்கு கௌசலயா அக்கா தான் காரணம்...  அவர் சொல்லியே எழுத தொடங்கினேன்.. ஏதோ எழுதி கொண்டிருக்கிறேன்.  எப்போதும் அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்... அந்த மரியாதை எப்போதும் தொடரும். இணையம் இல்லாத காலத்திலும்... என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கௌசல்யா அக்கா.


தேவா அண்ணன் பற்றி நான் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பதிவெல்லாம் போதாது...  இணைய உலகம் பற்றியை மாயை எடுத்துரைத்தவர் தேவா அண்ணன். எனக்கு இணைய இணைப்பு இல்லாமல் போனதில் தேவா அண்ணனுக்கு தான் ஒரு கை உடைந்தது போல இருந்திருக்கும் எப்போதும் தம்பி என்றழைத்து இதை செய்யலாமா..? இதை செய் இதை செய்யாதே என்பது வரை என்னை அழைத்து கொண்டே இருப்பார். விடுமுறை என்றால் அவ்வளவுதான் பேசிகொண்டே இருப்போம் என் வீட்டில் சரி அவர் வீட்டில் சரி என்ன தான் பேசுவிங்களோ என்பார்கள்.


இணையம் இல்லாமல் ஒரு வருடம் ஆனாலும் நாங்கள் இதுவரை தொலைபேசியில் பேசியதில்லை ஆனால் நினைக்காமல் ஒரு நாளும் இருந்திருக்க மாட்டோம்...  தொலைபேசியில் தொடர்பில் இல்லையென்றாலும் மின் அன்ஞ்சல்  குறுந்தகவல் என தகவலில் இருந்தோம்... தேவா அண்ணன் என்னை தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கு அவர் குடும்ப சூழல் காரணம், அண்ணனின் அப்பா தவறி விட்டார், மேலும் குடும்பத்தில் சில சூழல்கள் பலவும் எங்களை பிரிவு என்ற மாயை உருவாக்கிவிட்டது. ஆனால் அது மாயை தான். இதுவரை எங்கள் நட்பு எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.

தம்பி... தம்பி... என்றழைக்கும் பொழுதே அவரின் பாசம் தெரிந்து விடும், அவர் என் மீது என்றுமே  கோபப்பட்டதில்லை. எதிரியை கூட நொடி பொழுதில் மன்னித்து விடுவார் அது தான் தேவா அண்ணன் இப்படியொரு மனிதரை என் அண்ணனென சொல்வதில் எனக்கு பெருமையே


என்னை எப்போதும் செல்லம் என அன்பாக அழைக்கும் மதுரை ஆனந்தி அக்கா அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் செய்து என்னட செல்லம் பண்றே எப்போதும் பாசமுடன் பேசுவார்.. ஒரு நாள் மின்னஞ்சல் செய்திருந்தார் அக்காக்கு ரொம்ப உடம்பு முடியாம போச்சு மரணத்தின் விளிம்பு வரை சென்றுவந்திருக்கிறார், நல்ல மனிதருக்கெல்லாம் இப்படியொரு சோதனையை தருகிறாயே என கடவுளை திட்டிதீர்த்தேன்..   இப்போது நன்கு தேறிவந்துவிட்டார் அக்கா. நான் கவிதை எழுதினால் ஓடி வந்து முதலில் படித்து கிண்டல் செய்து குறுந்தகவல் அனுப்புவார்.. கதை எழுதினால் என்னை திட்டும் முதல் ஆள் இவர் தான் காரணம் நான் சோக முடிவுகளையே அதிகம் வைப்பேன்..  ஆனந்தி அக்கா மிகவும் இளகிய மனம் படைத்தவர்.

எந்த செய்தியாக இருந்தாலும்  என்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க மாட்டார், அன்பான ஆனந்தி அக்கா நட்பு என்றைக்கும் தொடரும்..  எனக்கு கிடைத்த மென்மையான அக்கா..

இணையம் பல நல்ல உள்ளதை தந்தாலும் சில நட்புகள் தான் துண்டிக்கப்படாமல் நீடிக்கிறது, அதில் நண்பர்களை குறை சொல்ல முடியாது அவர்களில் சூழல்அப்படி.

சென்ற வருடத்தில் என்னை பெருதும் சோகத்தில் ஆழ்த்தியது தேவா அண்ணனின் அப்பா தவறியது, ஆனந்தி அக்காவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போனது, இனி வரும் காலத்தில் எனக்கும் என்னை சுற்றியிருப்பவர்களுகும் நல்லதே நடக்க வேண்டுமென்று பிராத்தனை செய்து கொண்டிருக்கிறேன்.

இணையத்தில் தான் மோதல்களெல்லாம் அரசியல்கட்சிகளுக்காக கருத்து மோதல்,  ,யார் பெரியவன் என்கிற மோதல், தனிமனிதரை தாக்கி கொள்வது, உடல் குறைபாட்டை  கேலி  செய்வதென்று எல்லாம் இணையத்தில் தான் நடந்தேறுகிறது .சாமனிய மக்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லை தன் உழைப்பு குடும்பம் , என சென்று கொண்டிருக்கிறான் 

நாமும் சாமானிய மக்களை போல் இருந்துவிட்டால் இணையம் தடைப்பட்டு போனால் என்னவாகும், முகப்புத்தகம் தடைப்பட்டு போனால் என்னவாகும், என்ற கேள்வியெல்லாம் நமக்கு எழவே எழாது இணையம் என்பது மாயை என்பது மட்டும் நிதர்சனம், மாயையில் சிக்கிவிடாமல் நம்மை நாமே பார்த்து கொள்ளத்தான் வேண்டும்.

இணையத்தில் நாம் நல்ல மனிதர்களை பெற்றிருக்கிறோம் என்றால்  தோள் தட்டி நமக்கு நாமே சபாஷ் போட்டு கொள்ளலாம், உண்மையானவர்கள் கிடைத்தால் எந்த சூழலிலும் அவர்களை விட்டு கொடுக்காதீர்கள் .... 

நானும் சில நல்ல மனிதர்களை பெற்றிருக்கிறேன் தேவா அண்ணன், கௌசல்யா அக்கா, ஆனந்தி அக்கா, மகேஷ்வரி அக்கா, நண்பன் கூர்மதியான், நண்பன் எஸ் கே.   







7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வருக... தொடர்க... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

மீண்டும் வந்தது
மகிழ்வளிக்கிறது
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

சதீஷ் செல்லதுரை said...

மீண்டும் வருக..வாழ்த்துக்கள்...நட்பு இணையம் தாண்டியும் தொடரும்..இணையம் ஒரு தொடர்பு நிலையம்....ஒரு செல்பேசி போல...அவ்வளவுதான்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இணைய நட்பு தொட்டும் தொடராத ஒரு புதுவிதமான நட்பு....

தங்களிடம் இவ்வளவுபேர் தெடர்பில் இருப்பது மகிழ்ச்சியே... இணையத்தில் இருந்தால் இன்னும் இதுபோன்ற நண்பர்கள் கிடைக்கலாம் இல்லையா...


பதிவுலகம் திரும்பியதற்கு வாழ்த்துக்கள்....

வாங்க ரசிகன் சௌந்தர் அவர்களே....

Harini Resh said...

Welcome back.

Kousalya Raj said...

//உண்மையானவர்கள் கிடைத்தால் எந்த சூழலிலும் அவர்களை விட்டு கொடுக்காதீர்கள் .... //

ரொம்ப அழகா புரிஞ்சுட்டு இதை எழுதி இருக்குற சௌந்தர்...

உறவுகளின் உன்னதம் இத்தகைய புரிதலில் தான் மிளிர்கிறது...

உனக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்கிறது, தொடர்ந்து எழுது !!

வாழ்த்துகள்!!!!

Jeyamaran said...

Welcome back nanba.

 
;