ஒரு நல்ல படம் பார்க்கும் பொழுதே அந்த படத்தை பற்றி பதிவெழுத வேண்டுமென்று தோன்றும். அப்படி வழக்கு எண் பார்க்கும் பொழுது தோன்றியது ஆனால் அனைவரும் வழக்கு எண் பற்றி நிறைய எழுதிவிட்டார்கள் நாமும் ஏன் எழுத வேண்டுமென்று விட்டுவிட்டேன்.
ஆனால் சகுனி படம் பார்க்கும் பொழுது இந்த படத்திற்கெல்லாம் ஒரு விமர்சனமா என்ன தோன்றியது, படம் அந்த அளவிற்கு இருந்தது, படம் நன்றாக இல்லையென்றாலும் பொறுத்து கொள்ளலாம் ஆனால் இவர்கள் படத்திற்கு கொடுக்கும் பில்டப் பார்த்து பொறுக்கமுடியவில்லை,
நல்ல படங்களை யெல்லாம் மக்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள் சகுனி படத்தில் ஒரு வசனம் சொல்வார் கார்த்திக்.. சிப்ஸ் பாக்கெட்டில் காற்று அடைத்து விற்பனை செய்வது போல் மார்கெட்டிங் செய்ய வேண்டுமென்று அது போல் தான் இந்த படத்திற்கும் மார்கெட்டிங் செய்து கொண்டிருகிறார்கள்.
சகுனி எந்திரன் வசூலை முந்திவிட்டதாக சொல்கிறார்கள், முன்பு ஏழாம் அறிவு எந்திரன் வசூலை முந்தியதாக கூறினார்கள் இப்போது சகுனி...அப்படியென்றால் ஏழாம் அறிவு படத்தின் சாதனையை முறியடித்தது என்று தானே சொல்ல வேண்டும்...?
படத்திற்கு இப்படி பில்டப் கொடுத்து தற்போதைய படத்தை ஓட்டி விடலாம் ஆனால் அடுத்தடுத்து வரும் கார்த்திக்கின் படங்களை எப்படி ஓடும்... நல்ல படமாக இருந்தாலும் ஓடாதே...!! சன் பிக்சர்ஸின் நல்ல படங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் ஓடாதா படங்களுக்கு கொடுத்த அதிக பில்டப் தான்.
வழக்கு எண் போன்ற நல்ல படங்கள் எல்லாம் திரையரங்கை விட்டு தூக்கப்படுவதற்கு காரணம் சினமாகாரர்கள் தான். அதிக திரையரங்கை வாடகைக்கு எடுத்துகொள்கிறார்கள், நல்ல படங்கள் ஒதுக்கப்படுகிறது... வழக்கு எண் படத்திற்கு பிறகு வந்த படங்களிலே தடையற தாக்க நன்றாக இருந்தது ஆனால் அந்த திரைப்படத்தை யாரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை..
மார்கெட்டிங் உலகத்திற்கு நாம் சென்று விட்டோம் அதனால் தான் எல்லாம் மார்கெட்டிங் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி கொண்டிருகிறார்கள்.... சரி சரி சகுனி படத்தை பற்றி ஒரு பத்தியாவது எழுதுவோம்..
சகுனியின் கதை அப்படி ஏதாவது இருக்கா...?? தன் வீட்டு அருகே சுரங்கப்பாதை அமைப்பதற்காக அரசு கார்த்திக்கின் வீட்டை கையகப்படுத்துகிறது அரசிடம் இருந்து எப்படி கார்த்திக் தன் வீட்டை மீட்கிறார் என்பதே படத்தின் கதை. மணிரத்தினம் போல் மகாபாரதத்தை உல்ட்டா செய்து எடுத்திருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால் சகுனின்னு சொல்லி கார்த்திக்கும் சந்தனமும் சேர்ந்து போடுற மொக்கை போடுறாங்க போடுறாங்க இடைவேளை வரை மொக்க போட்டுட்டே இருக்காங்க..
இடைவேளைக்கு அப்பறம் என்ன செய்வார் பார்த்தா. அப்படி ஒன்னும் பெரிதாக செய்யவில்லை கவுன்சிலர் தேர்தல் வருது அதில் ராதிகாவிற்கு ஐடியா கொடுத்து அவர் வெற்றி பெறுகிறார்.. இவர் ஐடியா கொடுக்க எதிர்க்கட்சி தலைவர் முதல் அமைச்சர் ஆகிறார் சாதாரண சாமியார்க்கு ஐடியா கொடுத்து அவரை மிகப்பெரிய சாமியாரை மாற்றுகிறார் (சத்குரு ஜக்கி வாசுதேவ் போல்) இப்படி பலருக்கும் யோசனைகளை சொல்லி சொல்லி அவர்களை வெற்றி பெற வைக்கிறார்.. இது தான் சகுனி தனமாம்..!!
அது எப்படி தேர்தல்கள் வந்து கொண்டே இருக்கிறது..?? பல லாஜிக் மீறல்கள் தூள் படத்திலும் இதே கதை தான் ஆனால் அதில் ஒரு அமைச்சரை எப்படி பழி வாங்க முடியும் என்பது ஏற்று கொள்ளும் வகையில் இருந்தது ஆனால் சகுனியில் சொல்லப்படும் காட்சிகள் ஏற்று கொள்ள கூடியதாகயில்லை..
படத்தின் பாடல்களும் சொல்லும் விதமாய் இல்லை சிறுத்தையின் பாதிப்பு படத்தின் பாடலில் தெரிகிறது மனசெல்லாம் மழையே பாடல் மட்டும் மனதை நனைய வைக்கிறது
சகுனியில் கார்த்திக் சற்று சறுக்கி இருக்கிறார் அவர்கள் உறவுகாரர்களே படத்திற்கு தயாரிப்பாளர்கள் என்பதால் அதிக பில்டப் கொடுத்து கொண்டிருகிறார்கள்... சகுனி தோல்வி அடைந்ததை யாரும் பெரிது படுத்தியிருக்க மாட்டார்கள் ஆனால் இவர்கள் கொடுத்த பில்டப் தான் தோல்வியை பற்றி இப்படி பேசி வைக்கிறது.
படம் நன்றாகயிருந்தால் பார்க்கப்போகிறோம் இல்லையென்றால் எங்கள் வேலையை பார்த்து கொண்டு போக போகிறோம் அதை விட்டு விட்டு வசூல் சாதனை என்று சொல்லி ஏன் எங்களை வேதைனை படுத்த திரைக்கு அழைக்குறீர்கள்..?? கார்த்திக்கிற்கு எதற்கு பவர் ஸ்டார் வேலை..??
Tweet | |||||
9 comments:
தமிழ் சினிமாவில் லாஜிக் எல்லாம் எதிர்பார்த்தால் நீங்கள் ஐயோ பாவம் நண்பா... கடைசியில் கேட்டிருக்கும் கேள்வி சூப்பர். என் கேள்வியும் அதுவே.
லாஜிக் எல்லாம் எதிர்பார்க்க முடியாது தான் இதுல ஓவர் லாஜிக் மீறல் இருக்கே அதான் :)))
வருகைக்கு நன்றி..... நண்பா
படம் நன்றாகயிருந்தால் பார்க்கப்போகிறோம் இல்லையென்றால் எங்கள் வேலையை பார்த்து கொண்டு போக போகிறோம் அதை விட்டு விட்டு வசூல் சாதனை என்று சொல்லி ஏன் எங்களை வேதைனை படுத்த திரைக்கு அழைக்குறீர்கள்..?? கார்த்திக்கிற்கு எதற்கு பவர் ஸ்டார் வேலை..??
சூப்பர் மாமா
Nice...nanba....
Ivanugalai....
Pathivar...
Vimarsanam...
Padikka vaikkanum....!!!!!!
Nice...nanba....
Ivanugalai....
Pathivar...
Vimarsanam...
Padikka vaikkanum....!!!!!!
//சகுனியின் கதை அப்படி ஏதாவது இருக்கா...??//
விமர்சனம் எழுதுன எல்லாருமே மறக்காம எழுதுன லைன் இது
தன் வீட்டு அருகே சுரங்கப்பாதை அமைப்பதற்காக //
இரயில்வே டிராக்குன்னு சொன்னாங்க மாத்திட்டானுகளா மச்சி?
நல்ல அலசல் நண்பரே ! நான் படம் பார்க்கவில்லை. பார்க்க போவதும் இல்லை. இவை எல்லாம் மீடியாக்கள் செய்யும் ஜாலங்கள்...
லொஜிக்கோடு ஒரு படம் வந்தால் சொல்லங்கள் ஓடிச் சென்று பார்க்க வேண்டும்...
Post a Comment