கனாக் கண்டேன், (கந்து வட்டி), அயன் (கள்ளக்கடத்தல்), என கதைகளத்தை அமைத்தவர் "கோ" படத்தில் பத்திரிக்கையை, அரசியலை கொண்டுவந்திருக்கிறார். ஆனந்த்-சுபா இவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இதில் கூறப்பட்டு உள்ளது. இவர்கள் இணைந்தே திரைக்கதையும் எழுதியுள்ளார்கள். வசனம் சுபா எழுதிவுள்ளார் அயன் படம் பார்த்தவர்கள் நிச்சயம் இந்த படம் பார்க்க வேண்டும் என நினைத்து இருப்பீர்கள், அதில் நானும் ஒருவன்.
ஒரு தினசரி பத்திரிக்கையின் போட்டோகிராபர் ஜீவா, ஆளுங்க கட்சி (பிரகாஷ்ராஜ்), எதிர்க்கட்சி (கோட்டா சீனிவாச ராவ்), தேர்தல் வருகிறது. அரசியல்வாதிகளின் தில்லு முள்ளுகளை ஜீவா தோலுரித்து காட்டுகிறார், அந்த நேரத்தில் இளைஞர்களின் சிறகுகள் அமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறார்கள், அவர்களுக்கு ஜீவா உதவி செய்கிறார்..இளைஞர் அமைப்பு ஆட்சி அமைத்ததா.. இல்லையா..?? அரசியல் வாதிகளை எதிர்க்கும் ஜீவாவுக்கு என்ன நடந்தது என்பது மீதி கதை.
முதல் காட்சியில் வங்கியில் கொள்ளை நடக்கிறது..அந்தக்காட்சி முதல் விறுவிறுப்பு தொடங்கி விடுகிறது, கொள்ளையடிக்கும் இடத்திற்கு ஜீவா வருகிறார், காப்பாற்ற போகிறார் என்று பார்த்தால், புகைப்படம் எடுக்கிறார், பைக் "வீலிங்" எல்லாம் செய்தது புகைப்படம் எடுக்கிறார் கொள்ளையர்களை பிடிக்க உதவியாக அவர் எடுக்கும் புகைப்படம் உதவுகிறது.
ஜீவாவிற்கு இந்த கேரக்டர் சரியாக பொருந்துகிறது. இவர் கேமரா பிடிப்பதை பார்த்தால் படம் பிடிப்பதில் வல்லவர் போல் தெரிகிறது. பியாவிடம் சுட்டி தனமாகவும், கார்த்திகாவிடம் காதலோடு சுற்றி வருகிறார். இவரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. எப்படி ஒரு எழுத்தாளர் எப்போதும் பேனாவை பாக்கெட்டில் வைத்து கொண்டு இருப்பாரோ, அதே போல் ஜீவா எப்போதும் கேமராவை வைத்து கொண்டு சுற்றுகிறார். முதல் பாதியில் இவர் செய்யும் சுட்டித்தனம் ரசிக்க வைக்கிறது.
கதாநாயகிகள் பியா, கார்த்திகா, பியா பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நன்றாக நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு, காதலோடு ஜீவாவை சுற்றி வருகிறார், இயல்பான ஒரு நட்பு ஜீவாவிற்கும் பியாவிற்கும்...தனக்காக கார்த்திகாவை காதல் தூது அனுப்புகிறார் அங்கே ஜீவா, நான் (கார்த்திகாவை உன்னைத்தான் காதலிக்குறேன் என்று சொல்வார், இதை பின்னால் இருந்து கேட்டு கொண்டுயிருப்பார் பியா..அந்த இடத்தில் அவர் நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது. கலகலப்பாக இருந்து விட்டு பாதியில் சென்று அனுதாபத்தை அள்ளுகிறார். கார்த்திகா (ராதாவின் மகள்) நடிப்பு சுமார் ரகம் இது தானே முதல் படம் போக போக பார்ப்போம்..
அஜ்மல் சிறகுகள் இளைஞர் அமைப்பின் தலைவர், நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு தலைவருக்கு உரிய பாடி லேங்குவேஜ் இல்லை, இவரின் பேச்சு நன்றாக இருக்கிறது இவரை தலைவராக ஏற்று கொள்ள நமக்கு நேரம் பிடிக்கிறது. இடைவேளைக்கு பிறகு இவரின் நடிப்பு இன்னும் நன்றாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு இவரை பற்றி தெரியவரும் பொழுது,அதிர்ச்சி அனைவருக்கும் தான்.
கதை திரைக்கதை கே.வி.ஆனந்த்,சுபா அயன் படம் அளவிற்கு திரைக்கதை இல்லையென்றாலும், நன்றாகவே இருக்கிறது, ஒரு பத்திரிக்கையாளனின் வேலையை நுட்பமாக காண்பித்திருக்கிறார்கள். திடிர் என திரைக்கதையில் தொய்வு வருகிறது, அதை தவிர்த்து இருக்கலாம். மூன்றுபக்கம் திரைக்கதை ஓடு கிறது..நம் கண்களை கட்ட வைக்க பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாச ராவ், கதாபாத்திரத்தை பயன் படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது..
ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் வண்ணமயமாக இருக்கிறது இவரின் ஒளிப்பதிவு. அமளி துமளி பாடலில் மலைகளை சுற்றும் கழுகு போல் இவரின் கேமரா சுற்றுகிறது.
பாடல்கள் ஏற்கனவே ஹிட் அதை படமாக்கிய விதம் அழகு. முதல்பாதி கலகலப்பாக செல்கிறது இரண்டாம் பாதி விறு விறுப்பாக செல்கிறது, சில குறைகள் இருக்க தான் செய்கிறது, அரசியலுக்கு நடிகைகள் வருகிறார்கள், சரி தான் ஆனால் இதில் ஏன் நமீதாவை கிண்டல் செய்திருக்கிறார்கள் தெரியவில்லை. சினிமா துறையில் இருந்து கொண்டே, இன்னொரு சினிமா கலைஞரை கிண்டல் செய்வதா..??? வெண்பனியே.. பாடல் வருவது அந்த நேரத்தில் தேவையில்லாதது...அயன் படத்திலும் இப்படி தான் ஒருவர் இறந்தவுடன் ஒரு டுயட் பாடல் வரும். இந்த பாடல் வருவது படத்தின் தரத்தை கெடுக்கிறது.. அங்கொன்றும் இங்கொன்றும் உள்ள குறையை தவிர படம் நன்றாக இருக்கிறது எதிர்பாராத பல திருப்பங்கள் படத்தில் உள்ளன. படத்தின் முடிவு சரியானதே..எங்கே ஜீவா முதல்வராகிவிடுவாரோ என நினைத்தேன் நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை.. நல்ல பொழுது போக்கு திரைப்படம். "கோ GO படத்திற்கு GO"
| Tweet | |||||











- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact