Monday, July 4

உயிரின் மதிப்பு தெரியாதவர்கள்...




இன்று காலை எழுந்தவுடன் கையில் வழக்கம் போல பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். அரசியல், விளையாட்டு, சினிமா என எல்லாம்கடந்து போக அன்றாட வாழ்க்கைக்குள் நுழைந்தேன். சட்டென கண்ணில் பட்டது ஒரு செய்தி. குப்பைத்தொட்டியில் வீசி எறியப்பட்ட குழந்தை என்று. அட இன்னமுமா இந்த கொடுமை நடக்கிறது என்று யோசித்தவாறே இருக்கும் போது என் பழைய நினைவுகள் தட்டி எழும்பின..


சிறு வயதில் ஒரு நாள் நான் நண்பர்களுடன் தெருவில் விளையாடி கொண்டிருந்தேன் அப்பொழுது, நாய் ஒன்று குப்பை தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் பையை இழுத்து கொண்டு வந்து போட்டது, அந்த கவரில் ஒரே ரத்தமாக இருந்தது என்னவென்று பார்த்தால் பச்சிளம் குழந்தை, ஆறு ஏழு மாத கரு குழந்தையாக இருந்தது, குழந்தைக்கு ஏதோ கொஞ்சம் உயிர் இருந்தது நாய் கடித்ததால் அந்த உயிரும் பிரிந்தது. இப்படி குப்பை தொட்டியில் குழந்தையை வீசுவது தினம் தோறும் எங்காவது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அடுத்ததாக

எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்தது, ஆண் குழந்தை வேண்டுமென்று மீண்டும் குழந்தை பெற்று கொள்ள ஆசைப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது, இன்னொரு பெண் குழந்தை வேண்டாம்மென்று அந்த குழந்தையை நெல் கொடுத்து கொன்று விட்டனர். ஆனால் சில வருடங்கள் கழித்து அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தை தான் பிறந்தது.



பிஞ்சு குழந்தைகளை இப்படி குப்பை தொட்டியில் போடுவதற்கும், கொல்வதற்கும் எப்படி தான் மனம் வருகிறதோ..??! பெண்களுக்கு மிகவும் இளகிய மனம் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த குழந்தைகளை பெறுவதும், குழந்தையை கொல்வதும் குப்பை தொட்டியில் வீசுவதும் பெண்கள் தானே..?? அப்பொழுது அந்த இளகிய மனம் எங்கே போகிறது...??  முன்பெல்லாம் குழந்தைகளை கொல்வதற்கு வறுமை தான் காரணமாக இருந்தது இப்பொழுது வறுமை என்பது கடைசி இடத்தில் தான் இருக்கிறது.



ஒரு குழந்தை அவ்வளவு சாதாரணமாகி விடுகிறது நம் மக்களுக்கு... ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து அது நாட்டின் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். அந்த குழந்தையை அழிப்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது..??

குழந்தையை வளர்க்க முடியவில்லையென்றால் ஏதாவது காப்பகத்தில் விட்டு விடலாமே, அல்லது குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் கொடுத்து விடலாமே, அதை விடுத்து குழந்தையை குப்பை தொட்டியில் வீசுவதும், கொல்வதும் சரியா..?!! இதையெல்லாம் பார்க்கும் பொழுது, இன்னும் நாம் காட்டுமிராண்டி வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டுயிருக்கிறோம், என்பது நினைவுக்கு வருகிறது.



காக்கா, குருவிக்கெல்லாம் இரக்கம் காட்டும் நாம் குழந்தைக்கு இரக்கம் காட்ட கூடாதா..? குழந்தையை கொல்வதற்கு சமுதாயத்தையும், கூட இருப்பவர்களை காரணம் சொல்லாமல், குழந்தையை காப்பாற்ற வேண்டும். காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒரு தாய்க்கு அதிகமாக இருக்கிறது..!!!  ஒரு குழந்தை குப்பையில் வீசுவதற்கும், கொலை செய்வதற்கும் பெண்களுக்கு அதிகம் பங்கு இருக்கிறது. இதெற்கெல்லாம் மூல காரணம் ஆண் தான், அவன் ஆரம்பத்திலே கைவிட்டு விடுகிறான், பெண் கடைசியில் கைவிட்டு விடுகிறாள், ஒரு குழந்தையை தாயும், தந்தையும் கைவிட்டால் நிலைமை என்ன ஆவது...??   





12 comments:

Madhavan Srinivasagopalan said...

// குழந்தையை வளர்க்க முடியவில்லையென்றால் ஏதாவது காப்ககத்தில் விட்டு விடலாமே, அல்லது குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் கொடுத்து விடலாமே, அதை விடுத்து குழந்தையை குப்பை தொட்டியில் வீசுவதும், கொல்வதும் சரியா..?!! //

சரியான பாயிண்டு..

Anonymous said...

ம்ம்ம் உண்மையிலே கொடுமையான விடயம் தான்..

Anonymous said...

/குழந்தையை வளர்க்க முடியவில்லையென்றால் ஏதாவது காப்பகத்தில் விட்டு விடலாமே, அல்லது குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் கொடுத்து விடலாமே, அதை விடுத்து குழந்தையை குப்பை தொட்டியில் வீசுவதும், கொல்வதும் சரியா..?!!//

இல்லைங்க‌. காபகத்தில் வளரும் குழந்தைகளின் நிலையை நீங்க புரிந்து கொண்ட மாதிரித் தெரியவில்லை. மிகவும் மோசம். அந்தக்குழந்தைகளைப் பார்த்த போது தான் நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டம் உள்ளவர்கள் என்று புரிந்தது. அவ்வளவு கொடுமைகள்.

பிள்ளைகள் இல்லாதவர்களிடம் கொடுப்பதைப் பத்தி எதுவும் சொல்வதறகில்லை.

இதை எல்லாம் சொல்லுவதான் நான் கொலையை நியாயப் படுத்துகிறேன் என்றில்லை. சிலவற்றிற்கு கருத்து சொல்லுவது ரொம்பவே சுலபம், ஆனால் அவர்கள் நிலையில் இருந்தால் தான் உண்மை புரியும்.

தொட்டிலில் எறியப்படும் குழந்தையைப் பற்றி படிக்கும் போது வேதனையாக இருந்தாலும், இறந்த குழந்தை புண்ணியம் செய்தது என்று சொல்லலாம். வறுமையை விட கொடியது இன்னும் இருக்கிறது, அதுவும் பெண் குழந்தைகளுக்கு. வலை உலகிலேயே இருக்கிற வக்கிரம் கூட ஒன்று. இவர்கள் வக்கிரங்களையே நிறுத்த வக்கில்லாமல் இருக்கிறோம். இதில இன்னுமா? பெண் புரட்சி புடலங்காய் எல்லாம் ஒன்னுமே இல்லை. புரிந்துணர்வுள்ள அப்பா, சகோதரன் கணவன் கிடைத்தால் வாழ்க்கை ஜோரு. இல்லேன்னா கஷ்டம் தான். இருக்கிற சுதந்திரத்தை அனுபவிச்சுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்.

தர்மமே வெல்லும் வாய்மையே வெல்லும் என்று சொல்வது எல்லாம் இலங்கையிலும் இந்தியாவிலும் புட்டுகிட்டது. எழுதறவருகிறவர்களையே தொரத்துறதில ஒரு கூட்டம் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இவர்களால் ஏற்படும் மனவுளைச்சலையே தாங்க முடியாது. இதில கண்ணுக்குத் தெரியும் எத்தனை பேர் தொல்லையை தாங்குவதாம் அந்தப் பெண்குழந்தை. சொல்லும் போதே வலிக்கிறது என்றாலும் அந்த குழந்தை செத்துப் போனது நல்லது நல்லதுக்குத் தான்.

போங்கைய்யா. போய் வேலையப் பாருங்கன்னு தான் தோன்றுகிறது. யாரையும் நோகடிக்க என்று சொல்லவில்லை. முடியல.

உணவு உலகம் said...

உண்மையில் மனம் வருந்தும் ஓர் பகிர்வு. எந்த அளவிற்கு அந்த நிகழ்வு தங்களைப் பாதித்துள்ளதென்பது, பகிர்வில் தெளிவாகிறது.பெண் சிசுக்களைக் கொல்லும்,பெருந்துயர் தீரும் நாள் என்னாளோ!

சௌந்தர் said...

Madhavan Srinivasagopalan கூறியது...
// குழந்தையை வளர்க்க முடியவில்லையென்றால் ஏதாவது காப்ககத்தில் விட்டு விடலாமே, அல்லது குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் கொடுத்து விடலாமே, அதை விடுத்து குழந்தையை குப்பை தொட்டியில் வீசுவதும், கொல்வதும் சரியா..?!! //

சரியான பாயிண்டு.///

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :))

சௌந்தர் said...

கந்தசாமி. கூறியது...
ம்ம்ம் உண்மையிலே கொடுமையான விடயம் தான்.///

ஆமாங்க உண்மையில் கொடுமையான விஷயம் தான்

சௌந்தர் said...

@@@அனாமிகா துவாரகன்

இறப்புக்கு காப்பகம் மேல் அல்லவா..??

என்ன இருந்தாலும் பிஞ்சு குழந்தையை கொல்வது தவறு தான். இப்பொழுது எல்லாம் வறுமைக்காக யாரும் குழந்தையை கொலை செய்வதும் குப்பையில் வீசுவதும் இல்லை வேறு சில காரணங்கள் இருக்கிறது

ஷர்புதீன் said...

கொடுமை நண்பா

துளசி கோபால் said...

அளவுக்கு மீறி இருந்தால் மதிப்பு தெரியுமா?

ஒரு குழந்தை போதும் என்ற எண்ணத்தோடு அது ஆணோ பெண்ணோ எதா இருந்தாலும் நல்லபடி வளர்த்து ஆளாக்கணும் என்று நம்ம மக்கள் எப்போதான் நினைக்கப் போறாங்களோ:(

Avargal Unmaigal said...

செளந்தர் பதிவு நன்றாக உள்ளது.

அதே நேரத்தில் பின்னுட்டத்தில் அனாமிகா அவர்கள் சொன்னதும் மிக சரியே

vidivelli said...

mika kodumaiyaana vidayam....
nalla pathivu
vaalththukkal...

இராஜராஜேஸ்வரி said...

கொடுமையானது .

 
;