Wednesday, February 15

தனிமை...








தனித்துவிடப்பட்ட 
சிறகொன்று..
தன் பிம்பத்தை 
பார்த்து துள்ளி 
குதித்தது... 
தன் வழித்துணையென..!!!
*******


சிறிது சிறிதாய் 
சேர்த்த சிறகுகள்
பறந்துகொண்டிருக்கிறது..
நேசம் கொண்ட சிறகை விட்டு
*******


மலை பாதையில் தடுமாறி 
கொண்டிருக்கையில் 
வழித்துணையாய்..
கை பிடித்தாள்..


நிஜம் விட்டு போனதை 
அறியாமல் நிழலை 
பிடித்து கொண்டிருக்கும்..
காணா குருடன் நான்...!
*******


உருகும் மெழுகாய் நானிருக்க 
உன் நினைவுகள் 
பிரகாசமாய் எரிந்து 
கொண்டிருக்கிறது...


என் இறுதிவரை 
உன் நினைவுகள்
பிரகாசமாய்
எரிந்துகொண்டிருக்கும்..!! 
*******


நேசம் கொண்டு 
நேசம் கொண்டு 
ஆறா காயத்தை 
ஆற்ற தனிமையை 
நோக்கி செல்கிறது 
காயம் பட்ட மனம்..!!! 



10 comments:

பாலா said...

தனிமையின் வேதனைகளை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். அந்த சிறகு, நிழல் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

Kousalya Raj said...

ம்...என்னவோ சொல்ற...!? :)

//உருகும் மெழுகாய் நானிருக்க
உன் நினைவுகள்
பிரகாசமாய் எரிந்து
கொண்டிருகிறது...//

அட இது சூப்பர்...!

நேத்து நல்லாதானே போச்சுன்னு சொன்ன, அதுக்குள்ள என்ன ஆச்சு இப்படி சோகத்தை கொட்டுற ?!

சௌந்தர் said...

எல்லா நாளும் ஒரே மாதரி இருக்குமா..

அதான் ஒரே பிளிங்கஸ் ஆப் இந்தியா...

எல்லாம் எங்க அக்கா ஒருத்தங்க இருக்காங்க அவங்க சொல்லி கொடுத்தது தான் :(

இராஜராஜேஸ்வரி said...

நேசம் கொண்டு
நேசம் கொண்டு
அருமையான கவிதை!

சௌந்தர் said...

thanks bala :)))

திண்டுக்கல் தனபாலன் said...

தனிமை - மிகக் கொடுமை !

Anonymous said...

தனிமையின் வேதனை.. அருமையான கவிதை...

ரசித்தேன்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கவிதைகள் எல்லாமே நல்லா இருக்கு. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///மலை பாதையில் தடுமாறி
கொண்டிருக்கையில்
வழித்துணையாய்..
கை பிடித்தாள்..///

...வயசான காலத்துல எதுக்கு இந்த வேண்டாத வேலை? பேசாம.. ஒரு வாக்கிங் ஸ்டிக் எடுத்துட்டு போங்க.. அடுத்த முறை.

Suresh Subramanian said...

உங்களுக்கு வெர்சாட்டைல் பிளாக்கர் அவார்ட் கொடுத்து பரிந்துரை செய்கிறேன்.. தாங்கள் பெற்றுக்கொண்டு, பின்வரும் என்னுடைய தளத்தில் http://www.rishvan.com/2012/02/blog-post_25.html உள்ள வழிமுறையை பின்பற்றவும். வாழ்த்துக்கள்....ரிஷ்வன்.

 
;