நாம் தெருவில் நடந்து போகும் போது, ஓரு நோட்டீஸ் கொடுத்து.. இதே போல் 100 பேருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள், கொடுக்க வில்லை என்றால் உங்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என்று சொல்வார்கள், ஆனால் நடுத்தெருவில் நின்று கொண்டுதான் அந்த நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருப்பான் அதே போல பதிவுலகத்தில் இப்போது தொடர் பதிவு என்று வந்துள்ளது,
தொடர் பதிவு மற்றவர் வலைப்பதிவை பார்க்க சென்றால் அங்கே நமது பெயரை போட்டு தொடர வேண்டும் என்று போட்டு இருப்பார்கள்... பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்? நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் அதனால் அருண் நம்மளை தொடர் பதிவெழுத சொன்னார் தொடர்கிறேன்....
1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ரசிகன்
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
என் உண்மையான பெயர் சௌந்தரபாண்டியன். ரசிகன் என்று வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து வைத்தேன், ரசிகன் என்ற பெயரில் ஏற்கனவே மூன்று வலைபதிவு இருப்பதை பிறகு தெரிந்து கொண்டேன்...
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி
இப்படி வலைபதிவுகள் (blog) இருப்பதே எனக்கு தெரியாது... திடீர் என்று தொடங்கியது தான் ஒன்றும் பெரிய விசயம் இல்லை
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஒன்றும் செய்ய வில்லை தமிழிஷ் இணைத்தேன் அவ்வளவு தான். (நல்லவேளை என் ரகசியத்தை வெளியே சொல்லவில்லை )
,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
என்னை பற்றி எழுதியது கிடையாது, என்னை பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு தெரிந்தவர்களை பற்றி எழுதியிருக்கிறேன், இதுவரை எந்த விளைவும் இல்லை.....
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
ஆமாம் பொழுதுபோக்குக்காக எழுதுகிறேன்...நிறைய நண்பர்கள் மற்றும் எழுதும் அறிவை சம்பாதித்து வைத்து இருக்கிறேன்...(இதுவரை ரெண்டு கோடி லாபம் வந்து இருப்பதை சொல்லவில்லை...)
7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
முதலில் ஒன்றுதான் இருந்தது, இப்போது நண்பர் தேவா, விஜய், இவர்களுடன் சேர்ந்து கழுகு என்று வலைபதிவு தொடங்கி உள்ளோம், (குறிப்பு: தேவா அண்ணா என்று சொன்னால் அவருக்கு புடிக்காது)
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
மற்ற பதிவர்கள் போல வரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. பொறாமை இல்லை கோபம் வரும் அளவுக்கு எந்த பதிவும் இல்லை....
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
எங்க அண்ணன் தான் சொன்னார் இந்த வலைபதிவுக்கு அவர் தான் எடிட்டர்
Jay சொன்னது…
Good Start
Jay சொன்னது…
Good Start
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்
இது பெரிய கடல் பத்து நாள் பதிவு எழுதவில்லை என்றால் காணமல் போய்விடுவோம்.
lk தொடர சொல்லியும் இன்னும் தொடராமல் இருக்கும் தேவா, கௌசல்யா இன்னும் இரண்டு நாளில் தொடர வில்லையென்றால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்
அடுத்து தொடர போகும் ஆடுகள்
| Tweet | |||||



- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact