warrior தேவா ரஜினி படங்களை பற்றி தொடர் பதிவு எழுத சொன்னார் நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லை என்றாலும் ரஜினி படங்களை பார்த்து விடுவேன் ஒருதடவை படையப்பா படம் பார்க்க சென்றோம் ரஜினி படம் பார்க்கப்போனால் டிக்கெட் உடனே கிடைத்து விடுமா என்ன...? 3 மணி ஆட்டத்திற்கு சென்று டிக்கெட் கிடைக்க வில்லை சரி இருந்து 6 மணி ஆட்டம் பார்த்துவிட்டு வந்தோம்..பிறகு பாபா படம் வந்த மறுநாள் படம் பார்க்க சென்றேன் 300 ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தோம்...என்ன படம் தான் நல்லா இல்லை...!அதில் ரஜினி டான்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும் இப்போது எந்திரனில் என்னமா டான்ஸ் ஆடுறார்...இதுவரை ரஜினி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார்
10 : நினைத்தாலே இனிக்கும்
இந்த படத்தில் கமல் கூட நடித்து இருப்பார் MSV குரலில் ரஜினி பாடும் சிவசம்போ பாடல் எனக்கு பிடிக்கும் இதில் டேப் ரெக்கார்டில் ஒரு குரல் வரும் அதை கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது..அந்த காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஒரு காட்சியில் ரஜினி சிகிரெட்டை எடுத்து பற்ற வைப்பார் அதே போலே பத்து தடவை செய்யவேண்டும் என்று சொல்வார் பூர்ணம் விஸ்வநாதன், அந்த காட்சிகள் எனக்கு பிடிக்கும்
9 : ஆறிலிருந்து அறுபது வரை
எதார்த்தமான திரைப்படம் இந்தப்படத்தை ஒரு நாள் டிவியில் பார்த்தேன். ரஜினியின் நடிப்பு அபாரமாக இருந்தது, இந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும், சின்ன வயதில் அப்பா இறந்து விடுவார் ரஜினி தான் குடும்பத்தை காப்பாற்றுவார் தம்பி தங்கையை படிக்க வைத்து நல்ல படியாக வளர்ப்பார் ஆனால் தம்பி தங்கை இவருக்கு உதவி செய்ய மாட்டார்கள். இவர்கள் குடும்பம் கஷ்டப்படும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தாலி பறித்து விடுவார்கள் அப்போது ரஜினி காப்பாற்றி கொடுப்பார் அந்த பெண் வாழ்த்தி "உங்க குடும்பம் நல்லா இருக்கணும்" சொல்வார் ரஜினி வீட்டுக்கு வரும் பொழுது அவர் மனைவி குடிசை தீ விபத்தில் இறந்து விடுவார் இந்த காட்சி உருக்கமான காட்சி. இப்போது உள்ள மனிதர்களுக்கும் இந்த கதை பொருந்தும்
8 : தில்லு முல்லு
ரஜினியின் படங்களில் சில இடங்களில் நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்த படத்தில் முழுவதும் நகைச்சுவை இருக்கும் எனக்கு அந்த இன்டர்வியூ காட்சிகள் பிடிக்கும் இறுதி காட்சியில் கமல் வருவது மேலும் சிறப்பு ...ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள்...
7 : படையப்பா
இந்த படத்தில் இவர் ஓபனிங் சீன் ரொம்ப சூப்பரா இருக்கும் ye who are you man ரம்யா கிருஷ்ணன் கேட்க என் பேரு படையப்பா...என்று பாடல் ஆரம்பிக்கும் அந்த காட்சிமுதல் கடைசி காட்சி வரை ரஜினி பட்டையை கிளப்பி இருப்பார் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் படையப்பா தான் மிக பெரிய திருப்பு முனை.. பிடித்த காட்சிகள் ஒரு காட்சியில் சிவாஜி, ரஜினியை கூப்பிட்டு சல்யூட் அடிக்க சொல்வார். ரஜினி சல்யூட் அடித்தவுடன் "யாரு இவன் என் பையன்" என்று சொல்வார்....
6 : பில்லா
இந்த படத்திற்கு முன்பு தான் எம் ஜி ஆர் ரஜினியை கூப்பிட்டு "நீ என்ன சூப்பர் ஸ்டாரா" என்ன கேட்டு மிரட்டியதாக சொன்னார்கள் அதற்க்கு தான் முள்ளும் மலரும் பாடலில் "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்" எனக்கு ஒரு கவலை இல்லைஎன்ற பாடல் வைத்தார்.ரஜினி பில்லா படத்திற்கு பிறகே ரஜினி சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து காட்டினார். பிடித்த காட்சிகள் ஓட்டலில் இருந்து ரஜினி தப்பிக்கும் பொழுது நடக்கும் காட்சிகள் பிடிக்கும் ரெண்டாவது ரஜினியின் நடிப்பு பிடிக்கும் இந்த படத்தை எங்க அஜித் நடித்து இருப்பார் துளி கூட ரஜினியின்சாயல் இல்லாமல். அடுத்து "பில்லா" II வர போகிறது ...
5 : சந்திரமுகி
பாபா படத்திற்கு பிறகு வந்த படம் "நான் யானை இல்லை குதிரை" என்று சொல்லி அதை செய்து காட்டியவர் ரஜினி. படம் முதல் பாதி காமெடியாக சென்று கொண்டு இருந்தாலும், சந்திரமுகி வந்த பிறகு படம் வேகம் அதிகரிக்கும் வேட்டையன் வந்த பிறகு அட என்னமா வில்லன் கதாபாத்திரம் நடிக்கிறார் ரஜினி இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் வேட்டையன் தான். லக்க லக்க லக்க.... சொல்லும் அந்த காட்சியை ரஜினியே வைத்து இருக்கிறார் விரைவில் "சந்திரமுகி" பார்ட் II வருகிறது
4 : சிவாஜி
ஷங்கர்இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சிவாஜி: த பாஸ்...80 களில் வந்த ரஜினியை அப்படியே இளமையாக காட்டினார் ஷங்கர்.வெள்ளைக்காரன் மாதிரி வந்து கலக்கினர். பிடித்த காட்சி, வில்லன் ஆதி ஜெயிலுக்கு போகும் போது ரஜினி பேசும் அந்த வசனம் சூப்பரா இருக்கும். கிளைமேக்ஸில் மொட்டை பாஸ் வருவார். எப்போதும் ரஜினி படத்தில் எதாவது ஒரு டுவிஸ்ட் இருக்கும்...
3 : எந்திரன்.
ரஜினி ரசிகர்கள் முதல் அனைத்து சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்த திரைப்படம். எப்போதும் போல ரஜினிக்கு ஓபன் சாங் இல்லை ஒரு சில ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் மற்ற அனைவருக்கும் பிடித்த படம் . ரஜினி மாதிரியே ரோபோ நடந்து வரும்...அது எனக்கு பிடித்தகாட்சி
2 : படிக்காதவன்
அண்ணன் தம்பி கதை சிவாஜி அண்ணன் ரஜினி தம்பி. அண்ணி கொடுமை தாங்காமல், அண்ணனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்பதற்காக வீட்டை வீடு வெளியேறுவார் ரஜினி. தன் தம்பியை படிக்க வைத்து தான் படிகாதவனாய்..! பிடித்த காட்சி அம்பிகா கர்ப்பமா இருப்பதாக நினைத்து தன் காரில் ஏற்றுவார் வண்டி போகாது மறு நாள் பார்த்தா அம்பிகா கர்ப்பமா இருக்க மாட்டார் அதற்க்கு மறு நாள் கர்பமா இருப்பார் அந்த காட்சியில் ரஜினி குழப்பமா இருப்பார் அந்த காட்சி நன்றாக இருக்கும் இப்போதும் அந்த காட்சியை பார்த்தாலும் அந்த காட்சியை ரசித்து சிரிக்கலாம்
1 பாட்ஷா
பாட்ஷா போல எத்தனையோ படம் எடுத்தாலும் இந்த படத்தை போல வேறு எந்த படமும் வெற்றி பெற வில்லை ஆனந்தராஜ் ரஜினியை போட்டு அடிப்பார் "என்னடா" ரஜினி அடி வாங்குகிறார் என்று இருந்தால் அடுத்த காட்சியில் ரஜினி அடிப்பார் அந்த காட்சியில் ரஜினி அவர் தம்பியை "உள்ளே போ" என்று சொல்வார் இன்னும் அந்த வசனம் எனக்கு கேட்டு கொண்டு இருக்கிறது சண்டை முடிந்த உடன் அவர் வயிற்றில் இடைவேளை என்று போடுவார்கள் இன்னும் மறக்க முடியாத காட்சிகள் எல்லாம் பாட்ஷா மாதிரி எத்தனை படம் வந்தாலும் ஒரே ஒரு பாட்ஷா தான். பாட்ஷா பார்ட் II விரைவில்...! எப்போதும் ரஜினி படம் என்றால் பாட்ஷா தான் முதலிடம்
Tweet | |||||
56 comments:
me the firstuuuuuuuu
வாழ்த்துக்கள் அடுத்த தொடர் பதிவு எழுதும் அனைவருக்கும் ......நல்ல இருக்கு சௌந்தர் ..........
அழைச்சிட்டீங்களா!
உங்கள் தொகுப்பும் ரொம்ப நல்லா இருக்கு!
என்ன சௌந்தர், என்னையும் ஆட்டத்துல இறக்கி விட்டுட்டே, இருந்தாலும் கரும்பு தின்னக் கூலிதான். சீக்கிரமே பதிவு போட்டுடறேன்!
வரிசையிடல் நல்லா இருக்கு நண்பா!
நல்ல தொகுப்பு நண்பா...
சரி சரி நல்லாத்தான் சொல்லிருக்க. இந்த பாபு இன்னும் எழுதலையே
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
சரி சரி நல்லாத்தான் சொல்லிருக்க. இந்த பாபு இன்னும் எழுதலையே///
பாபுவுக்கு கை கட்ட விரல் அடி பட்டு இருக்கு அதான் எழுதலை
சூப்பர் தொகுப்பு செளந்தர்.... ஏகப்பட்ட பார்ட் 2 மேட்டர் போல...
தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி
//சரி சரி நல்லாத்தான் சொல்லிருக்க. இந்த பாபு இன்னும் எழுதலையே//
அவசர படாதே .........லேட் அ வந்தாலும் லேட்டஸ்ட் அ வருவான் பாபு .......டோன்ட் வொர்ரி மக்கா ...............
நீங்கள் அமைத்த வரிசை நன்றாக இருக்கு சௌந்தர்!
ஒட்டு போட்டாச்சு.. (துட்ட வெட்டு)
கொஞ்சம் டயம் கொடுங்க, தொடறதுக்கு.. ஆணி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..
அத்துணையும் அருமையான தேர்வுகள்
நல்ல ரசிகன் நீ
வாழ்த்துக்கள் தம்பி!
Madhavan சொன்னது…
ஒட்டு போட்டாச்சு.. (துட்ட வெட்டு)
கொஞ்சம் டயம் கொடுங்க, தொடறதுக்கு.. ஆணி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு.///
Madhavan
இது மதுரை இல்லை சென்னை...! சரி ஆணியை புடுங்கிட்டு தொடருங்கள் அருண் கிட்ட சொல்லுங்கள் அவர் தான் ஆரம்பித்து வைத்தார்
அட...கலக்கிட்ட மக்கா....பாட்ஷா பற்றி சிலிர்ப்புடன் எழுதி இருக்கீங்க...
நினைத்தாலே இனிக்கும் படத்துல எனக்கு எங்கேயும் எப்போதும் பாட்டு தான் ரொம்ப பிடிக்கும் .. அதோட ரீமிக்ஸ் கூட அந்த அளவுக்கு இல்ல ..
பாபு இன்னும் எழுதலையா..நான் அழைக்க ஒரு ஆளு கிடைச்சிட்டாரு
அதோட ரீமிக்ஸ் கூட அந்த அளவுக்கு இல்ல .//
அது கண்றாவி..ஒரிஜினல் ஒரிஜினல்தான்
இந்திரனுக்கு இரண்டாவது இடமா ..? என்ன நக்கலா ..?
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
பாபு இன்னும் எழுதலையா..நான் அழைக்க ஒரு ஆளு கிடைச்சிட்டாரு///
அவரை ஏற்கனவே அழைத்துடாங்க ஆனா எழுதவில்லை
ப.செல்வக்குமார் சொன்னது…
இந்திரனுக்கு இரண்டாவது இடமா ..? என்ன நக்கலா ..?////
நல்லா பாருங்க செல்வா அது 3வது இடம்
படிக்காதவன் , தில்லுமுல்லு , ஆறிலிருந்து அறுபது வரை இதெல்லாம் நான் பார்த்தது இல்ல ..
எல்லார் பேரையும் முழுசா போட்டுட்டு என் பெயரை மாத்திரம் கட் பண்ணி போட்ருக்கீங்க என்ன ஒரு வில்லத்தனம்?
அவரை ஏற்கனவே அழைத்துடாங்க ஆனா எழுதவில்லை
//
அப்படியா அப்ப அவரை கமல் ரசிகர் லிஸ்ட்ல சேர்த்தி டின் கட்டலாம்
நாகராஜசோழன் MA சொன்னது…
நீங்கள் அமைத்த வரிசை நன்றாக இருக்கு சௌந்தர்!
///
வரிசை தான் நல்ல இருக்கு பதிவு மொக்கை அப்டின்னா சொல்றீங்க. ஏங்க பாவம் சௌந்தர்..
படிக்காதவன் , தில்லுமுல்லு , ஆறிலிருந்து அறுபது வரை இதெல்லாம் நான் பார்த்தது இல்ல//
முதல்ல அதைபாருய்யா...ரஜினிக்கும்,தமிழ்சினிமாவிற்க்கும் திருப்பு முனை ஏற்படுத்திய படங்கள்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
நாகராஜசோழன் MA சொன்னது…
நீங்கள் அமைத்த வரிசை நன்றாக இருக்கு சௌந்தர்!
///
வரிசை தான் நல்ல இருக்கு பதிவு மொக்கை அப்டின்னா சொல்றீங்க. ஏங்க பாவம் சௌந்தர்.///
சரி சரி உண்மையை வெளியே சொல்லாதீங்க
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
எல்லார் பேரையும் முழுசா போட்டுட்டு என் பெயரை மாத்திரம் கட் பண்ணி போட்ருக்கீங்க என்ன ஒரு வில்லத்தனம்?///
இவர் தான் அப்படி சதீஷ் போட சொன்னார்...! என்ன ஒரு வில்லத்தனம்
//அப்படியா அப்ப அவரை கமல் ரசிகர் லிஸ்ட்ல சேர்த்தி டின் கட்டலாம்//
டின் எல்லாம் கட்ட முடியாது அப்பு ............மேல கமெண்ட்ஸ் போட்டிருக்கேன் பாருங்க சதீஷ் ...................
ஆறிலிருந்து அறுபது வரை, தில்லு முல்லு இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தப் படங்கள்.
ரஜினியின் இப்போதையப் படங்களை விட முந்தையப் படங்களின் தீவிர ரசிகை நான்.
ரஜினி சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரை இமேஜ் என்ற வட்டத்துக்குள் வைத்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
ரஜினியின் ஸோலோ காமெடியை நான் மிகவும் ரசித்ததுண்டு.
ஒரு ரசிகனாக பதிவு எழுதியது நல்லாருக்கு...
அஜித் ரசிகனின் பார்வையில் ரஜினியின் படங்கள். இப்படி டைட்டில் வச்சு இருக்கலாம்.....! நல்ல அழகான விமர்சனம்.
very good collection :)
நல்ல தேர்வு தான்... ஆனா எல்லாரும் ஏன் சொல்லிவச்ச மாதிரி பாட்ஷாவையே நம்பர் ஒன் ஆக்குறீங்க... அது ஒன்னும் அவ்ளோ சூப்பர் படம் இல்லையே... சாதரணமான கமர்ஷியல் சினிமா தானே...
நல்ல தொகுப்பு.
எனக்கு இவற்றில் மிகவும் பிடித்தது பாட்ஷா.
thala enakku vijay ajith rajini kamal ivangala pathi kavalai illa only Hansika Motwani adutha pathivula Hansikava pathi eluthala kolavilum
.
.
.
.
.
.
.
.
enganu ketkuringala thnna marathula than
சந்திரமுகி, எந்திரன் :))
செம தொகுப்பு!!!
நல்ல வரிசையிடல்
நல்ல தொகுப்பு.. ஓட்டு போட்டேன்.. :)
நல்ல தொகுப்பு சௌந்தர்..
சூப்பர் தொகுப்பு சௌந்தர்
சந்திரமுகி எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம்
இது எல்லாமே என்னோட பேவரிட் சௌந்தர்..))
வாவ்... அழகா தொகுத்து இருக்கீங்க..
இதில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படங்கள்...
பாட்சா, சந்திரமுகி, படையப்பா, சிவாஜி.... :-))))
என்னையும் தொடர் பதிவிற்கு அழைத்ததற்கு நன்றி சௌந்தர் :-)
(எனக்கு கொஞ்சம் சுறுசுறுப்பு ஜாஸ்தி....ரஜினி மாதிரி பதிவு ஸ்பீடா வரும்னு எதிர்பாக்க பிடாது..ஒகே-யா? ):D :D
நீ தேர்ந்தெடுத்திற்கும் அனைத்து படங்களும் அருமை... வாழ்த்துக்கள் தம்பி.. template ம் சூப்பர்..
Nice..
http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html
அருமையான படங்களின் தொகுப்பு..
பட்டியல் நல்ல தேர்வு.
என்னோட சாய்ஸ் ஆறிலிருந்து அறுபது வரை.
அதில் ரஜினியின் ஸ்டைல் துளி கூட இல்லாமல் சாதாரண மனிதனாக நடித்திருப்பார்.
philosophy prabhakaran சொன்னது…
நல்ல தேர்வு தான்... ஆனா எல்லாரும் ஏன் சொல்லிவச்ச மாதிரி பாட்ஷாவையே நம்பர் ஒன் ஆக்குறீங்க... அது ஒன்னும் அவ்ளோ சூப்பர் படம் இல்லையே... சாதரணமான கமர்ஷியல் சினிமா தானே..////
அது தெரியவில்லை அனைவருக்கும் பாட்ஷா பிடித்த படம் அதான்...
புஷ்பா சொன்னது…
நீ தேர்ந்தெடுத்திற்கும் அனைத்து படங்களும் அருமை... வாழ்த்துக்கள் தம்பி.. template ம் சூப்பர்..///
ரொம்ப நன்றி அக்கா...
நல்ல இருக்குங்க பங்கு சாரி பார் லேட்
For me
10. Raja Chinna Roja
9. Mannan
8. Baasha
7. Ragevenderar
6. Mullum Malarum
5. Annamalai
4. Thillu Mullu
3. Enthiran
2. Thalaphathy
1. Johny
Arun
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
me the firstuuuuuuuu
//
no no me the first.
பயனுள்ள தகவல் டாக்டர் ஐயா ...
எனக்கு பிடித்த வரிசை:
10. வீரா
09. அருணாச்சலம்
08. உழைப்பாளி
07. முத்து
06. கொடி பறக்குது
05. ஜானி
04. எந்திரன்
03. சிவாஜி
02. படையப்பா
01. பாட்ஷா
Post a Comment