Tuesday, November 23

ஆலோசனை நேரம்...



நமக்கு பல நோய்கள் வருவது உண்டு, ஆனால் நமக்கு தெரிந்தது காய்ச்சல் தலைவலி இது மட்டும் தான் தெரியும். பல நோய்கள் பற்றி நமக்கு தெரிவதே இல்லை, அந்த நோய்கள் வந்த பிறகு தான் சிறிது அளவு தெரிந்து கொள்கிறோம்..நோய்கள் சிறிது அளவு இருக்கும் போதே நான் அதை கண்டு கொள்வது இல்லை, நோய்கள் தன்மை பெரிது ஆனதும் தான் அதன் வீரியம்  நமக்கு தெரிகிறது. நோய்கள் சிறுதாக இருக்கும் பொழுது கவனிக்க வேண்டும்...அதை பற்றியது தான் இந்த பதிவு

சில நோய்களை அதன் அறிகுறிகள் வைத்து கண்டுபிடித்து விடலாம், நோயின் தன்மை அதிகரித்து விடுவதற்குள் அதை சரி செய்து விடலாம். நோய்கள் பற்றியும் அதன் அறிகுறிகள் பற்றி  தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தலை வலி

நமக்கு தலைவலி வந்தால் கடையில் மாத்திரை வாங்கி போட்டு கொள்வோம். சாதாரண தலைவலி என்றால் பரவாயில்லை, ஆனால் சில அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை பார்த்தே ஆக வேண்டும். ஏன் என்றால் தலையில் கட்டிஇருக்கலாம்...! 

வலதுபக்கம் தலைவலி இருந்தால் இடது பக்கம் கை கால்கள் மரத்து போய் உணர்ச்சிகள் குறைந்து விடும், கை கால்கள் வலி இருக்கும், இடது தோள்பட்டை வலி இருக்கும், வாந்தி மயக்கம், இடது கண் பார்வை குறைபாடு வரும். 

என்ன சாபிட்டாலும் வாந்தி வந்து விடும் தண்ணீர் குடித்தால் கூட, வலிப்பு (பிட்ஸ்) வரும்   

இடது பக்கம் தலை வலி வந்தால் அதே போல் எல்லாம் வலது பக்கம் அறிகுறிகள் இருக்கும் இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் நிச்சயம் தலையில் கட்டி இருக்கலாம்...! 

தலையில் கட்டி இருந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்தால், சில பக்க விளைவுகள் வரலாம், தலையில் வலதுபக்கம் அறுவை சிகிச்சை செய்தால், இடதுபக்கம் ஒரு கை ஒரு கால்கள் செயல் இழந்து போகும். பேச முடியாது. அதே போல இடது பக்கம் அறுவைசிகிச்சை நடந்தால் வலதுபக்கம் செயல் இழந்து போகும். தவறாக அறுவைசிகிச்சை செய்தால் கூட இது போல் பக்க விளைவுகள் ஏற்படும்.  


சிலருக்கு தோள் பட்டை வலி இருக்கும் ஆனால் அது தோள் பட்டையால் ஏற்படுவது இல்லை, நமது கழுத்து வலி தான் தோள்பட்டை வலியாக உணரப்படும்,  முதுகுதண்டு எலும்புகளை டிஸ்க் 1, டிஸ்க் 2 என்று சொல்வார்கள் கழுத்தில் இருக்கும் ஒரு டிஸ்க் முலம் ஏற்படுவது தான், தோள்பட்டை வலி வந்தால் அதை நாம் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால், ஒரு பக்கம் கை தளர்ந்து விட்டும் எதையும் அந்த கையால் பிடிக்க முடியாது...தோள் பட்டைவலியை அறுவை சிகிச்சை செய்யாமலும் சரி செய்ய முடியும்.


அறிகுறிகள்: கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்து இருந்தால் மரத்து போய், அது தன்னை மீறி கிழே விழுந்து விடும், கை விரல்கள் செயலிழந்து போகும், வாந்தி, மயக்கம், குனிந்து கிழே பார்க்க முடியாது...

கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள், ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும். இப்படி செய்தால் தோள் பட்டை வலி வராமல் தவிர்க்கலாம்

முதுகுவலி இது அனைவருக்கும் இருக்கும் பிரச்னை முதலில் சிறு வலியாக இருக்கும் அதை நாம் கவனிக்க தவறினால் பெரிய பிரச்னை ஆகிவிடும், மேல் முதுகுவலியும், கீழ்முதுகு வலி, என்று வகைகள் மிகவும் கவனிக்க படவேண்டியவை, அனைவருக்கும் சாதரணமாக வரும் முதுகு வலி என்றால், அது சரி ஆகிவிடும், சில அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.

அறிகுறிகள் : இரவில் தூக்கமின்மை, கால் மரத்து போய் விடும், கால் கட்டவிரல் தன்னால் அசையும், தன்னால் சிறுநீர் வந்து விடும் அடக்க முடியாது, கிழே குனியமுடியாது, எப்போதும் கால்கள் மரத்தது போல் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தும், பிசியோ தரபிஸ்ட் செய்தும் வலி குறையவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் 
ஆனால் அறுவை சிகிச்சை செய்தால், பக்கவிளைவுகள் வரலாம், அறுவை சிகிச்சையில் தவறு நடந்தாலும், முடக்கு (paralyzed) இடுப்புக்கு கிழே உணர்ச்சி இல்லாமல் போய்விடும் கால்களை அசைக்க முடியாது. முதுகு வலி இருந்தால் உடனே கவனிப்பது நல்லது....       



முதுகு வலி இருப்பவர்கள் கவனிக்க 

*  தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்

*  உறங்கும் போது நேராக படுக்க வேண்டும் முதுகு நன்றாக நேராக இருக்க வேண்டும். சிறிய ஒரே ஒரு தலையணை மட்டும் வைத்தால் நல்லது (தரையில் உறங்கவும்.)

*  இரு சக்கர வாகனம் ஓட்டும்போது வேகதடை, மற்றும் மேடு பள்ளத்தில் வேகம் குறைவாக செல்லவேண்டும்

*  கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்
*  எடை அதிகம் உள்ள பொருளை தூக்க கூடாது 


முதுகு வலி குறைய : தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும். ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.


எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுக்கு சொல்லிருக்கிறேன் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்

57 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuu

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள். தொடருங்கள் .... எல்லோருக்கும் பயன்படும்.....

எல் கே said...

ஆலோசனை நேரம் நல்லா இருக்கு சௌந்தர். குறிப்பா தலைவலி மற்றும் முதுகு வழி

இம்சைஅரசன் பாபு.. said...

soundar நீங்க எப்போ டாக்டர் (விஜய் இல்லப்பா ) ஆனீங்க............சரி தகவல் எல்லாம் நல்லா இருக்கு .....தலைவலி வந்த கவனமா இருக்கணும்னு சொல்லுறீங்க .............சரி செய்திருவோம் ...........

Chitra said...

மிகவும் பயனுள்ள - தேவையான கட்டுரை. பாராட்டுக்கள்! நல்ல தொகுப்பும் விளக்கமும் தந்து இருக்கீங்க.

Madhavan Srinivasagopalan said...

அருமையான தகவல்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Anonymous said...

ரைட்டு.. தொடர்ந்து எழுது சௌந்தர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல தேவையான தகவல்கள்....!

இம்சைஅரசன் பாபு.. said...

சரி கூடவே டிஸ்கி ஒன்னு போட்டிருக்கலாம் சில பதிவுகளை படிக்காமல் இருந்தால் ........தலைவலி வராமல் தடுக்கலாம்ன்னு போட்டிருக்கலாம்..........(யாராவது இம்சை அரசன் பாபு ப்ளாக் ன்னு போட்டா.எனக்கு கெட்ட கோவம் வரும் )........

இம்சைஅரசன் பாபு.. said...

சரி கூடவே டிஸ்கி ஒன்னு போட்டிருக்கலாம் சில பதிவுகளை படிக்காமல் இருந்தால் ........தலைவலி வராமல் தடுக்கலாம்ன்னு போட்டிருக்கலாம்..........(யாராவது இம்சை அரசன் பாபு ப்ளாக் ன்னு போட்டா.எனக்கு கெட்ட கோவம் வரும் )........

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 10
சரி கூடவே டிஸ்கி ஒன்னு போட்டிருக்கலாம் சில பதிவுகளை படிக்காமல் இருந்தால் ........தலைவலி வராமல் தடுக்கலாம்ன்னு போட்டிருக்கலாம்..........(யாராவது இம்சை அரசன் பாபு ப்ளாக் ன்னு போட்டா.எனக்கு கெட்ட கோவம் வரும் ).......////

அப்பறம் என் பதிவை யார் படிப்பாங்க ஆமா அதை ஏன் ரெண்டு தடவை சொல்றீங்க..

கருடன் said...

நல்ல தேவையான தகவல்கள்....

VELU.G said...

நல்ல பயனுள்ள தகவல்கள் நண்பரே

துமிழ் said...

When to meet the doctor?

When the pain is very severe and attacks repeatedly, better consult a doctor. If it is diagnosed as Migraine, no need to meet him anymore.Also if you feel like below mentioned points:

If the headache persists for more than 72 hours or prevents you from doing normal activities.

If the headache feels like a sudden explosion in the head.

If you get headache when~ver you exel'yourself.

If you get recurrent or daily headaches on waking each morning.

If the headache is accompanied by stiff neck, high temperature or light sensitivity.

If the headache is caused by a head injunry

If there is severe pain on bending the head

If pain killers are being taken on a regular basis for recurrent headaches.

If there is nausea, vomiting blurred vision and severe pain a1ong with headache
//

இந்தத் தகவல்களையும் சேர்த்துக் கொண்டால் நாராக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சும்மா ஒரு வேண்டுகோள்தான் நண்பரே

சௌந்தர் said...

@@@துமிழ் உங்கள் கருத்து மிகவும் பயன்வுள்ளதாக இருந்தது... நன்றி

கவி அழகன் said...

நல்ல ஆலோசனை உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

Anonymous said...

மருத்துவ ஆலோசனை ம்ம் இதுவும் நல்லாத்தான் இருக்கு

Anonymous said...

பதிவருக்கும் உபயோகமான தகவல்தான்

மங்குனி அமைச்சர் said...

நல்ல தேவையான தகவல்கள்....

Ramesh said...

அருமையான அவசியமான தகவல்கள்...

kavisiva said...

நல்ல தகவல்கள் சௌந்தர்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

உபயோகமான தகவல்கள்

S Maharajan said...

நல்ல தகவல்கள். தொடருங்கள்

கணேஷ் said...

நல்ல விசயங்கள..கொடுத்ததுக்கு நன்றி

எஸ்.கே said...

மிகவும் பயனுள்ள தகவல்! பல விஷயங்கள் மிகவும் அவசியமானதாக உள்ளன! இன்றைய கால கட்டத்தில் இந்த முதுவலி, தோள் வலி போன்றவை பரவலாக காணப்படுகிறது! இந்த ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்!

ஹேமா said...

நல்ல விஷயங்கள் சௌந்தர் !

NaSo said...

அனைவருக்கும் நல்ல தகவல்கள் தந்த டாகுடரு விஜய் சாரி சௌந்தர் (டாகுடருன்னு சொன்னாலே அவரோட பேரு தான் ஞாபகம் வருது) வாழ்க!!

Anonymous said...

//கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்//

ஏற்கனவே அறிந்தவை தானெனினும் மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி

Unknown said...

நல்ல தேவையான தகவல்கள்....

Gayathri said...

Rombhave ubhayogamaana thagaval, enkum irukku.naraya therinjunden. nandri

ஜெயந்த் கிருஷ்ணா said...

வணக்கம் டாக்டர் சார்.. நல்ல தகவல்கள்..

Menaga Sathia said...

மிகவும் பயனுள்ள பதிவு சுந்தர்!!

nis said...

நல்ல பயனுள்ள மருத்துவ தகவல்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்யா.. காருக்கு டிரைவர் வைத்திருப்பவர்கள்,
இந்த உடற்பயிற்சியை ஆள் வைத்து செய்யலாமா?..

டோமருக்காக...சிங்கையிலிருந்து பட்டாபட்டி..
ஹி..ஹி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல தகவல்கள்... thanks for sharing

ஜெயந்தி said...

உடம்பையும் கவனிச்சுக்கனும். தேவையான பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 12

நல்ல தேவையான தகவல்கள்....//

உனக்கு தேவைன்னு எங்க எல்லோருக்கும் தெரியும்..

Prasanna said...

// கிழே குனியமுடியாது//

நம்ம ஊரு போலீஸ் நெறைய பேருக்கு இந்த வியாதி இருக்கு..

ப்ரியமுடன் வசந்த் said...

உபயோகமான பகிர்வு சௌந்தர்

//பட்டாபட்டி.. சொன்னது… 34
அய்யா.. காருக்கு டிரைவர் வைத்திருப்பவர்கள்,
இந்த உடற்பயிற்சியை ஆள் வைத்து செய்யலாமா?.. //

முடியல ராசா :)))))

சுசி said...

முதுகுவலி.. ஆவ்வ்வ்..

நல்ல ஆலோசனைகள்.

Philosophy Prabhakaran said...

சின்ன சின்ன விஷயங்கள்... ஆனாலும் உபயோகமாக இருந்தன... கணினி, கீ-போர்டு, மவுஸ் இதை எல்லாம் பயன்படுத்தும் முறை பற்றி ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்... அதை தமிழில் எழுதலாமே...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. உண்மையில் அருமையான பதிவு.. சௌந்தர்..

முதுகுவலி.. பற்றிய தகவலும், குறைக்க exercise -ம் நல்லா இருக்கு...

பயனுள்ள பகிர்வு.. வாழ்த்துக்கள்..! :-)))

(Sorry for the late comment.. koncham velai adhikam..) :-))

ஆனந்தி.. said...

சௌந்தர்...ம்ம்...நிச்சயம் அருமையான பதிவு...நீயும் உடம்பை பார்த்துக்கோ....

செல்வா said...

//கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள், ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும்//

ஓஹோ ., பண்ணிடலாம் .. !! தரையில உறங்கனுமா ..?

செல்வா said...

ஆலோசனை நேரம் உண்மைலேயே நல்லா இருக்கு ., இதே மாதிரி வார வரரம் எழுத்து ., என்ன ..?

ஹரிஸ் Harish said...

பயனுள்ள தகவல்..

Unknown said...

பயனுள்ள தகவல்கள்.. நன்றிங்க..

சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் சார் வணக்கம்

சி.பி.செந்தில்குமார் said...

உங்க அடுத்த போஸ்ட்டோட முத லைன் வாலிப வயோதிக அன்பர்களே... சரியா?

சி.பி.செந்தில்குமார் said...

ஆனா நல்லாருக்கு

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 49
உங்க அடுத்த போஸ்ட்டோட முத லைன் வாலிப வயோதிக அன்பர்களே... சரியா?/////

@@@சி.பி.செந்தில்குமார்

நான் என்ன லேகியமா விற்பனை செய்றேன்

Thenammai Lakshmanan said...

ரொம்ப தேவையான பகிர்வு சௌந்தர்..நன்றி

ஜெய்லானி said...

//நான் என்ன லேகியமா விற்பனை செய்றேன் //

என்னைக்காவது இந்த பிஸினஸ் ஆரம்பிச்சா சொல்லுங்க முதல் டீலர் ஷிப் எனக்குதான் தரனும் இப்பவே சொல்லிட்டேன் ..அட்வான்ஸ் புக்கிங் :-))

ஜெய்லானி said...

வரும்முன் காக்கும் பதிவு சூப்பர் ..!! :-))

ஜெய்லானி said...

வரும்முன் காக்கும் பதிவு சூப்பர் ..!! :-))

ஜெய்லானி said...

வரும்முன் காக்கும் பதிவு சூப்பர் ..!! :-))

Harini Resh said...

நல்ல தேவையான தகவல்கள்....!

 
;