செல் போன்கள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆறாம் விரலாக செயல் பட்டு கொண்டு இருக்கிறது. முதலில் ஒரே ஒரு செல் போன் வைத்து இருந்தோம், அடுத்ததாக ஒருவர் ரெண்டு செல் போன்கள் பயன்படுத்த தொடங்கினார்கள். இப்போது ஒரே செல் போன்களில் ரெண்டு சிம் கார்ட்கள் பயன்படுத்துகிறோம். அப்படிஇருந்தும் ரெண்டு செல் போன்கள் தான் பயன் படுத்துகிறோம். ஆனால் செல் போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரிவதே இல்லை...
செல் போன்களில் பேசுவதற்கு தேவையான சிக்னல்களை இந்த கோபுரங்கள் தான் அளிக்கிறது இதற்காக, அந்த கோபுரங்களில் இருந்து மின் காந்தஅலைகள் மற்றும் கதிரியக்கம் வெளிபடுகிறது. செல் போன்கள் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையிலும் இந்த கதிரியக்கத்தின் தாக்கம் இருக்கும்.
இதன் காரணமாகவே, அதிகாலையில் மனதை மயக்கும் வண்ணம் கீதம் இசைக்கும் சிட்டுக்குருவிகள் கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை. அதுமட்டுமல்ல மைனா போன்ற பறவைகளும் அறிய வகை இனங்களாக மாறி கொண்டு இருக்கிறது.மின் கம்பங்கள் மற்றும் தொலைபேசி கம்பங்களில் கூடு கட்டிஉயிர் வாழும் இந்த அப்பாவி உயிரினங்கள் அனைத்தும் செல் போன் கோபுரங்களை கண்டால் மட்டும் காத தூரம் ஓடுகின்றன.
நகர்புறம் மட்டும் அல்லாமல், கிராமப்புறங்களிலும் எங்கு பார்த்தாலும் செல் போன் கோபுரங்கள் பெருகி இருப்பதால் இந்த பறவை இனங்கள் காணாமலே போய் விட்டன. பாடப்புத்தங்களில் பார்க்க வேண்டிய அறிய இனமாக மாறிக்கொண்டு வருகின்றன. இது குறித்து பல எச்சரிக்கை தகவல்கள் வெளியான போதிலும் யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லை.
முந்தைய எச்சரிக்கையை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவாக, பறவைகளிடம் இருந்து மனிதர்களை நோக்கி ஒரு அபாயம் திரும்பிக் கொண்டு இருக்கிறது. ஆம் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சினால் மனிதர்களின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சர்வேதேச அளவில் ஆய்வுகள் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றன. இந்தியாவில் அமைக்கப்படும் செல் போன் கோபுரங்கள் அனைத்துமே, அணு அல்லாத கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கமிஷன் அளித்துள்ள பரிந்துரைப்படியே அமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த கமிஷனானது கதிரியக்க அளவு மற்றும் வெப்ப கதிரியக்கம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு விதி முறைகளை வகுக்கிறது.
மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த கமிஷன் கருத்தில் கொள்வதுதில்லை.அதே நேரத்தில் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வளையத்துக்குள்ளேயே தொடர்ந்து வசித்து வருபவர்களுக்கு புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள எதிர்ப்புசக்தி குறைவதால் மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு அபாயங்கள் ஏற்படும் என மும்பை ஐ.ஐ.டியை சேர்ந்த தொழில் நுட்பவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக, சர்வேதேச அளவிலான, ஆதாரங்களை அள்ளி வீசும் அவர்கள், செல்போன் கோபுர கதிர் வீச்சால் மனநல குறைபாடு ஏற்படும் என்ற அதிர்ச்சி வெடியையும் கொளுத்திப் போடுகின்றனர். அதற்கு ஆதாரமாக, மேற்கு டெல்லியில் ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பாப்லர் சாய்கர் என்ற 21 வயது மாணவனை சுட்டிக் காட்டுகின்றனர்.
மிகவும் புத்திசாலியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்த தனது மகன் மேற்கு டெல்லியில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டில் வாடைக்கு குடி புகுந்த பிறகு தான் மாறுபாடு அடைந்தான். மூன்று மாடி கொண்ட அந்த வீட்டின் மேல் தளத்தில் அவன் குடியிருந்தான். வீட்டுக்குள் செல்லும் போதெல்லாம், அளவுக்கு அதிகமான மன நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறான் என்கிறார் அந்த மாணவனின் தந்தை அவர் ஒரு என்ஜினியரும் கூட, சரி அந்த வீட்டில் அப்படி என்னதான் இருந்தது வேறோருமில்லை, மூன்று மாடிகள் கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஒரு செல் போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது...!
செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பிரச்னையின் தீவிரத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. மிக அடர்த்தியான அறியாமை இருளிலேயே நாம் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் கடந்த 9 ஆண்டுகாளாகவே இது தொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகள் சர்வதேச அளவில் வெளியாகி உள்ளன.ஆனால் அவை அனைத்தும் கடினமான ஜமுக்காளத்தை போட்டு மூடப்பட்டு விட்டன.
செல் போன் கோபுரங்கள் நிறுவுவதில் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது இந்தியாவில் மட்டுமே, செல் போன் கோபுரங்கள் அவுட்சோர்சிங் முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இதன் காரணமாக, ஒரே செல் போன் கோபுரத்தை 2 அல்லது 3 செல்போன்கள் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே கதிரியக்க வீச்சீன் வெளிப்பாடு அதிகரிக்கிறது உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது
தீர்வு
குறைந்த அளவு கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை, குறைந்த பட்சம் 30 மீ . சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம்
மக்கள் வசிக்கும் வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகள்,பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவற்றில் செல் போன் கோபுரங்களை வைப்பதை தவிர்க்கலாம்
ஒரு நிமிஷம் எனக்கு போன் வருது நான் பேசிட்டு வரேன்...
Tweet | |||||
53 comments:
ஹ்ம்ம் என்னதான் கரடியை கத்தினாலும் இதை யாரும் கண்டுக்கொள்வது இல்லை. நமது நரம்புகள் இதனால் பாதிக்கப் படலாம். நல்ல விழிப்புணர்வு பகிர்வு. நன்றி சௌந்தர்
engae vadai...
அடடா.....
வடை வடை ..!!
உனக்கு முன்னாடியே நான் வந்துட்டேன்...
உங்களுக்கு முன்னாடி நான்
குறைந்த அளவு கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை, குறைந்த பட்சம் 30 மீ . சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம் //
இத எல்லாம் கேப்பாங்க?
@@@அருண் செல்வா எங்க வீட்டுக்கு வாங்க வடை தரேன்...
உங்களுக்கு முன்னாடி நான்//
அதான் வடை போச்சே....
அருண் செல்வா எங்க வீட்டுக்கு வாங்க வடை தரேன்...//
வரேன் வரேன்...
இந்த மாதிரி முக்கியமான தகவல்களை எல்லாம் வெளியிடவிடாமல் செய்வதில் நம்ம ஆட்கள் முக்கிய இடம் வகிப்பார்களே!
உண்மைதான் சௌந்தர்! முன்பெல்லாம் எங்கள் வீட்டு முற்றத்தில் சிட்டுகுருவி வந்து முகம் பார்க்கும் கண்ணாடிய கொத்திக்கிட்டே இருக்கும், அவ்வளவு அழகா இருக்கும், இப்பொழுது வீட்டுக்கு செல்லும் பொழுது அதை பார்க்க முடிவதில்லை, மாறாக காட்டில் உள்ள குரங்குகள்தான் வந்து அட்டகாசம் செய்கின்றன
nice post
நல்ல பதிவு சௌந்தர்..
இதெல்லாம் அரசாங்கக் காதுல விளைவே விழாதே :(
//மக்கள் வசிக்கும் வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகள்,பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவற்றில் செல் போன் கோபுரங்களை வைப்பதை தவிர்க்கலாம் //
மக்கள் வசிக்கும் இடங்கள், அடுக்குமாடியில் தான் இப்போது கோபுரங்கள் நிறுவப்படுகின்றன. இதை யாராவது தடை செய்தால் பரவாயில்லை!
இதனால் நிறைய பாதிப்புகள் இருக்குன்னு சொல்லுறாங்க ........
//செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பிரச்னையின் தீவிரத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை//
கண் முன்னால் நடக்கும் விபரீதத்தையே பார்த்து பழக்க பட்டு போன நமக்கு இந்த கண்ணுக்கு தெரியாத கதிரியக்க பாதிப்பு தானா பெரிதாக தெரிய போகிறது...?! மக்கள் மேல் கவலை பட அரசாங்கம் இருக்கிறது என்று நம்பி வாழ்ந்திட்டு இருக்கிறோம்...
நல்ல பகிர்வு சௌந்தர்...பலரையும் யோசிக்க வைக்கும் பதிவு.
இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 16
இதனால் நிறைய பாதிப்புகள் இருக்குன்னு சொல்லுறாங்க ......////
நீங்க 4 செல் போன் வைத்து இருக்கேன் சொன்னிங்க அதை எல்லாம் தூக்கி போடுங்க ஒரே ஒரு செல் போன் யூஸ் பண்ணுங்க
//! மக்கள் மேல் கவலை பட அரசாங்கம் இருக்கிறது என்று நம்பி வாழ்ந்திட்டு இருக்கிறோம்...
//
அரசாங்கம் கண்டுக் கொள்வதாய் தெரியவில்லை. நேற்று பேப்பரில் கூட இது பற்றிய செய்தியில் அரசாங்கம் இந்தமாதிரி பக்கவிளைவுகள் உண்டு என்பதை மறுத்து இருப்பதை போட்டு இருந்தது
நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பா.. ஆனா என்ன தான் சொன்னாலும் பயன் படுத்தாமலா இருப்பார்கள்...
உணமைதான்...நீங்கள் சொல்லும் அந்த குறைந்த அளவு radiation கூட தீங்கு விளைவிக்க கூடியவை..
காரணம் அதில் இருந்து வரும் அலைகள் radio frequency சொல்லப்படும் ஒரு EMR(electromagnetic radiation) வகையை சார்ந்தது..இது எப்படியும் நம்மளை பாதிக்கும்..பொதுவாக செல்களில்(DNA) பாதிப்பு, மூளையில் பாதிப்பு..மூளையில் சில நேரங்களில் செல்கள் இறப்பதால் அது Alzheimer நோயிலும் கொண்டு போய் விடும் என்கிறார்கள்...
எப்படி பார்த்தாலும் கெடுதல்கள்தான்...
நல்ல பதிவு. சிந்தனையைத் தூண்டும் பதிவு.
@ Terror
யோவ், கஷ்டப்பட்டு பதிவு போட்டா, நீ பாட்டுக்கு ஸ்மைலி போட்டுட்டுப் போற?
//மக்கள் வசிக்கும் வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகள்,பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவற்றில் செல் போன் கோபுரங்களை வைப்பதை தவிர்க்கலாம் //
மக்கள் வசிக்கும் இடங்கள், அடுக்குமாடியில் தான் இப்போது கோபுரங்கள் நிறுவப்படுகின்றன. இதை யாராவது தடை செய்தால் பரவாயில்லை///
மக்கா மக்கள் அந்த கோபுரங்கள் மூலம் வாடகை வருது அப்டின்னுதான் பாக்குறாங்க. அதனால இத பத்தி எல்லாம் கண்டுக்கமாட்டாங்க
சௌந்தர் சொன்னது… 26
பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… 24
@ Terror
யோவ், கஷ்டப்பட்டு பதிவு போட்டா, நீ பாட்டுக்கு ஸ்மைலி போட்டுட்டுப் போற?///
நான் கேக்கலாம் நீங்க கேட்டுவிட்டீர்கள் நன்றி
அடபாவமே டெரர் இந்த மாதிரியா பண்ணுவீங்க சீரியசா இருக்குற பதிவில போய்...............
:)))))
சரி.......
1)இந்த பிரச்சினை இந்தியாவுல மட்டுமா இல்லை எல்லா நாடுகளிமா?
2) இப்போ நம்ம ஊர்ல டவர் இருக்கும் போதே சிக்னல் கிடைக்கிறது இல்லையே சிறிய ஆண்டனாக்கள் எப்படி உதவப்போகுது?
3) அரசு கவலைப்பட வேண்டாம்.. சரி மக்களாகிய நாம என்ன செய்யணும் அல்லது என்ன செய்யலாம்னு...
யாராச்சும் சொல்லுங்க.. (என்ன சொல்லச் சொல்றீங்களா....கண்டிப்பா இது பத்தி படிச்சு தெரிஞ்சு கிட்டு சொல்றேன்...தெரியாம தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது இல்லையா)
பதிவு 100% கரெக்டானது.. சரி.. அதையே வெள்ளையடிச்ச சுவத்துல திரும்ப திரும்ப வெள்ளை அடிச்சமாதிரி எதுக்கு கருத்துக்கள்ன்றது என்னோட கேள்விங்க...?
அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!
கண்டிப்பாக உடல்நலம் பாதிக்கப்படும்.. நல்ல பகிர்வு..
நீங்கள் கூறியது மிகவும் சரி. ஆனால் இவர்கள் அரசுடன் இணைந்து மூடி மறைக்கபார்க்கிறார்கள்
// ஒரு நிமிஷம் எனக்கு போன் வருது நான் பேசிட்டு வரேன்...//
லேண்ட் லயன் கால் தான.. ஒக்கே..
நான் லேண்ட் லயனுக்கு மாறிட்டேன்.. காண்க அலை -- தொல்லை இல்லை..
கூடவே.. ஏஸ்.டி.டி. கூட லோக்கல் ரெட்டுலே.. (பி.எஸ்.என். எல்)
dheva சொன்னது… 28
சரி.......
1)இந்த பிரச்சினை இந்தியாவுல மட்டுமா இல்லை எல்லா நாடுகளிமா?
2) இப்போ நம்ம ஊர்ல டவர் இருக்கும் போதே சிக்னல் கிடைக்கிறது இல்லையே சிறிய ஆண்டனாக்கள் எப்படி உதவப்போகுது?
3) அரசு கவலைப்பட வேண்டாம்.. சரி மக்களாகிய நாம என்ன செய்யணும் அல்லது என்ன செய்யலாம்னு...///
1)எல்லா நாடுகளிலும் உண்டு...
2)சின்ன ஆண்டென வைத்தாலும் குறைந்த அளவு கதிரியக்கம் இருக்கத்தான் செய்யும்,ஒரு வகையில் கட்டுபடுத்தலாம் ஆனால் அது இந்தியாவில் நடக்குமா என்பது எனக்கு சந்தேகம்..அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் அலைபேசி இணைப்புகள் வழங்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவர வேண்டும்..இப்படி செய்தால் ஓரளவு அதிக கம்பங்கள் வைத்து மிக குறைவான கதிரியக்கத்தில் இணைப்புகள் இயங்க செய்யலாம்...
இப்போது நடப்பது குறைவான இடத்தில் மிகஅதிக இனைப்புகள்.. குறைவான கம்பங்கள் வைத்து அதிக கதிரியக்கத்தில் வேலை செய்கிறார்கள் நம்மவர்கள்..இதுதான் கேடு..
3)நாம் என்ன செய்ய வேண்டும்...நமது dna க்களை பலிகொடுக்க வேண்டும்,சில உடல் நலகோளாருகளை சந்திக்க வேண்டும்..நமது அரசு மேலே சொன்ன சட்டத்தை முழுவதும் செயல்படுத்தாதவரை...
நன்றி அண்ணா..
நல்ல பகிர்வு சௌந்தர். செல் போன் களை வைத்து விலங்குகளில் நடத்தப் பட்ட குறுகிய கால பரிசோதனைகளில் எந்தவித ஆபத்தும் இருப்பதாக தெரியவரவில்லை. ஆனால் கேன்சர் வராது என்று நிச்சயமாகக் கூறமுடியவில்லை. ஏனென்றால் கேன்சர் உண்டாவதற்குத் தேவையான மாற்றங்கள் உடலில் நிகழ குறைந்தது 10-15 ஆண்டுகள் இதுபோன்ற தூண்டுதல்கள் இருக்க வேண்டும். இது குறித்த பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில் ஆண்டுகளில் முடிவுகள் வெளியாகும்!
//ஆறாம் விரலாக செயல் பட்டு கொண்டு இருக்கிறது.//
அப்படியெல்லாம் இல்லையே ..? பொய் சொல்றியா ..?
கருத்தில் கொள்ளத்தக்க பதிவு .! உண்மைலேயே இப்ப காக்காய் எல்லாம் அதிகமா இருக்காததர்க்கும் இதுவே காரணம் . அதே மாதிரி குருவிகள் ..! கொஞ்ச நாளில் நமக்கும் அதே கதிதான் ..!!
//LK சொன்னது… 1 ஹ்ம்ம் என்னதான் கரடியை கத்தினாலும் இதை யாரும் கண்டுக்கொள்வது இல்லை.//
இந்த பதிவுக்கும் நம்ம TR க்கும் என்ன சம்மந்தம்
சமுதாய அக்கறை கொண்ட நல்ல பதிவு! வாழ்த்துக்கள்! :-)
மிக அருமையான பதிவு!
அருமையான பதிவு நண்பரே.. நானும் கடந்த ஒரு வருசமா இந்த செல்போன் கோபுரத்துக்கு அடியிலயே இருக்கற ரூம்லதான் குடியிருந்தேன்... உண்மைதான்.. அங்க போனதுல இருந்தே கொஞ்ச கொஞ்சமா நிம்மதியே போயிடுச்சு.. சரியா தூக்கம் வராம.. சாப்பிட முடியாம அவஸ்தப் பட்டேன்.. அடிக்கடி தலைவலிக்க ஆரம்பிச்சது.. ஆனா என்னோட சொந்த ஊருக்கு போயி நாலு நால் இருந்தா எல்லாம் சரியாயிடுது.. சரி இந்த டவர்தான் பிராபலமா இருக்கும்னு நினைச்சி.. அந்த வீட்டையே மாத்திட்டு வந்திட்டோம்.. தவிர்க்க முடியாத அவஸ்தைகளில் இதுவும் ஒன்னு.. என்ன பன்றது..
ஹ்ம்ம் என்னதான் கரடியை கத்தினாலும் இதை யாரும் கண்டுக்கொள்வது இல்லை. நமது நரம்புகள் இதனால் பாதிக்கப் படலாம்.//
உண்மை
நல்ல விழிப்புணர்வு பகிர்வு.நன்றி
அருமையான விழிப்புணர்வு கட்டுரை
நானும் கடந்த ஒரு வருசமா இந்த செல்போன் கோபுரத்துக்கு அடியிலயே இருக்கற ரூம்லதான் குடியிருந்தேன்... உண்மைதான்.. அங்க போனதுல இருந்தே கொஞ்ச கொஞ்சமா நிம்மதியே போயிடுச்சு.. சரியா தூக்கம் வராம.. சாப்பிட முடியாம அவஸ்தப் பட்டேன்.. அடிக்கடி தலைவலிக்க ஆரம்பிச்சது.//
இந்தளவு பாதிப்பா என்ன கொடுமை
nalla pakirvu nabaa anal vellam thalaikku mel poivittathu ini onnum panna mudiyathu..................
விழிப்புணர்ச்சியுடன் சிந்திக்கக்கூடிய தகவல்களை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை....
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
பகிர்வுக்கு நன்றி
நல்ல பகிர்வு நண்பா!
மக்கள் வசிக்கும் வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகள்,பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவற்றில் செல் போன் கோபுரங்களை வைப்பதை தவிர்க்கலாம்
.......மாதா மாதம், வாடகை பணம் வருகிறது என்று தெரிந்தே, டவர் வைக்க அனுமதி வழங்குபவர்களும் சிந்திக்க வேண்டும். அவசியமான பதிவுங்க.
நல்ல பதிவு பாஸ்....
48
50
லேட்டா வந்தாலும் வந்ததுக்கு ஒரு வடையாவது கிடச்சிதே...வர்றேன் தல...
சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் யோசிக்கவேணும் !
நல்ல கருத்துள்ள உபயோகமான பகிர்வு சௌந்தர்..
செல்போன் டவர்கள், வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லா இருக்கும் தான்..
(ஆமா.. அதெல்லாம் சரி... இம்புட்டு பேசினீங்களே... செல் போன் வந்ததுன்னு போனீங்களே.... கால் ஓவர்-ஆ?? ) :-))
good information...THANKS FOR SHARING.
ஒரு நிமிஷம் எனக்கு போன் வருது நான் பேசிட்டு வரேன்...
-
இதுக்க்காகத்தான் இவ்வளவு கொள்ளையும்.
Post a Comment