Tuesday, December 7

என் காதலே...!

                                                                


 கோடி மழைத்துளியில் 
 ஒரு துளி நீ...!

நீ கொடுத்த பூ மட்டும் 
வாடாமல் 
உன் சிரிப்பைப்போல் !!  

மலரின் இதழ் விரிந்தால்..
மணம் பரப்பும்.....
உன் இதழ் விரிந்தாலோ
என் இதயம் பறக்கும்...!!

உன்னுடன் யுத்தம் செய்ய 
பிடிக்காது எனக்கு !
உன்னை வேறு யாரும் 
ஆக்கிரமிப்பு செய்தால்  
யுத்தம் செய்யவும் 
தயங்க மாட்டேன் !!








98 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

vadai .. got it

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா.. பின்றீங்க...

என்ன என்ன ஆச்சு???
நல்லாத் தானே இருந்தீங்க....சௌந்தர்...!

(சும்மா.... சொன்னேன்.. கவிதை... நல்லா இருக்கு... )
வாழ்த்துக்கள்...!! :-))

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனி மேல் நான் கவிதை எழுதுறத நிப்பாட்டலமுன்னு இருக்கேன்.. நீ என்ன சொல்ற நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பா உண்மைய செல்ல.. என்ன நடந்துது.. சமீப காலமா நீ சரியில்லையே..

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது… 3
இனி மேல் நான் கவிதை எழுதுறத நிப்பாட்டலமுன்னு இருக்கேன்.. நீ என்ன சொல்ற நண்பா..////

நல்ல முடிவுனு நினைக்கிறேன்

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது… 4
நண்பா உண்மைய செல்ல.. என்ன நடந்துது.. சமீப காலமா நீ சரியில்லையே..////

ஆமா ஆமா கால நிலை மாற்றம் ஏற்பட்டு இருக்கு அதான்...!

Madhavan Srinivasagopalan said...

// யுத்தம் செய்யவும்
தயங்க மாட்டேன் !! //

யாரோட ?

dheva said...

//அடடா.. பின்றீங்க...

என்ன என்ன ஆச்சு???
நல்லாத் தானே இருந்தீங்க....சௌந்தர்...! //

என்ன பின்ற நீ... சொல்லவே இல்ல.. தலை முடிவித்து தலை பின்றியா? இல்ல கயிறு பின்றியா இல்ல.. வேற எதாச்சும்...

அப்போ கவிதை எழுதுற ஆளுக எல்லாம் நல்லா இல்லதவுகளா? சும்மா டவுட்டு:-))))

சௌந்தர் said...

Ananthi சொன்னது… 2
அடடா.. பின்றீங்க...

என்ன என்ன ஆச்சு???
நல்லாத் தானே இருந்தீங்க....சௌந்தர்...!

(சும்மா.... சொன்னேன்.. கவிதை... நல்லா இருக்கு... )
வாழ்த்துக்கள்...!! :-))///

அப்போ கவிதை எழுதுபவர்கள் எல்லாம் ஏதோ ஆகி தான் எழுதுறாங்க சொல்றிங்களா

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் கூறியது...

வெறும்பய சொன்னது… 4
நண்பா உண்மைய செல்ல.. என்ன நடந்துது.. சமீப காலமா நீ சரியில்லையே..////

ஆமா ஆமா கால நிலை மாற்றம் ஏற்பட்டு இருக்கு அதான்...!

//

ஊர்ல பெய்யிற மழைய பற்றி கேக்கல நண்பா.. உனக்குள்ள அடிக்கிற சாரலை பற்றி கேட்க்கிறேன்...

சௌந்தர் said...

என்ன பின்ற நீ... சொல்லவே இல்ல.. தலை முடிவித்து தலை பின்றியா? இல்ல கயிறு பின்றியா இல்ல.. வேற எதாச்சும்...////

அதான் தெரியலை என்ன பின்றேன்

சௌந்தர் said...

Madhavan Srinivasagopalan சொன்னது… 7
// யுத்தம் செய்யவும்
தயங்க மாட்டேன் !! //

யாரோட ?/////

யார் ஆக்கிரமிப்பு செய்ய வாரங்களோ அவர்களோடு

எல் கே said...

நடக்கட்டும் நடக்கட்டும்

Chitra said...

மலரின் இதழ் விரிந்தால்..
மணம் பரப்பும்.....
உன் இதழ் விரிந்தாலோ
என் இதயம் பறக்கும்...!!


....very nice. அருமையாக எழுதி இருக்கீங்க.

கருடன் said...

//கோடி மழைத்துளியில்
ஒரு துளி நீ...!//

அப்பொ அது மாதிரி கோடி கணக்கான பெண்கள் இருக்காங்க சொல்றிங்க.. ரைட்டு..

கருடன் said...

//நீ கொடுத்த பூ மட்டும்
வாடாமல்
உன் சிரிப்பைப்போல் !!//

போலியா?? அவங்க லவ் மாதிரி.. :)

கருடன் said...

//உன்னுடன் யுத்தம் செய்ய
பிடிக்காது எனக்கு !
உன்னை வேறு யாரும்
ஆக்கிரமிப்பு செய்தால்
யுத்தம் செய்யவும்
தயங்க மாட்டேன் !!//

எப்படியும் கடைசில அடி உங்களுக்கு தான?

Asiya Omar said...

அருமையான கவிதை.

ஜீவன்பென்னி said...

பாத்து இருந்துகோ அப்பு, சாய்ச்சுபுட்டுத்தான் மறு வேலை பாக்கும்.

வைகை said...

ஊர்ல மழை பெய்யவும் ஆளு பூரா ஒரே ப்பீலிங்கா திரியுதப்பா!!!

Balajisaravana said...

ரைட்டு! கவிதைகள்ளையும் கலக்கு மச்சி :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏதோ நடக்கிறது.....
இதமாய் இருக்கிறது.....

Sriakila said...

கல்யாணம் ஆகாத வரைக்கும் கவிதை இப்படித்தான் அருவியாக் கொட்டுது.
அதுக்கப்புறம் அந்தத் தண்ணி மாதிரி கரைஞ்சுப் போயிருது. கரைஞ்சுப் போறது மனசா? கவிதையா? ன்னு நீதான் முடிவு பண்ணணும்.

(அப்பாடா! ஒருவழியா கல்யாணம் ஆகாதப் புள்ளையக் கொழப்பி விட்டாச்சு. ஆண்டவா.. ஏதோ என்னால முடிஞ்சது)

Kousalya Raj said...

கவிதை துளிகள் ஒவ்வொன்றும் அருமை...இனி கவிதைகள்(மட்டும்) தொடர என் வாழ்த்துக்கள்...

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 15
//கோடி மழைத்துளியில்
ஒரு துளி நீ...!//

அப்பொ அது மாதிரி கோடி கணக்கான பெண்கள் இருக்காங்க சொல்றிங்க.. ரைட்டு..////

புரிஞ்சா சரி ஆனா ஒரு துளி மட்டும் ஸ்பெஷல்....

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 16
//நீ கொடுத்த பூ மட்டும்
வாடாமல்
உன் சிரிப்பைப்போல் !!//

போலியா?? அவங்க லவ் மாதிரி.. :)////

லவ்வே இல்லை அப்பறம் என்ன போலி

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 17
//உன்னுடன் யுத்தம் செய்ய
பிடிக்காது எனக்கு !
உன்னை வேறு யாரும்
ஆக்கிரமிப்பு செய்தால்
யுத்தம் செய்யவும்
தயங்க மாட்டேன் !!//

எப்படியும் கடைசில அடி உங்களுக்கு தான?////

ஆமா எனக்கு தான் இப்போ ரொம்ப சந்தோசமா.....!

சௌந்தர் said...

asiya omar சொன்னது… 18
அருமையான கவிதை///

நன்றி...

மாணவன் said...

//உன்னுடன் யுத்தம் செய்ய
பிடிக்காது எனக்கு !
உன்னை வேறு யாரும்
ஆக்கிரமிப்பு செய்தால்
யுத்தம் செய்யவும்
தயங்க மாட்டேன் !!//

அருமை வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை....

தொடருங்கள்.......

சௌந்தர் said...

ஜீவன்பென்னி சொன்னது… 20
பாத்து இருந்துகோ அப்பு, சாய்ச்சுபுட்டுத்தான் மறு வேலை பாக்கும்///

அனுபவசாலி நீங்க எச்சரிக்கைக்கு நன்றி .....

சௌந்தர் said...

வைகை சொன்னது… 21
ஊர்ல மழை பெய்யவும் ஆளு பூரா ஒரே ப்பீலிங்கா திரியுதப்பா!!!///

பீலிங் எல்லாம் இல்லை குளிர் தான் அடிக்குது

சௌந்தர் said...

Balajisaravana சொன்னது… 22
ரைட்டு! கவிதைகள்ளையும் கலக்கு மச்சி :)/////

தேங்க்ஸ் மச்சி ஆனா உனக்கு போட்டியா வர மாட்டேன்

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 23
ஏதோ நடக்கிறது.....
இதமாய் இருக்கிறது....////

நல்லா இருக்கு நீங்க சொல்றதும் நன்றிங்கோ....!

செல்வா said...

//நீ கொடுத்த பூ மட்டும்
வாடாமல்
உன் சிரிப்பைப்போல் !!///

பிளாஸ்டிக் பூவா மச்சி ..?

செல்வா said...

//உன்னுடன் யுத்தம் செய்ய
பிடிக்காது எனக்கு !
உன்னை வேறு யாரும்
ஆக்கிரமிப்பு செய்தால்
யுத்தம் செய்யவும்
தயங்க மாட்டேன் !!
//

ஓ ,அப்படிங்களா அண்ணா ..?

Anonymous said...

ஆஹா இது வேர்றயா பின்னுறீங்க போங்க

Anonymous said...

கடைசி பேரா சூப்பரா இருக்கு

சௌந்தர் said...

Kousalya சொன்னது… 25
கவிதை துளிகள் ஒவ்வொன்றும் அருமை...இனி கவிதைகள்(மட்டும்) தொடர என் வாழ்த்துக்கள்..////

ரொம்ப தான் ஆசை... சில பதிவுகள் மட்டும் வரும் வாழ்த்துக்கு நன்றி

சௌந்தர் said...

சௌந்தர் கூறியது...
Sriakila சொன்னது… 24
கல்யாணம் ஆகாத வரைக்கும் கவிதை இப்படித்தான் அருவியாக் கொட்டுது.
அதுக்கப்புறம் அந்தத் தண்ணி மாதிரி கரைஞ்சுப் போயிருது. கரைஞ்சுப் போறது மனசா? கவிதையா? ன்னு நீதான் முடிவு பண்ணணும்./////

ரொம்ப அனுபவம் பேசுதோ...அவர் கிட்ட இப்போதும் கவிதை தர சொல்றேன்

(அப்பாடா! ஒருவழியா கல்யாணம் ஆகாதப் புள்ளையக் கொழப்பி விட்டாச்சு. ஆண்டவா.. ஏதோ என்னால முடிஞ்சது)/////

இதில் ஒரு சந்தோசம் ரொம்ப நன்றி

dheva said...

யப்பா யாரு அங்க..

இது கவிதையா..? காதலா? என்ன செய்யலாம்...ஆளாளுக்கு வந்து அசத்துங்க.. ஜூப்பரு, நடத்துங்கனு கமெண்ட் வருதே...

தம்பி வளரணும்னா நேர்மையா கமெண்ட் போட்டாத்தானே வளர முடியும்...! பதிவுலகம் சும்மா உசுப்பேத்திவிட்டு பல பேர கவிஞர்னு நம்ப வச்சி இருக்கு..

சரி தம்பி நீயே சொல்லு.. கவிதை பத்தி நேர்மையா விமர்சிக்கணுமா?

இல்லை


அடிதூளு, பட்டையகிளப்பிட்ட, அழகு, ஜூப்பருன்னு போட்டு மொக்கையாவே சில பேர பல பேர் எழுத தூண்டிகிட்டு இருக்காங்களே அப்டி கமெண்ட் போடவா...

ஒரு நல்ல எண்ணத்துல கேக்குறேன் அப்புறம் உன் இஷ்டம்...!

சௌந்தர் said...

LK சொன்னது… 13
நடக்கட்டும் நடக்கட்டும்////

ரொம்ப நன்றி அப்படியே செய்றேன்

சௌந்தர் said...

Chitra சொன்னது… 14
மலரின் இதழ் விரிந்தால்..
மணம் பரப்பும்.....
உன் இதழ் விரிந்தாலோ
என் இதயம் பறக்கும்...!!


....very nice. அருமையாக எழுதி இருக்கீங்க.////

ரொம்ப நன்றி

vaarththai said...

soundar,
what is this?
any கதிரியக்கத்தின் தாக்கம்

சௌந்தர் said...

dheva சொன்னது… 41
யப்பா யாரு அங்க..

இது கவிதையா..? காதலா? என்ன செய்யலாம்...ஆளாளுக்கு வந்து அசத்துங்க.. ஜூப்பரு, நடத்துங்கனு கமெண்ட் வருதே.../////


அதான் நானும் பார்கிறேன் எப்படி பொய் சொல்றாங்க நீங்களே பாருங்க

தம்பி வளரணும்னா நேர்மையா கமெண்ட் போட்டாத்தானே வளர முடியும்...! பதிவுலகம் சும்மா உசுப்பேத்திவிட்டு பல பேர கவிஞர்னு நம்ப வச்சி இருக்கு..


சரி தம்பி நீயே சொல்லு.. கவிதை பத்தி நேர்மையா விமர்சிக்கணுமா?

இல்லை//////

அப்போ நான் எழுதியது கவிதை தான் நீங்க நம்பிடிங்களா...இதை எல்லாம் கவிதைன்னு சொல்லாதீங்க


அடிதூளு, பட்டையகிளப்பிட்ட, அழகு, ஜூப்பருன்னு போட்டு மொக்கையாவே சில பேர பல பேர் எழுத தூண்டிகிட்டு இருக்காங்களே அப்டி கமெண்ட் போடவா.../////

சரி சரி நீங்க யாரை சொல்றிங்க புரியுது

ஒரு நல்ல எண்ணத்துல கேக்குறேன் அப்புறம் உன் இஷ்டம்...!////

உங்க நல்ல எண்ணப்படி போடுங்க நல்லா இல்லை சொல்லுங்க

சௌந்தர் said...

மாணவன் சொன்னது…
அருமை வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை....

தொடருங்கள்.......////

நன்றி

Arun Prasath said...

அண்ணே கவிதை எழுதிருக்க மாறி இருக்கு? கவிதை தான? படிச்சிட்டு வரேன்

இம்சைஅரசன் பாபு.. said...

//கவிதை துளிகள் ஒவ்வொன்றும் அருமை...இனி கவிதைகள்(மட்டும்) தொடர என் வாழ்த்துக்கள்..//

கூடிய சீக்கிரம் ஏர்வாடி ல தான் சௌந்தர் அ பார்க்கணும்

Arun Prasath said...

கோடி மழைத்துளியில்
ஒரு துளி நீ...!//

அத எப்டி கண்டுபுடிப்பீங்க?

Arun Prasath said...

vadai

இம்சைஅரசன் பாபு.. said...

49

இம்சைஅரசன் பாபு.. said...

50

செல்வா said...

52

Arun Prasath said...

வென்றுவிட்டேன்..

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி சொன்னது… 35
//நீ கொடுத்த பூ மட்டும்
வாடாமல்
உன் சிரிப்பைப்போல் !!///

பிளாஸ்டிக் பூவா மச்சி ..?////

ஆமா மச்சி அதான் உனக்கு காட்டினேன் நீ தானே சொன்னே இது பிளாஸ்டிக் பூ னு

செல்வா said...

//அடிதூளு, பட்டையகிளப்பிட்ட, அழகு, ஜூப்பருன்னு போட்டு மொக்கையாவே சில பேர பல பேர் எழுத தூண்டிகிட்டு இருக்காங்களே அப்டி கமெண்ட் போடவா./

மொக்கை னு சொன்னது என்னைய வா அண்ணா ..?

Arun Prasath said...

ஹா ஹா ஹா, எனக்கே வடை

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி சொன்னது… 36
//உன்னுடன் யுத்தம் செய்ய
பிடிக்காது எனக்கு !
உன்னை வேறு யாரும்
ஆக்கிரமிப்பு செய்தால்
யுத்தம் செய்யவும்
தயங்க மாட்டேன் !!
//

ஓ ,அப்படிங்களா அண்ணா ..?////

ஆமா ஆமா இனி ஆக்கிரமிப்பு செய்ய வருவியா

இம்சைஅரசன் பாபு.. said...

நேத்து வரைக்கும் நல்ல தானே இருந்த .........இன்னைக்கு என்னாச்சு ..............கவிதா ..........கவிதா ...........நிச்சயமா .....தேராது மக்கா ........வேண்டாம் ......சொன்ன கேளு

சௌந்தர் said...

Arun Prasath சொன்னது… 50
vadai/////

உங்களுக்கு தான் வடை....!

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 48
//கவிதை துளிகள் ஒவ்வொன்றும் அருமை...இனி கவிதைகள்(மட்டும்) தொடர என் வாழ்த்துக்கள்..//

கூடிய சீக்கிரம் ஏர்வாடி ல தான் சௌந்தர் அ பார்க்கணும்////

சரி சரி உங்களை நான் அங்க வந்து பார்கிறேன்

சௌந்தர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 38
ஆஹா இது வேர்றயா பின்னுறீங்க போங்க////

ஆமா சும்மா போட்டேன்


கடைசி பேரா சூப்பரா இருக்கு/////

ரொம்ப நன்றி....

Arun Prasath said...

வடை வழங்கிய வள்ளல் வாழ்க

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 59
நேத்து வரைக்கும் நல்ல தானே இருந்த .........இன்னைக்கு என்னாச்சு ..............கவிதா ..........கவிதா ...........நிச்சயமா .....தேராது மக்கா ........வேண்டாம் ......சொன்ன கேளு////

சரி சரி நீங்களே சொல்லிட்டிங்க இனி போடுவேன்....ஆனா நேத்து ஒருத்தர் எனக்கு கவிதை எழுதி காண்பித்தார்....அவரை என்ன செய்யலாம்

இம்சைஅரசன் பாபு.. said...

//சரி சரி நீங்களே சொல்லிட்டிங்க இனி போடுவேன்....ஆனா நேத்து ஒருத்தர் எனக்கு கவிதை எழுதி காண்பித்தார்....அவரை என்ன செய்யலா//
யாரு அவன் அவனை கண்ட துண்டமா வெட்டு?????? .இல்லேன்னா ஒரு நாள் முழுவதும் ரூம் குள்ள அடிச்சி வைச்சு நம்ம தேவ அண்ணன் ப்ளாக் அ படிக்க வைக்கலாம் ...எப்படி என் ஐடியா

அருண் பிரசாத் said...

தம்பி என்னதான் நான் கொஞ்சநாள் இந்த பக்கம் வரலைனாலும் இப்படியா மாறி போயிடுவ...

சரி யார் அந்த மழைதுளி... அண்ணன் கிட்ட சொல்லு

இம்சைஅரசன் பாபு.. said...

//வடை வழங்கிய வள்ளல் வாழ்க/

பெரிய ஐ .ந சபை மீட்டிங் ல கலந்து பரிசு வாங்கி இருக்காறு......(எல்லாம் ஒரு வைதேரிச்சல் தான்)

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 65
//சரி சரி நீங்களே சொல்லிட்டிங்க இனி போடுவேன்....ஆனா நேத்து ஒருத்தர் எனக்கு கவிதை எழுதி காண்பித்தார்....அவரை என்ன செய்யலா//
யாரு அவன் அவனை கண்ட துண்டமா வெட்டு?????? .இல்லேன்னா ஒரு நாள் முழுவதும் ரூம் குள்ள அடிச்சி வைச்சு நம்ம தேவ அண்ணன் ப்ளாக் அ படிக்க வைக்கலாம் ...எப்படி என் ஐடியா////

உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்து கொள்ளவேண்டாம்

சௌந்தர் said...

அருண் பிரசாத் சொன்னது… 66
தம்பி என்னதான் நான் கொஞ்சநாள் இந்த பக்கம் வரலைனாலும் இப்படியா மாறி போயிடுவ...

சரி யார் அந்த மழைதுளி... அண்ணன் கிட்ட சொல்லு////

அதான் கவிதை போட்டவுடன் வந்துட்டிங்க என்ன இம்சை யார் சொல்லவா..?

இம்சைஅரசன் பாபு.. said...

//உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்து கொள்ளவேண்டாம்//

ஹ .ஹா .இந்த பதிவுலமே அழிஞ்சு போயிரும்னு சொல்லு எல்லோரும் நம்புவாங்க ......ஆனா பாபு கவிதை எழுதினான் சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க மக்கா ...........

Mathi said...

//உன்னுடன் யுத்தம் செய்ய
பிடிக்காது எனக்கு !//

yeennnnnn?

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 70
//உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்து கொள்ளவேண்டாம்//

ஹ .ஹா .இந்த பதிவுலமே அழிஞ்சு போயிரும்னு சொல்லு எல்லோரும் நம்புவாங்க ......ஆனா பாபு கவிதை எழுதினான் சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க மக்கா ........../////

இதோ அனைவருக்கும் சாட் ஹிஸ்டரி காட்டுறேன்

செல்வா said...

//ஆமா மச்சி அதான் உனக்கு காட்டினேன் நீ தானே சொன்னே இது பிளாஸ்டிக் பூ னு
/

அதுக்காகத்தான் இந்த கவிதையா ..?

சௌந்தர் said...

athi கூறியது...
//உன்னுடன் யுத்தம் செய்ய
பிடிக்காது எனக்கு !//

yeennnnnn?////

யார் அடிவாங்குவது....!

செல்வா said...

75

dheva said...

கவிதை நல்லா இருக்குன்னு சொன்னவங்க எல்லாம் இடது பக்கம் வாங்க....

சரி.. வலது பக்கம். யாரா? இதை கவிதைன்னு ஒத்துகிட்டவங்க எல்லாம் அங்கிட்டு வாங்க...


(தம்பி.. நீ ஒண்ணியும் கவலப்படாத....ஆப்ரேசன் சக்ஸசசாத்தான் முடியும்)

sakthi said...

அழகியதொரு காதல் கவிதை
வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dheva கூறியது...
கவிதை நல்லா இருக்குன்னு சொன்னவங்க எல்லாம் இடது பக்கம் வாங்க....

சரி.. வலது பக்கம். யாரா? இதை கவிதைன்னு ஒத்துகிட்டவங்க எல்லாம் அங்கிட்டு வாங்க...


(தம்பி.. நீ ஒண்ணியும் கவலப்படாத....ஆப்ரேசன் சக்ஸசசாத்தான் முடியும்)////

ஊர்சு, வலைச்சரம் பக்கம் வாய்யா.. சரி சரி, பஞ்சாயத்த சட்டுன்னு முடிச்சிட்டு பட்டுன்னு வா!

dheva said...

ராம்ஸ்...@ இதொ வந்துட்டேன்.... ஊர்ஸ்.. ..

பஞ்சாயத்து ஒரு 15 நிமிசம் ஹோல்ட்... ஓவர் டூ வலைச்சரம்...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கோடி மழைத்துளியில்
ஒரு துளி நீ...!///

மிச்சதெல்லாம் வேற பிகரா?
=================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
நீ கொடுத்த பூ மட்டும்
வாடாமல்
உன் சிரிப்பைப்போல் !! //

விளங்காதவனே அது பிளாஸ்டிக் பூ...

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 81
//
நீ கொடுத்த பூ மட்டும்
வாடாமல்
உன் சிரிப்பைப்போல் !! //

விளங்காதவனே அது பிளாஸ்டிக் பூ..///

ஹி ஹி ஹி சரி எந்த பூ வா இருந்தா என்ன....? உங்களுக்கு அதுகூட கிடைக்கலை பொறாமை...!

NaSo said...

சௌந்த்ர், வர வர உங்க நடவடிக்கை மாறிட்டே இருக்கே. அன்னைக்கு மூஞ்சி புத்தகத்துல ஏதோ எழுதினீங்க. இப்போ கவிதை. ம்..ம்...ம்... நடக்கட்டும்.

Ramesh said...

//மலரின் இதழ் விரிந்தால்..
மணம் பரப்பும்.....
உன் இதழ் விரிந்தாலோ
என் இதயம் பறக்கும்...!!

இந்த நாலு வரியும் செம அசத்தல்.. கலக்குங்க...

Unknown said...

கவிதை சூப்பர்..

Unknown said...

//கோடி மழைத்துளியில்
ஒரு துளி நீ..//

இந்த வரிகள் மட்டும் கவிதை ..

என்னாச்சு தம்பி காதல் வலையில் சிக்கிடீங்களா?

சௌந்தர் said...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது… 86
//கோடி மழைத்துளியில்
ஒரு துளி நீ..//

இந்த வரிகள் மட்டும் கவிதை ..
ரொம்ப நன்றி அண்ணா உண்மையை சொன்னதுக்கு

என்னாச்சு தம்பி காதல் வலையில் சிக்கிடீங்களா?////

இல்லை இல்லை எந்த வலையிலும் சிக்கவில்லை

எஸ்.கே said...

மிக அருமையான இனிமையான கவிதை!

Gayathri said...

நல்லா இருக்கு உங்க கவிதை..

என்ன விஷயம் சொல்லவே இல்லை
கல்யாணமா??

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க

nis said...

ரசிகன் என்பதை நிரூபித்து விட்டீர்கள்

Anonymous said...

மலரின் இதழ் விரிந்தால்..
மணம் பரப்பும்.....
உன் இதழ் விரிந்தாலோ
என் இதயம் பறக்கும்//
அருமை.....
வெறும்பய சொன்னது… 3
இனி மேல் நான் கவிதை எழுதுறத நிப்பாட்டலமுன்னு இருக்கேன்.. நீ என்ன சொல்ற நண்பா.//
nanum nanum

Jeyamaran said...

Asathuringa nanbaa................
Athellam sari yaar antha ponnu?

Unknown said...

வாடாமலர் அருமை.

அன்பரசன் said...

//உன்னை வேறு யாரும்
ஆக்கிரமிப்பு செய்தால்
யுத்தம் செய்யவும்
தயங்க மாட்டேன் !!//

பயங்கரம் போ

ஹேமா said...

சௌந்தர்....அசத்திட்டீங்க.
காதல்ல விழுந்தாச்சோ !

கவிநா... said...

//கோடி மழைத்துளியில்
ஒரு துளி நீ...!//


ரசனை மிகுந்த வரிகள் சகோ...
--
அன்புடன்
கவிநா...

Anonymous said...

//கோடி மழைத்துளியில்
ஒரு துளி நீ...!//

மழையை மொத்தமாக ரசிச்சுப் பார்த்திருக்கேன். அதுல ஒரே ஒரு துளியை மட்டும் ரசிச்சு….அதைக் காதலியாகப் பார்க்குறது.. கிரேட்.

//நீ கொடுத்த பூ மட்டும்
வாடாமல்
உன் சிரிப்பைப்போல் !!//

நல்ல உவமை!

//மலரின் இதழ் விரிந்தால்..
மணம் பரப்பும்.....
உன் இதழ் விரிந்தாலோ
என் இதயம் பறக்கும்...!!//

அழகு :)

உன்னுடன் யுத்தம் செய்ய
பிடிக்காது எனக்கு !
உன்னை வேறு யாரும்
ஆக்கிரமிப்பு செய்தால்
யுத்தம் செய்யவும்
தயங்க மாட்டேன் !!

அதுசரி.. :)

Anonymous said...

நண்பர்களே, இது தேர்தல் நேரம் யாரேனும் தபால் வாயிலாக ஒட்டு போடுவது எப்படி, எந்த முறையாக அணுக வேண்டும் என்பதை பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா ? எழுதுவது மட்டும் அல்லாமல் மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து மற்ற இனைய தளங்களில்லும் பகிர்ந்து ஒரு புரட்சிய ஏற்படுத்துவோம். இது கள்ள ஓட்டுகளை நம்மால் முடிந்தவரை தவிர்ப்போம்.

நம்மால் அனா ஒரு புரட்சியை ஆரம்பிப்போம், வெறுமனே நாட்டில் நடக்கும் வன்முறை, ஊழல் பற்றி பேசி, படித்து குமிறியது போதும். ஏதாவது செய்க ப்ளீஸ். இது என்னால் முடிந்த சிறய கல், அனைவரும் முன்வாருங்கள், முன்னேற்றி முன்னேறலாம்.

ஜெய் ஹிந்த்.

 
;