Monday, December 27

சொல்லுவிங்களா...?



அப்பாவின் கையில் தலைவைத்து படுத்துக்கொண்டு  கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்த மீனுவை....

"சீக்கிரம் தூங்கு நாளைக்கு காலையில் கோயிலுக்கு போகவேண்டாமா?"

"போகணும்..போகணும்" என்றாள்

" தூங்கு இல்லையென்றால் எப்படி போவது" என்று சொன்னபடியே கையை எடுத்துவிட்டு அந்த இடத்தில் தலையணையை வைத்து அவளின் நெஞ்சில் தட்டினார்..

"அப்பா"

"என்ன....உன்னை துங்கசொன்னேன்?"

"நீங்களும் சின்ன பிள்ளையில் இருந்து என்னை கோயிலுக்கு போகச்சொல்றீங்க....... நானும் போகிறேன் பின்பு ஏன் அப்பா கடவுள் நமக்கு உதவிசெய்வதில்லையே?"

"உனக்கு என்னம்மா உதவிசெய்யவில்லை?"

"நான் பிறந்தவுடனே அம்மாவை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார் ...நம்மளிடம் பணம் இல்லை..சென்றமுறையே எனக்கு பள்ளி கட்டணத்தை அத்தையிடம் இருந்துதான் வாங்கினோம்...நாம என்ன தவறு செய்தோம் அப்பா...?"


"நாம ஒரு தவறும் செய்யவில்லையம்மா அது கடவுளின் விருப்பம்....."


"அப்படியென்றால் எதுக்கு அப்பா என்கூட படிக்கும் சிலர்மட்டும் பணக்காரர்களா இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் கடவுள் எப்படி நல்லது மட்டுமே செய்கிறார்" 

"நம்மை கடவுள் ஒருவிதத்தில் சோதிக்கின்றார்"

"அவருதானே நம்மளை படைத்தார் பின்பு ஏன் சோதிக்கனும்...அவர்க்கு சரியா ஒரே முறையில் செய்ய தெரியாத என்ன?"

"நீ பேசமா தூங்கு.."என்று அதட்ட அதற்குமேல் அவள் பேசவில்லை...

  இந்த கேள்விகள் ஒன்றும் அவள் இன்று கேட்கவில்லை...அடிக்கடி மீனு தன் அப்பாவிடம் கேட்கப்படும் கேள்விகள்தான்... எல்லா முறையும் ஒரு அதட்டலுடந்தன் அவளது கேள்விகள் முடிந்து இருக்கின்றன...அந்த குடிசைப்பகுதியில் மீனுவின் குடிசையும் ஒன்று...சின்ன பெண்..இரண்டாவது படிக்கிறாள்..அப்பா தினக்கூளி...நன்றாக படிப்பவள்..மீனு...!


மறுநாள் காலையில் அவளின் அப்பா உணவு தயாரிக்க...அவள் கோயிலுக்கு பயணித்தாள்....வாரத்தில் இரண்டு நாட்கள் செல்வாள்..அதே குடிசைப்பகுதியில் ஒரு தேவாலயமும் இருந்தது..அங்கும் போவாள்..


"இன்னைக்கு சாமியிடம் என்ன வேண்டினே?"

"எங்களுக்கு எப்ப உதவி செய்வேன்னு கேட்டேன்பா"

" என்ன சொன்னாரு?"

" என்னைக்கு எனக்கு பதில் சொன்னாரு?"

"சரி நீ சாப்பிட்டு..பள்ளிக்கு போ.".என்று சாப்பிட வைத்து வேலைக்கு போகும்போது அவளை பள்ளியில் விட்டு செல்வது அப்பாவின் வழக்கம்.


எப்போதும் மாலையில் அன்று பள்ளியில் என்னென்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் அப்பாவிடம் சொல்லுவாள்...அவர் சமைத்துகொண்டு இருக்க...


"அப்பா..இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?"

"என்னமா நடந்தது சொல்லு?"

"எங்க வகுப்பில் ஒருத்தன் வீட்டுபாடம் செய்யவில்லை..ஆசிரியர் அவனை வலிக்குமாறு கொட்டிவிட்டார்..அவன் அழுதுகொண்டே இருந்தானா....ஆசிரியர் அவனிடம்...பாரு நான் உன்னை அடித்தது எதுக்கு...நீ இப்பொழுது நன்றாக படித்தால் பிற்காலத்தில் பெரிய ஆளாய் வரலாம்...நிறையா சம்பாதிக்கலாம்..கார் வாங்கலாம்..நீ இப்படி படிக்காமல் இருந்தாய் என்றால் ரெம்ப கஷ்டப்படுவாய் அதான் உன்னை அடித்தேன் அப்படின்னு சொன்னார்"

"அதற்கு அந்த பையன் என்ன சொன்னான்?" கேட்டார் மீனுவின் அப்பா 

"அவன் இன்னும் வேகமா அழுக ஆரம்பிச்சுட்டான் ..நாங்க எல்லாம் சிரிச்சோம்..."

"நீயும் நன்றாக படிக்கவேண்டும் சரியா ?" என்றார்

  "'நீங்களும் நன்றாக படித்து இருந்தால் இப்பொழுது உங்களிடமும் காசு நிறையா இருந்து இருக்கும் ...நம்ம அத்தையிடம் கேட்கவேண்டிய அவசியம் இருக்காது ...காரு இருக்கும்...பெரிய வீடும் இருக்கும்..நமக்கு உதவி செய்ய கடவுள் வேண்டாம்..சந்தோசம இருக்கலாம்..."

"ஆமாம் மீனு நான்தான் சரியாக படிக்கவில்லையே"

"கவலைபடாதீங்கப்பா...நான் படிக்கின்றேன்...காரு வாங்குகிறேன்..".


மறுநாள் மாலையில் பள்ளியில் இருந்து திரும்பும்போது ஒரு சிறிய நாய்க்குட்டியை கழுத்தில் கயிறு கட்டிய நிலையில் வலுக்கட்டாயமாக இழுத்து வந்தாள்....மீனு 

"இதை எங்கே இருந்து இழுத்துட்டு வரே?"

 "தெருவிலே இருந்தது ..பாவம் அப்பா...இதுக்கு நிறைய பசிக்கிறது போல...என்னைமதிரியே அம்மா இல்லை ..அதான் சாப்பாடு போடலாம்னு இழுத்துட்டு வந்தேன்..."

"சரி சாப்பாடு போடலாம்."என்றார்..

"இதுவும் நம்மளும் ஒண்ணுதான் இதையும் கடவுள் சோதிக்கிறார்...பாவம்..எங்கே போகும்...பால் இல்லை..கத்துது....இங்கேயே இருக்கட்டுமே"

"நீ பள்ளிக்கு போன பிறகு யாரு பார்த்துக்குவா?"

"இதோ இந்த கயிறால் கட்டி போட்ருவோம்"

"சரி ஏதாவது செய்"

அந்த சிறிய நாய்குட்டி அவளோடு ஒன்றிப்போனது...தனிமையில் அதோடு பேசினாள்..விளையாடினாள் ..குளிப்பட்டினாள்..அதை அலங்காரித்தாள்...நாய்க்குட்டியும் மீனு பள்ளி விட்டு வருவதை பார்த்தால் அவளை நோக்கி ஓடிபோகும்...எடுத்து நெற்றியில் முத்தம் கொடுப்பாள்..கிழே இறக்கிவிடாமல்..வீடு வரை கொண்டு வருவாள்...அந்த நாய் வந்த பிறகு தனது அப்பாவுடன் பேசுவது குறைந்தது...அவளுக்கு அன்பு செலுத்த ஒரு ஜீவன்........பதிலுக்கு அது காட்டும் அன்பை அவளால் உணரமுடிந்தது...பள்ளி செல்லாத நேரத்தில் அதை ஒரு நிமிடம்கூட பிரிந்தது இல்லை... 


மீனு அந்த நாய் மீது உனக்கு அவ்வளவு பாசமா? அப்பா கேட்டார்

"ஆமாம்பா..பாவம் ....அது என்கூட இருக்கும்பொழுது எவ்வளவு சந்தோசம இருக்கிறது பாருங்க...இதே மாதிரி நம்ம மேலயும் யாரவது அன்பு காட்டினால் எவ்வளவு சந்தோசமா இருக்கும்..."அதற்குள் நாய் வெளியில் ஓட அதை விரட்டி கொண்டே பின் ஓடினாள்


மாலையில் பள்ளியில் இருந்து வந்து பார்க்கும்போது அது தூங்கிகொண்டு இருக்க அதை எழுப்ப மனமில்லாமல்..அது முழிக்கும் வரை அருகில் உடகார்ந்து இருந்தாள்...அப்போதுதான் அருகில் இருந்த தேவாலயத்தில் பிரசங்கம் போய்கொண்டு இருந்தது..அதை கேட்டு கொண்டு இருந்தாள்



அன்றைய பிரசங்கத்தின் சாராம்சம்..யருக்கும் கெடுதல் செய்யாமல்,பொய்,ஏமாற்றம்.தீங்கு செய்யாமல்..கடவுளை பின்பற்றினால்..சொர்க்கம் கிடைக்கும் என்றும்...அப்படி செய்யாதவர்கள் நியாதீர்ப்பு நாளில் கடவுளின் கோபத்துக்கு ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நரகம் கிடைக்கும் என்று இருந்தது...பிரசங்கம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்க ..அதற்கு நாய் முழித்து கொள்ள அதோடு விளையாட தொடங்கினாள்...


பிரசங்கம் முடிந்து அந்த வழியாக வந்த பாதிரியார்...மீனுவை பார்த்து

"ஏன் இன்று ஆலயம் வரவில்லை?"

"நாய்கூட விளையாடிகொண்டுயிருந்தேன்" 

"சரி நாளைக்கு வா" என்றார்

"அய்யா ...நான்,என் அப்பா, இந்த நாய் யாரும் யாருக்கும் எந்த ஒரு தீங்கும் செய்யவில்லை.
நாங்க நல்லவங்க...கடவுளிடம் சொல்லுங்கள்..எனக்கு பெருசா.சொர்க்கம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்... நன்றாக படிப்பதற்கு காசு வேண்டும்.எனக்கும் இந்த நாய்குட்டிக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும் இப்போதைக்கு அது போதும்....  


சொல்லுவிங்களா...?




46 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிந்திக்க வைக்கும் கேள்விகள் நிறைந்த இயல்பான கதை.....!

மங்குனி அமைச்சர் said...

"அவருதானே நம்மளை படைத்தார் பின்பு ஏன் சோதிக்கனும்...அவர்க்கு சரியா ஒரே முறையில் செய்ய தெரியாத என்ன?"///

நச் கேள்வி சார் .............. இதுக்கு யாரும் சரியான பதில் சொல்லுவதில்ல ......... மழுப்பலான பதில்களே வரும்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சில நேரங்களில்... தவறு செய்பவர்களுக்கு கூட, நல்லதே நடப்பது போல் தோன்றும்....

இன்று வரை ஆண்டவன் கணக்கு புரியாத புதிர் தான்...

நல்ல பகிர்வு... :-)

ஆனந்தி.. said...

சொல்றேன்பா..சொல்றேன்...:)) ..என்ன ஒரே செண்டிமெண்ட்?? :((

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//சிந்திக்க வைக்கும் கேள்விகள் நிறைந்த இயல்பான கதை.....!//

ஆமாம். இவரு சிந்திச்சிடாலும்... :))

தினேஷ்குமார் said...

நெகிழ வைக்கறது மனதை நண்பரே

வைகை said...

கேள்வியா கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியாதே?!!

மாணவன் said...

//"அய்யா ...நான்,என் அப்பா, இந்த நாய் யாரும் யாருக்கும் எந்த ஒரு தீங்கும் செய்யவில்லை.
நாங்க நல்லவங்க...கடவுளிடம் சொல்லுங்கள்..எனக்கு பெருசா.சொர்க்கம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்... நன்றாக படிப்பதற்கு காசு வேண்டும்.எனக்கும் இந்த நாய்குட்டிக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும் இப்போதைக்கு அது போதும்....//

ஒரு ஏழை சிறுமியின் நிலையை உணர்வுகளுடன் வரிகளில் பதிவு செய்து நெகிழ வைத்துவிட்டீர்கள் அருமை

dheva said...

//எங்களுக்கு எப்ப உதவி செய்வேன்னு கேட்டேன்பா"

" என்ன சொன்னாரு?"

" என்னைக்கு எனக்கு பதில் சொன்னாரு?//

கடவுள் சொல்ல மாட்டருப்பா பதில... ம்ம்ம் தனியா ஒருத்தர் இருந்தானே சொல்றதுக்கு...


வலியோடு கூடிய சிறுமியை கட்டியணைத்து உச்சி முகரத்தான் தோணுகிறது.. தம்பி....


இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் உனக்கு ஏற்பட்டதற்கு சபாஷ்...!

dheva said...

சிந்திக்க வைக்கும் கேள்விகள் நிறைந்த இயல்பான கதை........//

அடடே.........அப்டியா ஊர்ஸ்... கலக்கிட்ட போ..வேற என்னத்ததான் போடுறது கமெண்டா

dheva said...

//"அவருதானே நம்மளை படைத்தார் பின்பு ஏன் சோதிக்கனும்...அவர்க்கு சரியா ஒரே முறையில் செய்ய தெரியாத என்ன?"//////


யாரும் படைக்கல பங்காளி.. !

dheva said...

//இன்று வரை ஆண்டவன் கணக்கு புரியாத புதிர் தான்...

நல்ல பகிர்வு... :-)
//

ஹி ஹி ஹி நல்ல பகிர்வுதான்........யாரு இல்லேன்னா?

dheva said...

//ஆமாம். இவரு சிந்திச்சிடாலும்... :)//

டெரர் @ சரி நீ சிந்திச்சு சொல்லு மாப்ஸ்.......சும்மா ஊர்ஸ மிரட்டக்கூடாது....!

அருண் பிரசாத் said...

வாழ்வில சில கேள்விகளுக்கு விடை கிடைக்காது..... கடவுளை போல....


சரி... கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுத்து இருக்கேன்... அவர் திரும்ப கால் பண்ணாருன்னா சொல்லுறேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

கதை நல்லாயிருக்கு நண்பரே...

இதுக்கு மேல நான் என்ன கமெண்ட் போட...

Anonymous said...

கதை ரொம்ப நல்லா இருக்கு

NaSo said...

ரொம்ப நல்லாருக்கு சௌந்தர்!!!

எஸ்.கே said...

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை!

Unknown said...

நல்ல கதைங்க செளந்தர்..

Anonymous said...

அவங்க கேள்வியின் நாயகி போல...

Unknown said...

நல்ல கதை . குழந்தைகள் கேட்கும் கேள்விகள் கடவுளுடைய பதிலுக்கு சமமானவை

'பரிவை' சே.குமார் said...

சிந்திக்க வைக்கும் இயல்பான கதை.....!

அன்புடன் நான் said...

கதை நல்லாயிருக்கு .... பாராட்டுக்கள்.

Ramesh said...

நல்ல கதை.. செளந்தர்.. இயல்பான நடை..

வினோ said...

சொல்லிவிடலாம் சௌந்தர்...

அன்பரசன் said...

உருக்கமான கதைதான் சௌந்தர்...

செல்வா said...

பாருயா இவனுக்குள்ளவும் ஒரு பெரியார் இருக்கார் ..!!

செல்வா said...

சரி நான் இதுக்கு என்னோட போஸ்ட்ல பதில் சொல்லுறேன் ..
கடவுள் ஏன் இருக்க வேண்டும் ..? அப்படின்ன்கிற போஸ்ட்ல .!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்கு .
வாழ்த்துக்கள் .

ஹேமா said...

குழந்தை மனதில்தால் அன்பும் மனிதமும் நிறைந்திருக்கிறது.
வளர வளர...!

Anonymous said...

நல்லாயிருக்கு நண்பா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரைட் ரைட் ரைட் ரைட் ரைட் ரைட் ரைட் ரைட் ரைட் ரைட்

Anonymous said...

ஒரு வார்த்தையில் நல்ல இருக்கு சொல்ல முடியாது ... யதார்த்தம் இயல்பு நடை கொண்ட அருமையா வார்ப்பு..
வாழ்த்துகள்
தொடரட்டும் சௌந்தர் ..இன்னும் அதிக எதிர்பார்ப்புகள் உன்னிடம் .....

Sriakila said...

வறுமையில் வாடும் குழந்தையின் சிந்தனை மனதில் பாரத்தை ஏற்றுகிறது.

ஆனால் கல்வி என்ற ஒன்று மட்டும் இருந்தால் செல்வம் தானே வந்துவிடும்.

ஏழைகள் அன்றாடத் தேவைகளுக்கே வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும்போது பணம் வைத்திருப்பவர்களுக்கு ????

படிக்காதப் பெற்றோர்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பதும் ஒரு சாபமோ? சொல்ல வார்த்தை வரவில்லை.

Jeyamaran said...

thala miga arumai ungaltta serial eluthura thiramai irukku keep it up........

vinthaimanithan said...

கொஞ்சம் மெனக்கெட்டு எடிட் பண்ணி இருந்தா ரொம்ப அழகா வந்திருக்குமே சௌ ? எப்படி இருந்தாலும் சரி... கதை எழுதும் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள்!

சுபத்ரா said...

என்னோட சுனாமி போஸ்ட்-லயும் இதேமாதிரி கடவுள் கான்செப்ட் வச்சு எழுதிருந்தேன் சௌந்தர்.

கதை நல்லாயிருக்கு. தொடர்ந்து நிறைய எழுத வேண்டுகிறேன். வாழ்த்துகள்!

சுசி said...

உருக்கமான கதை.

Philosophy Prabhakaran said...

ஒரு கதைக்குள் ஆங்காங்கே குட்டி குட்டி கதைகள்... ஒவ்வொன்றிலும் ஒரு பாடம்... அருமை...

THOPPITHOPPI said...

அருமை

Unknown said...

கதை நல்லாயிருக்கு.
மனதை நெகிழ வைக்கறது.
வாழ்த்துகள்!

Nagasubramanian said...

"அவருதானே நம்மளை படைத்தார் பின்பு ஏன் சோதிக்கனும்...அவர்க்கு சரியா ஒரே முறையில் செய்ய தெரியாத என்ன?"

nice story and so touching

சி.பி.செந்தில்குமார் said...

super. in my life histoy 62 votes in indli is remarkable and un beleivable.

congrats.wait.study and come

சி.பி.செந்தில்குமார் said...

good story. mind touching.pls send it to devi weekly, 727 ,anna salai,chennai 600006.

u will get rs 250 prize

Thenammai Lakshmanan said...

மிக அருமையான கதை சௌந்தர்..

Prabu Krishna said...

நல்ல பகிர்வு...

 
;