Wednesday, September 29 55 comments

பெண்களுக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள ஒற்றுமை ...




பலகட்ட ஆராய்ச்சிக்கு பிறகு விஞ்ஞானிகள் தேவா, பாபு, செல்வா, சௌந்தர் சேர்ந்து கம்ப்யூட்டர் பெண் என்று உறுதி செய்து உள்ளனர் 

பெண்களுக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள ஒற்றுமை 



* ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன; இருந்தாலும், கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை.

* என்ன தான் பெண்களுக்கு அறிவு நிறைய இருந்தாலும் சுயமாக யோசிக்க மாட்டார்கள்




* கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னைகளாக அமைகின்றன.

* என்ன தான் பெண்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும் அந்த பிரச்னைக்கு காரணமே அந்த பெண்கள் தான் 




* ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... "ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று!

* அதே போல ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகு யோசிப்போம் பொறுமைய இருந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கலாமே என்று 




*  கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.

*  பெண்களை பற்றி யாருக்கும் புரிவது இல்லை அந்த பிரம்மாவிற்கே புரிவதில்லை 



* ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.

* ஒரு பெண் செய்யும் சமையலும் சரி அடியும் சரி பெண்களுக்கு பெண்கள் மாறுபடும் 




* நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.

* முன்பு எப்போதோ செய்த தவறை .இப்பவும் சொல்லி காண்பித்து பூரி கட்டையால் அடிப்பது



* ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்.

* பெண்களுக்கு மதம் தோறும் lipstick ,bindi ,kajal ,இப்படி பல அழகு செய்யும் பொருளுக்கு செலவு செய்ய வேண்டியது வரும் 




*  இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...



டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் குறிப்பிடுபவை அல்ல


Tuesday, September 28 45 comments

அழகு மயில்......

மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவுக்கு மயில் அழகு. மயில் தோகை விரித்தால் பேரழகு. ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது, சரி சரி பெண்களே கோபப்படாதீர்கள், அடர்ந்த காட்டுக்குள் மற்றும் கிராமத்தில் மட்டுமே காணப்படும், நம் நாட்டு தேசிய பறவை மயில்.

மயில் தோகையை விரித்து நடனம் ஆடினால் மழை வரும் என்று சொல்வார்கள், மழை வருமா வரதா தெரியாது, ஆனால் அது நடனமாடும் அழகே தனி. அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும். அதே நேரத்தில் எதிரிகளை முழு வல்லமையோடு எதிர்க்க கூடியது.. அதனால்தான் பாம்புகளுக்கு மயிலைக் கண்டாலே பயம்.

அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இருக்கும் ஆனால் மயில்கள் மிக சாந்தமானவை... தன்னுடைய அழகில் மமதை இல்லாதவை.....!



































குறிப்பு:கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் விடை அடுத்த பதிவில்


Monday, September 27 59 comments

ஸ்டார் ஒரு பார்வை part I



சௌந்தர் இவர் பதிவுலகில் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியாது. (யார் சொன்னது இப்படி தான் பல பேர் சொல்கிறார்கள்) பெரிய நடிகர்( பதிவர்) இவர் நடித்த முதல் திரைப்படம்(பதிவு) அது copy paste பதிவு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க இவருக்கு பப்புவை போல தினம் ஒரு பதிவு போட புடிக்காது பிரபல நடிகர் அஜித்குமார் சொன்னதை போல இப்படி தினம் ஒருமொக்க போஸ்ட் போடுவதற்கு பதில் சும்மா இருக்கலாம் என்று இருக்கிறார் சௌந்தர் இவருடைய தற்போதைய படம் (பதிவு) ஸ்டார் ஒரு பார்வை என்ற படத்தில் நடித்து உள்ளார் இவர் சிறப்பு அம்சம் ப மு க என ஒரு கட்சி நடத்தி வருகிறார். அடுத்த ஆண்டு இவர் ஆட்சி தான்.



சினிமா உலகம் ஒரு பெரிய உலகம் , இதில் பலர் வந்து காணாமல் போய் இருகிறார்கள் நிலைத்து நின்றவர்கள் சிலர் மட்டுமே அடுத்து வரும் பதிவுகளில் மேலும் பல நடிகர்களை பற்றியும் அவர்கள் நடித்த முதல் மற்றும் கடைசி படம் பற்றி பார்ப்போம் 




தமிழ் பட உலகில் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர். இவர் பாடிய பாடல்கள் இப்போதும் மிகவும் பிரபலமானவை இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் சுமார் 15 திரைப்படத்தில் நடித்து உள்ளார். இவரும் ஒரு கொலை வழக்கில் சிறை சென்று வந்தார் பின்னர் குற்றவாளி இல்லை என்று இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யபட்டார்.ஹரிதாஸ் திரைப்படம் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கில்) ஓடி சாதனை படைத்தது. இவர் கடைசியாக சிவகாமி என்றதிரைப்படத்தில் நடித்தார். சிவகாமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்தது, சிவகாமி படத்தின் படபிடிப்பின் போதே சற்று உடல்நலம் குன்றி இருந்தார்,மருத்துவமனையில் சிகிச்சை பலன்அளிக்காமல் நவம்பர் 1, 1959, இயற்கை எய்தினார்..






                                           
                    
                                                                      
காதல் மன்னன்.
இவரது இயற் பெயர் கணேசன். ஜெமினி நிறுவனத்தில் பணிபுரிந்ததால் பின்னாளில் அவருக்கு ஜெமினி கணேசன் என்று வைக்கப்பட்டது. சிறுது காலம் ஆசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிபிடதக்கது .முதல் படம் :1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார்.






கடைசி படம்: அவ்வை சண்முகி 1996 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்தது இந்த படத்தில் ஜெமினி கணேசன் நடித்த வேடத்தில் முதலில்  சிவாஜி நடிப்பதாக இருந்தது பின் வேறு சில காரணங்களால் ஜெமினி கணேசன் நடித்தார், அந்த வயதிலும் காதல் காட்சியில் நடித்து தான் ஒரு காதல் மன்னன என்று நிருபித்தார். ஜெமினி திரைபடத்தில் நடிகராகவே ஒரு ஐந்து நிமிடம் நடித்து இருந்தார்.

சிறு நீரகக் கோளாறு காரணமாக 2005ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்ட்டது. ஜெமினி கணேசனுக்கு தபால் தலை வெளியிட்டு இந்திய அரசு கவுரவப்படுத்தியது



ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி
யாருன்னு கேட்காதீங்க M.R. ராதா நடித்த முதல் படம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்து. M.R. ராதாவும் நாடக துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான், இவர் நாடகங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு, சினிமா கை கொடுக்க வில்லை. இவர் நடித்த முதல் சில படங்கள் வெற்றி பெறவில்லை பின்பு நாடகத்துறைக்கே திரும்பினார் 


ரத்தக்கண்ணீர் என்ற நாடகம் பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து, திரைத்துறைக்கு மீண்டும் காலடி எடுத்து வைத்தார் ரத்தக்கண்ணீர் மாபெரும் வெற்றியை பெற்றது அதற்கு பிறகு இவர் குணசித்திர வேடத்தில் நடித்தார். மு.க முத்து நடித்த சமையல்காரன் என்ற படத்தில் நடித்தார் பின் சில படங்களில் நடித்தார் தனக்கென்று ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வந்தார் ராதா மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு காரணமாக 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இயற்கை எய்தினார்.அரசுமரியாதையை ஏற்க குடுபத்தினர் மறுத்துவிட்டனர். இன்னும் இவரை போல ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைக்க வில்லை 


     
Friday, September 24 77 comments

என் பயணம்....





நாங்கள் வருடா வருடம் சிவராத்திரிக்கு எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்வோம்.  காரில் தான் பயணம்.  செய்வோம் சென்னையில் இருந்து 600 கிமீ தொலைவில் வத்தலகுண்டு என்ற ஊரை தாண்டி தேவதான பட்டி என்ற கிராமத்தில் அந்த கோவில் உள்ளது. எங்களுக்கு விவரம் தெரிந்து அந்த கோவிலுக்கு அப்போது தான் சென்றோம்.  வத்தலகுண்டு வரைக்கும் தான் வழி தெரியும், அதற்கு பிறகு தேவதான பட்டிக்கு போக வழி தெரியாது, யாரையாவது கேட்டுத் தான்   போக வேண்டும். எங்கு கோவில் இருக்கு என்று தெரியாது. 
  

சென்னையில் (மணலி புது நகர்) இருந்து கிளம்பினோம். சென்னை எல்லையை தாண்டுவதற்கு மூன்று மணி நேரம் ஆனது எங்க அண்ணன் தான் கார் ஓட்டுவார், தேசிய நெடுஞ்சாலை வந்தவுடன் எங்களுக்கு பயம் வந்து விடும். எங்க அண்ணனுக்கு அடிகடி தேசியநெடுஞ்சாலையில் பயணம்  செய்வதால் பயம் இல்லை, 

அங்கு விபத்து நடந்து நொறுங்கிய வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும், அதைப் பார்க்கும் பொழுது பயம் மேலும் அதிகரிக்கும், நம்ம வண்டிக்கும் விபத்து நடந்தால் நாளை இப்படி தான் நிறுத்தி வைப்பார்களோ என்று மனதிற்குள் தோன்றும்.  வண்டி ஓட்டும் எங்க அண்ணனை டேய் ஒழுங்கா வண்டி ஓட்டுடா பொறுமையா ஓட்டுடா என்று கிண்டலுக்கு சொல்வேன். (கிண்டல் எல்லாம் இல்லை உள்ள இருக்கும் பயம்) நன்றாக தான் வண்டி போய்கொண்டு இருந்தது 

ஒரு இடத்தில் டீ குடிக்க வண்டியை நிறுத்த சொன்னோம். ஸ்கார்பியோ (scorpio)  காரை அப்படியே ஒயிலாக நிறுத்துகிறேன் சொல்லி, பாதி வெட்டி வைத்து இருந்த மரத்தில் டயர் அடி வாங்கியது, ஆனா ஒன்றும் ஆகவில்லை அங்கேயே கொஞ்சம் நேரம் இருந்தோம் டீ குடிக்க வண்டியை நிறுத்தி விட்டு டீ குடிக்காமலே கிளம்பினோம், எங்க அண்ணனை சொன்னோம், ஒழுங்கா ஊருக்கு கொண்டு போய் சேர்த்துவிடு, டீ குடிக்கனும் சொன்னது குத்தமா என்று கேட்டோம்,  இவன் நமக்கு பால் வாங்கி தர ஏற்பாடு செய்றான் எல்லாம் கொஞ்சம் உசாரா இருங்க நான் சொன்னேன்.


திருச்சியை நோக்கி வண்டி சென்று கொண்டு இருந்தது, போகும் வழியில் ஒரு கார் எங்களைமுந்தி செல்லப் பார்த்தது நாங்க அந்த காரை விட வேகமா சென்றோம் அந்த காரை முன்னே செல்ல விடமால் தடுத்தோம், அந்த காரும் எங்களையே தொடர்ந்து வேகமாக வந்தது, இப்படி ஒரு கிலோ மீட்டர் வரை அந்த கார் எங்களை பின் தொடர்ந்தது, சரி அந்த காருக்கு வழி 
விடுவோம் என்று முடிவுக்கு வந்து வழி விட்டால் அவர்கள் காரை நிறுத்தி உங்கள் கார் டயர் "பஞ்சர்" என்று சொல்லிவிட்டு போனார்கள், காரில் இருந்த நாங்கள் அனைவரும் சொன்னோம் நீ 
நல்லவன் டா... நீ நல்லவன் டா... யாறோ ஒருவர் அவர் நாங்கள் அவரை முந்தி செல்ல பார்த்தாலும் நாங்கள் எப்படி போனால் என்ன என்று இருக்காமல் எங்களுக்கு உதவி செய்தார் மனித நேயம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது 

அது தேசிய நெடுஞ்சாலை அங்கு டயர் மாற்ற முடியாது அப்படியே பொறுமைய வண்டியை ஓட்டிக் கொண்டு திருச்சி சென்று "பஞ்சர்" சரி செய்தோம். டீ குடிக்கும் இடத்தில் டயர் அடி வாங்கியது தான் "பஞ்சர்க்கு காரணம், பக்கத்தில் பஞ்சர் ஒட்டும் கடை இருந்தது அப்படியே சரி செய்து விட்டு நல்ல ஓட்டல் இருக்கும் இடமா பார்த்து நிறுத்தி அந்த வேலையை முடித்து விட்டு போவோம் என்று பார்த்தால், கோவிலுக்கு போகும் போது non veg சாப்பிட கூடாதாம் என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார்கள், அடுத்த வருடம் அந்த rules எல்லாம் உடைத்து விட்டோம், non veg சாப்பிட்டு தான் போனோம்.  


எப்படியோ வத்தலகுண்டு வந்து சேர்ந்தோம் அப்போ மணி 3.30AM  அங்கயே ரூம் எடுத்து தங்கி விட்டு காலையில் தேவதானபட்டிக்கு போகலாம் என்று சொன்னோம். கோவில் இடம் இருக்கும் அங்கே போய் படுக்கலாம் என்று எங்க அம்மா சொன்னார்கள், நாங்களும் சரி ஊருக்கு உள்ளே போகலாம் என்று கிளம்பினோம். தேவதானபட்டிக்கு எந்த வழியில் போகணும் என்று கிலோ மீட்டர் போர்டை பார்த்தால் அதில் சினிமா போஸ்டர் ஒட்டி வைத்து இருந்தார்கள் அதை கிழித்து விட்டு எந்த வழி என்று பார்த்து தேவதானபட்டிக்கு சென்றோம். அங்கே பார்த்தால் வஜ்ரா வண்டி நின்றுக் கொண்டு இருந்தது. எங்களுக்கு ஒரே குழப்பம், அங்கு சில போலீஸ்காரர்கள் நின்றுக் கொண்டு இருந்தனர். அவர்களை கேட்டால் இங்கு ஒரு பிரச்னை நடந்து இருக்கு, நீங்க பார்த்து போங்க எனச் சொன்னார்கள், பிரச்னை என்று சொன்னார்களே தவிர என்ன பிரச்னை என்று சொல்ல வில்லை 


அந்த ஊரில் "ஜாதி கலவரம்" நடந்து இருக்கு தடுக்க வந்த மூன்று போலீஸ்காரர்களை வெட்டி விட்டார்கள் அந்த கிராம மக்கள், அடடா நாங்க வந்த நேரம் பார்த்தா ஜாதி கலவரம் வர வேண்டும் என்று நினைத்து கொண்டோம். அப்படியே கோவிலுக்கு சென்றால் அங்கு யாரும் இல்லை. மறுபடி வத்தலகுண்டு வந்து ஒரு அறை எடுத்து தங்கி விட்டு காலை மீண்டும் தேவதான பட்டி வந்தோம், நாங்கள் 20 வருடத்திற்கு முன்பு எப்படி பார்த்தோமா அப்படி தான் இப்போதும் இருந்தது 

சிவராத்திரி இரவு கோவில் அருகில் முருகன் மலை உள்ளது மலை மேல சிவன் கோவில் உள்ளது அங்கு பூஜை நடக்கும், எங்க அண்ணன், எல்லாம் மலை ஏறி சாமி கும்பிட சென்று இருந்தனர், மறு நாளை காலையில் மலையிலிருந்து இறங்கி வந்தவர்களை அழைத்து வரலாம் என்று காரை எடுத்தால் கார் ப்ரேக் பிடிக்க வில்லை. என்ன செய்வது அன்று இரவு சென்னை திரும்ப வேண்டும், அந்த சின்ன கிராமத்தில் scorpio காருக்கு ஏற்ற மெக்கானிக் யாரும் இல்லை.   ப்ரேக் இல்லாமல் handbrake மட்டும் வேலை செய்தது.

அன்று இரவு சென்னை திரும்ப வேண்டுமே, என்ன செய்வது என்று யோசித்து ஊரில் இருக்கும் எங்க அண்ணன்கள் எல்லாம் லாரி ஓட்டுபவர்கள் அவர்கள் யரோ தெரிந்த மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்து என்ன காரணம் ஏன் ப்ரேக் புடிக்க வில்லை என்று கண்டறிந்தனர். ஒரு வீலில் மட்டும் ப்ரேக்சூ தேய்ந்து விட்டதாகவும், இந்த ப்ரேக்சூ இங்கு கிடைக்காது, திண்டுக்கல் போய் தான் வாங்கணும் அங்கேயும் அந்த பொருள் கிடைக்க ரெண்டு நாள் ஆகும் என்று கூறினார், 

என்ன செய்வது நாளை சென்னையில் இருக்கணும் என்று யோசித்து நான்கு வீலில் ஒரு வீலில் தான் ப்ரேக்சூ தேய்ந்து இருந்தது, அந்த ஒரு வீலில் இருந்து அந்த ப்ரேக்சூவை கழட்டி வைத்து விட்டு காரை ஓட்டலாம் ஆனா அது ரொம்ப ஆபத்து, வேகமாக போகும் போது ப்ரேக் புடித்தால் செயல் இழந்து விடும் என்று மெக்கானிக் கூறினார். அதனால் இரவு பயணத்தை ரத்து செய்து விட்டு பகலில் பொறுமையாக சென்னை வரலாம் என்று முடிவு எடுத்தோம், ப்ரேக் பிடித்தாலும் வண்டி உடனே நிற்காது எந்த நேரத்திலும் ப்ரேக் செயல் இழுக்கும் என்று தெரியாது. அதனால் பயந்து, பயந்து வண்டியை ஓட்டி வந்தோம். எதிரில் வரும் லாரியை பார்த்தல் எமன் வருவது போல் இருக்கும், சென்னை வரும் வரை பயந்து பயந்து வந்தோம் நல்ல வேலையாக ஒன்றும் நடக்க வில்லை நல்லபடியாக வந்து சேர்ந்தோம்.   


டிஸ்கி :நாம் எங்கு பயணம் செய்தாலும் வீடு வந்து சேரும் வரை நம் உயிர் போய் உயிர் வந்து விடும், வீடு வந்து சேர்ந்தால் தான் நிம்மதி


 
Tuesday, September 21 78 comments

தாக்குதே கண் தாக்குதே.......


மெட்ராஸ் ஐ என எப்படி பெயர் வந்தது? இந்த நோய்கான காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது.



மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி. ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ’  என அழைக்கப்படுகிறது



ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு அடுத்த சில நாட்களிலே அடுத்தவருக்கு பரவி விடுகிறது



இந்த நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவந்து தடித்து விடும். ஆனால் தற்போது கண் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்கள் சிவப்பது குறைவாக இருந்தாலும் எரிச்சல் அதிகமிருப்பதாக கூறுகின்றனர்.
விஜயகாந்திற்கு எப்போதும் கண் சிவப்பா இருகிறதே அப்போ அவருக்கு கண் வலியா என்று கேட்காதீங்க அது எனக்கு தெரியாது




"மெட்ராஸ்- ஐ' ஒருவருக்கு தானாக வர சாத்தியமில்லை. யாராவது ஒரு நபருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பின் அவர்கள் மூலமாகவே பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதாலோ அல்லது கிருமிகள் காற்றில் பரவுவதாலோ இந்நோய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.


இந்நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, முகம் துடைக்கும் துணிகளை பயன்படுத்தினால் மட்டுமே கிருமிகள் எளிதில் பரவும். கண்நோய் பாதித்தோர் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வீட்டில் இருப்போர், நோய் பாதிக்கப்பட்டவருக்கு கண்ணில் மருந்து ஊற்றியவுடன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.


இந்நோய் பாதித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பாதிப்பு இருக்கும். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றது தான் 'மெட்ராஸ் - ஐ'; தானாகவே சரியாகி விடும்.

மருத்துவரிடம் சென்றால் மூன்று நாளில் சரியாகிவிடும் மருத்துவரிடம் செல்லவில்லை என்றாலும் மூன்று நாளில் சரி ஆகிவிடும்

Friday, September 17 53 comments

நண்பேண்டா....நண்பேண்டா...




நீண்ட நாட்களுக்கு பிறகு முழுநீள நகைச்சுவை திரைபடம் வில்லன் இல்லை ஓப்பனிங் சண்டை இல்லை, அட படத்தில் சண்டேயே இல்லை, ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சிரிப்புதான்.

ஆர்யா ஏழு வருடங்களாக அரியர் எழுதிக்கொண்டு வெட்டியா ஊர் சுற்றி கொண்டு இருக்கிறார், சந்தானம் முடி திருத்தும் நிலையத்தை நடத்தி வருகிறார் ஆரியாவுக்கும் சேர்த்து சந்தானம் செலவு செய்கிறார், ஆரியா "நண்பேண்டா” என்று சொல்லியே காரியம் சாதித்து விடுகிறார்.
   

ஆர்யாவின் அண்ணன் சரவணனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துப் போக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது, ஆர்யாவின் அண்ணியின் தங்கை தான் இந்த நயன்தாரா. அண்ணியிடம் தான் காதலிக்கும் நயன்தாராவை பெண் கேட்க்கிறார் அவரோ உன்னை போன்ற உதவாக்கரைக்கு எதை நம்பி என் தங்கையை கொடுப்பது, உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் அவளுக்கு உன்னை போன்ற ஒரு உதவாகரைக்கு, திருமணம் செய்து வைப்பீர்களா என்று ஆர்யாவின் அண்ணி மறுத்துவிடுகிறார். இதனால் கோபப் பட்டு நானே சொந்த காலில் நின்று என் தங்கைக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு, பிறகு உங்க தங்கையை பெண் கேட்கிறேன் என்று "சபதம்" போட்டு , வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஆரியா. தன் சபதத்தில் வெற்றி பெற்று நயன்தாராவை கரம் பிடித்தாரா? என்பதே மீதி கதை 

இந்த படத்தில் கதை என்று ஒன்றும் கிடையாது, திரைக்கதை மட்டுமே இருக்கிறது நகைச்சுவையை நம்பியே எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு காட்சியிலும் சந்தானம் காமடி செய்து இருக்கிறார். படத்தில் சந்தானம் "ஹீரோவா" அல்லது ஆரியா "ஹீரோவா" என்று கேட்க வைக்கிற அளவுக்கு பட்டயை கிளப்புகிறார் சந்தானம்.

முதல் காட்சியில் ஆரியா அருவாளை எடுத்து கொண்டு யாரையோ வெட்டுவதற்கு ஓடுகிறார், அது யார் அப்படியே பிளாஷ் பேக் ....யாரை வெட்ட போகிறார் என்று பார்த்தால் பல்பு வாங்குவோம், 

ஆரியா பிட் அடிக்கும் காட்சியில் இவரை எல்லோறோம் ஓட்டுறாங்க, அவர் தங்கை எப்படியாவது இந்த தடவை பெயில் ஆகிடு அடுத்த வருஷம் நம்ம ஒண்ணா பரிட்சை எழுதுவோம் சொல்றாங்க.


ஆர்யாவின் அம்மா எப்படியாவது பிட் அடிச்சாவது பாஸ் ஆகிடு என்னால் வெளியே தலை காட்ட முடியலை என்று சொல்றாங்க இப்படி அம்மா யாருக்கு கிடைப்பாங்க, 

அரியர் எழுதும் இடத்தில் சாமி நாதன் நண்பர் இவர் குடும்பத்துடன் வந்து அரியர் எழுதுகிறார் கேட்டால் குடும்பத்தில் பிக்னிக் போகணும் சொன்னங்க அதான் இங்க கூப்பிட்டு வந்தேன் சொல்வார் சாமிநாதன், ஆரியா பிட்டு வைத்து இருப்பதை பார்த்து என்ன பாஸ் பிட்டு எல்லாம் வைத்து இருக்கீங்க பாஸ் ஆகிட போறிங்க என்று சொல்லும் போது சிரிப்பலை   

பிட் அடிப்பதை பற்றி நயன்தாரா விடமே .  சொல்லிவிட்டு பரிட்சை அறையில் நயன்தாராவை பார்த்து விட்டு பேச்சே வராமல் நிற்கிறார் ஆரியா, இதில் சாமிநாதன் வேற சேர்ந்து கொள்கிறார் கை தட்டலில் தியேட்டரே அதிர்கிறது பிட்டுக்கே பிட்டு வைத்த பெருமை ஆரியாவையே சேரும் 

நயன்தாரா பார்டன் ..பார்டன்... (pardon) சொல்வாங்க அதற்கு அர்த்தம் புரியாமல் ஆரியா தவிப்பார், சந்தானம் உன்னை பாட்டு பாட சொல்றா, அதை கேட்டு போய் ஆரியா பாட்டு பாடி காட்டுவார் பார்டன் என்றால் நீங்க சொல்றது புரியலை மறுபடி சொல் என்று அர்த்தமாம் இவங்க சொன்ன பிறகு நமக்கே புரியுது,

"நான் கடவுள்" வில்லன் ராஜேந்திரனும் சில காட்சிகளில் வருகிறார் இவர் தான் வில்லன் என்று நினைத்தால் இவரும் காமடி செய்கிறார் 

சந்தானம் கடையை வைத்து கடன் வாங்குகிறார் கடனை அடைக்க வில்லை என்றால் மாடு மேய்க்கணும் என்று ராஜேந்திரன் மிரட்டுகிறார்... டுட்டோரியலில் ஏதாவது செய்து ஆட்கள் சேர்க்க வேண்டும் என்று இவர்கள் செய்வது நல்ல சிரிப்பவை வர வைக்கிறது கண்தெரியாத பெண்ணை இறுதியில் நேர்த்தியாக உபயோகப்படுத்தியிருப்பதில் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது...கண் தெரியாத நானே MSC படித்து இருக்கும் போது நீங்க பத்தாவது பாஸ் பண்றது ஒன்னும் பெரிய விசயம் இல்லை, என்று ஒரு வரியில் சொல்லிவிடுகிறார் இயக்குநர் இந்த காட்சியை சொல்லிய விதம் அருமை.
டுட்டோரியலில் பாஸ் ஆகவில்லை என்றால் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்றாங்க சகிலாவை அழைத்து வந்து பாடம் நடத்த சொல்லி நயன்தாராவிடம் நல்லா திட்டு வாங்குகிறார்கள.

நயன்தாரா பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை ஏதோ ஒரு சில காட்சியில் வருகிறார் மிகவும் மெலிந்து இருக்கிறார் 

நடிகர் ஜீவா ஒரு சின்ன வேடத்தில் நடித்து இருக்கிறார் அவர் வரும் காட்சியில் கலகலப்பு நயன்தாராவின் அப்பாவை பார்த்து "மாமா ஒரு குவாட்டர்" சொல்லு என்ற கட்சியில் இன்னும் தியேட்டேர் அதிர்கிறது.. 

சிவா மனசுல சக்தி படத்தின் பாதிப்பிலிருந்து டைரக்டர் மீண்டு வரவில்லை என்பது சில இடங்களில் தெரிகிறது 

யுவன்சங்கர்ராஜா தன் வேலையை நன்றாகவே செய்து இருக்கிறார். யார் இந்த பெண்தான் என்ற பாடலும் ..பாஸ்...பாஸ் என்ற பாடல்களும் அருமை.   ரொம்ப நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் ராஜேஷ். காமெடியும் இதில் தூக்கலாகவே இருக்கிறது. இதனால் ராஜேஷின் இரண்டாவது வெற்றி உறுதி செய்யபட்டுஉள்ளது மொத்தத்தில் "பாஸ் மாஸ்" 






Tuesday, September 14 43 comments

இவன் தான் எந்திரன்....








ரஜினியின் கதை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும்.தொடக்கத்தில் ஏழையாக இருந்து மீண்டும் பணக்காரர் ஆவார். இப்படித்தான் படத்தின் கதைகள் இருக்கும். அப்படி இருந்தும் அடுத்த படம் என்ன கதையாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.


எப்போதும் ரஜினி படம் வந்தாலே அனைவருக்கும், ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல எந்திரன் படத்திற்க்கு இரண்டு மடங்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது. முதலில் இந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரித்தது, பட்ஜெட்உயர்ந்து கொண்டே சென்றதால், படம் பாதியில் நின்றது. அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்தது. 


இசை வெளியிட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியிட்டார்கள். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது 


150 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது எந்திரன், இதுவரையில் எந்த இந்திய திரைப்படமும் செய்யாத சாதனையை எந்திரன் எட்டியுள்ளது. ஏற்கனவே தமிழில் பெரும் தொகைக்கு விற்பனையான எந்திரன் படம், தெலுங்கில் 33 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஒரு மொழி மாற்று திரைப்படம் இந்த அளவுக்கு விற்பனை. ஆனது இது தான் முதல் முறை, கன்னட உரிமை சுமார் 9.5 கோடி, விற்பனை ஆனது, மலையாளத்தில் ஆறு கோடிக்கு வாங்கியுள்ளனர். இது மம்முட்டி, மோகன்லாலின் நேரடிப் படங்களை விட எந்திரன், அதிக விலைக்கு வாங்கப்பட்டு உள்ளது, கேரளாவில் மொழி மாற்றம் செய்யாமல் அப்படியே தமிழில் வெளியிட போவதாக தெரிவித்து உள்ளனர்.






ஒரு படத்தில் வில்லனுக்கு, ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரம் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த படத்தின் விறு விறுப்பு அதிகமாக இருக்கும். வில்லன் டேனி டென்சொங்கப்பா ஹிந்தி திரையுலகில் பெரியநடிகர், பிரபலப் படமான குர்பானியில் நடித்து இருக்கிறார், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்கிறார்,


எல்லோரும் படத்தின் கதை எப்படி இருக்கும் என்று அள்ளி விடுகிறார்கள், ஏதோ எனக்கு தெரிந்ததை நானும் சும்மா அள்ளி விடுகிறேன்.



ரஜினி விஞ்ஞானி (ஆமா இது யாருக்கும் தெரியாது ) பத்து வருட கடின உழைப்பில் ஒரு ரோபோவை உருவாக்குகிறார், அந்த ரோபோவிற்கு மனிதனுக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கிறது, ரோபோ ஐஸ்வரியாவை காதல் செய்கிறது, அப்போது ஒரு கனவு பாட்டு, அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன் போல பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா? .....


ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினியின் பேச்சை கேட்க மறுக்கிறது, ரஜினிக்கே துரோகம் செய்கிறது எல்லாம் காதல் படுத்தும் பாடு, வில்லனும் ரோபோவும் ஒரு ஒப்பந்ததிற்க்கு வருகிறார்கள் "நீ " நான் சொல்வதை கேட்டால் உன்னை ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்கிறேன், என்று வில்லன் சொல்கிறார் அதை நம்பி வில்லன் சொல்வதை கேட்டு மக்களுக்கு எதிராக செயல் படுகிறது ரோபோ, எல்லா வேலைகளும் முடிந்தவுடன் வில்லன் ரோபோவை அழித்து விடுகிறார்.


ரோபோ ரஜினியிடம் சென்று உதவி கேட்கிறது என்னை காப்பாற்றுங்கள், என்று கேட்க்கிறது ரஜினி மீண்டும் அந்த ரோபோவை சரி செய்து தன் திறமையை நிருபித்து, எப்படி வில்லனை அழித்தார் என்பது தான் மீதி கதை. இந்த மாதிரி கதை கண்டிப்பா இருக்கவே இருக்காது...ஒழுங்கா போய் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


*  படத்தின் பலம்: ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யா பச்சன், சன் பிக்சர், A.R ரஹ்மான், அமரர் சுஜாதா, ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சந்தானம், கருணாஸ்.






*  படத்தின் பலவீனம் : பெரிய பட்ஜெட்

*  தயாரிப்பாளருக்கு நிச்சயம் லாபம் கிடைத்து விடும் ஆனால் இந்த படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் தான் 



Thursday, September 9 35 comments

திமுக சாதனைகளும் வேதனைகளும் - part II



தேவையில்லாத ஒரு கருத்து கணிப்பை நடத்தி, இவர்கள் குடும்பத்தில் யார் பலம் மிக்கவர்கள் என்பதை காட்டுவதற்கு அப்பாவி மூன்று பேர் பலியாக காரணமாக இருந்தார்கள்.  

 தமிழ் நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டார்கள், படுகிறார்கள். கிராமத்து பக்கம் 6 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தார்கள், இந்த திமுக ஆட்சி தொடங்கியது முதல் இன்று வரை இந்த மின்சார தட்டுபாடு தீர்ந்த பாடு இல்லை, மின்சாரம் இல்லாததை பற்றி (திமுக) அவர்கள் கவலைபட வில்லை.  

திமுகவை கேட்டால் சென்ற ஆட்சி தான் காரணம் என்று சொல்கிறார்கள்..அடுத்து வரும் ஆட்சியிலும் மின்சாரம் தட்டுபாடு தீரும் என்று தோன்றவில்லை, இவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்வார்கள், மின் பற்றா குறை இப்போது தீரும் அப்போது தீரும் என்று நமது அமைச்சர் AC அறையில் உட்கார்ந்து கொண்டு பேட்டி அளித்தார் ஆனால் இவர்கள் பாராட்டுவிழா, மாநாடு, கட்சி மீடிங், என்று செலவு செய்த மின்சாரத்தை சேமித்து இருந்தாலே பாதி தட்டுபாடு தீர்ந்து இருக்கும். 

அரிசி ஒரு ரூபாய்க்கு தருகிறார்கள் நல்ல விசயம் தான் ஆனால் அதை கடத்தி விற்பனை செய்பவர்களை அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது, எப்படி கண்டு கொள்வார்கள் திமுக கவுன்சிலர் முதல் அனைவரும் சேர்ந்து தான் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி கொண்டு போய் பக்கத்து மாநிலத்தில் 18 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது, இப்போது கடத்தலில் அதிகம் லாபம் பார்க்கும் கடத்தல் தொழில் இது தான் முதலிடம்.  இன்று ஒரு ரூபாய்க்கு ரேஷனில் அரசி தருகிறார்கள். சோற்றுக்கு செலவு ஒரு ரூபாயாக இருக்கலாம். ஆனால் ஒரு நாள் குழம்பு வைக்க சராசரியாக 50 ரூபாய்க்கு மேல் செலவாகிறது 


விலை வாசி உயர்வு சாமானிய மக்களால் சமாளிக்க முடியாத பிரச்சனையாக இருக்கிறது இந்த விலைவாசி உயர்வை கட்டுபடுத்த இந்த அரசு தவறி விட்டது, ஒரு நூல் அளவுக்கு கூட நடவடிக்கை எடுக்க வில்லை. விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல், டிசல் விலை உயர்வும் ஒரு காரணம், நான்கு, ஐந்து, முறை பெட்ரோல், டீசல், விலை உயர்த்தப் பட்டது திமுக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை இவர்கள் பதவி மட்டுமே முக்கியமாக இருந்தது, மக்கள் எப்படி கஷ்டப் பட்டாலும் இவர்கள் கவலை படவில்லை. 


ஈழ தமிழர்கள் பிரச்னையில் தமிழ் நாட்டில் கலைஞர் ஒருவரால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நம்பி கொண்டு இருந்த தமிழ் நாட்டு மக்களுக்கு இவர் ஒன்றுமே செய்யாதது பெரும் ஏமாற்றத்தை தந்தது .அப்போதே மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டு இருந்தால், பல லட்சம் மக்கள் உயிர் இழந்ததை தடுத்து இருக்கலாம் இவர்கள் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுகவை தடுத்து விட்டது. கண்துடைப்புக்கா மட்டுமே போராட்டம் நடத்தி வந்தார், மற்றும் புறாவுக்கு வேலை கொடுத்து கொண்டு இருந்தார்.    

     
பாராட்டு விழா: எத்தனை பாராட்டு விழா, எதற்கு இந்த பாராட்டு விழா. ஒரு அரசு அதன் கடமையை செய்கிறது அதற்க்கு எதற்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். பாராட்டு ஒரு மனிதனை ஊக்கப் படுத்தும் என்பது சரி தான் ஆனால் பாராட்டு விழாவுக்கே, ஒரு பாராட்டு விழா எடுத்தால் என்ன செய்வது, பாராட்டு விழாவில் ஒரு சலுகை வழங்குவார் அதற்க்கு ஒரு பாராட்டு விழா,


தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போதே அவர்கள் ஆட்சியின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று தெரிந்து விட்டது.. பணம் கொடுக்க வில்லை என்றால் அவர்களுக்கு ஓட்டு வரது என்று தெரிந்து கொண்டார்கள், அதனால் தான், சத்தியம் வாங்கி கொண்டு ஓட்டு போட சொன்னார்கள், அரசியல் வாதி பணம் கொடுத்து ஓட்டு வாங்கினால் கட்டாயம் ஆட்சிக்கு வந்து நல்லது செய்ய மாட்டார்கள் என்று  மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்






















Monday, September 6 92 comments

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பதிவர்கள்...


காயத்ரி  வீட்டு குட்டி பாப்பா தினமும் கதை சொன்னால் தான் தூங்க போவாங்களாம் அதற்கு குழந்தைக்கு ஒரு கதை சொல்லி, (அந்த குழந்தையும் ஒரு கதை சொல்லியது) அதை ஒரு பதிவா போட்டார்கள், போன மாசம் என்னையும் ஒரு தொடர் பதிவு எழுத சொல்லி சொன்னாங்க ..நேத்து போன் பண்ணி ஒரே திட்டு டேய் தொடர் பதிவு எழுத சொல்லி ஒரு மாசம் ஆச்சு என்ன செய்றே இந்த தேவா கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போயிட்டே மொக்க பதிவு எல்லாம் போடுறது இல்லை என்று சொல்லி சரியான திட்டு....அதுக்கு தான் இந்த பதிவு.

பதிவர்கள் எல்லாம் சேர்ந்து வண்டலூர் உயிரியில் பூங்காவுக்கு சென்றோம் அப்போ நடந்த விசயம் பற்றி தான் சொல்ல போகிறேன் 


அப்போ ஒரு காண்டா மிருகம் தன்னுடைய குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டு இருந்தது அப்போ அந்த குட்டி காண்டா மிருகம் மீது எல்லாம் ஒரே சாப்பாடு ஒட்டி இருந்தது. அதை தண்ணீர் போட்டு குளிக்க வைத்தது அம்மா காண்டா மிருகம், அப்போது கூட அந்த சாப்பாடு போகவில்லை உடனே அங்க இருந்த குரங்கு ஒரு ஐடியா சொல்லியது பேபி சோப்பு போட்டு குளிக்க வைத்தால் போய்விடும் என்று சொல்லியது குரங்கு..


பேபி சோப்பு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது என்று காண்டா மிருகம் சொல்லியது உடனே அங்க வந்த இருந்த பதிவர்களை பார்த்து ஓடியது ஒரு குரங்கு ...யார் நல்ல செல் போன் வைத்து இருக்கிறார்கள் என்று பார்த்தது LK விடம் இருந்த செல் போனை எடுத்து கொண்டு போய் காண்டா மிருகத்து கிட்ட யூடுப்பில் இருக்கும் விளம்பரத்தை போட்டு காட்டியது குரங்கு இங்க பாரு இது தான் பேபி சோப் நல்லா பாரு இந்த மாதிரி தான் சோப் வாங்கணும் என்று சொல்லியது. அது சரி ஆனா சோப் எங்க போய் வாங்குவது எப்படி வாங்குவது . அப்போ ஒரு குரங்கு சொல்லியது அங்க வர பதிவர்களிடம் சொல்லி ஒரு சோப்பு வாங்கி தர சொல்லுவோம் இல்லை என்றால் பணம் வாங்கி நாமளே வாங்கலாம்....  

முதலில் தன் போனை தேடி வந்தார், LK.. அப்போ அந்த குரங்கு சொன்னது எங்களுக்கு பேபி சோப் வாங்கி கொடுத்து விட்டு இந்த செல் போனை எடுத்து கொண்டு போங்க அப்படினு ஒரு குரங்கு சொல்லியது நம்ம LK: இப்படி லஞ்சம கேட்பது தப்பு ஒழுங்கா என்னுடைய போனை கொடுத்து விடுங்கள் என்று சொன்னார் LK. அதுக்கு இன்னொரு குரங்கு மச்சி இவர் செல் போனை கொடுத்து விடு இவர் வேலைக்கு ஆக மாட்டார். 


அடுத்து கோமாளி செல்வாவை தேடி சென்றது குரங்கு செல்வா சொன்னான் நான் சோப்பு வாங்கி தரேன் ஆனா என்னுடைய தினம் ஒரு மொக்கையை நீங்க கேட்க வேண்டும் அதற்கு அந்த குரங்கு தலையை சொரிந்து கொண்டே இது எல்லாம் எங்க தலைஎழுத்து... சொல்லி தொல....செல்வா : தேங்காய்க்குள்ள எப்படி தண்ணி வந்ததுன்னு தெரியுமா ..? குரங்கு எப்படி... எப்படி... யோசித்து கொண்டு இருந்தது செல்வா: ஏன்னா அது இளநீரா இருந்த போதே அதுல தண்ணி இருந்தது இதை பின்னாடி இருந்து கேட்டு கொண்டுயிருந்த சிங்கம் கடுப்பாகி செல்வாவை விரட்ட ஆரமித்தது...அந்த சிங்கத்திடம் இன்னொரு மொக்கை போட்டு அது வேற கதை 

அடுத்து நம்ம பட்டிக்காட்டான் jey: ஜெயிக்கு உள்ளே பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டவில்லை குரங்கை பார்த்து என்ன வேண்டும் உங்களுக்கு குட்டி காண்டா மிருகத்தை குளிக்க வைக்கணும் அதுக்கு சோப்பு வாங்க பணம் வேண்டும் என்று குரங்கு சொன்னது. ஜெய்: எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் ஜெய். பத்து ரூபாய் வேண்டும் ச்சே.. இந்த "கலைஞர்" ஆட்சியில் காண்டா மிருகத்திடம் கூட ஒரு பத்து ரூபாய் இல்லை...என்ன உலகம் இது...உடனே குரங்கு இங்கு அரசியல் பேச கூடாது, காசு இருந்த கொடுங்கள் இல்லை என்றால் விடுங்கள் குரங்கு ஜெய்யை பார்த்து கொண்டே இருந்தது சரி சரி பத்து ரூபாய் கொடுங்கள், என்று குரங்கு கேட்டது. உடனே ஜெய் "திடீர்" என்று அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன் என்னிடம் பணம் இல்லை. கடும் கோபத்துடன் குரங்குகள் வேறு பக்கம் சென்றது




terrorபாண்டியனை பார்த்ததும் குரங்குகள் அலறி அடித்து கொண்டு ஓடியது..உடனே ஜெய், 'அடப்பாவி முதலில் சேவிங் பண்ணுடா' என்று கத்தினார். அதற்கு, terror , ' பங்காளி எனக்கு பேங்க்ல கூட அக்கௌன்ட் கிடையாது, எப்படி சேவிங் பண்ண என்று கேட்டார்... ஜெய் உடனே தலையில் அடித்து கொண்டு , 'இது திருந்தவே திருந்தாது.... நான் எந்த சேவிங் பத்தி சொன்னா....?!! டேய் உங்களை திருத்தவே முடியாது....
               


அடுத்து தேவா வந்தார்...அப்போ குரங்கு, " சார்.. சார்..." என்று குரங்கு கூப்பிட்டது. நம்ம தேவா, ' இந்த பிரபஞ்சத்தின் அழகு கடவுளின் அற்புத படைப்பு ' என்று சொல்லி கொண்டே சென்றார்.... கொஞ்ச நேரம் கழித்து தான் குரங்கின் குரலே அவருக்கு கேட்டது ' என்ன வேண்டும் ' என்று தேவா கேட்டார். குரங்கு அதற்கு, ' சோப்பு வாங்க பணம் வேண்டும்' என்றது. உடனே தேவா இருங்க, 'நான் பணம் தருகிறேன், அதற்கு முன் என் கவிதை ஒன்றை கேளுங்கள்' என்று சொல்ல தொடங்கினார்....

மடிந்து போன புற இயக்கத்தின்
எச்சதில் மீந்திருக்கும்....
அடர்த்தியான மெளனத்தில்
புலன்கள் தீட்டிய ஓவியங்களின் 

கவிதை முடிந்ததும் திரும்பி பார்த்தார் தேவா குரங்குகள் அங்கு இல்லை இதுக்கு மேல் காத்திருக்க முடியாது என்று குரங்குகள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. நம்ம தலைவரிடம் போய் சொல்லாம் என்று சிங்கத்தை பார்க்க சென்றது குரங்கு சிங்கத்திடம் நடந்த விசயத்தை கூறியது. இங்கு வந்து இருக்கும் பதிவர்கள் எல்லாம் பணம் கேட்டால் மொக்கை போடுறாங்க ராஜா நீங்க தான் இவர்களிடம் இருந்து பணம் வாங்கி தரனும் சிங்கம் வருவதை பார்த்த அருண் சிங்கத்தை போட்டோ எடுத்தார் சிங்கம் பயந்து போய் இவர்களை விரட்ட ஆரம்பித்தது அருண் அந்த கேமராவை கிழே போட்டு விட்டு ஓடினார். ஜெய் அவர் லாப்டாப் அப்படியே போட்டு விட்டு ஓடினார்.  எப்படியோ ஜெய்யை விரட்டி பிடித்தது சிங்கம்.. மிரட்டி பத்து ரூபாயையும் வாங்கி விட்டது சிங்கம்...!

அந்த பத்து ரூபாய் எடுத்து கொண்டு போய் சோப் வாங்கி வந்தது குரங்கு. காண்டா மிருகத்திடம் சோப்பை கொடுத்தது. சோப்பை வாங்கி கொண்டு சந்தோஷமாக சென்றது காண்டா மிருகம். குட்டி காண்டா மிருகம் குளிப்பதை குரங்கு வீடியோ (அருண் விட்டு சென்ற கேமரா) எடுத்து  கொண்டு இருந்தது... எப்படியோ குட்டி காண்டா மிருகத்தை குளிக்க வைத்து விட்டோம் என்று காண்டா மிருகமும், குரங்கும் பெரு மூச்சு விட்டது....எடுத்த வீடியோவை சிங்கம் ஜெயின் லாப்டாப் எடுத்து யூடுப்பில் அப்லோடு செய்தது. சிங்கம்




Friday, September 3 47 comments

திமுக சாதனைகளும் வேதனைகளும் - part I




திமுக அரசு சாதனைகள் பல செய்தாலும் கொஞ்சம் வேதனைகளும் இருக்கிறது முதலில் சாதனைகள் பற்றி பார்போம். அடுத்து வரும் பதிவில் வேதனைகளை  பற்றி பார்ப்போம்.







முதல் அமைச்சராக பதவி ஏற்ற மேடையிலே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குவதாக ஆணையிட்டார். இரண்டு ரூபாய்க்கு வழங்கிய அரிசியை ஒரு ரூபாய் என்று குறைத்தார். 

சென்ற ஆட்சியில் மக்கள் இப்படி பேசி கொண்டு இருந்தார்கள். ' விலைவாசி தான் ஏறிப்போச்சி. இந்த அரசாங்கம் ரேஷனில் போடும் அரிசி விலையை மட்டும் குறைத்து போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் ' என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்..ஆனால் இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி  விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் . நமக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் நாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்போம்...அது தான் மனித இயல்பு .


அரிசியை குறை சொல்லும் மக்கள் அரிசியில் பூச்சி, புழு எல்லாம் இருக்கிறது. இதை எப்படி சாப்பிடுவது..? என்று கேட்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு எங்கு அரிசி கிடைக்கிறது. நல்ல தரமான அரிசி. ஊர் பக்கம் எல்லாம் இந்த அரிசி தான் உபயோக படுத்துகிறார்கள், இங்கு நகரத்து பக்கமும இந்த அரிசியை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

மக்கள் இந்த அரிசியை வாங்கி வெளியே விற்பனை செய்கிறார்கள் ஒரு ரூபாய்க்கு வாங்கி அதை ஐந்து ரூபாய்க்கு விற்று விடுகிறார்கள். அரசு தரும் எந்த பொருளையும் விற்பனை செய்ய கூடாது. நமக்கு அந்த அரிசி பிடிக்க வில்லை என்றால் அரிசி  வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட வேண்டும்   

ரேஷனில் துவரம் பருப்பு, முதல் அணைத்து பருப்பு வகைகள், தானியங்கள் எல்லாம் வெளி சந்தையில் விற்பனை செய்வதை விட பத்து ரூபாய் குறைந்த விலையில் கிடைகிறது....

திமுக. தேர்தல் அறிக்கையில் டிவி தருகிறோம் என்று சொன்னவுடன் எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.  ஆனால் அவர்கள் வந்து செய்து காட்டி விட்டார்கள்.  ஒரு சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து வெளியே விளையாடி கொண்டு இருந்தாள் அப்போது பக்கத்து ஒரு வீட்டின் ஜன்னலில் வழியாக டிவி பார்த்து கொண்டு இருந்தாள்...அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனே டிவி அணைத்து  விட்டார்கள்....ஆனால் இப்போ அந்த சிறுமி தன் வீட்டிலே டிவி பார்க்கிறாள் என்றால் அரசு கொடுத்த டிவி தான் காரணம்.

அடி தட்டு மக்கள் ஒரு டிவி வாங்குவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.  ஒருவர் வீட்டுக்கு சென்று டிவி பார்க்கும் பொழுது அந்த வீட்டில் இருப்பவர்கள் டிவியை அணைத்து விட்டால் நமக்கு கன்னத்தில் அறைவது போல இருக்கும்..எந்த பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் டிவி வழங்கபடுகிறது 


டிவியை குறை சொல்லும் மக்கள் : டிவி வெடித்து விடும் அங்கே வெடித்து விட்டது இங்கே வெடித்து விட்டது என்று சொல்வார்கள் எங்கும் வெடிக்க வில்லை. எங்கள் வீட்டில் அரசு வழங்கிய டிவி இருக்கிறது அது ஒன்றும் ஆகவில்லை நன்றாக தான் இருக்கிறது. எங்க சொந்தகாரங்க வீட்டிலும் அரசு வழங்கிய டிவி இருக்கிறது அவர்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

இந்த டிவியை வெளியே வாங்குவதற்கு போட்டியே நடைபெறுகிறது எங்க வீட்டில் இருக்கும் டிவியை எத்தனையோ பேர் விலைக்கு கேட்டார்கள் நாங்கள் அதை விற்பனை செய்யமாட்டோம் என்று சொல்லி விட்டோம் வெளியே ஒரு பொருள் அனைவராலும் விரும்ப படுகிறது என்றால் அது நல்ல தரமான பொருள் என்று தான் அர்த்தம்

விவசாய கடன் 3000 கோடிக்கு மேல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது கிராமத்தில் எல்லாம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடிய வில்லை என்றால் அது மானப் பிரச்னை ஆகிவிடும், கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிலர் தற்கொலை எல்லாம் செய்து இருக்கிறார்கள்.விவசாயி கடன் தள்ளுபடி என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது போல செய்தார்கள் பாராட்ட பட வேண்டிய விசயம்.



கலைஞர் காப்பீட்டு  திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எத்தனையோ குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார்கள். வீட்டில் ஒருவருக்கு இந்த கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை வைத்து இருந்தால் போதும் நாம் குடும்பத்தில் உள்ள அணைவரும் பயன் பெறலாம். எல்லோரும் இப்போ கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் அடையாள அட்டை தேவை என்று காத்து இருக்கின்றனர்.  

இன்னும் கேஸ் அடுப்பு, குழந்தை பிறந்தால் 5000 ரூபாய் பணம், முதியோர் பணம் 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்த பட்டது மற்ற ஆட்சியில் எல்லாம் வெறும் வேதனைகள் மட்டும் தான் இருக்கும் ஆனால் இந்த ஆட்சியில் சாதனைகளும் இருக்கிறது 
    
வேதனைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...




Wednesday, September 1 28 comments

அரசியல் நான் சொல்வது எல்லாம் உண்மை







                                             அம்மா.. நீங்க காண்பது கனவு... 











                                  இமயமலை தொகுதி இவருக்கு தான்







தமிழ் நாட்டில் மக்கள் சொல்லனா துயரத்தில் உள்ளார்கள்...அம்மா....அம்மா.. இப்படி சிரிக்காதிங்க சிரித்தால் நான் சொல்வது பொய் என்று நினைத்து விடுவார்கள்






                               


               நானும் அரசியல் வாதி தான்.... நான் சட்டசபைக்கு போறேன்.. 
                                         சட்டசபைக்கு போறேன்...




                      தம்பி போங்க தம்பி போங்க நல்லா கிளப்புறாங்க பீதியை 








 நீ கடைசியா என்ன தான் சொல்ல வர அட இந்த போட்டோ தான் அதுக்கு பதில்






 
;