Tuesday, September 14

இவன் தான் எந்திரன்....
ரஜினியின் கதை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும்.தொடக்கத்தில் ஏழையாக இருந்து மீண்டும் பணக்காரர் ஆவார். இப்படித்தான் படத்தின் கதைகள் இருக்கும். அப்படி இருந்தும் அடுத்த படம் என்ன கதையாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.


எப்போதும் ரஜினி படம் வந்தாலே அனைவருக்கும், ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல எந்திரன் படத்திற்க்கு இரண்டு மடங்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது. முதலில் இந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரித்தது, பட்ஜெட்உயர்ந்து கொண்டே சென்றதால், படம் பாதியில் நின்றது. அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்தது. 


இசை வெளியிட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியிட்டார்கள். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது 


150 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது எந்திரன், இதுவரையில் எந்த இந்திய திரைப்படமும் செய்யாத சாதனையை எந்திரன் எட்டியுள்ளது. ஏற்கனவே தமிழில் பெரும் தொகைக்கு விற்பனையான எந்திரன் படம், தெலுங்கில் 33 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஒரு மொழி மாற்று திரைப்படம் இந்த அளவுக்கு விற்பனை. ஆனது இது தான் முதல் முறை, கன்னட உரிமை சுமார் 9.5 கோடி, விற்பனை ஆனது, மலையாளத்தில் ஆறு கோடிக்கு வாங்கியுள்ளனர். இது மம்முட்டி, மோகன்லாலின் நேரடிப் படங்களை விட எந்திரன், அதிக விலைக்கு வாங்கப்பட்டு உள்ளது, கேரளாவில் மொழி மாற்றம் செய்யாமல் அப்படியே தமிழில் வெளியிட போவதாக தெரிவித்து உள்ளனர்.


ஒரு படத்தில் வில்லனுக்கு, ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரம் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த படத்தின் விறு விறுப்பு அதிகமாக இருக்கும். வில்லன் டேனி டென்சொங்கப்பா ஹிந்தி திரையுலகில் பெரியநடிகர், பிரபலப் படமான குர்பானியில் நடித்து இருக்கிறார், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்கிறார்,


எல்லோரும் படத்தின் கதை எப்படி இருக்கும் என்று அள்ளி விடுகிறார்கள், ஏதோ எனக்கு தெரிந்ததை நானும் சும்மா அள்ளி விடுகிறேன்.ரஜினி விஞ்ஞானி (ஆமா இது யாருக்கும் தெரியாது ) பத்து வருட கடின உழைப்பில் ஒரு ரோபோவை உருவாக்குகிறார், அந்த ரோபோவிற்கு மனிதனுக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கிறது, ரோபோ ஐஸ்வரியாவை காதல் செய்கிறது, அப்போது ஒரு கனவு பாட்டு, அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன் போல பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா? .....


ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினியின் பேச்சை கேட்க மறுக்கிறது, ரஜினிக்கே துரோகம் செய்கிறது எல்லாம் காதல் படுத்தும் பாடு, வில்லனும் ரோபோவும் ஒரு ஒப்பந்ததிற்க்கு வருகிறார்கள் "நீ " நான் சொல்வதை கேட்டால் உன்னை ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்கிறேன், என்று வில்லன் சொல்கிறார் அதை நம்பி வில்லன் சொல்வதை கேட்டு மக்களுக்கு எதிராக செயல் படுகிறது ரோபோ, எல்லா வேலைகளும் முடிந்தவுடன் வில்லன் ரோபோவை அழித்து விடுகிறார்.


ரோபோ ரஜினியிடம் சென்று உதவி கேட்கிறது என்னை காப்பாற்றுங்கள், என்று கேட்க்கிறது ரஜினி மீண்டும் அந்த ரோபோவை சரி செய்து தன் திறமையை நிருபித்து, எப்படி வில்லனை அழித்தார் என்பது தான் மீதி கதை. இந்த மாதிரி கதை கண்டிப்பா இருக்கவே இருக்காது...ஒழுங்கா போய் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


*  படத்தின் பலம்: ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யா பச்சன், சன் பிக்சர், A.R ரஹ்மான், அமரர் சுஜாதா, ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சந்தானம், கருணாஸ்.


*  படத்தின் பலவீனம் : பெரிய பட்ஜெட்

*  தயாரிப்பாளருக்கு நிச்சயம் லாபம் கிடைத்து விடும் ஆனால் இந்த படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் தான் 43 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

உங்கள் கற்பனை திறன் நல்ல தான் இருக்கு

Thomas Ruban said...

//தயாரிப்பாளருக்கு நிச்சயம் லாபம் கிடைத்து விடும் ஆனால் இந்த படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் தான் //

உண்மைதான் நண்பா...

Kousalya said...

//ஒழுங்கா போய் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.//

படம் பார்த்துட்டு வந்து தான் உன்னை செமத்தியா கவனிக்கணும்....

:)

அருண் பிரசாத் said...

அட பல புதிய தகவல்கள்.....

எங்க இருந்து இதை எல்லாம் பிடிச்சீங்க செளந்தர்!

இம்சைஅரசன் பாபு.. said...

திரும்பி திரும்பி ஆங்கில வார்த்தையை அதாவது ரோபோ என்று எழுதி இருக்கிறீர்கள் .
அழகான தமிழ் பெயர் எந்திரன் அப்படின்னு போட்டு இருக்கலாம் இல்லையா சௌந்தர்

dheva said...

தலிவர் படம் ட்ரெய்லர் பாத்துட்டே இன்னும் நார்மல் மூடுக்கு வர முடியல....எந்திரன் ஃபீவர் கன்னா பின்னானு இருக்கு...எவ்ளோதான் குறை சொன்னாலும்...படத்தை எல்லோருமே எதிர்பார்ப்பதுதான் உண்மை....

சரி தேசத்தின் வளர்ச்சிக்கும், இன்ன பிற விசயத்துக்கும் இதுனால என்ன லாபம்...அப்படின்னு சில பேரு கேக்குறாங்க... சிரிப்புதான் வருது....

செலவு பண்ணி படம் எடுக்குறது அவுங்கப்பா.. அது என்டெர்டெயின்ட்மென்ட்...அன்ட் போய் பாத்துட்டு ஜாலிய நல்லா இருந்த வெளில வந்து நல்லாருக்குன்னு சொல்லுவோம் இல்லேன்ன்னா ஊத்திகிச்சு மாமுன்னு சொல்லிட்டு போய் கிட்டே இருப்போம்...


ஏற்கனவே சூப்பர்ஸ்டாருன்னா ஸ்பீடு...இதுல எந்திரனா வேற நடிக்கிறாரு....ட்ரெய்லர்ல எத்தனையோ கெகா பைட்ஸ்னு சொல்லும் போது பிபி சல்லுன்னு ஏறுது......

அச்சச்சோ.. உன் எந்திரன் போஸ்ட் பாத்தவுடனே உடம்பு எல்லாம் உதறுதே.... நான் என்ன பண்ண்றேன்னு எனக்கே தெரியலையே...தலைவாவாவான்னு கத்தணும் போல இருக்கே......

இருப்பா...இன்னொரு தபா படிச்சுட்டு வர்றேன்...!

dheva said...

//படம் பார்த்துட்டு வந்து தான் உன்னை செமத்தியா கவனிக்கணும்....///

கெளசல்யா @என்ன செமத்தியா கவனிக்கனும்னா...என்ன அர்த்தம்....! படத்த கவனிச்சு பாருங்க கடைசியா கேள்வி எல்லாம் கேக்குறாங்களாம்...பதில் சொன்னா பரிசு எல்லாம் தர்றாங்களாம்...!

இம்சைஅரசன் பாபு.. said...

அட பாவி படம் இறங்குவதற்கு முன் இப்படி திரை விமர்சனம் பண்ணினால் விநியோகஸ்தர் கள் தலைல துன்டத்தான் போடணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உனக்கு எந்திரன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் நாயாக சுற்ற வாழ்த்துக்கள்...

Shameer said...

UNKITTA IRUNTHU INNUM NIRAIYA ETHIRPARKIREN......

APPUDIYE TRAILER LINK KODUTHIRUKKALAAME THAMBI...

Gayathri said...

சினிமா பார்த்து கதை சொல்லி விமர்சனம் பார்துருக்கேன்..இப்படி டிரெய்லர் பார்த்து கதை சொல்லி விமர்சனம் இபோதன் பாக்றேன்..சூப்பர்..

உங்க கதையே நல்லாத்தான் இருக்கு..

இம்சைஅரசன் பாபு.. said...

//ரஜினியின் கதை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும்.தொடக்கத்தில் ஏழையாக இருந்து மீண்டும் பணக்காரர் ஆவார்//
இப்படி சொல்லி சொல்லியே எங்க தலைவர் இமேஜ் அ ஸ்பாயில் பண்ணுவாங்க .போன படத்துல சிவாஜில அவர் எப்படி வந்தார் ?சௌந்தர்

ப.செல்வக்குமார் said...

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
உங்கள் கற்பனை திறன் நல்ல தான் இருக்கு

///
அட பாவமே .. அவன் சொன்ன்னது எந்திரன் படத்தோட கதை .. இப்படியெல்லாம் கிளப்பி விடாதீங்க ..!!

சௌந்தர் said...

Shameer நீங்க இன்னும் Trailer பார்க்க வில்லை என்று சொன்னதால் Trailer இணைத்து விட்டேன்

ப.செல்வக்குமார் said...

//சரி தேசத்தின் வளர்ச்சிக்கும், இன்ன பிற விசயத்துக்கும் இதுனால என்ன லாபம்...அப்படின்னு சில பேரு கேக்குறாங்க... சிரிப்புதான் வருது....//

ஐயோ சாமி இவுங்க எப்பத்தான் திருந்துவாங்களோ ..?? ஒரு படம் எடுத்தா பிடிச்சிருந்தா போய் பார்க்கணும் .. பிடிக்கலேன்னா விட்டுடனும் .. எத பண்ணினாலும் சமுதாயத்துக்கு என்ன பண்ணுனீங்க அப்படின்னு கேட்டா என்ன பண்ணுறது ..?

வில்சன் said...

நல்லா இருக்கு தம்பி உன் விமர்சனம். அவனவன் கஷ்டப்பட்டு படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுவான். நீ ஐஸ்‍வர்யா போஸ்டரை பார்த்தே சொல்லிட்டியே....கண்டிப்பா இதை தழுவியே தான் கதை இருக்கும் என்று எனக்குள்ளே ஒரு பட்சி சே... ஒரு ஆக்டோபஸ் சொல்லுது.

இம்சைஅரசன் பாபு.. said...

//நல்லா இருக்கு தம்பி உன் விமர்சனம். அவனவன் கஷ்டப்பட்டு படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுவான். நீ ஐஸ்‍வர்யா போஸ்டரை பார்த்தே சொல்லிட்டியே....கண்டிப்பா இதை தழுவியே தான் கதை இருக்கும் என்று எனக்குள்ளே ஒரு பட்சி சே... ஒரு ஆக்டோபஸ் சொல்லுது.//

பட்சி எல்லாம் சொல்ல வேண்டாம் வில்சன் சார் அது தான் கதை.trailor வெளியீடு விழாவில் வைரமுத்து சொன்னதை கேட்கவில்லையா இது ஒரு முகோண காதல் கதை

Jey said...

voted. post reading and comments after 2 days...:)

TERROR-PANDIYAN(VAS) said...

அது எப்படி?? திருவள்ளுவருக்கு மட்டும் சிலை வைக்கலாம் ஜார்ஜ் புஷ்க்கு வச்சா தப்பா? உங்க கருத்து தப்பு...

இம்சைஅரசன் பாபு.. said...

//voted. post reading and comments after 2 days...//

அண்ணன் மொக்கை சாமீ (செல்வா) வந்துருக்காக ......அண்ணன் தேவ்ஹா வந்துருக்காக............அண்ணன் ....terror வந்துருக்காக......நீங்க ஒருத்தருதான் பாக்கி

என்னது நானு யாரா? said...

பார்போம் சௌந்தர்! நீங்க சொன்ன மாதிரி //படத்தின் பலவீனம் : பெரிய பட்ஜெட்// அப்படி தான் நானும் நினைக்கின்றேன்.

படம் ஜெயிச்சதன்னா, அது ஒரு Trend Setter-ஆ இருக்கும்! Failure ஆச்சின்னா மொத்த தமிழ் சினிமாவுக்கே அது Damaging ஆ இருக்கும்.

//இந்த மாதிரி கதை கண்டிப்பா இருக்கவே இருக்காது...ஒழுங்கா போய் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.//

அப்படி இருக்காதுன்னா அப்புறம் எதுக்காக கஷடபட்டு கதையை சொன்னீங்க சௌந்தர்? நானும் ஏதோ சங்கர் உங்களுக்கு மட்டும் கதையை லீக் பண்ணிட்டாரோ இல்லை Wikileaks-லே இதை பத்தி லீக் பண்ணிட்டாங்களோன்னு நினைச்சிட்டேன்.

Balaji saravana said...

ட்ரைலர் சும்மா பட்டய கிளப்புது..
படம் கண்டிப்பா சில்வர் ஜூபிலி தான் :)

வெறும்பய said...

படம் பாத்திட்டு சொல்றேன் நண்பா... எப்படியாவது டிக்கட் கிடைக்கணுமுன்னு வேண்டிக்கிட்டே இருக்கேன்... மாச கடைசியில வேற வருது.. என்ன பண்ண போறனோ...

Anonymous said...

Bicentinental man padathoda copy than enthiran

Anonymous said...

>

Jeyamaran said...

*/ படத்தின் பலவீனம் : பெரிய பட்ஜெட்/*
அருமை

*/ தயாரிப்பாளருக்கு நிச்சயம் லாபம் கிடைத்து விடும் ஆனால் இந்த படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் தான் /*

அப்பறம் விஜய் நிலைமைதான் ரஜினிக்கும்

Ananthi said...

///இந்த மாதிரி கதை கண்டிப்பா இருக்கவே இருக்காது...ஒழுங்கா போய் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.////

அட பாவமே... எவ்ளோ சீரியஸ்-சா கதை படிச்சிட்டு இருக்கேன்.. இதெல்லாம் எதுவும் படத்தில் இல்லியா?? :D :D

சரி விடுங்க.. நீங்க ஒரு பட்ஜெட் போட்டு.. தலைவர வச்சு ஒரு படம் எடுத்திருங்க.. இப்போ சொன்னிங்களே அந்த கதைய வச்சு தான்... :-))))

Chitra said...

http://en.wikipedia.org/wiki/Danny_Denzongpa

...I don't know whether he acted in Qurbani.

அப்பாவி தங்கமணி said...

Trailere summa adhirudhalla... to add more we have 2 oscarists in this project (A.R. Rahman & Rasool). Can't wait to see... super post

ஹேமா said...

சௌந்தர்...நல்லா கதை விடுறீங்க !

சுசி said...

ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன்.

ஆனந்தி.. said...

சௌந்தர்..அநேகமா ஒரிஜினல் எந்திரன் கதையை விட நீங்க யோசிச்ச கதை கொஞ்சம் லாஜிக்கா இருக்கு..எதுக்கும் உங்க கதைக்கு காபி ரைட் வாங்கி வட்சுக்கொங்க..அடுத்து இதே கதையை சின்ன பட்ஜெட் இல் நம்ம மன்சூர் அலிகானை ;-))அல்லது கஞ்சா கருப்பை ஹீரோ வா போட்டு எடுத்துருக்காங்க...எப்புடி...??

Anonymous said...

நீங்க யூகித்த கதை தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக, ரஜினி படங்களில் கதை பெரிதாக இருக்க அவசியம் இல்லை.
காலாநிதி மாறனை பொறுத்த வரை, நல்ல வியாபாரம் செய்வது குறிக்கோள். நூற்றி ஐம்பது கோடி என்று வெளிப்படையாக கூறினால், எப்படியும் இருநூறு கோடியாவது போட்டு இருப்பார்கள். ஏழு கோடி தமிழ் மக்களிடம் எப்படி பணத்தை மீட்பார்கள் என்பது தெரியவில்லை.
சில வருடங்களுக்கு முன் மிக பிரமாண்ட மாக வந்த கமலின் "ஆளவந்தான்" வந்த இடம் தெரியாமல் பெட்டியுள் சுருண்டு கொண்டது.
நீங்கள் கூறியது போல் எப்படியும், கலாநிதி பணத்தை எடுத்து விடுவார். ஒன்றையணா படத்துக்கே சன் டிவியில் செய்யும் விளம்பரம் தாங்க முடியவில்லை. "இந்திரன்" வந்த பிறகு என்ன பாடு படுத்த போகிறார்களோ?

என்னது நானு யாரா? said...

ஏன் சௌந்தர், எங்களின் கருத்துக்களுக்கு பதில் இடுவதில்லை?

எங்களின் கருத்தை அறிவதில் உங்களுக்கு ஆவல் இல்லையா? அதே போல் எங்களின் கருத்தை பற்றி உங்களின் கருத்தை அறிய, நாங்கள் ஆவல் கொண்டுள்ளோம் நண்பா!

அதனால் நீங்கள் எங்களின் கருத்துக்கு பதில் இட வேண்டுகிறேன்.

ஸ்ரீராம். said...

படத்தின் பட்ஜெட் பற்றி நீங்கள் சொல்லியுள்ளதுதான் எனக்கும் தோன்றியது. அது எத்தனை கோடிக்கு விற்றால் என்ன, யாருக்கு லாபம் என்பதுதான் முக்கியம்.நமக்கல்ல! டேனி யாதோன் கி பாராத்தில் நடித்துள்ளார். குர்பானியில் அல்ல.

சௌந்தர் said...

என்னது நானு யாரா? சொன்னது…
ஏன் சௌந்தர், எங்களின் கருத்துக்களுக்கு பதில் இடுவதில்லை?

எங்களின் கருத்தை அறிவதில் உங்களுக்கு ஆவல் இல்லையா? அதே போல் எங்களின் கருத்தை பற்றி உங்களின் கருத்தை அறிய, நாங்கள் ஆவல் கொண்டுள்ளோம் நண்பா!

அதனால் நீங்கள் எங்களின் கருத்துக்கு பதில் இட வேண்டுகிறேன்./////

@@@என்னது நானு யாரா?
என்ன இப்படி சொல்லிட்டிங்க எனக்கு கமெண்ட் படிக்கும் ஆவல் எல்லாம் இருக்கு, இனி தொடர்ந்து பதில் கமெண்ட் போடுறேன், நன்றி உங்கள் கருத்துக்கு

ஜெயந்தி said...

ஆஹா திரைக்கதையெல்லாம் எழுதறீங்களா? கோடம்பாக்கத்துல கூப்புறாங்களாம்.

சௌந்தர் said...

சௌந்தர் சொன்னது…
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
திரும்பி திரும்பி ஆங்கில வார்த்தையை அதாவது ரோபோ என்று எழுதி இருக்கிறீர்கள் .
அழகான தமிழ் பெயர் எந்திரன் அப்படின்னு போட்டு இருக்கலாம் இல்லையா சௌந்தர்////

@@@இம்சைஅரசன் பாபு..

இங்க தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று இல்லையே....
Thomas Ruban வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே


Kousalya சொன்னது…
//ஒழுங்கா போய் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.//


படம் பார்த்துட்டு வந்து தான் உன்னை செமத்தியா கவனிக்கணும்....////

@@@Kousalya சொன்னது…
எதுவா இருந்தாலும் பேசிதீர்த்துக் கொள்லாம், நன்றி உங்கள் வருகைக்கு


அருண் பிரசாத் சொன்னது…
அட பல புதிய தகவல்கள்.....
எங்க இருந்து இதை எல்லாம் பிடிச்சீங்க செளந்தர்!///நன்றி அருண் பிரசாத் எல்லாம் படித்து தெரிந்து கொண்டது தான்

சௌந்தர் said...

@@@தேவா ரொம்ப ஆர்வமா இருக்கிங்க போல நன்றி உங்கள் கருத்துக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
உனக்கு எந்திரன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் நாயாக சுற்ற வாழ்த்துக்கள்ரொம்ப நன்றி ரமேஷ் எங்களுக்கு டிக்கெட் எல்லாம் தேவை இல்லைஉங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி Gayathriகருத்துக்கு நன்றி செல்வா


@@@@வில்சன் சொன்னது…
நல்லா இருக்கு தம்பி உன் விமர்சனம். அவனவன் கஷ்டப்பட்டு படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுவான். நீ ஐஸ்‍வர்யா போஸ்டரை பார்த்தே சொல்லிட்டியே....////

உங்களுக்கு எப்படி இந்த உண்மை தெரிந்தது

கண்டிப்பா இதை தழுவியே தான் கதை இருக்கும் என்று எனக்குள்ளே ஒரு பட்சி சே... ஒரு ஆக்டோபஸ் சொல்லுது./////

நானும் அப்படி தான் நினைக்கிறேன் நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு

சௌந்தர் said...

Jey சொன்னது…
voted. post reading and comments after 2 days...:)////வாங்க jey இப்போ உடம்பு எப்படி இருக்கு அவ்ருகைக்கு நன்றி அண்ணாTERROR-PANDIYAN(VAS) சொன்னது…
அது எப்படி?? திருவள்ளுவருக்கு மட்டும் சிலை வைக்கலாம் ஜார்ஜ் புஷ்க்கு வச்சா தப்பா? உங்க கருத்து தப்பு...///

நீங்க என்ன சொல்றிங்க புரியலை terror வருகைக்கு நன்றிவருகைக்கு நன்றி Balaji saravanaவெறும்பய சொன்னது…
படம் பாத்திட்டு சொல்றேன் நண்பா... எப்படியாவது டிக்கட் கிடைக்கணுமுன்னு வேண்டிக்கிட்டே இருக்கேன்... மாச கடைசியில வேற வருது.. என்ன பண்ண போறனோ..///

கண்டிப்பா பார்த்து விட்டு சொல்லுங்க டிக்கெட் கிடைக்க வாழ்த்துக்கள்பெயரில்லா சொன்னது…
Bicentinental man padathoda copy than enthiran///

@@@பெயரில்லா சொன்னது…

இந்த படத்திற்கும் எந்திரன் படத்திற்கும் சம்பதம் இல்லை வருகைக்கு நன்றி நண்பரேJeyamaran சொன்னது…
*/ படத்தின் பலவீனம் : பெரிய பட்ஜெட்/*
அருமை

*/ தயாரிப்பாளருக்கு நிச்சயம் லாபம் கிடைத்து விடும் ஆனால் இந்த படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் தான் /*

அப்பறம் விஜய் நிலைமைதான் ரஜினிக்கும்////ரஜினிக்கு அந்த நிலைமை வராது கருத்திற்கு நன்றி ஜெய மாறன்

சௌந்தர் said...

@@@@Ananthi சொன்னது…


அட பாவமே... எவ்ளோ சீரியஸ்-சா கதை படிச்சிட்டு இருக்கேன்.. இதெல்லாம் எதுவும் படத்தில் இல்லியா?? :D :D////

இந்த கதையும் இருக்கும்


சரி விடுங்க.. நீங்க ஒரு பட்ஜெட் போட்டு.. தலைவர வச்சு ஒரு படம் எடுத்திருங்க.. இப்போ சொன்னிங்களே அந்த கதைய வச்சு தான்... :-)))

நீங்க 100 கோடி கொடுங்கள் கண்டிப்பா எடுக்கலாம் நன்றி உங்கள் வருகைக்கு

சௌந்தர் said...

உங்கள் தகவலுக்கு நன்றி Chitra

வருகைக்கு நன்றி அப்பாவி தங்கமணி

நன்றி ஹேமா

நன்றி சுசி

ஆனந்தி.. சொன்னது…
சௌந்தர்..அநேகமா ஒரிஜினல் எந்திரன் கதையை விட நீங்க யோசிச்ச கதை கொஞ்சம் லாஜிக்கா இருக்கு..எதுக்கும் உங்க கதைக்கு காபி ரைட் வாங்கி வட்சுக்கொங்க..அடுத்து இதே கதையை சின்ன பட்ஜெட் இல் நம்ம மன்சூர் அலிகானை ;-))அல்லது கஞ்சா கருப்பை ஹீரோ வா போட்டு எடுத்துருக்காங்க...எப்புடி...?////

@@@ஆனந்தி..

நீங்க பணம் போட்டால் நாங்க ரெடி வருகைக்கு நன்றி :)sweetsarath நீங்கள் சொல்வது சரி தான் வருகைக்கு நன்றி நண்பா

@@@ஸ்ரீராம். தகவலுக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

உங்கள் வருகைக்கு நன்றி ஜெயந்தி

அண்ணாமலை..!! said...

கடைசியில சொன்னது ..
ரொம்ப உணமைங்க!

 
;