விடியற் காலை மணி 5 இருக்கும் மாரிமுத்து எழுந்து..காமாட்சியை கூப்பிட்டு ஆத்தங்கரைக்கு போனாருங்க....போய் காமாட்சியை நல்லா குளிக்க வைச்சு...நெத்தியில் மஞ்சள் குங்குமம் எல்லாம் வைச்சு...அழகு பாத்தாருங்க... ஏன்னா அந்த காட்சியால தான் அவர் பொழப்பே ஓடுது. காமாட்சி தர்ற பாலை வைத்து தான் மாரிமுத்து பொழப்பு நடத்துறார்.
அட இருங்க இருங்க இது மாரிமுத்து கதையில்லை, காமாட்சி யோட கதை. ஆமாங்க முதலில் காமாட்சி எங்க இருந்தது..என்ன செய்தது அதப்பத்தின கதை.
மாரிமுத்து..காமாட்சிக்கு அலங்காரம் செய்து முடிச்சி ஏய்..என அதட்டினார்...காமாட்சி ஏதோ நினைவில் நின்று கொண்டு இருந்தது. காமாட்சி முதுகில் ரெண்டு போட்டு மீண்டும் ஏய் என்றார்.. மாரிமுத்து..உடனே தன் நினைவை உணர்ந்து கொண்டு நடந்து சென்றது.. வீட்டிற்கு வந்ததும்..மாரிமுத்து தன் வேலையை தொடர்ந்தார்...இந்த காமாட்சி ரெண்டு வேளை இருபது லிட்டர் பால் தருது என சந்தோசமாக சொல்லி கொண்டே பால் கறந்து கொண்டு இருந்தார்...
காமாட்சி நினைவெல்லாம் தன் பழைய வாழ்க்கையில் இருந்தது. நான் எப்படி எல்லாம் இருந்தேன் என நினைத்து பார்த்து கொண்டு இருந்தது . காட்டில் தன் நண்பர்களோடு ஜாலியா காட்டை எப்படி எல்லாம் சுற்றி கொண்டுயிருந்தேன் இப்போது...ஒரு அடிமை போல் ஆகிவிட்டேன்...இந்த நிலைமைக்கு காரணம் அந்த மணி தான் ....
அந்த காட்டில் சிங்கம் புலி எல்லாம் கிடையாது அனைத்தும் அழிந்து போய் விட்டது மாடுகளின் ராஜ்ஜியம் தான் அந்த காட்டில் நான்கு மாடுகள் அவைகள் இணைபிரியாத நண்பர்களாக சுற்றி கொண்டு இருக்கும். ராஜன் கோபி முகில், சந்துரு, என நான்கு நண்பர்கள்..இவர்களை பார்த்தால் அந்த காட்டில் அனைவருக்கும் சிறிது பயம் ஏற்படும் அது இவர்களின் வீரமும் ஒற்றுமையும், அதில் ராஜன் எப்போதும் எதிர்காலம் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கும், முகில்க்கு எப்போதும் எந்த கவலையும் இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கும், கோபி எங்காவது சாப்பாடு கிடைக்குமா என பார்த்து தன் நண்பர்களை கூப்பிட்டு செல்லும், அதை தவிர கோபிக்கு ஒன்றும் தெரியாது, இவை அனைத்தையும் இப்போது தான் சந்துரு கற்று வருகிறான்.
ஒரு நாள் கோபி ஊர் சுற்றி விட்டு வந்து கொண்டு இருந்தது "ஒரு மூன்று கிலோ மீட்டர் அந்த பக்கம் நல்ல உணவு இருக்கிறது அங்கு சென்றால் நல்லா சாப்பிட்டு வரலாம்" என்றது கோபி, அதற்கு முகிலன், "மூன்று கிலோ மீட்டர் எல்லாம் என்னால் வர முடியாது இங்கே நல்ல பழம் காய்கறி கிடைக்கிறது நான் வரவில்லை" என்றது, ஒரு வழியாக ராஜனும் சந்துருவும் சமாதானப் படுத்த வருவதற்கு சம்மதம் சொன்னது, முகில்..நான்கு மாடுகளும் நன்றாக சாப்பிட்டு வந்து கொண்டு இருந்தது, கோபி யோசித்து கொண்டே வந்தது "நாம் மட்டும் போய் தனியா சாப்பிட்டு வந்து இருக்காலம்" முகில் உடனே சொன்னது "நீ என்ன யோசிக்கிறாய் எனக்கு புரிகிறது...தனியா வந்து இருந்தா அடிமாடா போய் இருப்பே..ஒழுங்கா வா போகலாம்" என்றது ...
அவ்வழியே சென்று கொண்டு இருக்கும் போது தான் மணி ஒன்று கிடைத்தது..அதை சந்துரு எடுத்து பார்த்து கொண்டு இருந்தது..அப்போது எழுந்த மணியின் ஓசை கேட்டு பறவைகள் பறந்தன, மான்கள் துள்ளி குதித்து ஓடியது, நரிகள் பயந்து நின்று கொண்டு இருந்தது...இதை பார்த்த கோபி முகில் ஓடி வந்து பார்த்தது, முகில் ராஜனை கூப்பிட்டு இங்கே வந்து பார் என்ன இது என்றது, ராஜனுக்கு தான் அனைத்து தெரியுமே ...உடனே அதை பற்றி விளக்கியது..உடனே சந்துருவுக்கு ஒரு யோசனை தோன்றியது, அதை ராஜனிடம் சொன்னது" இந்த மணியின் ஓசை கேட்டு அனைத்து விலங்குகளும் பயப்படுகிறது" "இதை நீ கழுத்தில் அணிந்து கொண்டால் இந்த காட்டுக்கே நீ தான் ராஜா"..!!! ராஜனுக்கு அதில் விருப்பமேயில்லை ..
சந்துரு சொன்னது கோபியிடம். நீயும் சொல் அப்போது தான் ராஜன் ஏற்றுக் கொள்ளும், கோபி, முகிலன் சந்துரு ,என மூவரும் சொல்வதால் ராஜன் ஏற்றுகொண்டது ,அந்த மணியை சந்துரு கட்டி விட்டது.
அந்த மணி கட்டிய பிறகு ராஜனுக்கு தனி மரியாதை. அதை பார்த்த முகிலனுக்கு கொஞ்சம் ஆசை வர ஆரம்பித்தது, நாம் சென்றால் நமக்கு யாரும் மரியாதை தருவதில்லை ஆனால் இந்த ராஜனுக்கு மட்டும் இப்படி மரியாதையா? என்றது, கோபியிடம் சென்று "இந்த ராஜனிடமிருந்து இந்த மணியை பறிக்க வேண்டும். அந்த மணியை நான் அணிந்திருந்தால் இந்த காட்டையே மாற்றி காண்பித்து இருப்பேன்" கோபி உடனே "காட்டில் என்னடா மாற்றம் செய்ய போறே"? ராஜன் உன்னை என்ன செய்தான்...??"அந்த மணி வந்தது முதல் நீ சரியில்லை" என்றது கோபி, அந்த மணியை எப்படியாவது பறிக்க வேண்டும் என திட்டம் தீட்டியது...அப்போது பேசிக்கொண்டு இருந்த போது சந்துருவும், ராஜனும் வந்து கொண்டுயிருப்பதை பார்த்து பேச்சை நிறுத்தியது முகிலன் ...
இரவு முழுவதும் உறங்காமல் முகிலன் ஏதேதோ திட்டம் திட்டி கொண்டு இருந்தது. ராஜனிடம் சில நரிகள் சதித்திட்டம் தீட்டி கொண்டு இருப்பதாக சொன்னால் போதும் வந்துவிடும்..அதை எங்காவது பள்ளத்தில் தள்ளி விட்டு விடலாம் என்று முடிவு செய்தது. மறுநாள் காலை விடிந்தவுடன் முகிலன் ராஜனிடம் நரி கதையை சொல்லி கொண்டுயிருந்தது, "வா ராஜன் நாம் போய் அந்த நரிகளை என்னவென்று கேட்டு வருவோம்" என்றது, அப்போது சந்துருவுக்கு சந்தேகம் வர..ஏன் ராஜனை மட்டும் தனியாக அழைத்து செல்கிறாய்..?? நானும் வருகிறேன் என்றது சந்துரு.
நீ வேண்டாம் நாங்கள் போகும் இடம் பிரச்சனையானது ஏதாவது ஆபத்து என்றால் நாம் எல்லாம் ஒன்றாக மாட்டி கொள்வோம் நீ இங்கேயே இரு நாங்கள் சென்று வருகிறோம் என சொல்லி ராஜனை அழைத்து சென்றது முகிலன்.
மிக தொலை தூரத்துக்கு அழைத்து சென்றது...இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ராஜன் கேட்டது? .."இதோ வந்து விட்டது இந்த மலையை தாண்டினால்...வந்துவிடும்" என்றது மலையை தாண்டி கொண்டுயிருக்கும் பொழுது பின்னால் இருந்து ராஜனை தள்ளி விட்டது முகிலன். இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராஜனை தள்ளி விட்டு கழுத்தில் இருந்த மணியை பறித்தது...!!!
முகிலன் மட்டும் தனியே வருவதை பார்த்து சந்துரு ஓடி சென்று ராஜன் எங்க...? என்றது .."ராஜன் பக்கத்து காட்டிற்கு சென்றுள்ளது அது வர ஐந்து நாட்கள் ஆகும்" என்றது. "ஓஓ அப்டியா நான் அந்த பக்கத்து காட்டிற்கு சென்று பார்த்து விட்டு வருகிறேன்" என்றது முகிலன், தடுத்து "ராஜன் உன்னை வரவேண்டாம் என்று சொன்னார் இங்கே இருந்து பாத்துக்க சொன்னார்" என்று முகிலன் சொன்னது. சரி என சந்துரு அமைதி காத்தது.
கோபி வரும் பொழுது மணியை எடுத்து வந்து ராஜன் மணி போல் அங்கு ஒன்று கிடைத்தது..."நீ தான் ராஜன் மணிக்கு ஆசை பட்டாயே இப்பொழுது இதை நீ வைத்து கொள்" என்றது கோபி, "என்ன ராஜன் மணிக்கு ஆசை பட்டாயா"..?? எங்கே அந்த மணியை காட்டு என்று சந்துரு ...இது ராஜனின் மணி ...!!
"முகிலா ஒழுங்கா உண்மையை சொல்" ராஜன் எங்கே..?? கோபியும் ராஜன் எங்க என்றது..?? முகிலனின் கோவத்தில் அனைத்து உண்மையும் வெளியில் வந்தது...இங்கே இருக்கும் அனைவரும் ராஜனுக்கு தான் மரியாதை தருகிறார்கள்..என்னை நீங்கள் கூட மதிப்பதில்லை எல்லாவற்றிக்கும் அந்த மணி தான் காரணம்...அந்த மணி இருந்தால் நீங்க எல்லாம் எனக்கும் மரியாதை தருவீர்கள் அல்லவா அதனால் தான் அப்படி செய்தேன். "அதற்காக ஒரு நண்பனையா இப்படி செய்வாய்" "அப்போது ராஜனை என்ன தான் செய்தாய்"?? ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டுவிட்டேன் என்றது.... !!!
மரியாதைக்காக நண்பனையே இழக்கும் அளவுக்கு துணிந்தவன் நாளை நீ என்ன வேண்டும் என்றாலும் செய்வாய்...உங்கள் நடப்பே எனக்கு தேவையில்லை..!!! என சந்துரு கூறியது...நான் தனியாக போகிறேன்... கோபி நீ என்னுடன் வருகிறாயா...?? என்றது சந்துரு, கோபி தயக்கத்தோடு நின்று கொண்டு இருந்துதது... சிறிது நேரத்திற்கு பிறகு சந்துரு தனியே சென்றது...ஊர் ஓரத்தில் உள்ள காட்டில் சிறிது நாட்கள் இருந்தது..
அதை பார்த்த மாரிமுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார் பின்பு சந்துரு காமட்சியாக பெயர் மாறியது ...ஒரு மணியால் தன் நட்பு வட்டம் பிரிந்ததை எண்ணி தினமும் வேதனை பட்டு கொண்டு இருந்தது சந்துரு. ....
மதியவேளையில் உணவு அருந்தி கொண்டு இருந்த சந்துரு தனக்கு நன்கு தெரிந்த மாட்டின் குரலை கேட்டு திரும்பி பார்த்தது.....
Tweet | |||||
18 comments:
வடை....
ஹே ஹே ஹே ஹே....
இரும் படிச்சிட்டு ஓட்டு போட்டுட்டு வாரேன்...
கதை அருமை..........இப்போ சந்துரு என்கிற காமாட்சி என்னதான் பண்ணுது?
கதையின் கரு சூப்பர். ஆனா நீ இந்த மேற்கோள் குறி எல்லாம் போட்டு எழுது அப்பத்தான் இன்னும் நல்லா வரும் :-)
அந்த மணி மறுபடி என்னாச்சு ? ஹி ஹி
அதெல்லாம் சரி..
சந்துரு -- ஆணின் பெயர்
காமாட்சி -- பெண்ணின் பெயர்..
அதெப்படி? -- ஒருவேளை பாம்பே போயி ஆபரேஷன் செஞ்சிக்கிட்டுதோ ?
//அந்த மணி மறுபடி என்னாச்சு //
மச்சி அப்போ இது தொடர்கதையோ ...??....:)
Madhavan Srinivasagopalan சொன்னது…
அதெல்லாம் சரி..
சந்துரு -- ஆணின் பெயர்
காமாட்சி -- பெண்ணின் பெயர்..
அதெப்படி? -- ஒருவேளை பாம்பே போயி ஆபரேஷன் செஞ்சிக்கிட்டுதோ ?///
மாட்டுக்கு நாய்க்கு ஆண் பெயர் வைப்பது சகஜம்..!!!
Madhavan Srinivasagopalan சொன்னது…
அதெல்லாம் சரி..
சந்துரு -- ஆணின் பெயர்
காமாட்சி -- பெண்ணின் பெயர்..
அதெப்படி? -- ஒருவேளை பாம்பே போயி ஆபரேஷன் செஞ்சிக்கிட்டுதோ ?///
மூணு மாடுல ஒரு மாடு திரும்பி வந்துருச்சி...!!!அது யாருன்னு நீங்களே கண்டுபுடீங்க
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
வடை....///
உங்களுக்கு தான் வடை :)))
simply superb nanpaa! congrats!
நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு நல்லத் தானே போயிட்டு இருந்தது...
what happened???? இல்ல என்ன ஆச்சுன்னு..கேக்குறேன்...???
இப்போ, என்ன நடந்து போச்சுன்னு, இப்படி ஒரு கதையை எழுதி, கொலை முயற்சி பண்றீங்க.. :D :D
இதெல்லாம் நல்லா இல்ல.. சொல்லிட்டேன்.. :-)))
**********************************
சரி ரைட்ட்டு... Back to normal comment...
வாவ்.. சௌந்தர்.. செம கதைங்க.. எப்படிங்க இப்புடி கலக்குறீங்க? வருங்கால எழுத்தாளர் சௌந்தர்...........வாழ்க...வளர்க அப்போ வர்ட்டா...!! :)
இப்புடி எத்தன பேரு, கிளம்பி இருக்காங்கன்னு தெரியலயே... ஹம்ம்ம்ம்.. முதல்ல அத, கண்டு பிடிக்கணும் :)
//மதியவேளையில் உணவு அருந்தி கொண்டு இருந்த சந்துரு தனக்கு நன்கு தெரிந்த மாட்டின் குரலை கேட்டு திரும்பி பார்த்தது.....//
ஹ...ஹ...! பிண்ணிட்ட கண்ணா...! அங்க தான் நீ நிக்கிற...! ஆமா...! மாதவன் கேட்ட கேள்விக்கு இன்னும் விடையே சொல்லலையே....??!!
சௌந்தர்.. ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்..
உங்க பதிவு தலைப்பு...
நண்பேண்டா..... அப்படி வச்சிருக்கப் பிடாது..
''இனி என் போஸ்ட் படிக்க வருவியாடா??''
...அப்படி வச்சிருக்கணும்.. எப்புடி நம்ம ஐடியா... ஆத்தி... நா இல்ல.. கூல்......நோ வயலன்ஸ்.. :)
வருங்கால எழுத்தாளர் சௌந்தர்.???
:)
புதிய முயற்சி..... கதாசிரியராகவும் மாறி வரீங்க.... :-)
கலிகால நீதிக்கதை நன்றாக உளது மாடுகளுக்கு மனிசருந்தா பெயரை வைத்து மரியாதை கொடுத்துள்ளீர்கள்
Post a Comment