Tuesday, May 17

AIRCEL கடுப்பேத்துறாங்க மை லார்டு.!!





சாதாரண மக்களெல்லாம் செல் போன் வாங்க ஆரம்பித்ததே ரிலையன்ஸ் செல் போன் வந்த பிறகு தான். 500 ரூபாய்க்கு இரண்டு செல் போன் கொடுத்தாங்க, அப்போது தான் நான் செல் போன் வாங்கினேன். நான்கு வருடமாக  ரிலையன்ஸ் செல் போன் பயன் படுத்தினேன், அதில் கூட அப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டதில்லை, ஆனால் நான் இப்பொழுது ஏர்செல் சிம் கார்ட் பயன் படுத்து வருகிறேன், அதில் ஆரம்பம் முதல் பிரச்சனை தான்.

எங்க அண்ணன் வைத்து இருந்த சிம் கார்டை தான் நான் வாங்கி பயன் படுத்தினேன், அதில் ஏற்கனவே காலர் ட்யூன் இருந்தது, அடுத்தாக திரைப்பார்வை என்று ஒன்று இருந்தது, திரைப்பார்வை என்றால் தினமும் சினிமா செய்திகளை சொல்வார்கள்.

எங்க அண்ணனிடம் கேட்டேன் "ஏன் காலர் ட்யூன், திரைப்பார்வை எல்லாம் வைத்து இருக்கிறாய்..?" அதற்கு "அவன் நான் வைக்க வில்லை தானாக வந்துவிட்டது" என்று சொன்னான். அதை முதலில் நான் நம்பவில்லை, பிறகு அந்த சிம் கார்டை பயன் படுத்திய பொழுது தான் எனக்கு புரிந்தது...அவன் சொல்வது உண்மை என்று.

நான் ரீஜார்ஜ் செய்தவுடனே என் பைசா அணைத்தும் பிடித்து விடுவார்கள். காலர் டியூன்க்கு 30 ரூபாய், திரைப்பார்வைக்கு 30 ரூபாய், இப்படி நான் நான்கு ஐந்து மாதம் பணத்தை இழந்து வந்தேன்.. இதையெல்லாம் எப்படி எடுக்க வேண்டும் என எனக்கு தெரியாமல் இருந்தது, பின்பு கஸ்டமர் கேர்க்கு போன் செய்து இந்த காலர் ட்யூன் எடுக்க சொன்னேன் அதற்கு அவர்கள் நீங்கள் ஒரு sms அனுப்புங்கள் அப்போது தான் காலர் ட்யூன் எடுக்க முடியும், ஒரு smsக்கு ஐந்து ரூபாய் கட்டணம் என்று சொன்னார்கள்.

அடுத்த முறை கஸ்டமர் கேர்க்கு போன் செய்து, காலர் ட்யூன் எடுக்க வேண்டும் என நான் அதே பாட்டை பாடினேன். அவர்களும் மெசேஜ் அனுப்ப வேண்டும் என பாட்டை பாடினார்கள்நான் உடனே "சார் எனக்கு எப்படி மெசேஜ் அனுப்பவேண்டும் தெரியாது நீங்களே எடுத்து விடுங்க"..
"சரி காலர் ட்யூன் எடுத்து விடுகிறேன்" சொன்னார்கள்.

சரிங்க சார் என் பைசா திருப்பி வருமா என கேட்டேன்..??
திருப்பி தருவோம் சொன்னாங்க...(அடப்பாவிங்களா இதை முதலே சொல்லி இருந்தால் என் பைசா எல்லாம் வந்து இருக்குமே) ஒரு வழியா ஆறு தடவைக்கு மேல போன் செய்தது காலர் ட்யூனை எடுத்து விட்டேன்.

அப்படி இருந்தும் திரைப்பார்வைக்கு ஒரு பத்து தடவை போன் செய்த பிறகு தான் அதை எடுத்தார்கள். இப்படி எல்லாம் எடுத்து விட்டு ஒரு மூன்று நாள் கூட ஆகவில்லை அவர்களே பிரெண்ட்ஸ் சூன் என சொல்லி ஒன்றை வைத்து என்னிடம் இருந்து பணம் எடுத்து விட்டார்கள். மறுபடி கஸ்டமர் கேர்க்கு போன் செய்தது ஏன் இப்படி செய்கிறீர்கள் என சத்தம் போட்டேன் இதோ சார் உடனே எடுத்து விடுகிறேன் என்று சொன்னார்கள்.எனக்கு ரீஃபண்ட் தாங்க என கேட்டேன் இல்லை “இதற்கு ரீஃபண்ட் தர முடியாது என பதில் வந்தது. சரி எனக்கு வேண்டாம் நான் நெட்வொர்க் மாற்றி  கொள்கிறேன் சொன்னேன். சார் நான் மேல் அதிகாரிகளுக்கு உங்கள் புகாரை அனுப்புகிறேன், அவர்கள் சரி என்றால் உங்கள் பணம் உங்களுக்கு வந்து விடும் என்றார்கள்.
இந்த மாதம் வரை ஏர் செல் பிரச்னையோடு தான் இருக்கிறது

எனக்கு தெரிந்து ஏர் செல் பிரச்னை வந்து கொண்டு தான் இருக்கிறது இது எனக்கு மட்டும் தான் நடக்கிறதா இல்லை அனைவருக்கும் இப்படியா என தெரியவில்லை....
ஏர்டெல் நன்றாக இருக்கிறது அதில் இம் மாதிரியான பிரச்னைகள் வருவதில்லை... நான் ஏர்டெல்க்கு மாறபோகிறேன்..!!!   

ஏர்செல் பயன் படுத்தினால் வரும் நன்மைகள்

இவர்கள் பைசா எடுக்கும் நேரம் சரியாக 31ம் தேதி 12 மணிக்கு சரியாக பைசா எடுத்துவிடுவார்கள் காலையில் எழுந்தால் கணக்கில் ஒரு பைசாவும் இருக்காது.

ஒரு நாற்பது ரூபாய் உங்கள் கணக்கில் இருந்து கொண்டே இருந்தால் உடனே ஏதாவது தில்லு முள்ளு செய்தது உங்கள் பணத்தை எடுத்து விடுவார்கள்.

கஸ்டமர் கேர்க்கு போன் செய்தால் ஒரு 15 நிமிடம் ஆகும்

நீங்கள் ஏர்செல் பயன்படுத்துபவர் என்றால் 198 போன் செய்தது உங்கள் பணத்தை திருப்பி கேட்கலாம்...

மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால் உங்கள் கணக்கில் மூன்று ரூபாய் இருக்க வேண்டும் அப்போது தான் மெசேஜ் அனுப்ப முடியும்.

ஒரு நாளைக்கு ஏர்செலில் இருந்து 25 அழைப்புகள் வரும் இந்த பாடல் வையுங்கள், ஜோசியம் பாருங்க, லவ்டிப்ஸ் வேணுமா இப்படி என்னென்னமோ இரவு 9 மணி வரை வந்து கொண்டே இருக்கும்....

இன்னும் சொல்லிட்டே போகலாம் அந்த அளவுக்கு AIRCEL கடுப்பேத்துவாங்க



44 comments:

Anonymous said...

கடுப்பேத்துறாங்க மை லார்டு.!!

ஷர்புதீன் said...

tocomovukku vaanga boss!

Jeyamaran said...

Soundar Aircel kaduppu than etuvanga but Airtet uyiraiye vankuvanga becareful. Intha prob la irunthu viduthalai venuma come 2 DOCOMO best network entha prob m illa.
hifriends.in

Unknown said...

get idea jiiiiiiiiiiiiiiiiiiiiii

dheva said...

இம்புட்டு ரிஷ்க் எடுத்து அத நாம் யூஸ் பண்ணியே ஆகணுமா மை லார்ட்!

அமைதி அப்பா said...

இது உண்மைதான். இதற்கு DND START என்று டைப் செய்து 1909 க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்கலாம்.இதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், இது பலருக்கும் தெரிவதில்லை.

மேலும், தேவையற்ற அழைப்பு வரும் பொழுது எந்த எண்ணையும் தவறியும் அழுத்திவிடக் கூடாது. எல்லாம் அனுபவப் பாடம்தான். ஏனெனில் கடந்த ஏழு வருடங்களாக AIRCEL பயன் படுத்தி வருகிறேன்.


************************

நேரம் கிடைத்தால் இதையும் படித்துப் பார்த்துக் கருத்து சொல்லுங்களேன்.

ஏமாற்றிப் பெற்ற வெற்றி!

நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

கடுப்புதான்.

Unknown said...

இதே மாதிரி எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னால நடந்துச்சு ,198 கால் பண்ணி எடுத்து விட சொல்லீட்டேன் இன்னம் வரைக்கும் எடுத்து விடமாட்டேன்கிறாய்ங்க ,எரிச்சலா இருக்கு

Ram said...

நான் டோகோமோ யூஸ் பண்றேன்.. வாடிக்கையாளர் சப்போர்ட்லாம் பக்கா.. ப்ளான்ஸ் எல்லாம் பக்கா.. என்ன எங்க வூட்ல சிக்னல் தான் கிடைக்கமாட்டேங்குது..

MANO நாஞ்சில் மனோ said...

நடத்துங்கப்பூ நடத்துங்க....

Anonymous said...

முதலில் customercare போன் செய்து
நெட்வொர்க் மாற்றுவதற்கு PORT என்று டைப் செய்து எந்த நம்பருக்கு SMS அனுபவேண்டும் என்று கேட்டு அதற்கு அனுபவும்
இப்போது customercare - ல் இருந்து உங்களிக்கு போன் செய்து operator மாற்ற வேண்டம் உங்கள் பிரச்சினைகளை சரி செய்கிறோம் என்று சொல்லி
காசு பிடிபதி நிறுத்துவார்கள் , மேலும் நீங்கள் தரிப்ப் அதிகம் என்று சொல்லினால் , நிமிடத்திற்கு ௧௦ பைசா என்று மறதி தருவார்கள்

customercare கால் செய்தால் ,
அணித்து பிரச்சினைகள் மற்றும் tariff அதிகம் வேற operator எனக்கு போர்ட் செய்து வந்தால் இவ்வளவு offer தருகிறார் என்று நீங்கள் சொல் வேண்டும்

முயற்சி செய்து பார்க்கவும்

Unknown said...

ஏர்செல், ஏர்டெல் இரண்டுமே பிரச்சனைதான், ஐடியா இல்லைன்னா வோடபோன் பெஸ்ட்

பனித்துளி சங்கர் said...

காலப்போக்கில் இந்த நிருபனன்களால் நடுத்தர மனிதனின் ஆடைகளும் உருவப்படும் நிலை விரைவில் வந்தாலும் வரலாம் .

கடம்பவன குயில் said...

டாடா டோகோமோ பரவாயில்லை. தேவையில்லாமல் எந்த பைசாவும் பிடிப்பதில்லை. அடிக்கடி அந்த பாட்டு வேண்டுமா? இந்த ஜோக் வேண்டுமா என்ற தொந்தரவெல்லாம் இதுவரை இல்லை. ஏர்டெல்லிலும் இந்த ஏமாற்று உண்டு.

Madhavan Srinivasagopalan said...

நுகர்வோர் நீதிமன்றம் (consumer / customer court) செல்லலாமே..!!

S. Robinson said...

இங்கேயும் அதே கதிதான்..........

அமைதி அப்பா said...

//இதற்கு DND START என்று டைப் செய்து 1909 க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்கலாம்.//

START DND என்று டைப் செய்து 1909 க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். தவறுக்கு மன்னிக்கவும்,

Chitra said...

இதையெல்லாம் ஏதாவது நுகர்வோர் ஆபீஸ்ல, முறைப்படி கம்ப்ளைன் பண்ண முடியாதா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

kodumaidaa saami...what kind of customer service is that?

Mohamed Faaique said...

பாஸ் ம்ம்ம்’னு ஒரு வார்த்த சொல்லுங்க.. ஆட்டோ அனுப்பிரலாம்...

ரேவா said...

சகோ இந்த தொல்லை aircel க்கு மட்டும் இல்லை...airtel லையும் இதே தொல்ல தான்...customer care இப்போலாம் கண்துடைப்பாய் போயிடுச்சு..

idroos said...

Boss docomo maarunga.
Naa suggest panren.
Airtel,aircel use panirukken but rendum sema thollai.docomovil intha thollai illai.custermer carum nallave reply panraanga.

idroos said...

Vodafonum vendaam ithilum paattu anuppuvaanunga,idea pathi no idea

ஸ்ரீ.கிருஷ்ணா said...

எல்லாருமே இதைதான் பண்றாங்க இதெல்ல சகஜமப்பா ன்னு போகவேண்டியதுதான் ...

Prabu Krishna said...

//ஏர்செல் பயன் படுத்தினால் வரும் நன்மைகள்//

நல்ல நன்மைகள் பாஸ்

SanthoshVijay said...

நான் BSNL பயன் படுத்துகிறேன் ...ஆரம்பத்தில் நன்றாக இல்லை , இப்போது பரவ இல்லை ... from the Day one "ONLY PREPAID" ...எவன் கால் பண்ணலும் அதுவே NETWORK BUSY சொல்லி கட் பண்ணி என்னை காப்பதிடும்

Sairam said...

நானும் ஏர்செல் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் முக்கியமான மீட்டிங்கில் இருக்கும்போதும் ,நல்ல போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போதும், இதுபோல பல முக்கிய தருணத்தில் போன் வருவதும் , மிக மிக அதிக மெசேஜ் வருவதும் பல இன்னல்களில் தவிக்கிறேன். உடன் வேறு நெட்வொர்க் மாறி விட வேண்டியதுதான் . தகவலுக்கு நன்றி. ஏர்செல் உடன் இதை கவனிக்காவிட்டால் பலரும் மாறிவிடுவார்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இவர்கள் பைசா எடுக்கும் நேரம் சரியாக 31ம் தேதி 12 மணிக்கு சரியாக பைசா எடுத்துவிடுவார்கள் காலையில் எழுந்தால் கணக்கில் ஒரு பைசாவும் இருக்காது.//

.....உங்கள பத்தி முதல்லயே தெரிஞ்சிருக்கும்.. அதான் உஷாரா பணம் எடுத்திருப்பாங்க..

//கஸ்டமர் கேர்க்கு போன் செய்தால் ஒரு 15 நிமிடம் ஆகும்//

.....ஆமாமா... சார்-கு எவ்ளோ வேலைகள்.. அதுல இந்த 15 நிமிஷ வெயிட்டிங் எல்லாம்............. டூடூ டூ டூ மச் தான்.... நீங்க சொல்லுங்க..... சௌந்தர்......!!!!!!

//மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால் உங்கள் கணக்கில் மூன்று ரூபாய் இருக்க வேண்டும் அப்போது தான் மெசேஜ் அனுப்ப முடியும்.//

.......பின்னே... மெசேஜ் பண்ணிட்டு பணம் தராம ஓடிட்டீங்கன்னா... அவங்க அலர்ட்-ஆ இருக்காங்க சௌந்தர்... :))

//ஒரு நாளைக்கு ஏர்செலில் இருந்து 25 அழைப்புகள் வரும் இந்த பாடல் வையுங்கள், ஜோசியம் பாருங்க, லவ்டிப்ஸ் வேணுமா இப்படி என்னென்னமோ இரவு 9 மணி வரை வந்து கொண்டே இருக்கும்....//

....ஓஹோஹோ..... இப்போ புரியுது சௌந்தர்... எப்படி இப்படி எல்லாம் கவிதையா எழுதி தள்ளுரீங்கன்னு... எல்லாம்... இந்த ப்ரீ டிப்ஸ் பண்ற வேலையா...... ஓகே ஓகே... !!!!

//இன்னும் சொல்லிட்டே போகலாம்//

..........சாரி... எனக்கு டைம்.. இல்லை... :)))))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இம்புட்டு ரிஷ்க் எடுத்து அத நாம் யூஸ் பண்ணியே ஆகணுமா மை லார்ட்!//

...ஹி ஹி.. மீ டூ.. சேம கொஸ்டின்.. :)))

ஆனந்தி.. said...

சௌ...நீ சொன்னது அத்தனையும் நிஜம்...நாங்களும் aircel னாலே எங்க சொத்தை முக்கால் வாசி இழந்துட்டோம்..:)) ஆதி அது தான் வச்சு இருந்தான்...மீதி கால் வாசி சொத்தை காப்பாத்த வோடபோன் போட்டு கொடுத்திருக்கு...நீ சொன்ன மாதிரி தான் அவனுங்களா காலர் டோன் போட்டு முப்பது ரூவா பிடிச்சுப்பானுங்க..எத்தனை unsubscribe பண்ணினாலும் மீண்டும் பிடிப்பானுங்க...aircel அறுவை காலுன்னு ஒரு முப்பது போட்டு வச்சிருக்கோம்...எப்போ பார்த்தாலும் அவனுங்க promotional கால் வந்துட்டே இருக்கும்...வெரி வொர்ஸ்ட் சௌந்தர்...

Sairam said...

நானும் ஏர்செல் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் முக்கியமான மீட்டிங்கில் இருக்கும்போதும் ,நல்ல போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போதும், இதுபோல பல முக்கிய தருணத்தில் போன் வருவதும் , மிக மிக அதிக மெசேஜ் வருவதும் பல இன்னல்களில் தவிக்கிறேன். உடன் வேறு நெட்வொர்க் மாறி விட வேண்டியதுதான் . தகவலுக்கு நன்றி. ஏர்செல் உடன் இதை கவனிக்காவிட்டால் பலரும் மாறிவிடுவார்கள்

Sairam said...

நானும் ஏர்செல் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் முக்கியமான மீட்டிங்கில் இருக்கும்போதும் ,நல்ல போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போதும், இதுபோல பல முக்கிய தருணத்தில் போன் வருவதும் , மிக மிக அதிக மெசேஜ் வருவதும் பல இன்னல்களில் தவிக்கிறேன். உடன் வேறு நெட்வொர்க் மாறி விட வேண்டியதுதான் . தகவலுக்கு நன்றி. ஏர்செல் உடன் இதை கவனிக்காவிட்டால் பலரும் மாறிவிடுவார்கள்

Unknown said...

ஒய் ப்ளட் ?சேம் ப்ளட் ?
நானும் ஏர்செல் தான் வச்சிருக்கேன்.
இதே கஷ்டங்கள் தான் எனக்கும்.

Anonymous said...

BOSS DONT MAKE MISTAKE BY CHANGING TO airtel is even worser than Aircel...

airtel deduct money by sending messages saying "you have downloaded by indiagames" thats it avalothaan..

they will deduct 10rs for each messages..i have lost all most 380rs bcoz of this messages ...fraud people

MUTHU said...

கடுப்பேத்துறாங்க மை லார்டு.!!

Praveenkumar said...

//எனக்கு தெரிந்து ஏர் செல் பிரச்னை வந்து கொண்டு தான் இருக்கிறது இது எனக்கு மட்டும் தான் நடக்கிறதா இல்லை அனைவருக்கும் இப்படியா என தெரியவில்லை....// இந்த பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கு மக்கா...!! எங்கண்ணனுக்கு இதுபோன்று பிரச்சினை அடிக்கடி வந்ததால் 7 வருடம் கஸ்டமராக இருந்தவர் தற்போது வேற நெட்வொர்க்-கு மாறிவி்ட்டார்...!!!

Praveenkumar said...

ஏர்டெல்லிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உண்டு. இதில் டு நாட் டிஸ்டர்ப் சேவை ஆக்டிவேட் செய்து விட்டால் இதுபோன்ற தொல்லைகள் வருவதில்லை...!!! தற்போதைக்கு ஏர்டெல் பரவாயில்லைனு தோனுது. ஆனால் இதில் நெட் பயன்படுத்தும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கனும் இல்லனா...
கோவி்ந்தா கோவிந்தாதான்..... கத்தனாலும் கதறனாலும் திரும்ப வராது பணம்...!!!

Praveenkumar said...

இவுனுங்க பிடிக்கற பைசா முதலை வாயில... விழுந்தது போலத்தான்... திரும்பி வரும்னுலாம் எதிர்பார்க்கப்படாது...!!! எங்க வீட்டில் 3 ஏர்செல் சிம்களை நெட்வொர்க் மாத்திட்டோம்... ரொம்ப பயங்கரமா கடுப்பேத்துறாங்க... மைலார்ட்...!!!

Praveenkumar said...

நான் மற்றொரு ஏர்செல் நம்பர் வைத்துள்ளேன். அதில் எப்பவாவது பேசனும்னா மட்டும்தான் பேலன்ஸ் போடுவேன். உடனே பேசி தீர்த்துவிடுவேன். 1 ரூபாய் கூட வைக்கமாட்டேன்..!!! ஆமாம் அவ்ளோ அலார்ட். எவ்வளோ இழுந்திருக்கேன் விடுவோமா நாங்க.. ஹி....ஹி....ஹி....

Praveenkumar said...

பெரும்பாலும் 30நாட்களுக்கு மட்டும் இருக்கும் ஸ்பெசல் பேலன்ஸ் கணக்குல மட்டும் பேலன்ஸ் வச்சு மயின்டெயின் பண்ணிப்பேன்.. ஏன்னா அவுங்க மெயின் அக்கவுண்டலதான் பைசா எடுப்பாங்க.. அதனால.. இப்படி ஒரு ட்ரிக்ஸ்...!!! ஹெ..ஹெ.. எப்புடி..!!!!

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

ஜில்தண்ணி said...

அதுக்குத்தான் பத்து ரூவாய்க்கு மேல ரீசார்ஜ் பண்ணபிடாதுங்குறது :)

vinu said...

me too faced the same....

after 4 years recently i changed mine to docomo;


not much troubles, but few flash messages keep on coming if you accidently press any key.....

that's it...
it will get activated

மாலதி said...

ஏர்செல், ஏர்டெல் இரண்டுமே பிரச்சனைதான், ஐடியா இல்லைன்னா வோடபோன் பெஸ்ட்

 
;