இப்பொழுது அனைவரும் முனு முணுத்துக் கொண்டுயிருக்கும் வார்த்தை காதல் திருமணம் செய்ததால் இப்படி “அநியாயமா கொலை பண்ணிட்டாங்களே”. அந்த பையனை கொலை செய்து விட்டு ஒரு ஆறு மாதமோ ஒரு வருடதிலோ வேறு ஒரு திருமணம் செய்து வைத்து விடலாம் என்ற நினைப்பு, என்ன ஒரு வில்லத்தனம்...!! “இவனுங்க எல்லாம் மனுசனா” இவ்வாறு சாமானிய மக்கள் பேசி கொள்கிறார்கள்.
நாம் வாழும் தேசத்தில் காதல் என்றால் ஏதோ தகாத வார்த்தை போல் பார்கின்றார்கள். காதல் என்ற வார்த்தைக்கு இங்கு பல நல்ல அர்த்தங்கள் இருந்தாலும் அவையெல்லாம் கண்ணுக்கு தெரியாது, ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே தெரியும்.
நம் வீட்டில் உள்ளவர்களுக்கு, சினிமாவிலும் நாடகத்தில் வரும் காதல் பிடிக்கும். அதே காதல் நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது. எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை பின்பற்றும் நம் மக்கள் ஏன் இந்த காதல் விஷயத்தில் மட்டும் வெளிநாட்டினரை பின்பற்ற மறுக்கிறார்கள்..??.
காதலர்களும் தவறு செய்கிறார்கள், அவர்கள் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்வது தவறு, முதலில் வீட்டில் தங்கள் விருப்பத்தை சொல்ல வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியும் கேட்கவில்லை என்றால் தான், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ய வேண்டும்.
காதல் திருமணத்தை பணக்காரர்கள் தான் அதிகம் எதிர்கிறார்கள், அடி தட்டுமக்கள் எல்லாம் அவ்வளவாக எதிர்ப்பதில்லை. நடுத்தர மக்கள் சிலர் ஏற்றுகொண்டும், சிலர் ஏற்றுகொள்ளமலும் இருக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை காதல் திருமணங்கள் ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இவையெல்லாம் மாறுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம்.
ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல் தேவைதானா..??? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது…
Tweet | |||||
26 comments:
இன்னும் அதிக விழிப்புணர்வு வேண்டும், அதற்கு ஜாதி ஒழிய வேண்டும் அருமையான கட்டுரை..
வாழ்த்துக்கள் சௌந்தர்...
சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு பதிவு மக்கா...!! நல்லா சொல்லியிருக்க... ம்ம் கலக்கு.
காதல் தேவை தான்...!!
(நீங்க தானே கேள்வி கேட்டீங்க பதில் சொல்லியாச்சு.. ஹிஹிஹிஹி..)
“இவனுங்க எல்லாம் மனுசனா” இவ்வாறு சாமானிய மக்கள் பேசி கொள்கிறார்கள்.//
இப்படி நான் பேசுவதில்லை.. அப்படினா நான் சாமானியன் இல்லையா.!?
இதே போல் வட மாநிலத்தில் இப்படி ஒரு முறை நடந்து இருக்கிறது. //
மக்கா ஸ்டேடிஸ்டிக்ஸ் சொல்றான் பா
ஆனால் இப்படி திட்ட மிட்டு கொலை செய்வது இதுவே முதல் முறையென எனக்கு தோன்றுகிறது.//
பேசாம எங்கையாவது குறி சொல்ல போ.. ஜாதகம், ஜோசியம்.. கலக்க போற போல
அதே காதல் நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது.//
விடு விடு அம்மாகிட்ட நான் பேசுறேன்..
ஏன் இந்த காதல் விஷயத்தில் மட்டும் வெளிநாட்டினரை பின்பற்ற மறுக்கிறார்கள்..??. //
எனக்கு தெரிந்து வெளிநாட்டவரை பின்பற்ற நினைக்கும் பெற்றோர் பலரும்.. அவர்களை விடுத்து காதல் திருமணத்தால் மணமுடித்த பல பெற்றோரும் இன்று காதலுக்கு சம்மதித்தே இருக்கிறார்கள்..
அருமையான அலசல் நண்பா! காதல் ஒகே என்றாலும் காதலின் பேரால் அரங்கேறும் வன்முறைகள், சொல்லி மாளாதவை!!
காதல் இனி நல்ல வழியில் மட்டும் வாழட்டும்!!!
S Maharajan சொன்னது…
இன்னும் அதிக விழிப்புணர்வு வேண்டும், அதற்கு ஜாதி ஒழிய வேண்டும் அருமையான கட்டுரை..
வாழ்த்துக்கள் சௌந்தர்...///
நிச்சயம் ஜாதி ஒழிய வேண்டும் மகாராஜன் சார் ஆனால் இப்பொழுது பணம் தான் பெரிய பிரச்னையாக இருக்கிறது..!!!
வருகைக்கு நன்றி மகாராஜன் சார் :))
பிரவின்குமார் சொன்னது…
சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு பதிவு மக்கா...!! நல்லா சொல்லியிருக்க... ம்ம் கலக்கு.///
தேங்க்ஸ் டா :)))
Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…
காதல் தேவை தான்...!!
(நீங்க தானே கேள்வி கேட்டீங்க பதில் சொல்லியாச்சு.. ஹிஹிஹிஹி..)///
இந்த மாதரி கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..!!!மிக்க நன்றி வருகைக்கு
தம்பி கூர்மதியன் சொன்னது…
“இவனுங்க எல்லாம் மனுசனா” இவ்வாறு சாமானிய மக்கள் பேசி கொள்கிறார்கள்.//
இப்படி நான் பேசுவதில்லை.. அப்படினா நான் சாமானியன் இல்லையா.!?///
ஹி ஹி ஹி நீ சாமானியனா இல்லையானு யாருக்கு தெரியும்..!!
மக்கா ஸ்டேடிஸ்டிக்ஸ் சொல்றான் பா///
ஆமா ஆமா
பேசாம எங்கையாவது குறி சொல்ல போ.. ஜாதகம், ஜோசியம்.. கலக்க போற போல///
எனக்கும் அந்த ஐடியா இருக்கு டா முதல் உனக்கு சொல்றேன் ஓகே வா..
விடு விடு அம்மாகிட்ட நான் பேசுறேன்..///
சரி சரி நீ எங்க அம்மா கிட்ட சொல்லு நான் உங்க அம்மா கிட்ட சொல்றேன் டிலா நோ டிலா..??
எனக்கு தெரிந்து வெளிநாட்டவரை பின்பற்ற நினைக்கும் பெற்றோர் பலரும்.. அவர்களை விடுத்து காதல் திருமணத்தால் மணமுடித்த பல பெற்றோரும் இன்று காதலுக்கு சம்மதித்தே இருக்கிறார்கள்..///
சிலர் மட்டுமே அப்படி இருக்கிறார்கள் என்று நினைக்கிறன்...!!! இன்னும் மாற்றம் வர வேண்டும்...!!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
அருமையான அலசல் நண்பா! காதல் ஒகே என்றாலும் காதலின் பேரால் அரங்கேறும் வன்முறைகள், சொல்லி மாளாதவை!!
காதல் இனி நல்ல வழியில் மட்டும் வாழட்டும்!!!///
மிக்க நன்றி நண்பா வன்முறை இருப்பது தான் வேதனையே..!!!! நன்றி நண்பா உன் வருகைக்கும் கருத்திற்கும்
ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல் தேவைதானா..???
அந்த மாதிரியான காதல் தேவையே இல்லை..
காதல் தப்பில்லை .. பெற்றோர் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அதி நம்பிக்கை தான் காதல் என்று வரும் போது எதிர்ப்பை தோற்றுவிக்கிறது என்று நினைக்கிறேன்.. ஆனால் நீங்க சொன்னது போல தன் மீதி காலத்தை வாழ போறவனை(ளை) தேர்ந்தெடுப்பதில் தவறில்லை தான் .எடாகுடமா எதுவும் செய்ய முன் பெற்றோர்கள் சற்று அமைதியாக யோசித்தால் தீர்வு கிடைத்துவிடும்...
மக்களின் மனோபாவம் மாற வேண்டும்... காதல் தப்பு அல்ல, காதலர்கள் தான் அதை காப்பாற்ற வேண்டும். மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்
காதல் தப்பில்ல... அது வீட்டினரை தலை குனிய செய்து அழ வைக்காத வரை... தங்கள் காதல் மேலேயே நம்பிக்கை இல்லாதவங்க தான் போராட மறுத்து திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கராங்கனு எனக்கு தோணுது... அது நிலைக்கறதும் இல்ல...கண்மூடித்தனமா சில பெத்தவங்களும் எதிர்கறது தப்பு தான்.. ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு... இந்த நிலை அவ்ளோ சீக்கரம் மாறுமானு தெரியல
//எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை பின்பற்றும் நம் மக்கள் ஏன் இந்த காதல் விஷயத்தில் மட்டும் வெளிநாட்டினரை பின்பற்ற மறுக்கிறார்கள்//
ரெம்ப சரியா சொன்னீங்க... c
very nice.........
"congratulation
can you come my said????????
காதல் தவறில்லை. காதலிக்கும் நபர்தான் தவறானவராக இருக்கக் கூடாது.
காதலின் பெயரால் நடக்கும் வன்முறையும் கண்டிக்கத்தக்கதே.
\\
நம் வீட்டில் உள்ளவர்களுக்கு, சினிமாவிலும் நாடகத்தில் வரும் காதல் பிடிக்கும். அதே காதல் நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது. \\ அவ்வளவு என், நடிகர், சிரஞ்சீவி எத்தனை படத்தில், பணக்காரப் பெண்களை காதலித்து அவளது அப்பனை எதிர்த்து அவளைக் கரம் பிடிக்கும் ஏழையாக நடித்திருப்பார்? ஆனால், அவரது மகள் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பையனை திருமணம் செய்ய நினைக்கும் போது, அதை ஆதரித்து நடத்தி வைத்தாரா? அவர்கள் இரவோடு இரவாக பத்து வெவ்வேறு வண்டிகள் மாறி டெல்லிக்கு ஓடினார்களே!! மேலும் காதல் வேண்டும், வேண்டாம் என்றாலும் வரும் என்ன செய்ய? சொல்லப் போனால், இரண்டு பணக்காரர்கள் சம்பந்தம் செய்து கொள்ளும் போது சாதியைப் பற்றி யாரும் பேசுவதில்லை, ஆனால் ஏழைகள் வீட்டில் அப்படியல்ல, பிரச்சினையாகி விடும். இன்னமும் பெரும்பாலும் சாதியை யாரும் விட வில்லை, முக்கியமாக திருமண விஷயத்தில் [சந்தேகமிருந்தால் மணமேடை விளம்பரங்களைப் பார்க்கவும்!!]
ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!
அனைத்து நிலைகளையும் அலசி
நடு நிலையோடு எழுதப்பட்ட
நல்ல தரமான சமூக சிந்தனையைத்
தூண்டிச் செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சின்ன வயசு.. பெரிய கருத்து
//////////ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல் தேவைதானா..??? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது…/////////
சிந்திக்க வைக்கும் ஒரு கேள்வி!!!!! ஆனால் காதல் தேவை தான என்று கேட்ககக்கூடாது அண்ணா......காதலிப்பவர்களை ஏன் கொல்கிறீர்கள்.....காதலிப்பது தவாறா என்பது தான் என் கேள்வி...........
Post a Comment