Monday, November 7

காதல் மழை...






ஆயிரம் மழை துளிகள் 
உன்னை சூழ்ந்திருக்க
ஒரு துளியாய் என்றும்
உன் நெற்றியில் நான்..!!

     ****
கோபித்து கொள்கிறாள் 
அவள் வாசனையை 
ரசிக்காமல்..
மண் வாசனையை 
ரசிப்பதால்..!!!


     ****
அவளுடன் பேசுகையில் 
இடியாய் இடித்து..
தொந்தரவு செய்கிறது 
மழை..!!!


     ****
காத்திருந்த காதலர்களை 
மேலும் காக்க வைக்கிறது 
மழை..!!


    *****
ரசித்து ரசித்து காதல் 
மழையில் நனைந்தாலும்
காதல ஜுரம் விடுவதாயில்லை..!!


       ****
வேண்டுமென்றே குடையை 
விட்டு செல்கிறான் 
அவள் முந்தானையில்
ஒளிந்து கொள்ள...


      *****
காதலர்களின் சாபத்தை 
பெறுகிறது 
மழை...
காதலனின் தாமதத்தால்..


    ****
 பனித்துளி போல்
உன் மேல் மழைத்துளி..


மழைவிட்டாலும்
கூந்தல் சாரலின்
மழை விடுவதில்லை.


  ***** 
ஒவ்வொரு மழையிலும்
ஒரு காதல் துளிர்விடுகிறது..
ஒரு காதல் கண்ணீரில் 
கரைகிறது..!!





9 comments:

Unknown said...

ரசித்து ரசித்து காதல்
மழையில் நனைந்தாலும்
காதல ஜுரம் விடுவதாயில்லை..!!

சூப்பர் போ..டெம்ப்ளட் கலக்கல் சௌந்தர்

School of Energy Sciences, MKU said...

தம்பி,
சென்னை மழை உன்னையும் ஜுரத்தில் ஆழ்த்தி விட்டதோ? நல்ல கற்பனை! நயமான வரிகள். கவிதையை படித்ததும் எனக்கும் மழையில் நனைய வேண்டும் போல் இருக்கிறது. வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

வேண்டுமென்றே குடையை
விட்டு செல்கிறான்
அவள் முந்தானையில்
ஒளிந்து கொள்ள...//

ஆஹா என் அனுபவத்தை கவிதையா சொல்லிட்டீங்களே...!!!

பாலா said...

சீசனுக்கேத்த கவிதை. அருமை.

dheva said...

மழையோட பாதிப்பு கடுமையா இருக்குன்னு கேள்விப்பட்டேன்.........இப்பதான் தெரியுது எந்த அளவு இருக்குன்னு...

எப்டி பார்த்தாலும் மழை கொஞ்சம் யோசிச்சுட்டு வந்துஇருக்கலாமோ?

//மழைவிட்டாலும்
கூந்தல் சாரலின்
மழை விடுவதில்லை//

இது செம....!

மழையின் சாரலில்....குளிராய் கவிதைகளா...! வாழ்த்துக்கள் தம்பி...!

பின்குறிப்புள்: வாழ்த்துக்கள் கவிதைகளுக்கும்...சேர்த்துதான்...!

இராஜராஜேஸ்வரி said...

வேண்டுமென்றே குடையை
விட்டு செல்கிறான்
அவள் முந்தானையில்
ஒளிந்து கொள்ள...

வாழ்த்துக்கள் கவிதைக்கு!

Harini Resh said...

ஆயிரம் மழை துளிகள்
உன்னை சூழ்ந்திருக்க
ஒரு துளியாய் என்றும்
உன் நெற்றியில் நான்..!!

கவிதை அருமை :)

இந்திரா said...

//வேண்டுமென்றே குடையை
விட்டு செல்கிறான்
அவள் முந்தானையில்
ஒளிந்து கொள்ள...//


அழகு..

புவனேஸ்வரி ராமநாதன் said...

வணக்கம் சௌந்தர். நீண்ட நாட்களாக பதிவுலகம் பக்கம்
வர இயலாமல் போய்விட்டது. அதனாலேயே தாங்கள் என்னை
வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும். என்னை அறிமுகம் செயவித்ததற்கு மிக்க நன்றி சௌந்தர்.

மீண்டும் சந்திப்போம்.

 
;