Thursday, November 17

யார் இந்த ராங் நம்பர்..???





போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த அனுபவங்கள் நிறைய இருக்கும், ரொம்ப தொல்லையாக மாறி சிலர் நம்பரை கூட மாற்றியிருப்பார்கள் அந்த அளவிற்கு தொல்லையாக இருக்கும் ...அப்படியென்ன தொல்லைன்னு கேக்குறீங்களா ராங் கால்ஸ் தான். 

நாமும் சில நேரங்களில் ராங் கால் பண்றதுண்டு ஏதோ ஒரு நம்பர் மாற்றி போடுவதால் ராங் நம்பராக மாறிவிடும் ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இவர் இருக்கிறாரா என்று கேட்பது கிடையாது. எங்களுக்கு வரும் ராங்நம்பர் அழைப்புகள் எல்லாம் ஒரே நபரை கேட்டு தான் வருகிறது 

லேன்ட் லைன் தொலைபேசி இணைப்பு கொடுத்தது முதல் உதயகுமார் இருக்கிறாரா..?? என்ன கேட்டு வரும் அப்படி யாரும் இல்லையென்று சொல்லியும் இன்று வரை அந்த ராங் கால் வந்து கொண்டே தான் இருக்கிறது, சில நேரங்களில் பொறுமையுடன் அப்படியாரும் இல்லையென்று சொல்லுவோம். சில நேரம்...

பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருக்கும் பொழுது தொலைபேசி அடிக்கும் யாரோ என அவசர அவசரமாய் எடுத்து கேட்டால் அது ராங் நம்பராக இருக்கும்.. அந்த நேரத்தில் வார்த்தைகள் தடித்து விடும் அப்போதும் அவர்கள் விடுவதாயில்லை இன்று வரை அப்படி ராங் கால்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது..

வீட்டு தொலைபேசியில் தான் அப்படி வருகிறதென்று பார்த்தால்ஒரு பத்து நாட்களாய் என் செல் போனிற்கும் ராங் கால்கள் வந்து கொண்டிருக்கிறது நீலிமா ராணி இருக்குறாங்களா..?? அப்படியாரும் இல்லையென்று சொன்னால் யே நீலு உனக்கு ஏதாவது பிரச்னையா என கேட்டு மெசேஜ் அனுப்புறாங்க...?? மாத்தி மாத்தி வேற நம்பர்ல இருந்து கேக்குறாங்க.. நாங்க என்ன நீலிமா ராணிய பூட்டி வைச்சா இருக்கோம்..?? எங்களையே கேக்குறீங்களே..

எங்க அண்ணன் நம்பருக்கு வெளிநாட்ல இருந்து போன் வரும், மெசேஜ் வரும் ஹாய் டியர், அப்படி இப்படின்னு முதல் அந்த நம்பரை நான் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன்..  போன் வரும் எடுத்தா ஏதோ ஒரு பொண்ணு எடுத்துட்டு ஹலோ சொல்லிடு வைச்சிடும் இப்படி எனக்கு மட்டும் தான் ராங் நம்பர் வருதா இல்லை உங்களுக்கு வருதா..??

லேன்ட் லைன்க்கு வருதுன்னா எங்க வீட்டுல முதலில் இருந்த யாரோ பேங்க் லோன் வாங்கிவிட்டு போய் இருப்பாங்க..வெப்சைட்ல அட்ரஸ் பார்த்து எங்களுக்கு போன் பண்ணலாம், ஆனா வீட்டில் குடியிருக்கும் அணைவருக்கும் வர வேண்டும் அப்படி வருவதில்லை  எங்களுக்கு மட்டும் தான் வருகிறது.. நாங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் நம்பரை இதற்கு முன்பு வேறு யாரவது பயன் படுத்திருப்பார்கள் போல. அப்படி ஒருவர் பயன்படுத்திய நம்பரை மற்றவர் பயன்படுத்த முடியுமா..??     

லேன்ட் லைன்க்கு தான் நெட்ல இருந்து நம்பர் எடுத்து போன் பண்றாங்க ஆனா எப்படி செல் போன் நம்பருக்கு போன் பண்றாங்க தெரியல. ராங் நம்பர் சொல்லியும் மறுபடி ஏன் தான் அழைக்கிறார்களோ.. 





8 comments:

பால கணேஷ் said...

விசித்திரமான பிரச்சனையா இருக்கே... எனக்கு இப்படி அனுபவம் எதுவும் வந்ததில்லைங்கறதால கருத்துச் சொல்ல முடியல. நீங்க பா...வ...ம்..!

பாலா said...

சில பேர் ஒரு படிக மேல போய் நாம ராங்க் நம்பர்னு சொன்னப்புறமும் நம்பாம நம்மையே அதட்ட தொடங்கிடுவாங்க... எல்லோருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

எங்க அண்ணன் நம்பருக்கு வெளிநாட்ல இருந்து போன் வரும், மெசேஜ் வரும் ஹாய் டியர், அப்படி இப்படின்னு முதல் அந்த நம்பரை நான் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன்.. போன் வரும் எடுத்தா ஏதோ ஒரு பொண்ணு எடுத்துட்டு ஹலோ சொல்லிடு வைச்சிடும் இப்படி எனக்கு மட்டும் தான் ராங் நம்பர் வருதா இல்லை உங்களுக்கு வருதா..??//

யோவ் அது உங்க அண்ணனின் லவ்வருய்யா, அதான் ஹலோ சொல்லிட்டு வச்சிட்டாங்க ஹி ஹி...!!

சௌந்தர் said...

கணேஷ் கூறியது...
விசித்திரமான பிரச்சனையா இருக்கே... எனக்கு இப்படி அனுபவம் எதுவும் வந்ததில்லைங்கறதால கருத்துச் சொல்ல முடியல. நீங்க பா...வ...ம்..!///

கவல படாதீங்க சீக்கிரம் வரும் :))

வருகைக்கு நன்றி :))

சௌந்தர் said...

பாலா கூறியது...
சில பேர் ஒரு படிக மேல போய் நாம ராங்க் நம்பர்னு சொன்னப்புறமும் நம்பாம நம்மையே அதட்ட தொடங்கிடுவாங்க... எல்லோருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.//

உங்களுக்கும் இப்படி அனுபவம் இருக்கா பாலா..?? ரொம்ப மிரட்டி இருக்காங்க போல...

சௌந்தர் said...

MANO நாஞ்சில் மனோ கூறியது...

யோவ் அது உங்க அண்ணனின் லவ்வருய்யா, அதான் ஹலோ சொல்லிட்டு வச்சிட்டாங்க ஹி ஹி...!!///

ஹி ஹி ஹி அவன் எடுத்த கூட தான் பேச மாட்றாங்க :))

சேக்காளி said...

உங்க கொரலு கேக்க இனிமையானதா இருக்கும்.

KANNAA NALAMAA said...

சில பேர் ஒரு படிக மேல போய் நாம ராங்க் நம்பர்னு சொன்னப்புறமும் நம்பாம நம்மையே அதட்ட தொடங்கிடுவாங்க...

Er.Ganesan/Coimbatore

 
;