Monday, March 24

2014 பாராளுமன்ற தேர்தல் என் பார்வை..



தமிழககட்சிகள் தேர்தல் என்றால் முதலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தான் முடிவு செய்வார்கள். ஒரு கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருகிறதென்றால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து அவர்களை வளரவிடாமல் செய்வது தான் திமுக அதிமுகவின் வேலை ஒரு காலத்தில் திமுக அதிமுகவின் அடுத்த சக்தியாக இருந்த வைகோவுடன் மாற்றி மாற்றி கூட்டணி அமைத்து செல்வாக்கை அழித்தனர், அடுத்ததாக இதே வழியை பாமகவிற்கும் கையாண்டனர் அவர்கள் செல்வாக்கும் தற்போது சரிந்து கிடக்கிறது, 

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக இம்முறை திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சு அடிபட்டது கூட்டு சேர்ந்திருந்தால் தேமுதிகவிற்கு அது சரிவையே தந்திருக்கும், அந்த வகையில் விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைத்து தப்பித்துகொண்டார் , கூட்டணி கட்சிகளுக்காக தொகுதிகளை விட்டு கொடுக்க முன்வருவது அவரின் தேசிய அரசியல் பார்வைகள் வளர்ந்திருக்கிறது என்றே நினைக்க தோன்றுகிறது.

பாஜக கூட்டணிக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் என்னவென்றால் இந்துக்கள் வாக்கு ஜாதிகட்சியின் வாக்குகள், திமுக அதிமுக எதிர்வாக்குகள் , மோடியின் பெயரால் கிடைக்கபோகும் வாக்குகள்  பலமாக கருதப்படுகிறது , சிறுபான்மையினர் வாக்குகள் இந்த கூட்டணிக்கு கிடைக்காதென்பது பலவீனமே..

எந்த தேர்தலில் இல்லாதது இந்த பாராளுமன்ற தேர்தலில் நடக்கப் போகிறது திமுகவும் அதிமுகவும் 35 தொகுதிகளில் நேரடியாய் போட்டியிடுகின்றன. யாருக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருகின்றதென இந்தத் தேர்தலில் நன்றாக தெரிந்துவிடும், திமுகவின் பலம் சிறுபான்மையினர் வாக்குகள், ஸ்டாலின் தலைமை, இளைஞர்களின் வருகை,   ஆனால் பெரிய அளவில் கூட்டணியில்லை சகோதர யுத்தம் கோஷ்டி பூசல் என பலவீனத்துடன் இந்தத் தேர்தலை சந்திக்கிறது. திமுகவை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் கட்சியை பலப்படுத்தவேண்டும். சட்டசபைத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் என கூட்டணி வைத்து கூட்டணி வைத்து பல இடங்களில் உதயசூரியன் சின்னம் இல்லாமலே போகின்றன அதனாலே இந்த தேர்தலை திமுக சில 35 இடங்களில் நின்று கட்சியை பலப்படுத்தி 2016 சட்டசபை தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெறவேண்டுமென்பது தான் திமுகவின் தற்போதைய இலக்கு 

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத காங்கிரஸ் தனிமைபடுத்த பட்டதற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்பாடுகளே காரணம். ஆந்திராவில் தெலுங்கான உதயம் என்றவுடன் ஆந்திர காங்கிரஸ் என்னனென்ன எதிர்ப்பு தெரிவித்தார்கள் பாராளுமன்றமே அதிர்ந்தது ஆனால் தமிழக காங்கிரஸார் இலங்கை தமிழர் பிரச்சனை மீனவர்கள் பிரச்சனையில் எந்த எதிர்ப்புதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர் இப்பொழுது அதன் பலனை அனுபவிக்க தொடங்கிவிட்டனர் கூட்டணியென்றால் போட்டி போட்டு சீட்கேட்க்கும் காங்கிரஸார் தற்போது சீட் என்றால் ஓடி ஒளியும் நிலையில் உள்ளனர்.காங்கிரஸ்க்கு போதாது இந்த தண்டனை போட்டியிடும் அணைத்து வேட்பாளரும் வைப்புதொகையை இழக்கவேண்டும் வாக்கு வங்கி இல்லாமல் செய்யவேண்டும் அப்பொழுது தான் வரும் தேர்தலில் யாரும் காங்கிரஸ்வுடன் கூட்டணி வைக்க தயங்குவார்கள்.காங்கிரஸ்க்கு ஒட்டு போடும் மனநிலமையில் நம் மக்களிடையே இல்லாமலிருப்பது மகிழ்ச்சியே..

சரி இப்போது அதிமுகவிற்கு வருவோம் இந்த மூன்று ஆண்டுகளில் ஜெயலலிதா சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லாவிட்டாலும் நன்றாகவே ஆட்சி செய்துவருகிறார் குறிப்பாக அவர் வழக்கமாக செய்யும் தவறுகள் ஏதும் செய்யாமல் இருப்பதே அவரின் பலம், பலவீனம் என்று பார்த்தால் கூட்டணி கட்சிகளை மதிக்காமலிருப்பது, சிகப்புசட்டைகாரர்களை வெளியேற்றியது, கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவது இவரின் பலவீனம், மின்வெட்டு பிரச்னையால் தொழில்துறையினர் இன்னமும் அவதிப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும் கொள்ளை, என பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எப்போதும் இருக்கும் அதிமுகவின் ஒட்டு வங்கி அப்படியே சிதறாமல் இவருக்கே வரும் என்பது மிகப்பெரிய பலம்.

தமிழகத்தில் கூட்டணியில்லையென்றாலும் தேர்தலுக்கு பின் கூட்டணி வைத்து கொள்ளாமல் என்ற எண்ணத்துடன் தமிழக கட்சிகள் தேர்தலை சந்திக்கிறது, அதிமுக பாஜகவுடனும், திமுக காங்கிரஸ்வுடனும் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது, அப்படி ஒருவேளை கூட்டணி வைத்தார்களே ஆனால் தமிழர்களை முட்டாளாக்கும் செயல் மீண்டும் மீண்டும் அப்படி தமிழர்களை இனி முட்டாள்களாக்க முடியாது இளைஞர்களின் சிந்தனையும் அரசியல் பார்வையும் தற்போது அபராமாக இருக்கிறது.. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அவர்கள் கையாண்டால் திமுக அதிமுகவிற்கு காங்கிரஸ் நிலையே ஏற்படும்

1 comments:

Unknown said...

"இளைஞர்களின் சிந்தனையும் அரசியல் பார்வையும் தற்போது அபராமாக இருக்கிறது"

தேர்தல் நேரத்தில் இவர்களுக்கு குவாட்டரும், பிரியாணியும் அபாரமாகக் கிடைக்கிறது.

 
;