Friday, July 23

தட்டான் பூச்சி.....




பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்து இருந்தான் அருண். பொறியியல் படிப்பில் சேருவதுதான் அவனின் அடுத்த இலக்கு. இது அவன் நண்பர்களுக்கும் நன்றாகவே தெரியும், நண்பர்களும் அவனை ஊக்கபடுத்துவார்கள். நீ தான் நம் வகுப்பிலே முதல் மாணவன் உனக்கு என்ன கவலை சுலபமாக சீட் கிடைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார்கள்.




ஆனால் அருணுக்கு ஒரே கவலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நிறைய செலவு ஆகும் இவர்கள் வீட்டில் அவ்வளவு வசதி கிடையாது, அருணின் அப்பா நெல் மண்டியில் மூட்டை தூக்கும் தொழிலாளி ஓரு நாள் வேலை செய்தால் 150 ரூபாய் கிடைக்கும், பள்ளி படிப்பை அங்கும் இங்கும் கடன் வாங்கி தான் படிக்க வைத்தார்.


கல்லுரி படிப்பு குறித்து என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை, அருணனை கூப்பிட்டு நீ என்னப்பா படிக்க போகிறாய் என்று கேட்டார்...  அப்பா நான் தகவல் தொழில் நுட்பம் ( IT) படிக்க போறேன்..அப்பா...அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் தம்பி என்றார். இலவச இடம் கிடைத்தால் முதல் ஆண்டு மட்டும் 40 ஆயிரம் ஆகும், மொத்தம் 2 லட்சம் வரை செலவு ஆகும்... நம்மளிடம்  அவ்வளவு பணம் இல்லையேப்பா...சொத்தை விற்று படிக்க வைக்கலாம் என்றால் நம்மளிடம் எந்த சொத்தும் கிடையாது என்று புலம்பி கொண்டு இருந்தார். இந்த கலை கல்லூரியில் படிக்க என்ன செலவு ஆகும் தம்பி? அருணை கேட்க்க அவனுக்கு வார்த்தை வரவில்லை அதற்க்கு அதிகபட்சம் 5000 இருந்தால் போதும் அப்பா. நீ ஏன் அந்த படிப்பில் சேர்ந்து படிக்க கூடாது. இல்லை எனக்கு அதில் விருப்பம் கிடையாது (IT) படிக்க தான் எனக்கு விருப்பம்,



கவலையுடன் வேலைக்கு சென்றார் அருணின் அப்பா. வேலை செய்யும் நண்பர் உடன் பேசிக்கொண்டு இருந்த போது பையன் படித்து முடித்து விட்டால் உங்களுக்கு கவலை இல்லை, வேலைக்கு வந்து இப்படி மூட்டை சுமக்க வேண்டிய அவசியம் கிடையாது, அருணின் அப்பா, அப்படி நடந்தால் எனக்கும் சந்தோசம் தான், எங்கு நடக்க போகுது அவன் ஆசை படும் படிப்பை படிக்க வைக்க லட்ச கணக்கில் ஆகும், என்று சொல்கிறான், என்ன செய்வது என்று புரியவில்லை நண்பர்: அவன் சின்ன பையன் அவனுக்கு குடும்ப கஷ்டம் தெரியாது நீ தான் சொல்லி புரிய வைக்கணும். இருப்பது ஒரே பையன் அவனுடைய ஆசையை நிறைவேற்ற முடிய வில்லையே,என்ன செய்வது என் வீட்டில் வந்து பிறந்து விட்டான், வேறு எங்காவது பிறந்து இருந்தால் அவன் இன்னும் நல்லா இருந்து இருப்பான். என்ன செய்வது தேர்வு முடிவு வரட்டும் என்று சொல்லி கொண்டு வீட்டுக்கு போனார் அருணின் அப்பா.




மறு நாள் காலை தேர்வு முடிவு பார்ப்பதற்கு பள்ளிக்கு சென்றான் அருண், அவனை நண்பர்கள் தூக்கி கொண்டு ஓடினார்கள், எதிபார்ததை போல அவனே பள்ளியில் அதிகம் மதிப்பெண் பெற்றிருந்தான்.  பாராட்டுகள் குவிகிறது, அதே மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றான். அப்பா அம்மா விற்கும் ஒரே மகிழ்ச்சி, அருண் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் வாங்க சென்றான், அருணின் அப்பா கலை கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க சென்றார்.

இருவருமே ஒரே நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தனர், அருண் ஆசையாக அந்த விண்ணப்பத்தை காட்டுவதற்குள் அருணின் அப்பா கலை கல்லூரி விண்ணப்பத்தை கொடுத்து இதில் கையொப்பம் போடு என்று சொல்ல அருணுக்கு முகம் வாடியது, இல்லை என்னால் கலை மற்றும் அறிவியல் படிக்க முடியாது என விவாதம் செய்தான். அருணின் அப்பா எனக்கு அவ்வளவு பணம் யாரும் கடன் தர மாட்டாங்க நான் என்ன செய்வேன், நான் தான் மூட்டை தூக்கி குடும்பம் நடத்துறேன், உன்னைய எப்படியாவது, பொறியியல் படிப்பில் சேர்த்து விட. முயற்சி செய்தேன், என்னால் ஒன்னும் செய்ய முடியலை, சொல்லி கண்ணீர் விட்டார் அருணின் அப்பா. அழுவாதீங்க அப்பா நான் கலைகல்லூரியில் சேர்ந்து படிக்கிறேன். என்று சொன்னான் அருண்.


சிறிது நேரம் அமைதியாக கழிந்தது. நானும் அம்மாவும் பணம் விசயமா ஒருவரை பார்க்க போறோம் நீ இங்கேய இரு நாங்கள் போய்விட்டு சீக்கிரம் வந்து விடுகிறோம், என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பினார்கள், என்ன இருந்தாலும் அப்பாவை சமாதானம் செய்யவே அப்படி கூறினான் அருண். அவனுக்கு அதில் விருப்பம் இல்லை. யாரும் இல்லாத அறை அவன் மனதை குழப்புகிறது. நம்ம இருந்து அப்பாவுக்கு கஷ்டம் கொடுப்பதை விட தற்கொலை செய்து கொள்ளாம் என்று தவறான முடிவுக்கு வருகிறான்.

கயிறை எடுத்து மின்விசிறி மீது போட்டான், நாற்காலிய எடுத்து போட்டு நிற்க அந்த கயிறை எடுத்து கழுத்தில் மாட்டினான், அப்போது எங்கு இருந்தோ ஓரு தட்டான் பூச்சி வந்து அவனை வட்டம் அடித்தது அவன் மேல் உட்கார்ந்தது, அவனும் பார்த்தான், தட்டான் பூச்சி பற்றி படித்தது நினைவில் வந்தது. சில நாள் வாழும் தட்டான் பூச்சியே சந்தோஷமாக சுற்றி திரியும் பொழுது நான் மட்டும் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் நினைத்து இறங்கி விட்டான், கலை கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம், அந்த படிப்பு கூட இல்லாமல் எத்தனையோ மாணவர்கள் இருக்கிறார்கள், என்ன ஓரு முட்டாள் தனம் செய்ய பார்த்தேன், என்று மனதிற்குள் சொல்லி கொண்டே மின்விசிறியின் பொத்தானை அழுத்தினான், அந்த தட்டான் பூச்சி மின்விசிறியில் அடி பட்டு இறந்தது தன் கடமையை செய்து விட்ட ஆனந்தத்தில்..


அருணின் அப்பா பணம் வாங்கி கொண்டு வந்தார். அருணை கூப்பிட்டு நாளை உங்க பள்ளிக்கு நம்மளை வர சொல்லி இருக்காங்க காலை போகணும் சீக்கிரம் எழுந்து கிளம்பனும். என்று சொல்லி தூங்க சென்றனர். காலை பள்ளியில் பள்ளி உரிமையாளர் வந்து உங்க பையனால் இந்த பள்ளிக்கு பெருமை, அடுத்து என்ன படிக்க வைக்க போறிங்க? சிறிது நிமிட அமைதிக்கு பின், (bsc) படிக்க போவதாக அருண் சொல்ல,ஏன் பொறியியல் படிக்க வேண்டியது தானே, என்று கேட்டார்.

அருணின் அப்பா எங்களுக்கு அவ்வளவு வசதி கிடையாது என்று சொன்னார், படிப்பதற்கு வசதி தேவை இல்லை நான் கல்வி கடன் வாங்கி தருகிறேன் அதை அவன் படித்து முடித்து வேலைக்கு போகும் போது திருப்பி செலுத்தினால் போதும், அதுக்கு யாராவது ஜாமீன் இருக்கனும் சொல்லுவாங்க, நான் போடுறேன் ஜாமீன் கையெழுத்து நான் போடுறேன் என்ன படிக்க வையுங்கள், விழா ஏற்பாடு செய்து உங்க மகனுக்கு சான்றிதழ் தருவோம் என்று சொல்லத்தான் உங்களை அழைத்தோம். அருண் பெருமிதத்துடன் பொறியியல் கவுன்சிலிங் சென்றான், ஓரு தட்டாம் பூச்சி அவன் மேல் வந்து உட்கார்ந்தது...








42 comments:

dheva said...

எப்படி பார்த்தாலும் தற்கொலை செய்வது என்பது முட்டாள்தனம்......! ஒரு விதமான இருக்கமான சூழ் நிலையில் முடிவெடுத்து விடுகிறார்கள்...அதில் இருக்கும் அபத்தம் புரிவதில்லை.

ஒரு தட்டான்பூச்சியை வைத்துக் கொண்டு இதை விளக்கியிருப்பது அருமை.....தம்பி! மொக்கை பதிவுகளை விட இதுபோன்ற கருத்துக்கள் ஒரு வித விழிப்புணர்ச்சியை நிச்சயம் உருவாக்கும்!

வாழ்த்துக்கள் தம்பி!

எல் கே said...

arumai thambi.. intha maathiri niraya eluthunga

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பா..
ஒரு தட்டான் பூச்சியை வைத்து தன்னம்பிக்கை ஊட்டும் கதை சொன்ன விதமும் அருமை..

"தற்கொலை என்பது முட்டாள்கள் மற்றும் கோழைகளின் ஆயுதம்"..

Chitra said...

நம்பிக்கையூட்டும் கதை..... ரொம்ப நல்லா இருக்குங்க..... பாராட்டுக்கள்!

அருண் பிரசாத் said...

நல்லா இருக்குப்பா! நீளம் குறைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து

ஒரு தட்டான் பூச்சி மூலம் கருத்தை சொல்லியவிதம் அருமை

http://rkguru.blogspot.com/ said...

கதையின் தாக்கம் மிகவும் அருமை.........வாழ்த்துகள்

Unknown said...

நல்ல கருத்துடன் கூடிய கதையை சொல்லியிருக்கிறீர்கள்.. சில சமயங்களில் ஈசல்கள் கூட சில நிமிடங்கள்தான் வாழும் அதுவும் மிகவும் சந்தோசமாக வாழும்..

ஜீவன்பென்னி said...

தற்கொலை எண்ணம் முட்டாள் தணத்தின் உச்சம். கதை நல்லாயிருக்குப்பா.

nis said...

nice post

elamthenral said...

அருமை சௌந்தர்...வாழ்த்துகள்..

Prathap Kumar S. said...

நல்லாருக்குப்பா... எந்த பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு முடிவாகாது...

Riyas said...

நல்ல அருமையான கதை.. தற்கொலை கோழைத்தனம்..

செல்வா said...

ஹய்யோ .. ரொம்ப நல்லா இருக்குங்க .. சத்தியமா அருமையான கதை
இத படிக்கிறப்ப என்னோட பள்ளி வாழ்க்கை தான் நியாபகத்துக்கு வருது. நானும் கூட +2 முடிச்சிட்டு காலேஜ் போலாம்னு தான் இருந்தேன் .. நானும் first group தான் .. 1037 மார்க் .. ஆனா குடும்ப சூழ்நிலை மேல படிக்க முடியல .. ஆனா நான் அந்த மாதிரி தற்கொலை முயற்சியெல்லாம் செய்யலை .. அத பத்தி நான் என்னோட 50 வது பதிவுல சொல்றேன்..!!

செல்வா said...

///தம்பி! மொக்கை பதிவுகளை விட இதுபோன்ற கருத்துக்கள் ஒரு வித விழிப்புணர்ச்சியை நிச்சயம் உருவாக்கும்!///
என்னைய சொல்லுற மாதிரி இருக்கு ...!!

SShathiesh-சதீஷ். said...

தற்கொலைக்கும் தைரியம் வேண்டும் ஆனால் அதை வைத்து வாழ்ந்து பார்க்கலாம் நானும் எல்லாம் கடந்து வந்தவன் தான் .

Kousalya Raj said...

இந்த கதை மூலமா பலர் உங்களை வாழ்த்துவது சந்தோசமாக இருக்கிறது சௌந்தர். இந்த மாதிரி கதைகள் தொடர்ந்து எழுதுங்க....

நல்ல கதை , நல்ல விதமாக பலரை சென்று அடையும்.

நன்றி சௌந்தர்.

Karthick Chidambaram said...

அருமையான கதை. நீங்கள் மொக்கையும் போடுகிறீர்கள் ... இதுவும்.
வாழ்த்துக்கள்

School of Energy Sciences, MKU said...

ஆஹா, பிரமாதமான தன்னம்பிக்கை கதை. தற்கொலை என்பது கோழைதனம், அது ஒருவரின் முடிவல்ல பலரின் அவமானங்களின் ஆரம்பம். வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

திறமைகள் இருந்தும் இந்த பணம் என்ற காகிதங்களால் பலரின் கல்வி எட்டாதக் கனியாகவே இன்றும் இருந்து வருகிறது . கதையை மிகவும் நேர்த்தியாக எழுதி இருகிறிர்கள் . சில சமயங்களில் நாம் விருப்பப்பட்டது கிடைக்காவிட்டால் . கிடைத்ததை விருப்பப்பட்டு ஏற்றுகொள்ளும் மனப்பாங்கு நமக்கு ஏற்ப்படும் பொழுது ஏதேனும் ஒரு வழியில் நாம் விரும்பியதே கிடைத்து விடுகிறது . பகிர்வுக்கு நன்றி .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

jothi said...

//சில நாள் வாழும் தட்டான் பூச்சியே சந்தோஷமாக சுற்றி திரியும் பொழுது நான் மட்டும் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்//

இந்த உண்மைகூட தெரியாமல் எத்தனையோ பேர் உயிரை இழந்துள்ளனர். நல்ல பகிர்வு மனதை தொட்டதில் இதுவும் ஒன்று ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் சொன்னது…

///தம்பி! மொக்கை பதிவுகளை விட இதுபோன்ற கருத்துக்கள் ஒரு வித விழிப்புணர்ச்சியை நிச்சயம் உருவாக்கும்!///
என்னைய சொல்லுற மாதிரி இருக்கு ...!!

///


இதிலென்ன சந்தேகம்.. உன்ன சொன்னது தான் ...

இனியாவது திருந்து..

செல்வா said...

//வெறும்பய சொன்னது…
இதிலென்ன சந்தேகம்.. உன்ன சொன்னது தான் ...

இனியாவது திருந்து..//



வாய்ப்பே இல்லை .. இனிமேல் தான் அதிரடி மொக்கைகள் ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் சொன்னது…

வாய்ப்பே இல்லை .. இனிமேல் தான் அதிரடி மொக்கைகள் ...

///

இப்படியே செஞ்சுகிட்டிருந்தா கூடிய விரைவில் ப மு க கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியை இழக்க நேரிடும்..

செல்வா said...

/// இப்படியே செஞ்சுகிட்டிருந்தா கூடிய விரைவில் ப மு க கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியை இழக்க நேரிடும்.. ///
எனக்கு நம்ம ப.மு.க ல எப்பவோ மொக்கை வளர்ப்பு சங்கத்துல தலைவர் பதவி கொடுத்திட்டாங்க ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் சொன்னது…

எனக்கு நம்ம ப.மு.க ல எப்பவோ மொக்கை வளர்ப்பு சங்கத்துல தலைவர் பதவி கொடுத்திட்டாங்க ..

///


எனக்கு தெரியாமையா..

விஜய் said...

சௌந்தர்

கலக்கி இருக்கீங்க, படிக்க கனமா இருந்த மனச, கடைசியில் அழகா இலகுவானதா சந்தோசமா மாத்தி இருக்கீங்க,
மிக அருமை, எழுத்தின் மேல் அழகா பயணிக்க வைகிறீங்க

வாழ்த்துக்கள்

செல்வா said...

/// எனக்கு தெரியாமையா..///
இல்ல உங்களுக்கு தெரியும் . தெரியாத மாதிரி நடிக்கிறீங்க ..

Prasanna said...

இந்த கதை முடிவு மாதிரியே நல்ல படியா முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும்.. வங்கிக்கு போன உடனே சொல்லப்படுவது.. சொத்து இல்லாம கடன் கொடுக்க முடியாது. சொத்து இருந்தா அவங்க ஏன் அங்க போக போறாங்க?

என கிட்ட எல்லாம் பணம் இருந்தா எல்லா கல்லூரியையும் கட்டி இலவசமா பணம் இல்லாதவர்களை படிக்க வைப்பேன் :)

ஜெய்லானி said...

///தம்பி! மொக்கை பதிவுகளை விட இதுபோன்ற கருத்துக்கள் ஒரு வித விழிப்புணர்ச்சியை நிச்சயம் உருவாக்கும்!///
என்னைய சொல்லுற மாதிரி இருக்கு ...!! //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Jeyamaran said...

நேரத்திக்கு ஏற்ற பதிவு கிளப்புங்க

ஹேமா said...

பலபேர் மனதைத் தெளிவாக்கும் நல்லதொரு கதை சௌந்தர்.

சீமான்கனி said...

முதலில் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியல பிறகு புரிந்து கொண்டேன்...சிறப்பாய் வந்திருக்கு வாழ்த்துகள் சௌந்தர்...

முனியாண்டி பெ. said...

மிகவும் நல்ல இருந்தது
//சிறிது நிமிட அமைதிக்கு பின், (bsc) படிக்க போவதாக அருண் சொல்ல//
இந்த வரிகளை படிக்கும்போது என்னை பார்த்தேன்.

நீளம் அதிகம் என்பது என் தாழ்மையான கருத்து

க ரா said...

நல்ல நம்பிக்கையூட்டற கதை :)

Anonymous said...

நம்பிக்கை ஊட்டும் கதை அருமையா சொன்னிங்க ..வாழ்த்துக்கள் நண்பா

ஸாதிகா said...

அழகிய தட்டாம்பூச்சு படத்துடன் அருமையான சிறுகதை படைத்து விட்டீர்கள்.

ஸ்ரீராம். said...

தன்னம்பிக்கை டானிக்

Anonymous said...

தன்னம்பிக்கை உணர்த்தும் பதிவு..
பலரை சிந்திக்க தூண்டும்
வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அருமை நண்பா..
கதை சொன்ன விதம் அருமை..

cheena (சீனா) said...

அன்பின் சௌந்தர் - கதைக் கரு அருமை - நடை இயல்பாய் இருக்கிறது. இருப்பினும் நீளம் அதிகம் - சற்றே குறைக்கலாம். தேவா மற்றும் அருண் பிரசாத்தின் மறுமொழிகளைக் கவனிக்கவும். கடைப் பிடிக்கவும். ஒரு கதை தானா ? இல்லை இன்னும் கதைகள் இருக்கின்றனவா ? இல்லை எனில் ஏன் தொடரக் கூடாது. திறமை வளர வேண்டும் . நல்வாழ்த்துகள் சௌந்தர். நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சௌந்தர் - கதைக் கரு அருமை - நடை இயல்பாய் இருக்கிறது. இருப்பினும் நீளம் அதிகம் - சற்றே குறைக்கலாம். தேவா மற்றும் அருண் பிரசாத்தின் மறுமொழிகளைக் கவனிக்கவும். கடைப் பிடிக்கவும். ஒரு கதை தானா ? இல்லை இன்னும் கதைகள் இருக்கின்றனவா ? இல்லை எனில் ஏன் தொடரக் கூடாது. திறமை வளர வேண்டும் . நல்வாழ்த்துகள் சௌந்தர். நட்புடன் சீனா

 
;