Tuesday, October 19

தீபாவளி...





நண்பர்கள் பேசிகொள்வது கூட தன் காதில் விழாதவாறு ஜன்னலில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான் மகேஷ். ... "டேய் உன்னை தான் டா" என்று அதட்டினான் ராஜா.  என்ன என்று கேட்டான் மகேஷ். "உங்க வீட்டில் தீபாவளிக்கு புது டிரஸ் எடுத்துவிட்டார்களா"? சிறிது நேர மெளனத்திற்கு பிறகு எடுத்துவிட்டார்கள் என்று பொய் சொன்னான்,  "உனக்கு எடுத்து விட்டீர்களா" என்று கேட்டான் மகேஷ். எடுத்து விட்டோம் என்று ராஜா சொல்ல "என்ன டிரஸ் எப்படி இருக்கும்" என்று மகேஷ் ஆவலாய் கேட்டான்.... ராஜாவோ சட்டை இந்த கலர் இப்படி இருக்கும் பேன்டில் மூன்று பாக்கெட் இருக்கும் என்று அவன் நண்பன் சொல்ல சொல்ல அவனும் அதே போல டிரஸ் வாங்க வேண்டும் என்று மனதிற்குள் சொல்லி கொண்டான்.. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் கூட தீபாவளியை பற்றியே பேசிக்கொண்டு சென்றனர்...

மகேஷின் வீடு வந்தது உள்ளே நுழையும் போதே "அம்மா"... என்று குரல் எழுப்பி கொண்டே சென்றான் "என்ன ஆச்சி" என்று மகேஷ் அம்மா கேட்டார்கள்...என் வகுப்பில் எல்லாரும் புது டிரஸ் வாங்கிவிட்டார்கள், "நாம் எப்போது வாங்க போகிறோம் அம்மா...? "தெரியலையேப்பா அப்பா வரட்டும் அவரை கேட்டு சொல்றேன் சரி போய் முகம் கழுவி விட்டு வா" அம்மா சாப்பாடு போடுறேன் ...சாப்பிட்டு கொண்டே அம்மா ராஜா எல்லாம் புது டிரஸ் வாங்கிடான் ஜீன்ஸ் பேன்ட் ஷர்ட்எல்லாம் வாங்கி இருக்கான் அம்மா அவன் டிரஸ் வாங்கி இருக்கும் கடை பெயர் கூட எனக்கு தெரியும் அங்கேயே போய் நாமும் துணி வாங்கலாம் அம்மா சரி சரி வாங்குவோம் நான் அப்பாவிடம் சொல்கிறேன் 

புத்தகத்தை எடுத்து படித்தாலும் படிப்பில் அவன் கவனம் போகவில்லை அப்பா எப்போது வருவார் என்று வாசலையே பார்த்து கொண்டு இருந்தான் அப்பாவின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து தூங்கியே விட்டான் காலையில் எழுந்தவுடன் அப்பாவிடம் சென்று மீண்டும் தன் அம்மாவிடம் கேட்டதையே கேட்டான் அதற்கு அவரும் சரிப்பா அப்பாவுக்கு போனஸ் வரட்டும் உனக்கும் ராஜாவுக்கு எடுத்த மாதிரியே எடுத்து தரேன் என்ன சரியா அப்பா கண்டிப்பா எடுத்து தரேன் "போங்கப்பா போன வருசம் கூட இப்படி தான் சொன்னீங்க" ஆனா எடுத்து தரலை "போன வருசம் அப்பாவுக்கு வேலை இல்லைப்பா அதான் என்னால் முடியலை இந்த வருஷம் கண்டிப்பா எடுத்து தரேன்" என்று சொன்னவுடன் அரைமனதுடன் பள்ளிக்கு சென்றான் 

பள்ளி அறையில்: சென்ற வருட தீபாவளியின் போது நடந்தது நினைவுக்கு வந்தது மகேஷ் எண்ணெய் தேய்த்து குளித்து ரெடியா ஆகுப்பா "போங்கம்மா புது டிரஸ் இல்லை எண்ணெய், தான் இப்போ ரொம்ப முக்கியம்" முனங்கி கொண்டே குளிக்க சென்றான். வெளியே செல்லாமல் வீட்டிலே இருந்தான் மகேஷ் அம்மா "ஏம்ப்பா வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்குரே அப்படியே வெளியே போயிட்டுவாப்பா" "போம்மா நான் போகலை எல்லாம் புது டிரஸ் போட்டு இருக்காங்க நான் மட்டும் பழைய டிரஸ் போட்டு கொண்டு வெளியே போக எனக்கு ஏதோ மாதிரி இருக்கு" அப்பாவிடம் சென்று அப்பா எனக்கு கம்பி மத்தாப்பு மட்டும் வாங்கி கொடுங்க என்றான் "நைட் வாங்கி தரேன்" மகேஷ் ஏம்பா இப்போ வாங்கி தர முடியாதா...? இல்லை மகேஷ் இப்போ வாங்கினா ஒரு பாக்கெட் தான் வாங்க இரவு வாங்கினா அதே பணத்தில் ரெண்டு பாக்கெட் மத்தாப்பு வாங்கலாம், இரவு நேரத்தில் வெடித்தால் தான் அழகா இருக்கும்....

நேரா ஒரு சாக்பீஸ் பறந்து வந்து மகேஷ் தலையில் பட்டது "என்ன மகேஷ் நினைவு எங்க இருக்கு..? "மேம்... தீபாவளி மேல" என்றதும் வகுப்பறையில் ஒரே சிரிப்பலை... மணி அடித்தது எல்லாம் பட்டாசு பார்த்து வெடிக்கணும் ஆசிரியை ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்...

மறு நாள் தீபாவளி இன்னும் புதுதுணி எடுக்கவில்லை என்ற கோபத்துடன் சாப்பிடாமல் அப்பாவின் வருகைக்காக காத்திருந்தான். அப்பா வந்தவுடன் ஆவலாய் பார்த்தான் அவர் வெறும் கையை பார்த்தவுடன் என்னப்பா இன்னும் எனக்கு டிரஸ் எடுத்து தரலையே? "நாளைக்கு தான் எனக்கு போனஸ் தருவாங்க வேலை முடிந்து வரும் போது கண்டிப்பா வாங்கிகொண்டு வரேன்" மகேஷின் அம்மா ஏங்க எங்கயாவது கடன் வாங்கியாவது அவனுக்கு புது டிரஸ் வாங்கி வந்து இருக்கலாம் என்ன நீயும் புரியாமா பேசுறே ஒரு நாளுக்கு யாராவது கடன் வாங்க சொல்றியா ஒரு தடவை கடன் வாங்கினா அதில் இருந்து மீள முடியாது 

மறுநாள் மகேஷ் அப்பா துணி பட்டாசு எல்லாம் வாங்கி வர இரவு 10 ஆகி விட்டது மகேஷ் அப்பா வருவார் வருவார் என்று எதிர் பார்த்து தூங்கி விட்டான். மகேஷை எழுப்பி இங்கே பாருடா அப்பா உனக்கு என்னவெல்லாம் வாங்கி வந்து இருக்கேன் பாரு... ஜீன்ஸ் பேன்ட் எல்லாம் வாங்கி வந்து இருக்கேன் அதையெல்லாம் பார்த்தும் கூட அவன் முகத்தில் சந்தோசம் இல்லை "போங்கப்பா தீபாவளி எல்லாம் முடிந்து போச்சி இந்த தெருவே பட்டாசு வெடிப்பதை நான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன். நாளைக்கு நான் மட்டும் தனியா பட்டாசு வெடித்தா யார் பார்ப்பார்கள்" மகேஷ் அடுத்தவர் பார்க்க வேண்டும் என்பதற்க்காக நாம் எதையும் செய்ய கூடாது, நம்ம சந்தோசம் தான் முக்கியம், நாளைக்கும் தீபாவளி கொண்டலாம், நாளைக்கு நீ பட்டாசு வெடி, இந்த தெருவே உன்னை பார்க்கும்....! எப்படியோ தன் மகனை சமாதானம் செய்தார் மறுநாள் மத்தாப்பை எடுத்து பற்ற வைத்து "அப்பா நீங்களும் வாங்க என்று சரவெடியை எடுத்து பற்ற வைத்தான் சந்தோசமாக தீபாவளி கொண்டாடினான் மகேஷ்... 



44 comments:

Kousalya Raj said...

தீபாவளிக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கும் நேரத்தில் அதை நினைவு படுத்துற மாதிரி ஒரு கதை.......!

இம்சைஅரசன் பாபு.. said...

இளமை பருவத்தில் தீபாவளி கொண்டாடும் அழகே தனி தன சௌந்தர் ........அதுவும் பள்ளி பருவத்தில் ..
பட்டாசை தூக்கி கொண்டு பள்ளி தோழர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடிப்பது .......சந்தோசமே ..........கதை நல்ல இருக்கு சௌந்தர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice story good

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை படித்த உணர்வு நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ்

Kousalya Raj said...

//அடுத்தவர் பார்க்க வேண்டும் என்பதற்க்காக நாம் எதையும் செய்ய கூடாது, நம்ம சந்தோசம் தான் முக்கியம், நாளைக்கும் தீபாவளி கொண்டலாம்,//

சிறுவனுக்கு சொல்லும் சமாதானமாக இருந்தாலும் மனதை தொட்டுவிட்டது....ஏழையின் வீட்டில் பணம் கையில் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே தீபாவளிதான்.....

சௌந்தர் அருமை....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்ல முடிவு.

Jay said...

//நேரா ஒரு சாக்பீஸ் பறந்து வந்து மகேஷ் தலையில் பட்டது "என்ன மகேஷ் நினைவு எங்க இருக்கு..? "மேம்... தீபாவளி மேல" என்றதும் வகுப்பறையில் ஒரே சிரிப்பலை...//

நல்லாத்தான் இருக்கு....

மங்குனி அமைச்சர் said...

நல்லா இருக்கு சார்

எஸ்.கே said...

அருமை ஒரு சிறுவனின் ஏக்கத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். முடிவும் நன்றாக இருந்தது!

dheva said...

ஐ கேன் சே.. திஸ் இஸ் யுவர் பெஸ்ட் ஷாட்.. ..தம்பி!

நடுத்தர வர்க்க குடும்பங்களில் இருக்கும் எதார்த்த வாழ்க்கை முறை. ஒரு பக்கம் கோபமும், ஒரு பக்கம் அழுகையும், இன்னொரு பக்கமும் ஆத்திரமும் வருகிறது இந்த வாழ்க்கை முறை மீதும், அங்கே திணிக்கப்பட்டு இருக்கும் வறுமை மீதும்.

பெரும்பாலும் பண்டிகைகள் பணக்காரர்களுக்கு....

1) வாடியிருக்கும் பிள்ளை...

2) வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோர்

3) துரத்தும் வறுமை

4) தொடரும் பண்டிகைகள்....

மோட்டிவேட் செய்து என்னவேணுமென்றாலும் செய்யலாம்....ஆனால்...எதார்த்த வாழ்க்கையை எதிர் கொள்ள மனம்தானே வேண்டும்...

ஓ.கே.. லெட் இட் டு பீ லைக் திஸ்....என்னிக்கு நம்ம கையில் பணம் இருக்கோ அன்னிக்கு தீபாவளி, பொங்கல்.....


சோ... வீ வில் ஹேவ் டூ வொர்க் ஒவுட் அவர் லைஃப் டு ஹேவ் பெட்டர் ஷேப்....!

கைய குடு தம்பி.....சூப்பர் போஸ்ட்!

Unknown said...

கதை நல்லாயிருக்கு..

Unknown said...

நல்ல கதை தம்பி பாராட்டுக்கள்..

Unknown said...

கதை அருமையா இருக்குங்க

ஜீவன்பென்னி said...

நல்லாயிருக்குப்பா கதை........... சூப்பர்.....

jothi said...

very touching story sounder,

messege nice,

goodone from u.

கருடன் said...

ஐ கேன் சே.. திஸ் இஸ் யுவர் பெஸ்ட் ஷாட்...!

பெரும்பாலும் பண்டிகைகள் பணக்காரர்களுக்கு....

1) வாடியிருக்கும் பிள்ளை...

2) வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோர்

3) துரத்தும் வறுமை

4) தொடரும் பண்டிகைகள்....

கதை அருமை.... கிளைமாக்ஸ் கொஞ்சம் அழுத்தம் கூட்டி இருக்கலம்....

செல்வா said...

பட்டாசான கதை..!! நல்லா இருக்கு .. இது நிறைய இடங்களில் நடக்குது..

ஜெயந்தி said...

நல்ல முயற்சி. இன்னும் நிறைய படிங்க. எழுத்து இன்னும் சீராகும்.

velji said...

நீ சிரித்தால் தீபாவளி என்று சொல்லி சமாளிக்கலாம்.ஆனால் யதார்த்தம் சுடுகிறது!

அருண் பிரசாத் said...

நல்ல உணர்வுகளோட கதை வந்து இருக்கு செளந்தர்...

வாழ்த்துக்கள்!

டெரர் சொன்ன மாதிரி, கிளைமாக்ஸ் கொஞ்சம் டச்சிங்கா வெச்சி இருக்கலாம்

ஆனா, இதுதான் உன் ஏ ஒன் போஸ்ட்

Gayathri said...

kadhai rombha arumaya irukku..chinna kozhandhyoda ekkam periavanga kashtam ellam etharthama solirukenga super

Menaga Sathia said...

nice story!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நெகிழ வைக்கும் கதை சௌந்தர்! வாடிய முகம் கண்முன்னே நிழலாடுகிறது. அளவுக்கு மீறி ஆடம்பரங்களை வெளிக்காட்டுவது எத்தனையோ மனங்களை துயரப்படுத்துகிறது....! ஆடம்பரக் கொண்டாட்டங்களை தவிர்க்க முடியவில்லை என்றாலும், மற்றவர் பார்க்கவேண்டும் என்பதற்காக யாரும் செய்ய வேண்டாம்.

Chitra said...

very touching story..... நல்ல கதை.

ஜில்தண்ணி said...

ம்ம்ம்ம் உணர்ச்சிப்பூர்வமான கதை

தீபாவளிக்கன்றாவது நல்ல துணி உடுத்த ஆசைபடும் பல உள்ளங்களின் நிலை இதுதான்

அருமை தல

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல கதை... சௌந்தர்..
பண்டிகை டைம்-ல வசதி இல்லாத குழந்தைகள் படும் மனக் கஷ்டம் அழகா சொல்லிருக்கீங்க..
டீச்சர் சாக்பீஸ் வீசினது பத்தி சொன்னது சூப்பர்.. எதார்த்தமான நடை.... :-)
வாழ்த்துக்கள்..

(இதுனாலயே தான் எனக்கு ஸ்கூல் யூனிபார்ம் சிஸ்டம் பிடிக்கும்....) :-))

Praveenkumar said...

கதை அருமையா இருக்குங்க..!! மொத்தத்தில் கதை அதிரடி சரவெடி..!!

எல் கே said...

நல்ல கதை ... தொடர்ந்து எழுதவும்

சிவராம்குமார் said...

ரொம்ப டச்சிங்கான கதை!

Anonymous said...

கதை அருமை சௌந்தர்.. தொடர்ந்து எழுது :)

cdhurai said...

hai dear,

story is so good... Keep it Up..

Advance happy diwali wishes

cdhurai

Anonymous said...

GOOD POST;-))

Anonymous said...

மொத்தத்தில் கதை அதிரடி சரவெடி..!

Anonymous said...

அருமை நண்பரே!

thiyaa said...

இப்பவே சரவெடியா

http://rkguru.blogspot.com/ said...

அருமையா இருக்குங்க..!!

சீமான்கனி said...

பதின்ம வயதில் வேடிக்கை பார்த்த நினைவுகளை கிளறி விட்டது அருமை...வாழ்த்துகள் சௌந்தர்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice one

aavee said...

கதை நல்லாயிருக்கு..

Ramesh said...

பழைய கதையேதான் எழுதியிருக்கீங்கன்னாலும். அசத்தலான நடை...மகேஷையும் அவன் குடும்பத்தையும் நேரில் பார்த்த உணர்வு.. தொடர்ந்து இது போல் எழுதுங்கள் ரொம்ப நல்லாருக்கு உங்க நடை..

ஜெய்லானி said...

நல்ல கதை..!!

Sriakila said...

அருமையான கதை..

//அடுத்தவர் பார்க்க வேண்டும் என்பதற்க்காக நாம் எதையும் செய்ய கூடாது, நம்ம சந்தோசம் தான் முக்கியம், நாளைக்கும் தீபாவளி கொண்டலாம், நாளைக்கு நீ பட்டாசு வெடி, இந்த தெருவே உன்னை பார்க்கும்....! //

மகனுக்கு சமாதானம் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமை!

இது போல் ம‌ன‌தைத் தொடும் க‌தைக‌ள் நிறைய‌ எழுதுங்க‌ள். வாழ்த்துக்க‌ள்!

மகேஷ் : ரசிகன் said...

:)

erodethangadurai said...

ஆகா ... தீபாவளி வந்தாச்சா ?
நல்ல கதை நண்பரே ...... ! வாழ்த்துக்கள்

 
;