Monday, October 25

கேள்வியும் நானே பதிலும் நானே...!



கேள்வியும் நானே பதிலும் நானே... ஒரு அரசியல் பிரமுகரை நினைத்து கொண்டு சில கேள்விகள் கேட்டு நானே பதிலும் சொல்ல போகிறேன்.... 

நான் : தமிழ் நாட்டு மக்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?

பிரமுகர் : இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல் என்பதை தமிழ் நாட்டு மக்கள் பின்பற்று கிறார்கள்...

நான் :  உங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுறாங்களே ஆனா ஒரு தடவை கூட யாரும் முயற்சி செய்ய மாட்றாங்களே அது ஏன்? 

பிரமுகர் : உண்மையில் யாராவது எனக்கு மிரட்டல் விடுத்தால் தானே...? நான் யாரையும் மிரட்டாமல் இருந்தால் சரி...!

நான் :  உங்கள் கூட்டணியில் ஒரு கட்சி தலைவர் மட்டும் உங்கள் கூடவே இருக்கிறாரே? நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு அமைச்சர் பதவி எதுவும் தருவிங்களா?

பிரமுகர் :அவருக்கு எப்போதும் எதிர்கட்சியாக இருந்து மக்களுக்கு சேவை செய்வது தான் பிடிக்கும், அவருக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது...! 


நான் : நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு என்ன செய்வீர்கள்?

பிரமுகர் : நான் கொடநாட்டில் இருந்து கொண்டு கூட்டணி கட்சி தலைவர்களை பார்க்க வேண்டும் என்று போயஸ் தோட்டத்திற்கு வர சொல்வேன்... இவர்கள் வந்த காத்திருப்பார்கள் நான் வர மாட்டேன் என்று தெரிந்த உடன் போய் விடுவார்கள்... பிறகு கூட்டணிகட்சி தலைவர்கள் போய் விட்டார்கள்... என்று எனக்கு போன் வந்தவுடன் நான் வருவேன்... கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டணியை விட்டு சென்று விட்டார்கள்.. என்று அறிக்கை விடுவேன்....!   


நான் : மேடம் நம்ம நாட்டில் காமென்வெல்த் போட்டியில் ஊழல் நடந்து இருக்கு என்று சொல்றாங்க, அதை பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

பிரமுகர் : ஆமா ஆமா நமது நாட்டில் அந்த போட்டி நடந்தால் கண்டிப்பாக ஊழல் செய்வார்கள்..! 

நான் : மேடம் இந்த தடவை நமது நாட்டில் தான் காமென்வெல்த் போட்டி நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா...?

பிரமுகர் : அப்படியா என்னை கேட்காமல் காமென்வெல்த் போட்டி நடத்திட்டாங்களா..?அதை கண்டித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்  


நான் : மேடம்...மணல் கொள்ளை, மணல் கொள்ளைனு சொல்றாங்களே அப்படி என்றால் என்ன?

பிரமுகர்: எங்களுக்கும் பங்கு கொடுத்தால் அதற்கு வேறு பெயர். பங்கு கொடுக்காமல் அவர்கள் மட்டும் செய்தால் அதற்கு பெயர் தான் கொள்ளை...


நான் : உங்கள் ஆட்சியில் விட விலைவாசி இப்போது உயர்ந்து விட்டதே...?

பிரமுகர் : ஆமாம் ஆமாம் நான் ஆட்சியில் இருக்கும் போது வருசம் 2006  இப்போது வருசம் 2010 இவர்கள் ஆட்சியில் வருசம் கூட ஏறி கொண்டே போகிறது...! 



நான் : மேடம் உங்க அடுத்த யூஸ் அண்ட் த்ரோ யாரு "சாரி.. சாரி" உங்க அடுத்த கூட்டணி யாரு ?

மேடம் : விலை பேசுறோம்... சீக்கிரம் முடிந்து விடும்..! 

நான் : நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன நல்லது செய்வீர்கள்?

மேடம் : என்னை பற்றி என்ன நினைத்தீர்கள்... நான் ஆட்சிக்கு வந்தாலே நல்லது (யாருக்கு) தான்... போங்க மேடம் காமெடி பண்றிங்க...! 



51 comments:

செல்வா said...

வடை எனக்கே .!!

dheva said...

நான் எப்பவுமே இப்படி கமெண்ட் போட்டது இல்ல...


First of all ....ஆனா இப்போ போடுறேன்.. என் தானைத்தலவனின் ஸ்டில் ஜூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தம்பி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போயஸ் தோட்டத்துல இருந்து லாரி வருதாம். பாத்து சூதானமா இரு

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்துங்கள்....

செல்வா said...

//பிரமுகர் :அவருக்கு எப்போதும் எதிர்கட்சியாக இருந்து மக்களுக்கு சேவை செய்வது தான் பிடிக்கும், அவருக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது...!
//

நம்ம மங்குனி அமைச்சருக்கு எதாவது பதவி கிடைக்குமா ..?

dheva said...

மீதி உள்ளதுக்கு என்ன கமெண்ட் போடறது தெரியல.. அரசியல்.....!

அதனால....என் உயிரினும் மேலான தமிழ் மக்களிடம் பொறுப்பை விட்டு விட்டு... நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

ஹா. ஹா.ஹா.. கற்பனையா... கற்பனை.... தேர்தல் வந்து ஆட்சி மாறட்டும்..!

செல்வா said...

///பிரமுகர் : அப்படியா என்னை கேட்காமல் காமென்வெல்த் போட்டி நடத்திட்டாங்களா..?அதை கண்டித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் //

காமன்வெல்த் போட்டினா என்ன ..?

மங்குனி அமைச்சர் said...

அவுங்க பேட்டி குடுக்கவே பினாமில்ல வச்சு இருக்காங்க ? பெட்டி வாங்கனுமின்னா தான் அவுங்க வருவாங்க

செல்வா said...

//பிரமுகர் : ஆமாம் ஆமாம் நான் ஆட்சியில் இருக்கும் போது வருசம் 2006 இப்போது வருசம் 2010 இவர்கள் ஆட்சியில் வருசம் கூட ஏறி கொண்டே போகிறது...!
//

அட ஆமா , வருஷம் கூட கூடிக்கிட்டே போகுது ..!!

அருண் பிரசாத் said...

எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான் செளந்தர்... ஒண்ணு சொல்லுறதுக்கு இல்லை

Unknown said...

///நான் ஆட்சியில் இருக்கும் போது வருசம் 2006 இப்போது வருசம் 2010 இவர்கள் ஆட்சியில் வருசம் கூட ஏறி கொண்டே போகிறது...! ///

இது கலக்கல்.. நல்ல கற்பனை.. :))))))

எஸ்.கே said...

அப்படியே அந்த அரசியல் பிரமுகர் போட்டிருக்கலாம்!
(நீங்க ரொம்ப பிரபலமாயிடுவீங்க!)

எஸ்.கே said...

அரசியல் பிரமுகர் பெயர் போட்டிருக்கலாம்!
(நீங்க ரொம்ப பிரபலமாயிடுவீங்க!)

தேவா said...

கொடநாட்டுல இருந்து அரைபாடி வண்டியும் போயஸ்ல இருந்து மீன்பாடி வண்டியும் வருதாம். பேசாம நீங்க வருசநாடு போய் ஒளிஞ்சுகங்க பாஸ்

இம்சைஅரசன் பாபு.. said...

யாருப்பா அது ஏன் போட்டோவ போட்டது ...............

இம்சைஅரசன் பாபு.. said...

அடுத்தது நம்ம குஷ்பூ அக்காவ பேட்டி எடுக்கணும் இல்லேன்னா ...........மதுரைல இருந்து ஒரு காம்ப்ளான் பாட்டில் load கடத்துனதா ........... உன் மேல லாரி ஏத்த வேண்டியது வரும் ..............

செல்வா said...

//மதுரைல இருந்து ஒரு காம்ப்ளான் பாட்டில் load கடத்துனதா ........... உன் மேல லாரி ஏத்த வேண்டியது வரும் ....//

உங்களால முடியாதுனு சொல்லுறேன் ..? நீங்க என்ன சொல்லுறீங்க ..?

sakthi said...

யப்பா செம நக்கல்

Unknown said...

நல்ல கற்பனை.. :

Unknown said...

good

Unknown said...

good

Anonymous said...

மீ பிரசன்ட் :)

TERROR-PANDIYAN(VAS) said...

Present

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீ கலக்கு மக்கா... செமையா இருக்கு...

Kousalya Raj said...

உள்ளேன் ஐயா...!

சௌந்தர் said...

Balaji@@ saravana @@Terror @@Kousalya நான் என்ன ஸ்கூல் லா நடத்துறேன் எல்லாம் present, உள்ளேன் ஐயா....////பயபுள்ள இன்னும் ஸ்கூல் போற நினைப்பாவே இருக்குங்க

Kousalya Raj said...

அடடா சாரி சௌந்தர் ..எனக்கு முன்னாடி வந்த இரண்டு பேரும் present சொன்னதாலே நானும் அதே கவனத்திலே சொல்லிட்டேன்.....:))

பேட்டி சூப்பர்......கலக்கலா இருக்கு...ஆனா இது அரசியல் விஷயமா இருக்கு... இதுக்கு மேல சொல்ல முடியாதே......! so escape...

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//நான் என்ன ஸ்கூல் லா நடத்துறேன் எல்லாம் present, உள்ளேன் ஐயா....////பயபுள்ள இன்னும் ஸ்கூல் போற நினைப்பாவே இருக்குங்க//

Present - நிகழ்காலம். இப்பொ நடக்கற அரசியல சொல்லி இருக்குங்க சொன்னேன்... திருக்குரள் மாதிரி கமெண்ட் போட்டா புரியாதே.... :))

இம்சைஅரசன் பாபு.. said...

//Present - நிகழ்காலம். இப்பொ நடக்கற அரசியல சொல்லி இருக்குங்க சொன்னேன்... திருக்குரள் மாதிரி கமெண்ட் போட்டா புரியாதே.... :)) //

உள்ள தமிழ் லே ஒழுங்கா புரியாது .............
ஏனய்யா.......திருவள்ளுவர கேவல படுத்துற .........திருக்குறள் ........இப்படி எழுதணும் சரியா .......இரும்பு அடிக்கிற எடத்துல ஈ க்கு enna வேலை .........போய் ஆணிய புடுங்கு மக்கா ..........
அண்ணன் நான் வரும் போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரேன் ..........போ

Sriakila said...

//

நான் : மேடம் உங்க அடுத்த யூஸ் அண்ட் த்ரோ யாரு "சாரி.. சாரி" உங்க அடுத்த கூட்டணி யாரு ?


மேடம் : விலை பேசுறோம்... சீக்கிரம் முடிந்து விடும்..!

//
ஹா...ஹா.... நல்லக் கற்பனை!

கேள்வி, பதில்கள் சூப்பர்!

Ramesh said...

நல்ல கற்பனை

Unknown said...

பேரை போட்டே எழுதினாலும் ஒன்னியும் பிரச்சின வராது... அங்கிட்டு இதெல்லாம் அவுக படிக்க மாட்டாக...

Jeyamaran said...

***/நான் : மேடம்...மணல் கொள்ளை, மணல் கொள்ளைனு சொல்றாங்களே அப்படி என்றால் என்ன?

பிரமுகர்: எங்களுக்கும் பங்கு கொடுத்தால் அதற்கு வேறு பெயர். பங்கு கொடுக்காமல் அவர்கள் மட்டும் செய்தால் அதற்கு பெயர் தான் கொள்ளை/****

Asathal nanbaaaaaaa

ஜெயந்தி said...

ஆட்டோ கீட்டோ வரப்போகுது.

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா முடியல..:)) சௌந்தர்..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆரம்பமே அசத்தல் போங்க....!! :D :D

Anonymous said...

ஆட்டோ எப்படி அனுப்பறதுன்னு அட்ரஸ் கேட்டாங்க..நாந்தான் வழி சொல்லி அனுப்பிருக்கேன்...வந்துட்டாங்களா பாஸ்..

வால்பையன் said...

// இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண செய்துவிடல் //

ஒரு வார்த்தை விட்டாச்சா இல்ல இது புதுக்குறளா!?

சௌந்தர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ஆட்டோ எப்படி அனுப்பறதுன்னு அட்ரஸ் கேட்டாங்க..நாந்தான் வழி சொல்லி அனுப்பிருக்கேன்...வந்துட்டாங்களா பாஸ்.////

இல்லை இன்னும் வரலை சரியான அட்ரஸ் கொடுங்க

சௌந்தர் said...

வால்பையன் சொன்னது…
// இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண செய்துவிடல் //

ஒரு வார்த்தை விட்டாச்சா இல்ல இது புதுக்குறளா!?///

இப்போது சரி பண்ணிட்டேன்...:) நன்றி....

சர்பத் said...

//ஆமாம் ஆமாம் நான் ஆட்சியில் இருக்கும் போது வருசம் 2006 இப்போது வருசம் 2010 இவர்கள் ஆட்சியில் வருசம் கூட ஏறி கொண்டே போகிறது...! //

ஹா...ஹா...ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஆட்டோ வந்திடும்னு பயமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் சொன்னது…
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ஆட்டோ எப்படி அனுப்பறதுன்னு அட்ரஸ் கேட்டாங்க..நாந்தான் வழி சொல்லி அனுப்பிருக்கேன்...வந்துட்டாங்களா பாஸ்.////

இல்லை இன்னும் வரலை சரியான அட்ரஸ் கொடுங்க////

இது சரிப்பட்டு வராது, நானே ஆட்டோவுல ஏறி வழிசொல்லிக்கிட்டே வாரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்து ஆட்சிக்கு அவங்கதான் வரப்போறாங்க, அதுக்குள்ள முன் ஜாமீன் வாங்கி வெச்சிடுங்க (உங்க ஊரு மார்க்கெட்டுல கெடைக்கலேன்னாலும் பக்கத்து ஊருக்காவது போயி வாங்கி வெச்சிடுங்க ஆமா!)

பரணி said...

ஏன் உங்கள் தலைவர் ஆட்சியில் இருக்கும் பொழுதே திரைப்படங்களுக்கு வசனம் எழுத செல்ல வில்லையா ? நங்கள் விவசாயத்திற்கு தண்ணிர், மின்சாரம் இல்லாமல் வாடும் பொழுது உங்கள் தலைவர் தனக்கு தானே பாராட்டுவிழா நடத்திக்கொள்ள வில்லையா ? அந்த விழாக்களிலும் விளக்கு அலங்காரங்கள் கண்ணை பறிதனவே அதற்க்கு எல்லாம் மின்சாரம் இருக்கும் எங்களுக்கு குடுக்க மட்டும் மின்சாரம் இருக்காது, உங்கள் தலைவர் செய்த உருப்படியான காரியம் ஒன்றை சுட்டிகாட்டுங்கள் நான் அதில் காட்டுகிறேன் நடந்த உழல்களை, கோவையில் உங்கள் தலைவர் குடும்பத்தினர் வளைத்து போட்ட கல்லூரிகள், நிலங்கள் எவ்ளவு என்று தெரியும்மா வருங்க வந்து கோவையில் உள்ள தேநீர் கடையில் கூட கேளுங்கள் சொல்வார்கள்,

பதவி வேண்டும் என்றும் பதவிக்கு மேல் பதவி வேண்டும் என்றும் அலையும் வேடிக்கைமனிதர் என்று உங்கள் தலைவரை பற்றி கண்ணதாசன் கூறி இருக்கிறார்

ஜெயா மதுரையில் கேட்ட கேள்விக்கு உங்கள் தலைவரிடம் இருந்தோ அல்லது அவரது மைந்தன்னிடம் இருந்தோ பதில் வர வில்லையே

NaSo said...

//அருண் பிரசாத் சொன்னது…

எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான் செளந்தர்... ஒண்ணு சொல்லுறதுக்கு இல்லை
//

அப்படியெல்லாம் சொல்லாதீங்க நான் ரொம்ப நல்லவன்.

Abhi said...

நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் !

ஆனந்தி.. said...

//நான் : மேடம் இந்த தடவை நமது நாட்டில் தான் காமென்வெல்த் போட்டி நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா...?

பிரமுகர் : அப்படியா என்னை கேட்காமல் காமென்வெல்த் போட்டி நடத்திட்டாங்களா..?அதை கண்டித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் //

டைமிங் ஆ இருந்தது இது..))))

Asiya Omar said...

நல்ல காமெடி.

MANO நாஞ்சில் மனோ said...

வளர்மதிக்கு மட்டும் இந்த மேட்டர் தெரிஞ்ச்சது,
மவனே ஆட்டோ கியுவுல வரும்....

Chitra said...

கலக்கல் கற்பனை பேட்டி .... சூப்பர்!

 
;