இந்த தீபாவளிக்கு எந்த படத்திற்கு போகலாம் என்று இருப்பவர்களுக்காக இந்த பதிவு. ஏதோ என்னால் முடிந்த சமூகசேவை...
எந்திரன் படத்திற்கு எவ்வளவு எதிர் பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு எதிர் பார்ப்பு மக்களிடம் இருக்கிறது (யாருப்பா அது சிரிக்கிறது)...உண்மை தான் சிவா நடித்து வெளி வர இருக்கும் படம் "வ குவாட்டர் கட்டிங்"
"என்னது எனக்கு கட்டிங் தரிங்களா என்று எல்லாம் கேட்க்க கூடாது"..படத்தின் பெயர் "வ" என்றால் தமிழில் ஒன்றின் கீழ் நான்கு அதாவது "குவாட்டர்" என்ற பொருள்...எப்படியெல்லாம் அர்த்தம் சொல்றாங்க பாருங்க...!
ஒய் நாட் புரொடக்சன், கிளவுட் நைன் இணைந்து படத்தை தயாரித்து உள்ளார்கள். தமிழ்படத்தை அடுத்து சிவா நடித்து வெளிவர இருக்கும் படம் இது. ஆரியா நடித்த ஓரம்போ படத்தை தொடர்ந்து புஸ்கர்-காயத்ரி இயக்கும் 2-வது படம்...சிவாவிற்கு தமிழ்படம் வெற்றிக்கு பிறகு வருகிற படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது... எஸ்.பி.பி சரண், லேகா வாஷிங்டன் நடித்து இருக்கிறார்கள் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவுள்ளார்..
கதை என்ன என்றால் நம்ம சிவா வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று சென்னை வருகிறார்..மறு நாள் வெளிநாட்டிற்கு போகிறார் போகும் முன் விருப்பப்பட்டதை எல்லாம் அனுபவிக்க அவர் ஆசைப்படுகிறார். அவரது ஆசையை தீர்த்து வைப்பவர் எஸ்.பி.பி.சரண்...சிவாவின் அக்காவை திருமணம் செய்துகொள்ள போகிறவர் தான் சரண்..சிவாவின் அனைத்து ஆசையும் தீர்த்து வைக்கிறார் சரண். இரவு 12 மணிக்கு மேல் குவாட்டர் குடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறார் சிவா எப்படி குவாட்டர் குடித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை...சென்னையில் இரவில் என்னவெல்லாம் நடக்கும் அதையெல்லாம் படத்தில் இடம் பெரும் என்று புஸ்கர்&காயத்ரி கூறுகிறார்கள்...
மக்கள் : இந்த படத்தில் என்ன தான் மெசேஜ் இருக்கு
இயக்குநர்: என்னடா எல்லாத்துக்கும் மெசேஜ் கேட்டு அலையுறீங்க...
இந்த படத்தின் பாடல்களே என்ன படம் என்று கேட்க்க வைத்தது "மைனா" எதார்த்தமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபுசாலமன் தான் (கொக்கி,லீ படங்களின்) இயக்குநர். சலோம் ஸ்டுடியோ தயாரிப்பில் கல்பாத்தி அகோரம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து வெளியிட இருக்கிறார்கள் இமான் இசை மிகவும் புது விதமாக இருக்கிறது அனைத்து பாடல்களும் ஹிட் ஆகிவிட்டது.. மைனா படத்தின் நாயகனாக கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற விதார்த்தும், நாயகியாக சிந்து சமவெளி படத்தில் நடித்த அமலா பாலும் நடித்துள்ளனர்.
இதுவும் ஒரு காதல் கதை தான் மைனா என்ற மலைசாதி பெண்ணுக்கும், சுருளி என்ற டிரைவருக்கும் ஏற்படும் காதலும், காதலுக்காக எதையும் செய்யும் அவர்களின் துணிச்சலும்தான் படத்தின் மையம். பருத்தி வீரன் போல தான் இருக்கும் என்று தெரிகிறது...
இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு இரண்டு நாளாக தூக்கமே வரவில்லை என்று சொல்கிறார் மைனா படம் என்ன பேய் படமா..? தெரியலை...
எதார்த்தமான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைனா படம் பார்க்கலாம். நகைசுவையாக படம் பார்க்கணும் என்றால் வா குவாட்டர் கட்டிங் படம் பார்க்கலாம்...
Tweet | |||||
39 comments:
present
//எந்திரன் படத்திற்கு எவ்வளவு எதிர் பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு எதிர் பார்ப்பு மக்களிடம் இருக்கிறது//
படம் வந்தவுடன் தெரிந்து விடும்.
எதார்த்தமான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைனா படம் பார்க்கலாம். நகைசுவையாக படம் பார்க்கணும் என்றால் வா குவாட்டர் கட்டிங் படம் பார்க்கலாம்...
.....தெளிவா சொல்லி இருக்கீங்க..... ரைட்டு!
//கலைஞர் - அது ... அது வந்து... ஒரு வனிதை , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர் என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?//
http://adrasaka.blogspot.com/2010/10/blog-post_27.html
மேதை, விருத்தகிரி படங்கள் எப்போ வரும்?
டிரெய்லர்லாம் நல்லாயிருக்கு! படமும் நல்லாயிருக்கும்னு நம்புவோம்!
வாவ்! ரொம்பவே நல்லா எழுதி இருக்கீங்க சௌந்தர்! வெல்டன்..கீப் ராக்கிங்!
தில்லியில் ரிலீஸ் ஆகுமான்னு தெரியல, பார்க்கலாம்.
@சௌந்தர்
இது என்ன ட்ரைலர் பாத்து விமர்சனமா?? இல்லை படம் ரிலிஸ்டா?? ட்ரைலர் விமர்சனம் சொன்னா இதுக்கு நீங்க சும்மா இருந்து இருக்கலாம் பாபு சொல்ல சொன்னாரு... :))
ரெண்டு படமும் பார்த்திடலாம் :)
//இது என்ன ட்ரைலர் பாத்து விமர்சனமா?? இல்லை படம் ரிலிஸ்டா?? ட்ரைலர் விமர்சனம் சொன்னா இதுக்கு நீங்க சும்மா இருந்து இருக்கலாம் பாபு சொல்ல சொன்னாரு... :)) //
மக்க டெர்ரர் நான் எப்போ இப்படி சொன்னேன் ....
என்னை வம்புல மாட்டி விடுரதுலே குரிய இருக்கியா .......
சரி இந்த கேள்வி என்னக்கும் வந்தது ....?
சரி சௌந்தர் பதில் சொல்லு ......என்னக்கும் இந்த சந்தேகம் உண்டு ............
படம் பார்க்குறதுக்கு முன்னாடியே நீங்க விமர்சனம் ....?எப்படி உங்கள முடியுது ....திருட்டு c d இருக்கோ ....
யாருப்பா அந்த போலீஸ் அ கூப்பிடு .........
@@@@TERROR-PANDIYAN(VAS)&&&&&&இம்சைஅரசன் பாபு..
எங்களுக்கு படம் வருவதற்கு முன்பே போட்டு காட்டுவார்கள்...! இது விமர்சனம் இல்லை முன்னோட்டம்....!
படம் பார்க்குறதுக்கு முன்னாடியே நீங்க விமர்சனம் ....?எப்படி உங்கள முடியுது ....திருட்டு c d இருக்கோ ....
யாருப்பா அந்த போலீஸ் அ கூப்பிடு /////
cd எல்லாம் இல்லை டவுன்லோடு லிங்க் இருக்கு வேண்டுமா..? வாங்க சிரிப்பு போலீஸ்...
இந்த படமெல்லாம் இங்கே வருமாங்குறதே சந்தேகம் தான்.. வந்தா பார்ப்போம் இல்லன்னா இன்டர்நெட் or திருட்டு டி வி டி
///எந்திரன் படத்திற்கு எவ்வளவு எதிர் பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு எதிர் பார்ப்பு மக்களிடம் இருக்கிறது (யாருப்பா அது சிரிக்கிறது)...உண்மை தான் சிவா நடித்து வெளி வர இருக்கும் படம் "வ குவாட்டர் கட்டிங்"//
நீ சிரிச்சாலும் சிரிக்காட்டியும் நான் எந்திரன் படாத விட அதிகமா இந்தப் படத்த எதிர்பார்கிறேன் ., ஏன்னா சிவா ஒரு RJ.
//இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு இரண்டு நாளாக தூக்கமே வரவில்லை என்று சொல்கிறார் மைனா படம் என்ன பேய் படமா..? தெரியலை...
///
ஹி ஹி ., அது ட்ரைலர் பார்த்த எனக்கு ஒண்ணும் தோணலை ... பார்க்கணும்னு கூட தோணலை .
அசத்தலான அறிமுகங்கள்............
நல்ல பகிர்வு.
சூப்பர் விமர்சனம்...!
ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!
http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html
படங்களின் விமர்சனம் நல்லா இருக்கு. நான் இனிமேதான் பாக்கணும்.
குவார்ட்டர் கட்டிங் செம தில்லான தலைப்பு
அட,படம் ரிலீச்க்கு முன் முன்னோட்டமா?போட்டு தாக்கு
Sriakila சொன்னது…
படங்களின் விமர்சனம் நல்லா இருக்கு. நான் இனிமேதான் பாக்கணும்.
இது செம காமெடி,படம் இன்னும் இவரே பாக்கலை,யாருமே பாக்கலை
ஆரியா நடித்த ஓரம்போ படத்தை தொடர்ந்து புஸ்கர்-காயத்ரி இயக்கும் 2-வது படம்..//
எனக்கு அந்த ஓரம்போ ரொம்ப பிடிச்சிருந்தது வித்தியாசமான திரைகதை...இந்த படமும் பார்க்கணும்...அந்த படத்தை போலவே இதிலும் ஒளி அமைப்புகள் இருக்கு அதை பார்த்தாலே ஓரம்பொ குரூப் நு கண்டுபிடிச்சிரலாம்
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
அட,படம் ரிலீச்க்கு முன் முன்னோட்டமா?போட்டு தாக்கு///
ஆமா ஆமா படம் வெளி வருவதற்கு முன்பே பதிவு போட்டா அது முன்னோட்டம் தானே ரிலீஸ் க்கு பிறகு விமர்சனம் எழுதுவேன்
பார்த்துடலாம்.. எல்லாரும் படம்வநதபிறகுதான் விமர்சனம் போடுவாங்க நீங்க முன்னாடியே ரொம்பவே முன்னேற்றம்தான்,
ரெண்டுமே டவுன்லோடு செய்து பார்கலாம் அவ்வளவு தான்!!!!!
அண்ணே மைனா பாட்டு ரொம்ப நல்லாஇருக்கு அதுனால நான் மொதல்ல மைனாதான் பாப்பேன்
*/மக்கள் : இந்த படத்தில் என்ன தான் மெசேஜ் இருக்கு
இயக்குநர்: என்னடா எல்லாத்துக்கும் மெசேஜ் கேட்டு அலையுறீங்க.../*
appadina innoru tamil kotthunu solluga sorry tamilpadamnu solluga............
Intha kosu tholla thanga mudiyala marunthu adichu sagadingana enganga ketkirar..............
*/sakthi சொன்னது…
ரெண்டுமே டவுன்லோடு செய்து பார்கலாம் அவ்வளவு தான்!!!!!
/*
Thala nan Alagiri annata pottu kudukkiren enna panriganu parppom
/*Riyas சொன்னது…
பார்த்துடலாம்.. எல்லாரும் படம்வநதபிறகுதான் விமர்சனம் போடுவாங்க நீங்க முன்னாடியே ரொம்பவே முன்னேற்றம்தான்,
/*
bcos thalaivarukku vera vela illa
////இரவு 12 மணிக்கு மேல் குவாட்டர் குடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறார் சிவா எப்படி குவாட்டர் குடித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை...///
என்ன ஒரு கருத்துள்ள படம்.. :-))
பருத்தி வீரன் மாதிரினா? அந்த கிளைமாக்ஸ் சீன் இதுலயும் இருக்கா? #டவுட்டு
பயனுள்ள பதிவு..இரண்டு படங்களையும் பார்த்து விட வேண்டியதுதான்..
ஆக மொத்தம் எதச்சும் ஒண்ணு பாருங்க மக்கா....!
ஆமா டி. ராஜேந்தரோட, கருத்துள்ள படம் ஒண்ணும் ரிலீஸ் ஆகலியா....!
பாத்துடுவோம், பாத்துடுவோம்!
"வ" படம் நகைச்சுவையா இருக்கும்.. அதைப் பார்க்கலாம்..
படம் பாக்க டிப்ஸா?
ஆகா.. அருமையா இருக்கும் போல... நல்ல பதிவு!!
Post a Comment