Wednesday, November 10

"வ" குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல்...



இந்தப்படத்தின் கதை முன்பே தெரிந்து இருந்தாலும் கதையில் எந்தச் சோர்வும் இல்லை இந்த இயக்குநர்  புஸ்கர்-காயத்ரி இயக்கிய ஓரம்போ படமே நன்றாக இருந்தது அந்த படமே இந்தப் படத்தை பார்க்க தூண்டியது,  காதல் கதை அதிரடி சண்டைக்காட்சிகள் என்று படம் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமானதே...ஒரு சின்ன விஷயத்தை ரெண்டே கால் மணி நேரம் திரைக்கதையாக்கி இருப்பது பாராட்டுக்குரியது தமிழ்ப்படம் வெற்றிக்கு பிறகு சிவா நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது

ஹீரோ துபாய்க்கு வேலைக்குப் போகின்றான்..அங்கு தண்ணி அடிக்க கூடாது என்று சொல்கிறார்கள் மறுநாள் சவூதி போய் ஆகணும் அதற்குள் ஒரு குவாட்டர் கட்டிங் அடிக்கணும் என்று ஆசைப் படுகிறார் அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை

படத்தின் மொத்தக் கதையும் ஒரே இரவில், சென்னையில் நடக்கிறது...படத்தில் சிவாவின் பெயர் சுந்தர்ராஜன் ஆனால் சுறா... சுறா...என கூப்பிட சொல்கிறார் இந்த பெயரை சொல்லும் போது விஜய்யின் சுறா படம் நினைவுக்கு வந்து தொல்லை செய்கிறது விஜய் ரசிகர் என்று சொல்லி விஜய்யை கலாய்க்கிறார்..

ஒரு காட்சியில் தன் அக்காவிடம் போன் பேசிக்கொண்டே (பீச்சில் நடிகர்கள் மாதிரி கட்அவுட் வைத்து இருப்பார்களே அதே போல்கட்அவுட்) இவர் அஜித் கட்அவுட் பின்பு நின்று கொண்டு விஜய் கட்அவுட்டின் தோளை தட்டி கொடுப்பார்...இந்த படத்திலும் விஜய்யை கிண்டல் செய்து இருப்பார்கள்...

இந்தப் படத்தில் டைமிங் காமெடி தான் இருக்கும் அதை நன்றாக கவனித்தால் தான் நமக்கு தெரியும் ஒரு காட்சியில் சிவாவும் சரணும் பேசி கொள்வார்கள் 

சிவா: கேரளா ரொம்ப அழகான ஊர் 
சரண் : நல்ல ஊர் தான் என்ன...அந்த ஊரில் எல்லாம் மலையாளி..

கதாநாயகி லேகா வாஷிங்டன் இவர் நிறைய படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் தான் முழு கதாநாயகியாக நடித்து இருக்கார் இவரை "மக்கு... மக்கு" சொல்வார்கள் +2 மூன்று வருடமாக படித்து கொண்டு இருக்கிறார் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார்.. அந்த காட்சி முதல் இவர்களின் தேடலில் கதாநாயகியும் சேர்ந்து கொள்கிறார் சில இடங்களில் சிவா கையில் சரக்கு கிடைக்கும் ஆனால் அவரால் குடிக்க முடியாது..சீட்டு ஆட்டத்தில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றி விடுவார் அதனால் வில்லன் ஜான் இவரை தேடுவார் அப்போது சரணை பார்த்து பயந்து போய்விடுவார்கள் வில்லன் ஆட்கள்... ஏன் சரணை பார்த்து பயந்தார்கள் என்று ஒரு சஸ்பென்ஸ்..ஓரம் போவில் நடித்த ஜான் இதிலும் வில்லனாக இரட்டை வேடத்தில் கலக்கி இருக்கிறார்.

சென்னையில் முன்பு சில பைக்குகள் எரித்தார்கள் அதை படத்தில் சொல்லிய விதம் அருமை அதற்க்கு சிறிய கதையும் இருக்கிறது சரணின் தீக்குச்சி வாங்கி அவர் வண்டியை எரித்து விடுவார்... ஜெயிலில் அந்த தீக்குச்சியிடம் கேட்ப்பார்

சரண் : என்னை எரித்து விட மாட்டிங்களே..   
தீக்குச்சி : அது நான் இல்லை என் தோஸ்த் கஜாவுக்கு தான் மனுஷங்களை எரிக்க ரொம்ப பிடிக்கும் நான் வெறும் வண்டியை தான் எரிப்பேன் 
சரண் : ஏன் (சீட்டா) என் வண்டியை எரிச்சீங்க

தீக்குச்சி :  தர்மன்ஒரு குருட்டு பிச்சைக்காரன் தமயந்தி என்ற ஒரு நாய் வளர்த்தார் ஒரு நாள் தமயந்தி குப்பை தொட்டியில் இருந்து எதையோ கவ்வி கொண்டு வந்தது அது என்ன என்று பார்த்தால் குழந்தை. அதற்கு தண்டபாணி என்று பெயர் வைத்தார்கள். அன்று முதல் தமயந்தியும் தண்டபாணியும் உடன்பிறவா சகோதரர்கள். ஒரு நாள் தமயந்தி ரோட்டை கிராஸ் செய்யப்பார்த்தது.. அன்று ஒரு வண்டி தமயந்தி மேல் ஏறியது. அவ துடிக்கத் துடிக்க இன்னும் நிறைய வண்டிகள் ஏறியது. தமயந்தி அந்த இடத்துலேயே இறந்துட்டா. தமயந்தி மேல வண்டி ஏறி இறந்து போனதைக் கேட்ட தர்மனும் இறந்து போய்ட்டார். பிறகு அந்தக் குப்பைத்தொட்டிக் குழந்தை மீண்டும் அனாதை ஆகிடுச்சு. அந்தக்குழந்தை யாருன்னு தெரியுமா..? நான் தான் அது" என்று சொல்வார் தீக்குச்சி. அதனால் தான் வண்டியை எல்லாம் எரிக்கிறேன் அந்த காட்சியில் தீக்குச்சி நடித்த விதம் அருமை... (தீகுச்சி அந்த கதாபாத்திரத்தின் பெயர் )


சில காட்சிகளில் தொய்வு ஏற்பட்டாலும் சீட்டு ஆடும் காட்சிகள் கார் சேசிங் காட்சிகள் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. படத்தில் அனைத்தும் இரவு கட்சிகள் எல்லாம் நன்றாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் நீரவ்ஷா..
படத்தில் மாணிக்க விநாயகம் ஒரு லாரியில் லிப்ட் கேட்டு வருவார் அவர் ஏன் வருகிறார் என்று தெரியவில்லை... 
சரண் கதாப்பாத்திரத்தில் சஸ்பென்ஸ் வைத்து அதை கிளைமேக்சில் பயன்படுத்தி முடித்தது நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல் சரக்கு..


43 comments:

எஸ்.கே said...

என்ன இந்த படம் நல்லாயிருக்கா!!!
நிறைய பேர் நல்லாயில்லைன்னு எழுதியிருக்காங்களே!

சௌந்தர் said...

நல்லா இருக்கு எஸ்கே....பாருங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன நண்பா படம் பாக்கலாம இல்லையா...

செல்வா said...

எங்க சிவா நடிச்சா படம் நல்லா இருந்தாலும் நல்லா இல்லாட்டியும் பார்ப்பேன் ..

Ravi kumar Karunanithi said...

இந்த படம் நல்லாயிருக்கா????

Jackiesekar said...

இது ரெண்டாவது பாசிட்டிவ் விமர்சனம்... நன்றி..
சில இடங்கள் மொக்கை என்பதை மறுக்க முடியாது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் சொன்னது…

எங்க சிவா நடிச்சா படம் நல்லா இருந்தாலும் நல்லா இல்லாட்டியும் பார்ப்பேன் .

//

மொக்க மொக்கையோட தானே சேரும்...

ஹேமா said...

படத்தைப் பார்க்கத்தூண்டும் விமர்சனம் சௌந்தர்.

செல்வா said...

//மொக்க மொக்கையோட தானே சேரும்.../

சரியா சொன்னிங்க ., சிவா ரேடியோ மிர்ச்சில RJ வ இருந்த போது " மொக்க மோகன்" அப்படின்னு ஒரு ப்ரோக்ராம் பண்ணினார். அது செம ஹிட் ஆச்சு ..
ஒரு தடவ எங்க கமல் சார் அவரோட கார்ல ஏறிட்டு டிரைவர் கிட்ட கார எடுக்க சொல்லிருக்கார்.. அப்போ அந்த டிரைவர் " சார் ஒரு நிமிஷம் , இப்ப மிர்ச்சில மொக்க மோகன் அப்படின்னு ஒரு ப்ரோக்ராம் வருது , அது முடிஞ்சதும் எடுக்கறேன் " அப்படின்னு சொன்னாராம் .. கமழும் அத கேட்டுட்டு அப்புறம் நேரா சிவாவ போய் வாழ்த்தினாராம் .. அதனால மொக்க மொக்கயோடதான் சேரும் .. ஹி ஹி ஹி ..

kavisiva said...

ப்ரசெண்ட் சார் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் அப்போ நல்லாருக்கா? சில பேரு நல்லா இல்லேங்கிறாங்க, இருந்தாலும் உங்க விமர்சனத்துக்காகவே பாக்குறேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கதாநாயகி லேகா வாஷிங்டன் இவர் நிறைய படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் தான் முழு கதாநாயகியாக நடித்து இருக்கார் ///

ஹீரோயின் எப்படி, தேறுமா? ஒன்னும் சொல்லலியே?

Prasanna said...

ஓஹோ அப்படி சொல்றீங்களா..

dheva said...

ச்சரி ...தம்பி. படத்த பாத்துடுவோம்....துபாய்ல தண்ணி அடிக்க முடியாதா?????????!!!!!!! அப்டியா?????

Gayathri said...

mm mudinja pakren,nalla irukumnu solreenga

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப நல்லா இருக்கு
டிஸ்கி : நான் இதை படிக்கவே இல்லீங்க..

இம்சைஅரசன் பாபு.. said...

குவாட்டர் அடிச்சிட்டு படம் பார்த்தா அப்படிதாம்லே இருக்கும்

அருண் பிரசாத் said...

படம் கடினு சொன்னாங்களே! நீங்க நல்லா இருக்குனு சொல்லுறீங்க...

Unknown said...

சரக்கு சுத்தமா இருக்குன்னு சொல்றீங்க ...

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
//
///கதாநாயகி லேகா வாஷிங்டன் இவர் நிறைய படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் தான் முழு கதாநாயகியாக நடித்து இருக்கார் ///

ஹீரோயின் எப்படி, தேறுமா? ஒன்னும் சொல்லலியே?//

லேகா வாசிங்டன் தெரியாத நீ எல்லான்ம் எதுக்கு உயிரோட இருக்க....

அந்த அம்மனிய ஒரு ஐபிஎல் மேட்ச் அப்போ சென்னைல நேரா பார்த்தேன்... யப்பா, செம -



அழகுனு சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

சிவா: கேரளா ரொம்ப அழகான ஊர்
சரண் : நல்ல ஊர் தான் என்ன...அந்த ஊரில் எல்லாம் மலையாளி..///

ஹா,ஹா,ஹா,..............

Thenammai Lakshmanan said...

விமர்சனம் அருமை சௌந்தர்..

Menaga Sathia said...

விமர்சனம் நல்லாயிருக்கு சௌந்தர்..

Prasanna Rajan said...

எனக்கு ஒரு டவுட்டு!! எப்புடியும் ஃப்ளைட்ல சரக்கு கிடைக்கும். அதை விட்டுட்டு இன்னா டேஷூக்கு, ஒரு நைட் ஃபுல்லா சரக்குக்காக அலையனும்?

Anonymous said...

காசு செலவு பண்ணி படம் பார்த்துட்டோம்..இன்னும் நாலு பெரை கோர்த்து விடுவோம்னா? இந்த வேலை?

Anonymous said...

சுறா ந்னு சிவா கேரக்டருக்கு பேர் வெச்சாங்களே அதான் டாப்பு

Anonymous said...

நண்பா இதுக்கு முன்னாடி நீ படம் பாத்திருக்கியா??
இதெல்லாம் ஒரு படம்
அதுக்கு விமர்சனம்
ஓட்டு
தூ.

Anonymous said...

தமிழ் வலைபதிவு வாசகர்களே இதனால் எல்லோருக்கும் தெரிவிப்பது

படத்தைவிட படத்தின் விமர்சனம் செம மொக்கை

எவ்வளவு காசு வாங்குனீங்க???

படத்த பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க

எம் அப்துல் காதர் said...

நல்லா இருக்கு நண்பா!!

Chitra said...

Good review

சிவராம்குமார் said...

நல்ல விமர்சனம்!

ஜெய்லானி said...

@@@Prasanna Rajan --//எனக்கு ஒரு டவுட்டு!! எப்புடியும் ஃப்ளைட்ல சரக்கு கிடைக்கும். அதை விட்டுட்டு இன்னா டேஷூக்கு, ஒரு நைட் ஃபுல்லா சரக்குக்காக அலையனும்? //
@@@dheva --//.துபாய்ல தண்ணி அடிக்க முடியாதா?????????!!!!!!! அப்டியா????? //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

படத்துல லாஜிக் பாக்ககூடாதுன்னு இதுக்குதான் பெரியவங்க சொல்றாங்களா....?
பேசிக்கே அவுட் அப்புறம் எது சொன்னாலும் அதுமொக்கையாதானே தெரியும் ,தோனும்..!!

Philosophy Prabhakaran said...

போன வாரம் படம் பார்த்தேன்... இன்னும் எனக்கு பேதி நிக்கலை... நீங்க என்னடான்னா படம் நல்லா இருக்கு அப்படி இப்படின்னு காமெடி பண்ணிக்கிட்டு... போங்க சார்... பொய் புள்ளகுட்டிங்களை படிக்க வைங்க...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

படம் பேரே அருமை... :D

விமர்சனம் எல்லாம் நல்லாத் தான் இருக்கு.. நம்பி போயி படம் பாக்கலாமா? :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தேவா

////ச்சரி ...தம்பி. படத்த பாத்துடுவோம்....துபாய்ல தண்ணி அடிக்க முடியாதா?????????!!!!!!! அப்டியா????? ///

அது சரி.. அதுக்கு ஏன் நீங்க இவ்ளோ பீல் பண்றீங்க???? :-))

Unknown said...

இந்தப் படம் பார்க்கறதுக்கு முன்னாடி உங்க விமர்சனத்தைப் படிச்சிருந்தா கண்டிப்பா போய் பார்த்திருப்பேன்..

அதனாலதான் சொல்றேன் யாரும் போய் பார்க்காதீங்ங்ங்ககக.. :-)))

Unknown said...

சில இடங்கள்தான் ரசிக்க முடிஞ்சது.. மத்தபடி படம் முடிஞ்சு வெளியே வந்த நிறையப் பேருக்குத் தலையே இல்ல..

மொக்கையைக்கூடப் பொருத்துக்கலாம்.. இது மரண மொக்கை.. :-((((

Ramesh said...

படம் பார்த்து நொந்தவர்களையும் பார்க்கத்தூண்டும் விமர்சனம்.. பாராட்டுக்கள்.. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க.. இந்த படத்தை பார்த்துட்டுதான்.. இனிமே நான் திரை விமர்சனமே எழுதக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.. நல்லா எடுத்திருக்க வேண்டிய படம்.. ஆனா நிறைய "லோக்கல்" சரக்கு சேர்த்ததால.. கருப்படிச்சிடுச்சி..

Anonymous said...

TAMIL SAMOOGAM INDHA NILAIYAI ADAIYATHAAN MAHAKAVAI BARATHI KANAVU KANDAAN. NADAKKATTUM......

ஜெயந்தி said...

அப்ப படம் பாக்கலாம்.

சுசி said...

:))))

Anonymous said...

really super timing comedy awesome

sihan ahamed said...

good

 
;