Monday, November 29

கூட்டுக்குழு.....




கடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமளி, அவை ஒத்தி வைப்பு, நடந்துகொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையை பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் குரல் எழுப்புகின்றன.


பாராளுமன்ற கூட்டுக்குழு,  பாராளுமன்ற கூட்டுக்குழு என்று சொல்கிறார்கள், கூட்டு குழு என்றால் என்ன..? கூட்டு குழு அமைத்தால் என்ன ஊழல் செய்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க முடியுமா அல்லது இதற்க்கு முன்பு கண்டு பிடித்து இருக்கிறார்களா..? 


கூட்டுக்குழு அமைக்கப்படும் முறை 

பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக செயல்படவேண்டும். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு சபைகளின் ஒப்புதலுடனோ அல்லது இருசபைகளின் தலைவர்கள் கலந்து பேசியோ பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்கலாம். குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு எத்தனை பேர் உறுப்பினர்களாக நியமிக்கவேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லை பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.


பொதுவாக பாராளுமன்ற கூட்டுக்குழுவில், மக்களவை எம்.பி.க்கள் மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு இடம் பெறுவார்கள் உதாரணமாக, ஒரு கூட்டு குழுவில் 15 எம்.பி.க்கள் இடம் பெறுகிறார்கள் என்று வைத்துகொண்டால், அவர்களின் 10 பேர் மேல் சபையையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் இந்த குழு, தனது பணியை முடித்து அறிக்கை தாக்கல் செய்தபின், மேல் நடவடிக்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிபிடத்தக்கது


கூட்டுக்குழு செயல்படுவது எப்படி..?

பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட அந்த பிரச்னை பற்றி விசாரணையை தொடங்கி விடும். முதலில் விசாரணை நடத்தப்படும் இரண்டாவதாக,  வருங்காலத்தில் இது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். இந்த விசாரணையின் போது சம்பத்தப்பட்ட துறையில் நிபுரணத்துவம் பெற்றவர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் இந்த பிரச்னையில் ஆர்வம் காட்டுகிறவர்களின் கருத்துக்கள், மற்றும் ஆலோசனைகளை குழு பெற்றுக் கொள்ளலாம். தொழில்நுட்ப பிரச்னைகளில் உரிய ஆலோசகர்களையும் நியமித்துக் கொள்ள முடியும். அத்துடன் பொதுமக்களிடம் இருந்தும் யோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளாலாம். கூட்டுகுழுவின் விசாரணை நடைமுறைகள் ரகசியமாக நடைபெற்று வந்தாலும், விசாரணையின் நிலவரம் குறித்து குழுவின் தலைவர் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கலாம்.

இது வரை அமைக்கப்பட்ட குழுக்களால் பயன் கிடைத்ததா..?

கடந்த 25 ஆண்டுகளில் 4 விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டன . ஆனால் இதில் ஒரு விவகாரத்தில் கூட குறிபிடத்தக்க பயன் கிடைக்க வில்லை என்ற கருத்து உள்ளது. 


முதலில் கடந்த 1987-ம் ஆண்டு 'போபர்ஸ் பீரங்கி ஊழல்' விவகாரத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய ஊழல் புகார் குறித்து குழு அமைக்கபட்டது இந்திய அரசியல்வாதிகளுக்கு ஸ்வீ டனின் "போபர்ஸ்" ஆயுதநிறுவனம் கொடுத்த லஞ்சப் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது இந்த குழுவில் காங்கிரஸ் எம்.பிக்களே அதிகமாக இடம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்கட்சி உறுப்பினர்கள் விசாரணையை புறக்கணித்து விட்டனர். இதனால் அந்த குழுவின் அறிக்கை எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. 


இரண்டவதாக 1992-ம் ஆண்டில் ஹர்சத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பணத்தை தவறாக பயன்படுத்தி பங்கு சந்தையில் முதலீடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த குழு விசாரணை நடத்தியது. விசாரணைக்குப்பின் குழுவின் அறிக்கை தாக்கல் செய்தபின் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக தனி நீதி மன்றம் அமைப்பதற்கு 5 ஆண்டு காலம் பிடித்து குறிபிடத்தக்கது. அத்துடன் அந்த குழுவின் பல பரிந்துரைகள் அமல் படுத்தப்படவே இல்லை.


3 வதாக அவ்வளவாக பிரபலம் இல்லாத கேதான் பரேக்கின் பங்கு ஊழல் புகார் குறித்து அமைக்கப்பட்ட குழுவாகும். கேதான்பரேக்கிற்கு வங்கிகள் மற்றும் "கார்பரேட்" நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து இந்த குழு விசாரணைநடத்தியது. விசாரணைக்குப்பின் பங்கு மார்க்கெட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தாக்கல் செயயப்பட்ட அறிக்கை பின்னர் நீர்த்துப்போனது.

4 வதாக 2003-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தாக புகார் குறித்து விசாரித்தது. 2004-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குழுவின் அறிக்கையில் அந்த குழுவின் அறிக்கையில் குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்து இருந்த புகார் நிருபிக்கப்பட்டதுடன், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பரிந்துரைகளும் இடம் பெற்று இருந்தன.

இந்த வரிசையில் ஸ்பெக்ட்ரம் இடம் பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஆளும்கட்சி தயங்குவதற்கு காரணம், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக இருக்க வேண்டும் என்பதே...  

இதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஊழலிற்கா விடை கிடைக்கப்போகிறது..?



  

42 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

I am firstuuuuu

எல் கே said...

எந்த உபயோகமும் இல்லை

எஸ்.கே said...

இதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஊழலிற்கா விடை கிடைக்கப்போகிறது..? //
எந்த ஊழலுக்கும் விடை கிடைக்காது!!

Kousalya Raj said...

இந்த கூட்டு குழு பத்தி இன்று நன்றாக தெரிந்து கொண்டேன்...! அரசியல் பத்தி நிறைய தெரியும் போல் இருக்கே சௌந்தர்....ம்...விடை கிடைக்கும் என்று நம்புவோம்...!

எஸ்.கே said...

கூட்டுக் குழு பற்றி நல்ல விளக்கமாக எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

//எந்த உபயோகமும் இல்லை//

எது உபோயகம் இல்லை
இந்த பதிவா?????

கருடன் said...

//எது உபோயகம் இல்லை
இந்த பதிவா?????//

கன்னா பின்னா ரிப்பிட்டு...

Madhavan Srinivasagopalan said...

தெரியாத விஷயங்கள்.. பகிந்தமைக்கு நன்றிகள்..

அது சரி.. அவர் எண்ணிக் கிட்டே இருக்காரு.. இடது பக்கம் பணம் கொடையுற மாதிரி இல்லை.. நானும் ஐஞ்சு நிமிஷம் பாத்தேன்..

அத மாதிரிதான் நம்ம நாட்டுல ஊழல் கொறையாது..(பணம் பெருகும் அவர்களுக்கு).. ஊழல் நடவடிக்கை ஒரு முடிவுக்கு வராது அப்படீன்னு சிம்போலிக்கா சொல்லுறீங்களா.. பலே..

S Maharajan said...

எந்த ஊழலுக்கும் விடை கிடைக்காது!!

Anonymous said...

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்..
அப்படித் தானே???

Thomas Ruban said...

கூட்டுக் குழு பற்றி விளக்கமான பகிர்வுக்கு நன்றி.

ஊழல் இந்தியாவின் தேசிய தொழில்யாகி நீண்டகாலம் ஆயிற்று.

செல்வா said...

//இதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஊழலிற்கா விடை கிடைக்கப்போகிறது..?
/

spectrum அத விடப் பெரிய ஊழல்னு பேசிக்கிறாங்க ..!!

கணேஷ் said...

என்ன ஏதும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம இருக்கா???)))

NaSo said...

கூட்டுக்குழு அமைப்பது எதிர்க்கட்சிகளின் வாயடைக்கவே உதவும். ஊழல் பற்றி எந்தவித நல்லதும் நடக்காது.

dheva said...

கூட்டுகுழு.....விரிவான விளக்கம்....!

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்ன? என்று யாராவது எழுதினால் நல்லா இருக்கும்?

Anonymous said...

தெளிவான நல்ல விளக்கம் நண்பா :)

சுசி said...

:))))

வைகை said...

கூட்டு குழுவோ! நாட்டு குழுவோ!! மக்கள் என்னைக்குமே கூட்டுப்புளுதான்!!!!! ங்கொய்யால!!! வெந்நீர்ல போட்டு நூலு எடுக்காம விடமாட்டாங்க!!!

dheva said...

அரசின் செயல்பாடுகள் எப்போதும்...கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பது அருவெறுக்க வேண்டிய ஒரு செயல்தான்...கூட்டுக்குழு என்ற ஒன்றே தேவையில்லையே ...? முடிவு எடுக்காமல் இருக்க எதற்கு கூட்டுக் குழு..அதற்கு உறுப்பினர்கள்...விவாதம் எல்லாம்...

சரியான விழிப்புணர்வு வரவேண்டியது ஜனங்களுக்கு...இது எல்லாம் என்ன.? என்று ஓட்டு கேட்டு வரும் போது அரசியல்வாதிகளின் முகத்தில் அறைந்து கேட்க வேண்டும்....!

அக்கறைகள்..எக்கரையிலோ அல்லவா இருக்கிறது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவசரத்துல கூட்டுப்புழுன்னு படிச்சிட்டு கொழப்பமா வந்தேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்குப் புரிஞ்சு போச்சு, கூட்டுக்குழு எதுக்குன்னா, எப்பிடி புதுசு புதுசா கொள்ளை அடிக்கரது எல்லாக் கட்சிக்காரனுகளும் தெரிஞ்சுக்கத் தான்! முடிஞ்சா பங்கு கூட கேக்கலாமில்ல?

Anonymous said...

எல்லா கருமமும் ஒண்ணுதான்..கூட்டுப்புழு விசாரிச்சு எத்தனை பேரை உள்ளே தள்ளி இருக்காங்க..?

Anonymous said...

நல்ல அலசல்

anu said...

Very nice flow.Good article

roshaniee said...

நல்ல பதிவு

அருண் பிரசாத் said...

அட போப்பா... இதே வேலையா போச்சு இவங்களோட.... அவன் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் செய்யாம இருக்க போறது இல்லை... எந்த கூட்டு குழுவும் அதை கண்டுபிடிச்சி தண்டிக்கபோறதும் இல்லை...

எல்லாம் கண்கட்டு செயல்

ஜெயந்த் கிருஷ்ணா said...

உள்ளேன் ஐயா...

Chitra said...

நல்ல விளக்கமான பதிவு.

Menaga Sathia said...

நல்லா விளக்கமா எழுதிருக்கீங்க,பாராட்டுக்கள்!!

Jeyamaran said...

*/கூட்டு குழு என்றால் என்ன..?
ennathu sappadukku side dish thane/*

ithanala sathiyama entha nallathum nadakka vaippu illa ethi katchi ethavathu sonna alum katchikku pidikkathu alum katchi ethavathu sonna ethir katchikku pidikkathu naduvula neeyum naanum sonna 2 perukkum pidikkathu nabaa................

Arun Prasath said...

அட போங்க தல.... எல்லாரும் ஒரே குட்டை ல ஊருன மட்டைங்க தான

சிவராம்குமார் said...

நல்ல விளக்கமான பகிர்வு!

ஆனந்தி.. said...

இத பாரு...சௌந்தர் நீ எப்போ இவ்வளவு பொறுப்பான??:)))

ஹரிஸ் Harish said...

present sir...

Prasanna said...

மக்கள் இதிலேயே உழல வேண்டும் என்றுதான் இந்த பெயரையே வைத்திருக்கிறார்கள் :) #ஊழல்

elamthenral said...

விடை கிடைக்காது!! தம்பி.. விடைகிடைத்தால் நாடு திருந்திவிடுமே!!!!

ஜோதிஜி said...

எனக்குப் புரிஞ்சு போச்சு, கூட்டுக்குழு எதுக்குன்னா, எப்பிடி புதுசு புதுசா கொள்ளை அடிக்கரது எல்லாக் கட்சிக்காரனுகளும் தெரிஞ்சுக்கத் தான்! முடிஞ்சா பங்கு கூட கேக்கலாமில்ல?

சிரித்தாலும் போற போக்கை பார்த்தால் இது தான் உண்மை.

சரியான மணிமகுட இடுகை.

அன்பரசன் said...

அரசியல் நிறைய தெரியும் போல் இருக்கே சௌந்தர்.

Thenammai Lakshmanan said...

கூட்டுக்குழு என்ற கண் துடைப்பு ., ஊழல்., லஞ்சம் எல்லாம் பழகி விட்டது நமக்கு சௌந்தர்.

kavisiva said...

இதுவரை எத்தனை கூட்டுக் குழு, கமிஷன்கள் பார்த்தாச்சு. எதுக்காச்சும் உருப்படியான முடிவு இருந்திருக்கா? எல்லாம் கண் துடைப்பு அரசியல் நாடகங்கள். நாம் வெறும் பார்வையாளனாக இருந்து வெம்புகிறோம் அவ்வளவுதான்

Unknown said...

//அவசரத்துல கூட்டுப்புழுன்னு படிச்சிட்டு கொழப்பமா வந்தேன்....!//

சரியாத்தான் சொல்லிருக்கீங்க ராமசாமி சார் ...

 
;