எதிர்கட்சிகள் விரும்பும் கூட்டுகுழு பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஆளும்கட்சி விரும்பும் பொது கணக்குகுழு என்பதை பற்றி பார்ப்போம்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மான்டேக்-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் விளைவாக, 1921-ம் ஆண்டில் முதன் முறையாக பொது கணக்கு குழு அமைக்கப்பட்டது. அப்போதெல்லாம், நிர்வாக சபையின் நிதி உறுப்பினர்தான், அக்குழுவின் தலைவராக இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு, மத்திய நிதி மந்திரியாக இருப்பவர் பொது கணக்கு குழுவின் தலைவராக செயல்படும் வழக்கம் ஏற்பட்டது.
ஆனால் இந்தியா, குடியரசு நாடக மாறிய பிறகு பொதுகணக்கு குழுவில் தலைகிழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அக்குழு பாராளுமன்ற சபாநாயகரின் கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வரப்பட்டது. அக்குழு, எம்.பி.களே உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இருந்து ஒருவரை குழுவின் தலைவராக சபாநாயகர் நியமித்து வந்தார்.
நியமனம்
தற்போது, பாராளுமன்ற சபைநடவடிக்கை விதிமுறைகளின்படி ,பொதுகணக்கு குழு ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் மக்களவை எம். பி.களில் 15 பேரும், மேல் சபை எம்.பிகளில் 7 பேரும் இதன் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக் காலம், ஒரு வருடம் மட்டுமே. இவர்களில் ஒருவரை குழுவின் தலைவராக சபாநாயகர் நியமிப்பது வழக்கம்.
1967-ம் ஆண்டுக்கு முன்புவரை ஆளுங்ககட்சி எம்.பி.யே. பொது கணக்கு குழு தலைவராக நியமிக்கப்பட்டு வந்தார்.1967-ம் ஆண்டில் இருந்து தான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் தலைவராக நியமிக்கும் வழக்கம் ஏற்பட்டது. தற்போது வரை, அந்த நடை முறை நீடித்து வருகிறது
செயல்பாடுகள்
பொது கணக்கு குழுவின் செயல்பாடுகள், மக்களவை அலுவல் நடை முறைகள் விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் செலவுகளுக்காக, பாராளுமன்றம் ஒப்புதல் அளித்த தொகை தொடர்பான கணக்குகளையும், மத்திய அரசின் ஆண்டு நிதி கணக்குகளையும், பாராளுமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படும். இதர கணக்குகளையும் ஆய்வு செய்வது பொது கணக்கு குழுவின் பணி ஆகும்.
மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்வதும், பொது கணக்கு குழுதான், மத்திய அரசின் ஆண்டு கணக்குகளை ஆய்வு செய்யும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் தாக்கல் செய்வார். ஜனாதிபதி மூலமாக பாராளுமன்றத்துக்கு வரும் அந்த அறிக்கை, மிகவும் நுட்ப்பமனாதாகவும், சிக்கலானதாகவும் இருக்கும், அதை பாராளுமன்றம் விரிவாக ஆய்வு செய்வது கடினம். அதற்கு போதிய நேரமும் ஒதுக்க இயலாது, ஆகவே அந்த அறிக்கையை ஆய்வு செய்யும் பணியை பொது கணக்கு குழுவிடம் பாராளுமன்றம் ஒப்படைத்துவிடும்.
பணிகள்
* ஆகவே இத்தகைய ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் பொது கணக்கு குழு தனது ஆய்வில் கிழ் கண்ட அம்சங்களை சரிபார்க்க வேண்டும் அவை என்ன என்று பார்ப்போம்
* கணக்கில் காட்டப்பட்டுள்ள தொகை உரிய முறையில் செலவிடப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும்
* செலவு கணக்கு ஒத்துப் போகிறதா..? என்று பார்க்க வேண்டும்.
* எல்லா மறு ஒதுக்கீடும் உரியவிதிமுறைப்படி செய்யப்பட்டுள்ளாதா? என்று பார்க்க வேண்டும்
மேலும் அரசு பொதுத்துறை நிறுவங்கள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள். தன்னாட்சி பெற்ற அமைப்புகள் ஆகியவற்றின் வரவு செலவு கணக்குகள், லாப-நஷ்ட கணக்குகள் ஆகியவற்றையும் பொது கணக்கு குழுவே ஆய்வு செய்கிறது.
பாராளுமன்றம் ஒப்புதல் அளித்த தொகைக்கு அதிகமாக எந்தப் பணிக்காவது பணம் செலவழிக்கப்பட்டு இருந்தால் அதற்கான காரணங்களை பொது கணக்குகுழு ஆய்வு செய்யும்.அது தொடர்பாக, மத்திய அரசுக்கு தனது சிபாரிசை தெரிவிக்கும். அலட்சியம் காரணமாக,நஷ்டமோ ஆடம்பர செலவோ ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தால், அது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சங்களிடமோ அல்லது துறைகளிடமோ பொது கணக்கு குழு விளக்கம் கேட்க்கும். மீண்டும் அத்தகைய தவறு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டறியும் அத்தகைய சூழநிலையில், அந்த அமைச்சங்கள் அல்லது துறைகள் மீது பொதுகணக்கு குழு தனது கண்டனத்தை பதிவு செய்யலாம். அதிருப்தியையும் தெரிவிக்கலாம்.
இத்தகைய அதிகப்படியான செலவுகளை ஒழுங்குபடுத்தி கொள்வதற்காக, அதை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டு வருவது மத்திய அரசின் வழக்கம்.அதற்கு விரைவாக வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பொது கணக்கு குழு முன் கூட்டியே ஒப்படைத்து விடும்.
பொதுவாக, மத்திய அரசின் கொள்கை முடிவுகள் குறித்து பொது கணக்கு குழு எந்த கருத்தும் தெரிவிப்பது இல்லை. ஆனால் அந்த கொள்கை முடிவுகளை செயல்படுத்துவதுவதில் நஷ்டமோ, ஆடம்பர செலவுகளோ ஏற்பட்டால், அதை சுட்டிக்காட்ட, குழுவுக்கு உரிமை உண்டு.
நடவடிக்கை அறிக்கை
தணிக்கை அறிக்கையை பொது கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கும் போதே, மத்திய அரசு இன்னொரு காரியத்தையும் செய்கிறது. தணிக்கை அறிக்கை மீது, தான் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எடுக்க திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை பொது கணக்கு குழுவுக்கு தெரிவிக்கிறது. தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 6 மதங்களுக்குள் இதை மத்திய அரசு செய்கிறது அந்த நடவடிக்கை அறிக்கையை பொது கணக்கு குழு பரிசீலித்து ஒழுங்கு படுத்துகிறது.
அதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில். நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது அதில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பாக, தான் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தனது இறுதி பதிலை பொது கணக்கு குழுவுக்கு தெரிவிக்கும், இவ்விதமாக ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசின் நடவடிக்கை விவரங்கள்,பாராளுமன்றத்தில் அறிக்கை வடிவத்தில் தாக்கல் ஆகின்றன. இத்துடன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொது கணக்கு குழுவின் ஆய்வுப்பணியும் முடிவடைகிறது.
Tweet | |||||
75 comments:
I am first
நல்ல பகிர்வு..
adada...vadai pochae
மாண்டேக்-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் பற்றி ஸ்கூல்ல படிச்சது...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சவுந்தர்!
பொது கணக்கு பத்தி நல்ல தகவல் மக்கா ......
கணக்கு பாடம் பத்தி பதிவு ன்னு நெனச்சேன்
//கணக்கு பாடம் பத்தி பதிவு ன்னு நெனச்சேன்//
கணக்கு பன்னுரதுலதான் நீங்க கில்லாடியாச்சே..........ஆனா இது வேற கணக்கு மக்கா
Arun Prasath சொன்னது… 7
கணக்கு பாடம் பத்தி பதிவு ன்னு நெனச்சேன்////
@@@Arun Prasath
இல்லை இல்லை இது அரசியல் பாடம்
கணக்கு பன்னுரதுலதான் நீங்க கில்லாடியாச்சே..........ஆனா இது வேற கணக்கு மக்கா//
அடடா, நான் அந்த அளவு வொர்த் இல்லேங்க
எஸ்.கே சொன்னது… 5
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சவுந்தர்!////
மிகவும் நன்றி எஸ்.கே
தெரியாத தகவல்கள்.. பகிர்விற்கு நன்றி..
அது சரி.. உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..
Arun Prasath சொன்னது…
அடடா, நான் அந்த அளவு வொர்த் இல்லேங்க////
ஏதாவது நாட்டுக்கு சுற்றுலா போகணும் என்றால் நீங்க தான் கணக்கு போட்டு தருவாங்க சொல்றாங்க....
இந்த மாதிரி அரசியல் விஷயங்களை பற்றி பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்! அதை புரியும்படியாக எளிமையாக விவரித்த சவுந்தருக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!
புரியுது.. புரியுது..
'பொது' இடங்கள்ள, தனியா போகாம
'குழுவாப்' போயி பிகருங்கள 'கணக்கு' பண்ணனும்..
அப்பத்தான் எது கெடைச்சாலும் ஷேர் பண்ண முடியும்..
தெரியாத தகவல்கள்.. பகிர்விற்கு நன்றி..
அது சரி.. உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..//
ஒரு நல்ல கட்டை ஒன்னு எடுத்துட்டு வந்து சௌந்தர் மண்டைல போடுங்க .........அப்போ தெரியும் ...மூளை வெளியே வரும்ல ........அப்போ கண்டு பிடிச்சிருலாம் .........(எனக்கும் ரொம்ப நாள் மூளை எப்படி இருக்கும் ன்னு நேரடியா பார்க்கணும்ன்னு ஒரு ஆசை மாதவன் )
// ஆண்டு தோறும் மக்களவை எம். பி.களில் 15 பேரும்//
ok..
//டெல்லி மேல் சபை எம்.பிகளில் 7 பேரும் //
டெல்லி மேல்சபை எம்.பி ? (தவறோ ?)
அல்லது.. மாநிலங்களவை எம்.பி ?
Madhavan Srinivasagopalan சொன்னது… 12
தெரியாத தகவல்கள்.. பகிர்விற்கு நன்றி..
அது சரி.. உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..////
@@@Madhavan Srinivasagopalan
எனக்கும் தெரியாது தான். நான் படித்த விஷயம் உங்களை மாதிரி நான்கு பேருக்கு தெரியட்டும் சொல்லி பதிவா போட்டேன்
ஒரு நல்ல கட்டை ஒன்னு எடுத்துட்டு//
அப்போ கட்டைல கூட நல்ல கட்டை, நாட்டு கட்டை சீ, கெட்ட
கட்டைன்னு இருக்கா என்ன?
டெல்லி மேல்சபை எம்.பி ? (தவறோ ?)
அல்லது.. மாநிலங்களவை எம்.பி ?/////
மேல் சபையும், மாநிலங்களவையும் ஒன்னுதாங்க... :)
// .(எனக்கும் ரொம்ப நாள் மூளை எப்படி இருக்கும் ன்னு நேரடியா பார்க்கணும்ன்னு ஒரு ஆசை மாதவன் ) //
ஒங்க ரூமுல இருக்குற ரெண்டு செவரு இணையுது பாருங்க.. அதுதான் 'மூலை' -- மூலைய இப்ப பாத்துட்டீங்களா ?
//பிளாகர் சௌந்தர் கூறியது...
டெல்லி மேல்சபை எம்.பி ? (தவறோ ?)
அல்லது.. மாநிலங்களவை எம்.பி ?/////
மேல் சபையும், மாநிலங்களவையும் ஒன்னுதாங்க... :)//
மாநிலங்களவை என்பது நாடுளுமன்ற மேல்சபை..
டெல்லி மேல்சபை அல்ல, என நினைக்கிறேன்..
தம்பி அரசியல் எல்லாம் பேசுது ..?!
என்ன இங்க ஒரே எம்பிக்கள் அமளியா இருக்குது?:-)
// ஆண்டு தோறும் மக்களவை எம். பி.களில் 15 பேரும், டெல்லி மேல் சபை எம்.பிகளில் 7 பேரும் இதன் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.//
மக்களவை எம்.பி க்கும் மேல் சபை எம்.பி க்களுக்கும் என்ன வித்தியாசம் ..?
Madhavan Srinivasagopalan சொன்னது… 22
//பிளாகர் சௌந்தர் கூறியது...
டெல்லி மேல்சபை எம்.பி ? (தவறோ ?)
அல்லது.. மாநிலங்களவை எம்.பி ?/////
மேல் சபையும், மாநிலங்களவையும் ஒன்னுதாங்க... :)//
மாநிலங்களவை என்பது நாடுளுமன்ற மேல்சபை..
டெல்லி மேல்சபை அல்ல, என நினைக்கிறேன்.////
@@@Madhavan Srinivasagopalan
நான் டெல்லி சட்டசபை சொல்லவில்லை பாராளுமன்ற மேல் சபை தான்....
டெல்லில இருக்குறதுன்னால, அது டெல்லி மேல் சபை அல்ல என்பதே என் வாதம்..
// ப.செல்வக்குமார் கூறியது..."மக்களவை எம்.பி க்கும் மேல் சபை எம்.பி க்களுக்கும் என்ன வித்தியாசம் ..?" //
அதான.. எந்த எம்.பியா இருந்தாலும் 'மக்கள்' மேல ஏறி 'எம்பி.. எம்பி.. ' மிதிக்குறாங்க..
அப்ப அல்லாருமே 'மேல்' சபை எம்பிங்க தான..
//Madhavan Srinivasagopalan சொன்னது… 27
டெல்லில இருக்குறதுன்னால, அது டெல்லி மேல் சபை அல்ல என்பதே என் வாதம்..
//
ஆமாங்க. ஆனால் டெல்லி சட்டமேலவை இல்லையென்று நான் நினைக்கிறேன்.
//அதான.. எந்த எம்.பியா இருந்தாலும் 'மக்கள்' மேல ஏறி 'எம்பி.. எம்பி.. ' மிதிக்குறாங்க..
அப்ப அல்லாருமே 'மேல்' சபை எம்பிங்க தான..//
ஹ .ஹ .......அது என்னமோ உண்மை தான் மாதவன் .ரொம்ப கரெக்ட் .............பாயிண்ட் நாட் பண்ணுங்க ப்ப
மாதவனுக்கு MP சீட் கிடைக்காததால் டெல்லி என்ற வார்த்தையே பிடிக்கவில்லை என்று சொன்னதால் அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது
// சௌந்தர் கூறியது...
மாதவனுக்கு MP சீட் கிடைக்காததால் டெல்லி என்ற வார்த்தையே பிடிக்கவில்லை என்று சொன்னதால் அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது //
அட.. நீங்கதான்.. 'சபா-நாயகரா'....
அதன்.. புள்ள அரசியல் பேசுது... செல்வா காதுல விழுதா ?
//நாகராஜசோழன் MA கூறியது.
" ஆமாங்க. ஆனால் டெல்லி சட்டமேலவை இல்லையென்று நான் நினைக்கிறேன். "//
இல்லாத ஒன்றை(வடிவேலு - கெணறு போல) இருப்பதாக கூறினால்....
நம்முரதுக்கு நா ஒன்னும் சிரிப்பு போலீசு இல்ல..
//Madhavan Srinivasagopalan கூறியது...
இல்லாத ஒன்றை(வடிவேலு - கெணறு போல) இருப்பதாக கூறினால்....
நம்முரதுக்கு நா ஒன்னும் சிரிப்பு போலீசு இல்ல..//
அப்போ சிரிப்பு போலிசு வடிவேலு மாதிரி தானா?
யாருப்பா இங்கே சத்தம் போடுறது அது தான் தலைவர் நான் வந்திட்டேநிள்ள.. வாங்க ஆளுக்கு ஒரு பொட்டிய வாங்கிட்டு போங்க...
வெறும்பய சொன்னது… 35
யாருப்பா இங்கே சத்தம் போடுறது அது தான் தலைவர் நான் வந்திட்டேநிள்ள.. வாங்க ஆளுக்கு ஒரு பொட்டிய வாங்கிட்டு போங்க////
எதிர்க்கட்சி தலைவரா ஆளும் கட்சி தலைவரா பொட்டி தரேன் சொல்றார் அப்போ அவர் ஆளும் கட்சி தான்
// எதிர்க்கட்சி தலைவரா ஆளும் கட்சி தலைவரா பொட்டி தரேன் சொல்றார் அப்போ அவர் ஆளும் கட்சி தான் //
யாரா இருந்தா என்ன ? பொட்டி.. பொட்டிதான் முக்கியம்..
எல்லோருக்கும் பிரிச்சு கொடுக்குறதா சொல்லி. 8 போட்டி வாங்கிட்டு போயிருக்காரு நம்ம terror .. போய் சண்ட போடாம வரிசையில நின்னு வாங்கிக்குங்க....
//வெறும்பய கூறியது..." 8 போட்டி வாங்கிட்டு" //
சபாஷ்.. சரியான போட்டி..
இது அரசியல் பற்றிய பதிவோ என்ற ஐயத்தில் நான் இந்த அவையை விட்டு வெளிநடப்பு செய்கிறேன்.
politics இல phd வைத்திருக்கிறிங்க போல
அன்று கூட்டுக்குழு, இன்று பொது கணக்கு குழு இப்படியே கொஞ்ச கொஞ்சம் அரசியல் பத்தி தெரிஞ்சிக்கலாம் போல...
நல்ல பகிர்வு...தொடரட்டும் இந்த அரசியல் பாடம்...
நல்ல பகிர்வு.. :))
அடடா வடை வாங்க இன்னும் ஏழு போடணுமே ..?!
நல்லா உருப்படியான விஷயம் எல்லாம் பகிர்ந்துக்கிற...keep it up...!!!
சத்தியமா உள்ளேன் அய்யா
சத்தியமா உள்ளேன் அய்யா . இல்லன்னா போன் பண்ணி மிரட்டுவானே
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 47
சத்தியமா உள்ளேன் அய்யா . இல்லன்னா போன் பண்ணி மிரட்டுவானே////
பதிவு புரியவில்லை என்றால் இப்படி சொல்ல வேண்டியது
அடேங்கப்பா பயங்கர ஆராய்ச்சியா இருக்கு
கணக்குல நான் வீக் அதான் உள்ல நுழையவே பயமா இருந்துச்சி
செல்வாக்கு 50தாவது வடைதான் கிடைச்சதா
எல்லாம் சரி..தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்குமா அதுதான் பிரச்சனை
போபர்ஸ் குத்ரோச்சி சுகமா இருக்காரு
ராசா ராஜினாமா பண்ணினதே பெரிய தியாகமா நினைக்கிறாரு
ம்..அம்மா போராட்டம் என்ன விளைவு தருதோ
பாரளுமன்றம் குழு என்பது என்ன..?இந்த புளுத்துப்போன...எம்.பி.க்கள் தானே..வானத்துல இருந்து தேவதூதர்களா வரப்போறாங்க
ஒரு நல்ல கட்டை ஒன்னு எடுத்துட்டு வந்து சௌந்தர் மண்டைல போடுங்க .........அப்போ தெரியும் ...மூளை வெளியே வரும்ல ........அப்போ கண்டு பிடிச்சிருலாம் .........(எனக்கும் ரொம்ப நாள் மூளை எப்படி இருக்கும் ன்னு நேரடியா பார்க்கணும்ன்னு ஒரு ஆசை மாதவன் //
வெறி பிடிச்சு அலையுதுய்யா இந்த பார்ட்டி..அந்த அரிவாளை புடுங்கி ஒரே போடு
அப்பாடி 60 வடை எனக்கு
எச்சூச்மி.... அரசியல்-ல கொஞ்சம் வீக்...
அதிலும்....கணக்குப் பாடம்.... அவ்வ்வ்வவ்வ்வ்
ஒன்னும் புரியல....போங்க..
ஏதோ, கணக்கு வழக்கு ஒழுங்கா பாத்து நல்லா இருந்தா சரிதான் :-)))
Thank you for the information. Nice post. :-)
Good posting!
Informative!
எவ்வளவு....வழிமுறைகள் எவ்வளவு...நடைமுறைகள்...இருக்கிறது....ஆனால் எல்லாம் ஒரு கண்துடைப்பாகாவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் நிகழ்த்தப்படுவதால் நிர்வாக சீர்கேடுகள் மிகுதியாகிப் போய்விட்டது நம் தேசத்தில்...
இப்போ நீ இங்க சொல்லியிருக்கிற செய்திகள் எனக்கு மட்டும் புதிது இல்லை.. பல மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்குக் கூட தெரியாது என்பதுதான் உண்மை...
நிறைய செய்திகள் இருக்கின்றன... தெரிந்துகொள்ள .....நன்றிகள்...!
@@சௌந்தர்...
//இப்போ நீ இங்க சொல்லியிருக்கிற செய்திகள் எனக்கு மட்டும் புதிது இல்லை.. பல மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்குக் கூட தெரியாது என்பதுதான் உண்மை...//
ஸூஊஊ... நா கூட எனக்கு தான் ஒன்னும் புரியலயோன்னு தப்பா பீல் பண்ணிட்டேன்...
தேவா கமெண்ட் பாத்தா பிறகு..தான் புரியுது..இம்புட்டு பேருக்குமே புரியலயமாம்...
எனக்கு மட்டும் புரிஞ்சிருமா என்ன??? :D :D :D
எவ்வளவு தகவல்கள்..
எப்படீங்க இப்படி..
சூப்பர்.
இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது .. பாராட்டுக்கள் தம்பி...
Ananthi சொன்னது
ஸூஊஊ... நா கூட எனக்கு தான் ஒன்னும் புரியலயோன்னு தப்பா பீல் பண்ணிட்டேன்...
தேவா கமெண்ட் பாத்தா பிறகு..தான் புரியுது..இம்புட்டு பேருக்குமே புரியலயமாம்...
எனக்கு மட்டும் புரிஞ்சிருமா என்ன??? :D :D :D/////
@@@Ananthi
உங்களை பற்றி தான் தெரியுமே...! சரி சரி எத்தனை தடவை படித்தீங்க
//@@@Ananthi
உங்களை பற்றி தான் தெரியுமே...! சரி சரி எத்தனை தடவை படித்தீங்க //
ஹலோ.. அதெல்லாம் ப்ளாக் சீக்ரட்... அதெல்லாம் கேக்கப் பிடாது..
(படிக்கலன்னா.. ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க போல இருக்கே...
நா வரல இந்த விளையாட்டுக்கு... அவ்வ்வ்வவ்...)
அருமை நண்பரே,
தெளிவகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்
தொடருங்கள்....
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
மாணவன்
நன்றி
வாழ்க வளமுடன்
ஆஹா 70 வது வடை எனக்கா...
லேட்டா வந்தாலும்
வந்ததுக்கு எப்படியோ வடை வாங்கியாச்சு...
ரொம்ப நன்றி
good one
தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள். நல்ல பதிவு.
பொது கணக்கு குழு பற்றிய நுட்பமான விஷயங்களை கூட தெளிவாக சொல்லியுள்ளீர்கள். நன்றிகள்..
தெரியாத தகவல்கள்.. பகிர்விற்கு நன்றி.
வாழ்த்துக்கள் .... தமிழ் மணம் திரட்டியில் "வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை" க்கு
kalpanarajendran சொன்னது… 75
தெரியாத தகவல்கள்.. பகிர்விற்கு நன்றி.
வாழ்த்துக்கள் .... தமிழ் மணம் திரட்டியில் "வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை" க்கு////
முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
super kanakku
Post a Comment