Tuesday, January 4

நீயே என் கவிதை...!



அன்பிற்கு அளவு கேட்டாய்
வார்த்தை கோர்க்கும் முன்
கோவைபழமாய் சிவந்து
தொலை தூரம் கடந்தாய் !
வெறுமை வாழ்க்கைதனில்
உன் 
பிரிவு கண்ட 
மனமோ  ஜீவனற்று
உடலோ உயிரற்று !


மறுக்க பட்ட உன் அன்பால் 
மௌனமானேன் நிதர்ச்சையாய் 
என் மன ஆழம் புரிந்த நீயோ  
கண்ணீரோடு என் அருகாமையில்
மாலையுடன் !?

நின்று போன இதயமோ
மறுபடி துடித்தது
உன் கண்ணீர் துடைக்க !! 

----------------------------------------------------

பேச முக்கியமாக ஒன்றும்  இல்லை 
இருந்தும் உன்னை அழைத்து 
எதையோ... 
பேசி வைக்கிறேன் போனை 
மூடி வைக்கிறேன் மனதை !!



நிறைய பேச எண்ணி இருந்தேன் 
உன் குரல் கேட்டதும் 
மனபாடம் செய்த அனைத்தும் 
மறந்து விட்டது !!?


கவிதை எழுத கற்று தந்தாய் 
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!


60 comments:

ஆனந்தி.. said...

வண்ணத்து பூச்சி கவிதை..இன்னைக்கு இப்படி ஒரு கவிதை...சவுந்தர்..என்னப்பா தங்கம்...என்னாச்சு??? :)))))))

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி..........கவிதை ...........நமக்கு ஓரம்ப தூரம் சவுந்தர் சார் ............. நல்லா இருக்கு

சௌந்தர் said...

ஆனந்தி.. சொன்னது… 1
வண்ணத்து பூச்சி கவிதை..இன்னைக்கு இப்படி ஒரு கவிதை...சவுந்தர்..என்னப்பா தங்கம்...என்னாச்சு??? :)))))))////

ஒன்றும் ஆகவில்லை :)சும்மா தான்...

எஸ்.கே said...

//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!//

அட! அட! அட! ரசிகன்பா நீங்க!

எஸ்.கே said...

வண்ணத்துப் பூச்சி, இப்ப பூ ரெண்டுக்கும் தொடர்பு இருக்கு!

சௌந்தர் said...

எஸ்.கே சொன்னது… 4
//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!//

அட! அட! அட! ரசிகன்பா நீங்க!///

ஆமா எஸ்கே நான் ரசிகன் தான் நன்றி

ஆனந்தி.. said...

//ஒன்றும் ஆகவில்லை :)சும்மா தான்...//

சும்மா வா...:)))) ஓகே...நம்பிட்டேன்..:)))

dheva said...

//நிறைய பேச எண்ணி இருந்தேன்
உன் குரல் கேட்டதும்
மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?

// யாரோ உனக்கு பிடிச்சவங்ககிட்ட பேசியிருக்க....அந்த ஃபீல் கவிதையா வந்திருக்கு தம்பி!

வாழ்த்துக்கள் ! உனக்கும் உன் அன்புகுரியவங்களுக்கும்.....

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா!

எஸ்.கே said...

அடுத்தது தேன் தானே?

செல்வா said...

//நின்று போன இதயமோ
மறுபடி துடித்தது
உன் கண்ணீர் துடைக்க !!
//

கண்ணீர் துடைக்க இதயம் மறுபடியும் துடிக்குதா ..?
அட அட .. எப்படியெல்லாம் கற்பனை பண்ணுறாங்க .!!

ஆனந்தி.. said...

//அடுத்தது தேன் தானே?//
ஹ ஹ...அதே தான் நானும் நினைக்கிறேன் எஸ்.கே..:))))

செல்வா said...

/நிறைய பேச எண்ணி இருந்தேன்
உன் குரல் கேட்டதும்
மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?
///

அட பாவமே , வெண்டைக்காய் சாப்பிடு மச்சி ,, மறதி குணமாகும் ..!!

சௌந்தர் said...

@@@dheva

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணா

Anonymous said...

//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்.//

நீ படைக்கும் கவிதைகளில் இருப்பாய் ஆகும் நடமாடும் கவிதைக்கு இக்கவிதை சமர்ப்பணம். என்ன மச்சி நான் சொல்றது சரி தான? ;)

சௌந்தர் said...

ஆனந்தி.. சொன்னது… 11
//அடுத்தது தேன் தானே?//
ஹ ஹ...அதே தான் நானும் நினைக்கிறேன் எஸ்.கே..:))))////

நல்லா ஐடியா ...போட்டுட்டா போச்சி

NaSo said...

//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!//

கவிதை... கவிதை ...

ஆனந்தி.. said...

/வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணா//
நன்றியா...அப்போ சும்மான்னு சொன்ன...ஓ...அதுவே சும்மாவா...:))))

NaSo said...

//கோமாளி செல்வா கூறியது...

/நிறைய பேச எண்ணி இருந்தேன்
உன் குரல் கேட்டதும்
மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?
///

அட பாவமே , வெண்டைக்காய் சாப்பிடு மச்சி ,, மறதி குணமாகும் ..!!//

வெண்டைக்காய் சாப்பிடலைன்னா என்னாகும்?

சௌந்தர் said...

கோமாளி செல்வா கூறியது...
/நிறைய பேச எண்ணி இருந்தேன்
உன் குரல் கேட்டதும்
மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?
///

அட பாவமே , வெண்டைக்காய் சாப்பிடு மச்சி ,, மறதி குணமாகும் ..!!///

டிப்ஸ் நல்லா இருக்கே நீ அதை தான் சாப்பிடுறே போல

சௌந்தர் said...

Balaji saravana சொன்னது… 14
//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்.//

நீ படைக்கும் கவிதைகளில் இருப்பாய் ஆகும் நடமாடும் கவிதைக்கு இக்கவிதை சமர்ப்பணம். என்ன மச்சி நான் சொல்றது சரி தான? ;)////

he he he என்ன சொல்லுறது தெரியலை :)

சௌந்தர் said...

நாகராஜசோழன் MA சொன்னது… 16
//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!//

கவிதை... கவிதை ...////

உண்மையாவா சொல்றிங்க நன்றி நாகராஜசோழன்

சௌந்தர் said...

ஆனந்தி.. கூறியது...
/வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணா//
நன்றியா...அப்போ சும்மான்னு சொன்ன...ஓ...அதுவே சும்மாவா...:)))////

இல்லை நீங்க சொல்றது தான் சும்மா

மாணவன் said...

//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்.//

எனக்கு எப்படி கவிதாவே கவிதை ஆன மாதிரி...

உங்களுக்குமா?

நல்லாருக்கு அண்ணே அப்ப ரெண்டுபேரும் ஒரே இனமுன்னு சொல்லுங்க.....

மாணவன் said...

// சௌந்தர் கூறியது...
ஆனந்தி.. கூறியது...
/வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணா//
நன்றியா...அப்போ சும்மான்னு சொன்ன...ஓ...அதுவே சும்மாவா...:)))////

இல்லை நீங்க சொல்றது தான் சும்மா//

சும்மா வந்து நீங்க சும்மானாச்சுக்கும் சொல்லாதீங்க சும்மா....

ஹிஹிஹி...

வினோ said...

துடிக்கும் இதயத்திற்கு உங்களின் கவிதை மூலம் உயிர் குடுத்து விட்டீர்கள்...

சௌந்தர் said...

மாணவன் சொன்னது… 23
//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்.//

எனக்கு எப்படி கவிதாவே கவிதை ஆன மாதிரி...

உங்களுக்குமா?

நல்லாருக்கு அண்ணே அப்ப ரெண்டுபேரும் ஒரே இனமுன்னு சொல்லுங்க....///

ம்ம்ம்ம் சரி சரி :)

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் சொன்னது… 2
ஹி.ஹி.ஹி..........கவிதை ...........நமக்கு ஓரம்ப தூரம் சவுந்தர் சார் ............. நல்லா இருக்கு////

எவ்வளவு தூரம் சொல்லுங்க நான் வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹி.ஹி.ஹி..........கவிதை ...........நமக்கு ஓரம்ப தூரம் சவுந்தர் ............. நல்லா இருக்கு

Anonymous said...

[ma]படித்தேன்...’படி’ தேன்[ma]

ஸாதிகா said...

//நிறைய பேச எண்ணி இருந்தேன்
உன் குரல் கேட்டதும்
மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?
// யதார்த்த வரிகள்.

Anonymous said...

//என் மன ஆழம் புரிந்த நீயோ
கண்ணீரோடு என் அருகாமையில்
மாலையுடன் !?//


அப்டினா அவங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா???

Anonymous said...

//பேச முக்கியமாக ஒன்றும் இல்லை
இருந்தும் உன்னை அழைத்து
எதையோ...
பேசி வைக்கிறேன் போனை
மூடி வைக்கிறேன் மனதை !!//


அட அட..
என்னமா யோசிக்கிறீங்க..

Anonymous said...

//மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?//


பள்ளியில் படிக்கிற காலத்துலயிருந்தே உங்களுக்கு இந்தப் பிரச்சனைதானே..

Anonymous said...

//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!//


கவித.. கவித..
(அவங்க பேரு கவிதாவா???)

சௌந்தர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
[ma]படித்தேன்...’படி’ தேன்[ma]

[ma]நன்றி நன்றி[ma]

அருண் பிரசாத் said...

//நிறைய பேச எண்ணி இருந்தேன்
உன் குரல் கேட்டதும்
மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?//
பரிட்சையிலேயே பிட் எழுதியே பழக்கப்பட்டாச்சு... அப்புறம் எப்படி மனப்பாடம் பண்ணது நிணைவுல இருக்கும்

//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!//

இதுக்கு டெம்பிளேட் கமெண்ட் போட்டுகறேனே செளந்தர்...

சூப்பர்!

சௌந்தர் said...

ஸாதிகா கூறியது...
//நிறைய பேச எண்ணி இருந்தேன்
உன் குரல் கேட்டதும்
மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?
// யதார்த்த வரிகள்////

மிக்க நன்றி...

தினேஷ்குமார் said...

கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!


யா சூப்பர்

சௌந்தர் said...

இந்திரா கூறியது...
//மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?//


பள்ளியில் படிக்கிற காலத்துலயிருந்தே உங்களுக்கு இந்தப் பிரச்சனைதானே.///

உண்மையை இப்படியா வெளியே சொல்வாங்க...

சௌந்தர் said...

அருண் பிரசாத் கூறியது...
//நிறைய பேச எண்ணி இருந்தேன்
உன் குரல் கேட்டதும்
மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?//
பரிட்சையிலேயே பிட் எழுதியே பழக்கப்பட்டாச்சு... அப்புறம் எப்படி மனப்பாடம் பண்ணது நிணைவுல இருக்கும்

//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!//

இதுக்கு டெம்பிளேட் கமெண்ட் போட்டுகறேனே செளந்தர்...

சூப்பர்!///

மிக்க நன்றி....

டிலீப் said...

அருமை வரிகள் நண்பரே

காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு

சுபத்ரா said...

[co="green"]காதல் கவிதை அழகு சௌந்தர[/co]
ஆனா, வர வர காதல் கவிதைகள் அதிகமா எழுத ஆரம்பிச்சிட்ட.. :-)

இளங்கோ said...

//பேசி வைக்கிறேன் போனை
மூடி வைக்கிறேன் மனதை !!//
Nice lines.. :)

karthikkumar said...

nice மச்சி :)

Ramesh said...

[co="red"]மறுக்க பட்ட உன் அன்பால்
மௌனமானேன் நிதர்ச்சையாய்
என் மன ஆழம் புரிந்த நீயோ
கண்ணீரோடு என் அருகாமையில்
மாலையுடன் !?

நின்று போன இதயமோ
மறுபடி துடித்தது
உன் கண்ணீர் துடைக்க !! [/co]

அருமையா எழுதிருக்கீங்க வாழ்த்துக்கள்...

இம்சைஅரசன் பாபு.. said...

பய எங்கேயோ சிக்கிட்டான் ????

சி.பி.செந்தில்குமார் said...

>>>

கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..!



touching line. weldone soundhar

சி.பி.செந்தில்குமார் said...

u r shining in rhyme and sign in essay. good

சி.பி.செந்தில்குமார் said...

50 vada

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
பய எங்கேயோ சிக்கிட்டான் ????/////////

இன்னுமா தெரியல? ஆமா....யாரு கவிதா? ஐயோ...மாணவன் கோவிச்சுக்காதிங்க!

THOPPITHOPPI said...

இவ்வளவு அருமையா கவிதை எழுதுறிங்க ஏன் காபி செய்யாமல் இருக்க எதுவும் செய்யவில்லை.

Jeyamaran said...

*/
நிறைய பேச எண்ணி இருந்தேன்
உன் குரல் கேட்டதும்
மனபாடம் செய்த அனைத்தும்
மறந்து விட்டது !!?
/*

asathal nanbaa..........

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா. கவிதை எழுதி கலக்குறீங்க....

//யாரோ பிடிச்சவங்ககிட்ட பேசியிருக்கீங்க ....அந்த ஃபீல் கவிதையா வந்திருக்கு...

வாழ்த்துக்கள் ! உங்களுக்கும் அன்புகுரியவங்களுக்கும்.....///

அதே கமெண்ட் நானும் சொல்றேன்..... வாழ்த்துக்கள்..

தொடர்ந்து எழுதுங்க :-))

Asiya Omar said...

கவிதை கூட எழுதுவீங்களா? சகோ.அருமை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆமா... oru doubt...
உங்க அண்ணன் சொன்ன மாதிரி....
யார் கிட்ட பேசினீங்க...??

என்ன நடக்குது?? சொல்லுங்க ....சொல்லுங்க...
யார் அவங்க??? :-))

சௌந்தர் said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது… 56
ஆமா... oru doubt...
உங்க அண்ணன் சொன்ன மாதிரி....
யார் கிட்ட பேசினீங்க...??

என்ன நடக்குது?? சொல்லுங்க ....சொல்லுங்க...
யார் அவங்க??? :-))////

அது அவருக்கு தெரியும் அவரை கேளுங்க

Kousalya Raj said...

//கவிதை எழுத கற்று தந்தாய்
இன்று நீயே என் கவிதை ஆனாய்..//

முதலில் கவிதை எழுத கற்று தந்தது யார்னு பேரை சொல்லு அப்புறம் கமெண்ட் போடுறேன்னு காலையில் இருந்து கேட்கிறேன் சொல்ல மாட்டற..??!

கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன் அப்புறம் இருக்கு உனக்கு...!!

:))))

ஹேமா said...

வார்த்தைகள் கோர்க்குமுன் தொலைதூரம் சென்ற அன்பு...அழகான ஆனால் ஆதங்கம் நிறைந்து வழியும் அற்புதமான கவிதை.

Anonymous said...

[ma]காதல் மொழி புரிய ஆரம்பிச்சுருச்சா [/ma]

என்ன ஆச்சு சௌந்தர்???

[co="blue"]மறைக்கமா சொல்லிரு யாரு அந்த பொண்ணு ..[/co]

ஜெயந்த் கிருஷ்ணா said...

சாரி நண்பா லேட் ஆகிப்போச்சு... கவிதை நல்லாயிருக்கு....

 
;