Thursday, January 13

இவள் போலே யாரும் இல்லை...!





நன்றாக உறங்கி கொண்டுயிருந்தாள் ஜெயந்தி....நேரம் 8 மணி ஆகுது இன்னும் என்ன தூக்கம் என்று குரல் கொடுத்து கொண்டே வந்தார் ஜெயராம்...ஜெயந்தியின் அப்பா....

விடுங்க அவ தூங்கட்டும் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை 8 மணி வரை தூங்குறா இல்லையென்றால் பாவம் குழந்தை காலையே எழுந்து காலேஜ்க்கு போய்டுவா விடுங்க...என்றாள் ஜெயந்தியின் அம்மா...

இல்லை உமா நீ மட்டும் சமையல் வேலை எல்லாம் செய்து கொண்டு இருக்கே உனக்கு அவ வந்து உதவி செய்வா அதான் எழுப்பினேன்...

பரவாயில்லைங்க அவளே கொஞ்ச நாளைக்கு தான் நம்ம வீட்டில் இருப்பா ...பிறகு கல்யாணம் ஆனா அங்கே போய்டுவா எங்களுக்கு எல்லாம் பிறந்தவீட்டில் இருக்கும் வரை தான் சந்தோசம்....

உமாவை முறைத்துப் பார்த்தார் ஜெயராம்.... முகத்தை திருப்பி கொண்டு வேலையை தொடர்ந்தாள்...

திடீர் என்று பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குழந்தை அழுது கொண்டே ஜெயந்தி வீட்டிற்கு ஓடி வந்தது ஜெயந்தியின் அம்மா அழுகாதே அக்கா தூங்குறா....

"என்னம்மா சத்தம்" என்று கண்விழித்தாள் ஜெயந்தி 

"பார் உன்னால் அக்கா எழுந்து விட்டா"...

"விடுங்க அம்மா பரவாயில்லை" என அந்த குழந்தையை வாங்கி தன் அருகில் படுக்க வைத்து கொஞ்சி கொண்டு இருந்தாள்...ஜெயந்திக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் பக்கத்து வீட்டு குழந்தையுடன் விளையாடி கொண்டு இருப்பாள்.

************************

மறுநாள் அம்மா நான் காலேஜுக்கு போயிட்டு வரேன் அம்மா இன்று கல்லூரியில் நிறைய போட்டிகள் இருக்கிறது அதனால் நான் வருவதற்கு லேட் ஆகும் என சொல்லி விட்டு கல்லூரிக்கு சென்றாள்..கல்லூரியில் தோழிகள் காத்திருந்தனர்... வா ஜெயந்தி "ஏன் இவ்வளவு நேரம்" போட்டி ஆரம்பித்து விட்டார்கள்...."ஏய் ஜெயந்தி எப்போதும் நீ தானே முதலில் வருவாய்" இந்த முறை பார் நான் உன்னை விட அதிக பரிசு வாங்குகிறேன் என்றாள் ஒரு தோழி.

பேச்சு போட்டி ஓட்டபந்தயம், போட்டிகளில் இரண்டு பரிசு மட்டுமே வாங்கினாள்...ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால் சில தோழிகள் கிண்டல் செய்ய அதை தாங்காமல் ஜெயந்தி கையை வெட்டி கொள்ள முயன்றாள் ஒரு தோழி வந்து என்ன பண்றே ஜெயந்தி இதுக்கு போய் கையை அறுத்து கொள்வார்களா...இந்த போட்டியில் வெற்றி பெற வில்லை என்றால் அடுத்த போட்டியில் நீ வெற்றி பெறுவாய் இப்படி நீ இருக்காதே...ஏமாற்றத்தை தாங்க கூடிய சக்தி உனக்கு இருக்கணும் இது போல இனி நீ செய்ய கூடாது சரியா என தோழிகள் கூறினார்கள்

**********************
சில நாட்களுக்கு பிறகு 

ஜெயந்தியின் அப்பா மதிய சாப்பாட்டிற்கு வேலையை முடித்து விட்டு வந்தார்... 
வாங்க சாப்பாடு எடுத்து வைக்கவா

எடுத்துவை உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும் 

சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு என்ன விஷயம் சொல்லுங்க...என்றாள்

நம்ம ஜெயந்திக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் வந்து இருக்கு, நல்ல இடம் பையன் நல்லா படித்து இருக்கார் வசதியான குடும்பம். நீ என்ன சொல்றே பேசி முடிக்கலாமா..?

அது சரிங்க...ஆனா ஜெயந்தி படிச்சிட்டு இருக்காளே 

அதான் இந்த வருடம் படிப்பு முடிய போகுதே கல்யாணம் செய்து முடிப்பதற்கும் படிப்பு முடிவடைவதற்கும் எல்லாம் சரியா இருக்கும் ....

சரிங்க ஜெயந்தி வந்தா நீங்களே சொல்லுங்க 

மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தாள்....சிறிது நேரத்திற்கு பிறகு தயங்கி கொண்டே ஜெயந்தியின் அப்பா பேசுவதற்கு தயங்கினார் என்ன அப்பா சொல்லுங்க 

உனக்கு ஒரு வரன் வந்து இருக்கு..நீ சம்மதம் சொன்னா மேற்கொண்டு பேசுவேன் அதான் கேக்குறேன் நீ என்னமா சொல்றே..?


சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் ஜெயந்தி....என்னப்பா சொல்றிங்க நான் இப்போது படித்து கொண்டு இருக்கிறேன்...நான் மேற்கொண்டு படிக்கவேண்டியது இருக்கு இப்போது எதற்கு அப்பா அவசரம்..?

இல்லமா நல்ல இடம் அதுமட்டும் இல்லாமல் அவங்க கல்யாணத்திற்கு பிறகு உன்னை படிக்க வைக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க...மாப்பிள்ளை வீட்டில் பேசி உன்னை மேல் படிப்பு கூட படிக்க வைக்க சொல்றேன்...சரின்னு சொல்லும்மா...

சரிங்கப்பா உங்களுக்கு எது விருப்பமோ அதையே செய்யுங்க என்று அரை மனதுடன் கூறினாள்...

அரைமனதுடன் திருமணம் சம்மதம் என்றாலும் மாப்பிள்ளையை பார்த்தவுடன் ஜெயந்திக்கு பிடித்து விட்டது...

ஆயிரம் கனவுகளுடன் இருந்தாள்.. திருமணத்திற்கு பிறகு வேலைக்கெல்லாம் போகாமல் குழந்தை பெற்று கொண்டு அதை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தாள்....கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் ...



முடிவு அடுத்த பதிவில்.... 




38 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

I am first

Arun Prasath said...

naan second

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...
தொடருகிறேன் .

Ramesh said...

நான் தேர்ட்...


நல்லாதான் ஆரம்பிச்சிருக்கு... போங்க போங்க வர்றோம்..

இம்சைஅரசன் பாபு.. said...

//
.கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் ....//

பாருங்கப்ப கதைல செம ட்விஸ்ட் வச்சிருக்கான் .......(உனக்கு வேணும் .......வருவீய ...வருவீய ....இந்த சீரியல் பார்க்கும் பசங்க கூட சவகாசம் வச்சுபீய ......நான் என்னை சொன்னேன் )

Anonymous said...

கனவாகப் போகும் கனவுகளைக் காணும் ஆவல்..

அடுத்த பதிவு எப்போ?

THOPPITHOPPI said...

கையில் விளக்குடன் BLACK & WHITE போட்டோ- புகைப்பட தேர்வு அருமை

THOPPITHOPPI said...

உங்கள் தளத்தில் நான் படிக்கும் முதல் கதை. குடும்ப மலரில் வருவது போல் இயல்பாக உள்ளது.

Madhavan Srinivasagopalan said...

குடும்பக் பாங்கான கதையோ ? Good.

ஒரு அட்வைஸ்.. 'போட்டோ' யாருடையது.. அதை இந்தப் பக்கத்தில் அவரின் அனுமதியோடு வைத்தீர்களா? பொதுவான விஷயத்திற்கு ஏன் தனிப்பட்ட ஒருவரின் போட்டோ போடவேண்டும். you may use cartoon image ......

Madhavan Srinivasagopalan said...

குடும்பக் பாங்கான கதையோ ? Good.

ஒரு அட்வைஸ்.. 'போட்டோ' யாருடையது.. அதை இந்தப் பக்கத்தில் அவரின் அனுமதியோடு வைத்தீர்களா? பொதுவான விஷயத்திற்கு ஏன் தனிப்பட்ட ஒருவரின் போட்டோ போடவேண்டும். you may use cartoon image ......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த கதையை படிச்சிட்டு பாபு கையை வேட்டிக்கிட்டானாமே உண்மையா?

கவி அழகன் said...

அருமையாக உள்ளது தொடருங்கள் தல

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு ............. ஒரு நார்மலான ஸ்டோரி ............... அடுத்து என்ன டுவிச்ட்டு வருதுன்னு பார்ப்போம்

சௌந்தர் said...

@@@மாதவன் நான் கூகிள் சர்ச் பண்ணி தான் எடுத்தேன் ஏற்கனவே சில ப்ளாக் இந்த போட்டோ இருக்கு இந்த பதிவுக்கு சரியா வரும்ன்னு நினைச்சு போட்டேன்....

karthikkumar said...

மச்சி என்ன இது முழுசா முடிக்காம ராஸ்கல்ஸ்.. எல்லாம் இந்த வூர் சுத்துற பக்கி அருண் (suturlavirumbi) பண்ற வேலை... சீக்கிரம் அடுத்த பதிவு எழுத்து நல்லா இருக்கு....

Chitra said...

சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க... பொங்கல் லீவு வருதே....

ஆனந்தி.. said...

ம்ம்...தொடர் கதையா...அடுத்த பகுதியில் தான் கதையின் உள்கருத்து புரிபடும் னு நினைக்கிறேன்..சீக்கிரம் அதை போடு...

S Maharajan said...

அருமையா போகுது!!!!
முடிவு சுபம் தானே!

அருண் பிரசாத் said...

அடுத்த பார்ட் எப்போ?

Anonymous said...

//கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் //

மச்சி! ரொம்ப சோகமா முடிச்சுடாதடா!

அருண் பிரசாத் said...

கதை எப்படியோ... ஆனா அந்த பொண்ணு அம்சமா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் ...////

அருமை மக்கா....

Harini Resh said...

//கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் //
நிறைய ஜெயந்தி போன்ற பெண்களின் நிலை இதுதான் சௌந்தர்
அருமை முடிவு என்னவோ???????????

Asiya Omar said...

தொடர்ந்து எழுதுங்க,கதை அருமை.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல ஆரம்பம்..

Anonymous said...

நல்லாருக்கு

செல்வா said...

தம்பி தொடர்கதை எழுதுது போல
?!!

எஸ்.கே said...

//கோமாளி செல்வா கூறியது...

தம்பி தொடர்கதை எழுதுது போல
?!!//

அவள் ஒரு தொடர்கதை!

கருடன் said...

நல்லா இருக்குங்கோ... :))

Menaga Sathia said...

சூப்பர்ர் தொடருங்கள்...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//முடிவு அடுத்த பதிவில்.... ////

....ஐ.. நேத்து தொடரும்-னு இருந்தது.. என்ன நடக்குது இங்க..!!
கதை நல்லா இருக்கு.... கதை, கவிதை, கட்டுரை.. எல்லாம் கலுக்குறீங்க.. :-)

Anonymous said...

சூப்பர்
புகைப்பட தேர்வு அருமை

ஜெயந்த் கிருஷ்ணா said...

nanpaa Waiting........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த புள்ளைய எ்ங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தக் கதைல என்ன உள்குத்து இருக்குன்னே புரியலியே? பார்ப்போம், அடுத்த பார்ர்ட்டை........!

Philosophy Prabhakaran said...

வியாழக்கிழமை சாயங்காலம் தட்சிணாமூர்த்தி கோயிலுக்குப்போய் அங்க விளக்கு வச்சிட்டு இருந்த பொண்ணை அவளுக்கே தெரியாம போட்டோ எடுத்துட்டு வந்து ப்ளாக்ல போட்டுட்டீங்க போல...

ரஹீம் கஸ்ஸாலி said...

அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவில் தமிழ்மணம் விருதுகள்2010 -இல் 2-ஆம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

ஆமினா said...

சுவாரசியமா இருக்கு !!!

தொடர்ந்து எழுதுங்க

 
;