Monday, January 17

இவள் போலே யாரும் இல்லை ll




ஆயிரம் கனவுகளுடன் இருந்தாள்.. திருமணத்திற்கு பிறகு வேலைக்கெல்லாம் போகாமல் குழந்தை பெற்று கொண்டு அதை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தாள்....கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் ...இதுவரை... 


ஜெயந்தியின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஓடியது ....கணவனும் மாமியாரும் அவள் மேல் அன்பாகவே இருந்தனர். ஆனால் அவளுக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லையே என்ற வருத்தம் இருந்தது. சமீபத்தில் அம்மா, அப்பா ஃபோன் செய்தபோது கூட ஏதாவது விசேஷம் உண்டா என கேட்டார்கள்.

ஜெயந்தியின் மாமியார் வெளியே சென்று விட்டு கோபமாக வீட்டுக்கு வந்தார்..

"என்ன அத்தை என்ன ஆச்சு?" இல்லை ஜெயந்தி நான் கடைக்கு போயிட்டு வரும் பொழுது என்னை ஒருத்தி பார்த்து கேக்குறா... என்ன இன்னும் உன் மருமக உண்டாகலையா...?உன் பையனுக்கு பிறகு தான் என் பையனுக்கு கல்யாணம் ஆனது.. ஆனால் இப்பொழுது என் மருமக மாசமா இருக்கிறா என்று என்னை கேட்குறா...அதான் கோவம் வந்துடுச்சிம்மா...இதை கேட்ட உடன் மெளனமானாள். "ஜெயந்தி உனக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதம் தானே ஆகுது அதுக்குள்ள ஏன் இவங்க எல்லாம் இப்படி பேசுறாங்கன்னு தெரியலை" ...இதுக்கு தான் கடைக்கு போனால் யாரிடமும்
பேச கூடாது.... சரி ஜெயந்தி நீ போய் சமையல் செய்.

தன் மாமியார் தன்னை எதுவும் குறை சொல்லவில்லை என்றாலும் தனக்கு குறை இருக்குமோ என்று நினைத்து கொண்டாள்...


நாட்கள் ஓடின ஒரு வருடம் ஆனது இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என்று கேட்பவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் ஜெயந்தி...தன் கணவர் வேலையை விட்டு வந்தவுடன் தன் ஏக்கத்தை கூறி அழுதாள் "ஏதாவது செய்ய வேண்டும் எனக்கு நல்ல மாமியார் கிடைத்து இருக்காங்க அவங்க ஆசையை நான் நிறைவேற்றவேண்டும் ஏதாவது நல்ல மருத்துமனைக்கு சென்று நாம் சோதனை செய்து கொள்ளுவோம் நீங்க என்ன சொல்றிங்க"...சிறிது தயக்கத்திற்கு பிறகே சரி என்றான்.


மறுநாள் ஒரு மருத்துவரை சந்தித்து இருவரும் சோதனை செய்து கொண்டனர். இரண்டுநாள் கழித்தே சோதனை முடிவு தருவோம் என்று கூறிவிட்டார்கள். ஜெயந்தி நாம் இரண்டு நாள் கழித்து வாங்கி கொள்வோம் என ஜெயந்தியும் விக்னேஷும் பேசிக்கொண்டு வந்தார்கள்...


இரண்டு நாட்கள் கழித்து ...

வேலைக்கு சென்றிருந்த விக்னேஷிற்கு போன் செய்தாள். "ஏங்க இன்று அங்கே போய் ரிசல்ட் வாங்கவேண்டுமே நீங்க வரவில்லையே....?". இல்லை ஜெயந்தி எனக்கு வேலை அதிகம் இருக்கிறது நீ போய் வாங்கிட்டு வா..

சரிங்க...நான் போயிட்டு வந்து சொல்றேன் 


சந்தோசமாக தன் அத்தையிடம் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றாள். மருத்துமனைக்கு உள்ளே நுழையும் இடத்தில் ஒரு சிறிய கோவில் இருந்தது அங்கே சாமி கும்பிட்டு விட்டு உள்ளே சென்றாள்...ரிசல்ட் கவரை ஜெயந்தியிடம் கொடுத்தார்கள் என்ன இருக்கிறது கொஞ்சம் படித்து சொல்லுங்க என்றாள். அவர்கள் படித்து விட்டு இந்த பெண்ணிற்கு இனி குழந்தை பிறக்காது அவர் கர்ப்பபையில் கட்டி இருக்கிறது அதை ஆபரேசன் செய்து எடுக்க வேண்டும்...என்கிறார்கள். ஜெயந்தி தலையில் இடி விழுந்ததை போல இருந்தது இந்த செய்தி...ஒரு நடை பிணமாய் நடந்து வந்துகொண்டு இருந்தாள்...மருத்துவமனை வாசலில் இருந்து சாமி இவளைப்பார்த்து சிரிப்பது போல இருந்தது....வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயற்சி செய்தாள் ...அப்போது தன்னிலை மறந்து சென்ற அவளை ஒரு லாரி தூக்கி எரிந்தது..அவள் உயிர் பிரிந்தது....



அவளின் தொலைபேசி அடித்து கொண்டு இருந்தது அழைப்பவர் விக்னேஷ் என்ன ஆனது என்று கேட்பதற்காக காத்து கொண்டு இருந்தான்...யாரோ ஒருவர் அந்த போனை எடுத்து இங்க வந்தவருக்கு விபத்து நடந்து விட்டது என்கிறார் பதறி அடித்து ஓடி வருகிறான், விக்னேஷ்ற்கு அவளை அந்த நிலைமையில் பார்த்தவுடன் என்ன செய்வது என்றே தெரியவில்லை..அவளை கையில் இருந்த ரிசல்ட் கவரை பிரித்து படித்து பார்த்தான்..படித்ததும் தலையில் அடித்து கொண்டு அலறினான்...அதில் ஜெயந்தி என்ற பெயருக்கு பதில் ஜெயம் என்றிருந்தது. ரிசல்ட் மாறிவிட்டதை உணர்ந்து மேலும் கதறி அழுதான். ஒரு வேனில் அவளை எடுத்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் ..பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது ஜெயந்தி ஒரு மாத கரு அவள் வயிற்றில் வளர்ந்து இருப்பதாக கூறினார்கள்....குழந்தை வேண்டும் குழந்தை வேண்டும் என்றாய் இப்போது உன் வயிறில் குழந்தை உருவாகிவிட்டது இப்போது நீ இல்லையே .....என கதறினான் ....


27 comments:

Anonymous said...

போங்க சௌந்தர் ஏன் இவளவு சோகமா முடிச்சுடிங்க ...
உண்மையாவே இவள் போல யாரும் இல்ல தான் .......

நல்லா எழுதிறிங்க...
நிச்சயம் அடுத்த கதை எழுங்கள் ஆவலுடன்..........

Anonymous said...

nan than first

கவி அழகன் said...

மனச தொட்ட கதை சௌந்தர் , ரொம்ப சோகமா போட்டு முடிவு

ஷர்புதீன் said...

இன்னும் உரைநடை ப்லோவாக வரவேண்டும், முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பிறகு உங்களுடன் போனில் பேசுகிறேன்

எஸ்.கே said...

சோகமான முடிவு!

எஸ்.கே said...

அந்த குழந்தை என்னை மாதிரியே இருக்கு!:-))

மாணவன் said...

படிக்கும்போதே நெகிழ்வாக இருந்தது அண்ணே

தொடர்ந்து எழுதுங்கள்....

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்கு சௌந்தர்....

Sriakila said...

கதை மனசை அழுத்துது செளந்தர். அனைவரும் அவசரத்தில் செய்த தவறு அது வார்த்தையாகவோ, செயலாகவோ ஒரு பெண்ணின் உயிர் போக காரணமாகிவிட்டதே...

இது உண்மைக்கதையாக இருக்க வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

S Maharajan said...

சோகமான முடிவு!

சௌந்தர் said...

@@@sriakila இது உண்மை கதை இல்லை கற்பனை தான்

dheva said...

லாஜிக் எல்லாம் பாக்காமே...............

படிக்கும் போது கதை நல்லா இருக்கு....டச்சிங்கா..! தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் மாதிரி இரு திருப்புமுனை......!

குழந்தையில்லைனா...பெண்களை ஸ்ட்ரஸ் பண்ற மாமியார்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....திருந்தணும்...

குழந்தையில்லன்னு கவலைப்படுற.... மனோநிலை மாறி.. தத்து எடுத்துக் கூட வளர்க்கலாம்னு ஒரு கான்ஸப்ட் ஏத்துக்குற ஒரு சமுதாயமா நாம மலரணும்....

தூள் கிளப்பிட்ட தம்பி............Cheer up.............!

Ramesh said...

sorry soundar.. yenakku kadhai pidikkalai... karpinip pen sagaradhai yennala kadhaila kooda rasikka mudiyadhu... yen ippadi yellam yosikkaringa..

சி.பி.செந்தில்குமார் said...

good story sowndhar.. some body comented as the climax is wrong. that is wrong. because the human mind like the happy ends. but the writer has a right to fix the climax. u r the owner of ur story.

so send it to rani weekly, evr periyar high road, chennai7

defenetely it will b selected. but wait for 2 months.

Asiya Omar said...

குழந்தையும் கொடுத்து அவளையும் பறிச்சிகிட்ட கடவுளை கோவிப்பதா?அல்லது படைப்பாளி உங்களை கோவிப்பதா?
அருமை சௌந்தர்.

செல்வா said...

அட தம்பி கதைய முடிச்சிடுச்சு !!

Abi said...

சூப்பர் ஸ்டோரி

சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க சௌந்தர்.. கவலை ஜாஸ்தி :((

அருண் பிரசாத் said...

ம்..ம்... விளங்கிருச்சு

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கதை எல்லாம் நல்லத் தான் எழுதுறீங்க.... ஆனா.. ஒரே சோகத்த பிழிஞ்சு....தமிழ் சினிமா ரேஞ்சுக்கு, க்ளைமாக்ஸ் வச்சிட்டீங்க.. :(((

ஒரே பீலிங்க்ஸ்...போங்க.. :(

ஹ்ம்ம்ம்.. ஒரு பெயர் மாற்றம்.. சரியா கவனிக்காததால்.... ஒரு உயிரே போயிருச்சே..!!

கவனமா இருக்க வேண்டியது எவ்ளோ அவசியம்..ன்னு சொல்ற மாதிரி இருக்கு.. நன்றி..!

THOPPITHOPPI said...

மண்டை ஓடு மட்டுமே மிச்சம் நீங்கள் விருது பெற்ற பின்புதான் படித்தேன் மீள முடியவில்லை. ஆனால் இது நம் கண்ணுக்கு தெரிந்ததுதான்.


தினமும் நடப்பதுதான்

Geetha6 said...

வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

சே...போ..சவுந்தர்...ரொம்ப டச்சிங் ஆ முடிச்சிட்ட..படிச்சுட்டு என்னவோ போலே மனசுக்கு இருக்கு...

மங்குனி அமைச்சர் said...

சவுந்தர்


கோபிச்சுக்காதிங்க ........... இந்த கதைல ஸ்பெசலா ஒன்னும் இல்லையே ............. நான் ஏதாவது நல்ல டேர்ன் இருக்குமின்னு நினைச்சேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir

ஆமினா said...

ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு சௌந்தர்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சோகமான முடிவு... ஆனா நல்லா எழுதி இருக்கீங்க சௌந்தர்... இன்னிக்கி நம்ம ஊர்ல சில மருத்துவமனைகள்ல இது போல கவன குறைவால எவ்ளோ உயிர்கள் போகுது... பாவம் தான்...

 
;