Tuesday, February 22

உறவுகளின் நிலை....








ஒவ்வொரு உறவுகளும் அழிந்து விட்டன யாரும் உறவுகளை மதிப்பதில்லை என்று கூறுகிறார்கள். ஆம் உறவுகள் பணத்திற்காக அழிந்து கொண்டு தான் இருக்கின்றன, ஒருவன் எதன் மீது அதிகமாக நேசம் வைக்கின்றானோ அதுவே அவனுக்கு கிடைக்கும் என்பது நியதி, .ஆம் மனிதன் பணத்தின் மீது மோகம் கொள்கிறான் அதனால் அதுவே அவனுக்கு கிடைக்கிறது முன்பு எல்லாம் உறவுகள் வேண்டும் என்று, அவர்கள் மீது பற்றுதலும் , பாசமும் இருந்தன, ஆனால் இப்பொழுது பற்றுதல் என்பது பொருளின் மீது வந்து வந்துவிட்டது. கார் வேண்டும்,A/c  வேண்டும் ,fridge வேண்டும் என்ற காரணங்களால், அவன் பணம் தேடுகிறான்.இதன் காரணமாக வீட்டை மறக்கிறான் உறவுகளை மறக்கிறான். இதனால் உறவுகள் என்பது தானாகவே அழிந்து வருகிறது. பொருள் தேடுவதற்காக மனிதன் ஓடிகொண்டே இருக்கிறான்.வாழ்க்கைக்கு தேவை பணம் ஆனால் இப்பொழுது பணமேவாழ்க்கை ஆகிவிட்டது..!!


கணவன் மனைவி வேலைக்கு செல்லும் ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்கள் குழந்தைகள் பாசத்திற்காக ஏங்கி நிற்கும் கட்சிகளையும் நாம் காண முடிகிறது (இருவர் வேலைக்கு செல்வது தவறு என்கிறீர்களா என்று கேட்காதீங்க ).பணம் தேடுவதற்காக  குழந்தைகளை இளம் வயதிலேயே விடுதிகளில் கொண்டு போய் விட்டு படிக்க  வைக்கிறார்கள்.அவர்கள் படிப்பிற்காக தான் நாங்கள் பணம் தேடுகிறோம் என்று கூறுகிறார்கள் அதுவும் உண்மை தான். நான் மறுக்கவில்லை .ஆனால் குழந்தைகள் உங்கள் மீது பாசம் வைக்கிறதா இல்லையா ? யாருக்காக நீங்கள் பணம் சம்பாதிக்க இவ்வளவு கஷ்டப்பட்டீர்களோ  அவர்கள் பின்நாளில் உங்களை தூக்கி எறிவார்கள் இது கண் கூடாக பார்த்த உண்மை.


இதற்கு என்ன தான் முடிவு ?வேலைக்கு போக வேண்டுமா வேண்டாமா..? என்பது கேள்வியல்ல.ஆண் வேலைக்கு போகவேண்டுமா?பெண் வேலைக்கு போகவேண்டுமா?என்பதும் கேள்வி அல்ல.உறவுகளுக்காக யார் விட்டு கொடுக்கிறார்கள் என்பதே என் கேள்வி?. குழந்தைகளின் சந்தோசத்திற்காக சிறிது நேரம் செலவு செய்தால் தான் என்ன..?





நம் வாழ்வில்  கூட்டு குடும்பமே இல்லாமல் போய் விட்டது...முன்பு கூட்டு குடும்பம் என்பது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, என பல பேர் இருந்தார்கள், இன்று அப்படியில்லை தாத்தா, பாட்டி இருந்தாலே அது கூட்டு குடும்பம் என்று ஆகி விட்டது ...அந்த தாத்தா, பாட்டி கூட தேவையில்லை என்று சொல்கிறார்கள், அதற்கும் காரணம் என்னவென்று பார்த்தால் பணமாக தான் இருக்கிறது, தாய் தந்தையால் பென்சன் வந்தால் அவர்களை மதிக்கிறார்கள் இல்லையென்றால் அவர்களை கண்டுகொள்வதே இல்லை, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் நமக்கு என்று பொறுப்பு வரும் அவர்கள் மீதுமரியாதை கலந்த பயம் வரும். தாத்தா பாட்டி இருந்தால் குழந்தைகளுக்கு அவர்கள் பாசம் தெரியும். பின்னாளில் தன் தாய் தந்தையை எப்படி பார்த்து கொள்ளவேண்டும் என அவர்கள் தெரிந்து கொள்வார்கள், அம்மா அப்பா வேலைக்கு சென்று விட்டால் தாத்தா, பாட்டி பார்த்து கொள்வார்கள், நமது சின்ன வயதில் என்ன விஷயங்கள் நடக்கிறதோ அது அப்படியே மனதில் பதிந்து விடும்....நான் படித்த கதை ஒரு நினைவுக்கு வருகிறது....

ஒரு குடும்பத்தில் தன் அப்பா, அம்மா...அவர்களுக்கு வயதாகி விட்டது...அவர்களுக்கு என்று தனி பாய், சாப்பிடுவதற்கு தனி தட்டு, என வைத்து பார்த்து கொண்டார்கள். இதை தினமும் அந்த வீட்டு குழந்தைகள் கவனித்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் தாத்தா, பாட்டி இறந்து போய் விட்டார்கள். அவர்கள் பயன் படுத்திய பொருட்களை எல்லாம் தூக்கி எரிந்து விட்டார்கள் அதை பார்த்த குழந்தைகள், அந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு வந்து வைத்தார்கள், அதை ஏன் எடுத்து கொண்டு வருகிறாய் என்று குழந்தைகளின் அம்மா கேட்டதற்கு உங்களுக்கும் வயதாகும் அப்பொழுது  நான் இதில் தான் உங்களுக்கு சாப்பாடு போடுவேன் என்று அந்த குழந்தை கூறும்...

உங்கள் குழந்தையிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அவ்வாறு தான் குழந்தகைளும் நம்மிடம் நடந்து கொள்வார்கள், சிறிய வயதிலே பணம், பிரிவினை பாகுபாடு என்று நீங்கள் நடந்து கொண்டாள் அதையே குழந்தை கற்று கொள்ளும். நாம் எப்போதும் முன் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் சின்ன சின்ன விஷயங்களை கூட அவர்கள் நம்மிடம்  அறியாமலே கற்று கொள்கிறார்கள் 

குழந்தைகளை தனியாக விடுவதால் வரும் விளைவு 

*  நண்பர்களுடன் இருக்கும்போது அவர்களின் கெட்ட பழக்க தொற்றிக் கொள்ளுதல்

 *  பெற்றோர் மீது அன்பு குறைகிறது அவர்கள் அன்பைத் தேடி தவறான வழிக்கு கூட செல்லலாம்...

*  சின்ன வயதில் தடம் மாறி போவார்கள். உதாரனமாக சிறு வயது குற்றவாளிகள் பலர் உருவாக காரணம் பெற்றோர்கள் அவர்களை சரியாக கவனிப்பதில்லை..
*  இதுவே ஒரு சின்ன பெண் அப்படி இருந்தால் அவள் மீது அன்பு செலுத்துவதாக இருக்கும் ஒருவர் மீது காதல் கொள்ளலாம்


*  மேலும் எது சரி எது தவறு என வழிகாட்டவும் கண்டிக்கவும் ள் இல்லாததால் வாழ்க்கை தடம் மாறுகிறது.


எனவே குழந்தைகளுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். அவர்களிடம் பள்ளியில் இருந்து  வந்தவுடன் என்ன நடந்தது என மனம் விட்டு பேசுங்கள், பிரச்சினைகளை கேளுங்கள். மாலை நேரத்தில் ஏதாவது பூங்காவிற்கு அழைத்து செளுங்கள். இது நல்ல உறவு வளரவும் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையவும் உதவும்...
                                 

                                           **********************************************'
                                                 
                                                      கேள்வி கேளுங்கள்

பதில் சொல்வதை விட கேள்வி கேட்பது சுலபம். அந்த சுலபமான வேலையை தான் உங்களுக்கு நான் தருகிறேன். நேற்று என்னை பார்த்து ஒருவன் கேட்டான். உன்னை கேள்வி கேட்க ஆள் இல்லை அதான் இப்படி இருக்கிறாய் என்று..!! அதனால் உங்களை என்னை கேள்வி கேட்க சொல்கிறேன், என்னை பற்றியும் பதிவுலகை பற்றியும் கேள்விகளை கேளுங்கள் மக்களே...அதற்காக நீ எப்போது பதிவு எழுதுவதை நிறுத்துவாய் என்று கேட்க்காதீர்கள்.... அது இப்போதைக்கு முடியாத காரியம்.....என்னை கேள்வி கேட்க உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் ....இதை விட்டால் உங்களால் என்னை பழி தீர்க்க முடியாது. உங்கள் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள் நான் பதிலை பதிவாக வெளியிடுகிறேன்.



39 comments:

மாணவன் said...

வணக்கம் மச்சி :) படிச்சுட்டு வரேன்

மாணவன் said...

இன்றைய உறவுகளின் நிலையையும் குழந்தைகளின் மன நிலையையும் தெளிவான பார்வையுடன் சிறப்பாவே எழுதியிருக்க மச்சி வாழ்த்துக்கள் :)

மாணவன் said...

//பதில் சொல்வதை விட கேள்வி கேட்பது சுலபம். அந்த சுலபமான வேலையை தான் உங்களுக்கு நான் தருகிறேன்.//

கேள்வி கேட்கனுமா?? இரு நான் போயி யோசிச்சுட்டு வரேன்... :))

ஆனந்தி.. said...

//என்னை கேள்வி கேட்க உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் ....இதை விட்டால் உங்களால் என்னை பழி தீர்க்க முடியாது. உங்கள் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள் நான் பதிலை பதிவாக வெளியிடுகிறேன். //

அந்த பட்டாம்பூச்சி ,ரோஜாபூ னு கவிதையா ஊடு கட்டினியே...சொல்லு...யாருப்பா தம்பி அந்த பொண்ணு..?? :)))

இம்சைஅரசன் பாபு.. said...

தெளிவான அலசல் சௌந்தர் ....ரியலி சுபெர்ப் ...

மாணவன் said...

ok lets start :)

1.பதிவுலகம் மூலம் கற்றுகொண்டது என்ன?

2.பதிவுலகம் மூலம் அடைந்த நன்மைகள்?

3.பதிவுலக நண்பர்களைபற்றி?

4.வளர்ந்துவரும் பதிவுலகம்பற்றி உங்கள் பார்வையில்??

5.பிரபல பதிவர் - விளக்குக?? :))

சக்தி கல்வி மையம் said...

உறவுகளைப் பற்றிய விரிவான அலசல். அருமை...

இம்சைஅரசன் பாபு.. said...

கேள்வி கேக்கணுமா இதோ நான் கேக்குறேன் ....என் பொண்ணுக்கு social science நேத்து சொல்லி கொடுத்து கொண்டு இருந்தேன் ....அதில் உள்ள ஒரு கேள்விக்கு சரியான பதில் வேண்டும் ..

1.Where do you live ?

இப்படி கேள்வி கேட்டு இருந்துச்சு ..
அதுக்கு விடை

We live in Kovilpaati அப்படின்னு இருந்துச்சு ...நானும் இதை சொல்லி கொடுத்தேன் ...

என் பொண்ணு உடனே ...அப்போ நாம ..

We live in Home ன்னு சொல்ல கூடாத அப்பா என்றாளே ..

(எவனாவது இது நீ பல்பு வாங்குனது ஆப்டின்னு சொன்னீங்க ..பிச்சு போடுவேன் பிச்சு ..)

சௌந்தர் இதுல எது சரி சொல்லு பாப்போம் ....(ஹி ..ஹி ..முதல் கேள்வி வாட ராசா )

சக்தி கல்வி மையம் said...

பிரபல பதிவர்கள் என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு ஏன் கருத்துரை இடுவதில்லை??

Chitra said...

பதிவுகள் எழுதுவதால், இப்பொழுது இந்த அளவுக்கு maturity - அறிவு முதிர்ச்சி வந்ததா? இல்லை, அந்த முதிர்ச்சி வந்தததால், பதிவு எழுத வந்தீர்களா?

எஸ்.கே said...

பெற்றோர்களின் கவனக்குறைவால் கெட்டுப்போன குழந்தைகள் இங்கே நிறைய உண்டு. சிறுவயதில் நல்ல வழிகாட்டுதலே மனிதனை சிறப்பானவராக்கும்!

மாணவன் said...

1.மச்சி உனக்கு பதில் தெரியாத கேள்வி எது?

2.நீங்கள் எழுதியதிலேயே பிடித்த பதிவு எது? :)

3. நீங்கள் படித்ததிலயே பிடித்த பதிவு எது?

4. .உங்களிடம் உங்களுக்கு பிடித்தது?

5.எதிர்கால லட்சியம்??

6. உங்களைப்பற்றி இரண்டே வரியில்??

7. மச்சி கூஹிள் பஸ்ல ஒரே கவிதாவா இருக்கே அதற்கு காரணம் யாரு??? ஹிஹி

8.மச்சி உனக்கு கல்யாணம் எப்போ?

9. பெண்களிடம் பிடித்தது? :))

10. ரசிகன் - எதற்கு??

போதுமா மச்சி இன்னும் கேட்கனுமா??

எஸ்.கே said...

எனது கேள்விகள்:-))

1. ரசிகன் என்ற பெயரை வலைப்பூவுக்கு வைக்க காரணம்?
2. வலைப்பூவுக்கு முன் பின் உங்கள் வாழ்க்கை பற்றி???

சௌந்தர் said...

@@@மாணவன்..மச்சி ரொம்ப நல்லா கேள்வி கேக்குறே.....போதும் சொல்லவா இன்னும் கேளு சொல்லவா...இதுக்கு எனக்கு பதில் சொல்ல தெரியலை

மாணவன் said...

//சௌந்தர் சொன்னது… 14
@@@மாணவன்..மச்சி ரொம்ப நல்லா கேள்வி கேக்குறே.....போதும் சொல்லவா இன்னும் கேளு சொல்லவா...இதுக்கு எனக்கு பதில் சொல்ல தெரியலை//

நன்றி மச்சி,நம்ம கேள்வி போதும் அடுத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம்.. :))

இம்சைஅரசன் பாபு.. said...

எலேய் சௌந்தர் எனக்கு பதில் சொல்லு ...பிச்சு போடுவேன் பிச்சு

சௌந்தர் said...

எலேய் சௌந்தர் எனக்கு பதில் சொல்லு ...பிச்சு போடுவேன் பிச்சு////

சொல்றேன் சொல்றேன் அடுத்த பதிவில் சொல்றேன்

sathishsangkavi.blogspot.com said...

அருமையான அலசல்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1.பதிவுலகம் மூலம் கற்றுகொண்டது என்ன?

2.பதிவுலகம் மூலம் அடைந்த நன்மைகள்?

3.பதிவுலக நண்பர்களைபற்றி?

4.வளர்ந்துவரும் பதிவுலகம்பற்றி உங்கள் பார்வையில்??

5.பிரபல பதிவர் - விளக்குக?? :))//

repeattu.. hehe

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவசியம் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். சந்தோசமான வாழ்க்கைக்கு பணம் ஒரு முக்கியத் தேவைதான், ஆனால் பெரும்பாலும் முடியை விற்று சீப்பு வாங்கிய கதைதான் நடக்கிறது.....

Sriakila said...

பதிவுலகம் மூலம் நீ அடைந்த நன்மைகள் என்ன? இதனால் ஏற்பட்ட சங்கடங்கள் என்ன?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்று பணத்தை மையமாக வைத்து தான் இந்த உலகமே சுற்றிக் கொண்டு இருக்கிறது..

இதில் உறவுகளுக்கு இடம் தருவதில்லை...

காசேதான் கடவுளடா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

Anonymous said...

கூட்டுக்குடும்பத்துல வம்பிழுத்து சமாதானம் ஆகுற சுகமே தனிதான்

சி.பி.செந்தில்குமார் said...

சவுந்தர் நேத்து நைட் வரை நல்லாதான் இருந்தார்.. கூகுள் பஸ் ல கவிதை எல்லாம் விட்டார்.. ஹூம் பாவம் நல்ல மனுஷன்

Madhavan Srinivasagopalan said...

1 ) எதுக்காக நீங்க பதிவுலத்தில எழுதறீங்க ?

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை பாபு

//We live in Home //

உங்க வீடு என்ன ஜனாதிபதி மாளிகையா? சொன்னதும் தெரிய? கோவில்பட்டி சொன்னா நாலு பேருக்கு தெரியும். நீங்க வட இந்தியாவுல இருக்க அப்போ கேட்டா தமிழ்னாடு சொல்லனும். அதுவே நீங்க அமெரிக்கா போய் இருக்க அப்போ இந்த கேள்வி கேட்டா India அப்படினு சொல்லனும். சின்னபுள்ளைக்கு பதில் சொல்ல தெரியாம முழிக்கிறாதே பொழப்ப்ப்ப்ப்பு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனது கேள்விகள்:

1. இதுவரை யாருக்குமே தெரியாமல் நீங்கள் காத்து வரும் ஒர் ரகசியம், (எங்களிடம் வெளியிட முடிந்தால்).. என்னவென்று சொல்ல முடியுமா...?

2. இப்படி இருந்திருக்கலாம், நடந்திருக்கலாம் என்று ஆசைப்பட்ட விஷயங்கள்...?

3. உங்கள் பதிவில் பிடிக்காத விஷயங்கள், பிடிக்காத பதிவுகள், & காரணம்?

4. எனக்கு ஒரு அறிவுரை சொல்ல வேண்டும் என்றால், உங்கள் அறிவுரை என்ன?

5. பாபா ரஜினிக்கு கிடைத்தது போல் மூன்று வரங்கள் கிடைத்தால் எப்படி பயன்படுத்துவீர்கள்?

karthikkumar said...

மச்சி நல்லா எழுதி இருக்க....:)) கேள்வி கேக்கணுமா, நெனச்ச கேள்விகள் எல்லாம் மாணவனே கேட்டுட்டாரே....

karthikkumar said...

பதிவுலகம் வந்த பிறகு இணையத்திற்கு அடிமை ஆகிவிட்டேன் என்று உணர்ந்தது உண்டா?....

ஸாதிகா said...

அருமையான அலசல் பாராட்டுக்கள்.

Kousalya Raj said...

பெற்றோர்களை முன் மாதிரியாக கொண்டு தான் பிள்ளைகள் வளருகிறார்கள், அதனால் அவர்கள் முன் கணவன், மனைவி தங்கள் கருத்துவேறுபாடுகளை வெளிபடுத்தி சண்டை இடாமல் பார்த்துகொண்டாலே போதும்.

பணம் சம்பாதிப்பது, சொத்து சேர்ப்பது மட்டுமே முக்கியம் என்று குழந்தைகளை கவனிக்காமல் ஓடினால் அந்த பெற்றோரின் எதிர்காலம் முதியோர் இல்லத்தில் தான் கழியும்.

சௌந்தர் இங்கே சொன்ன மாதிரி குழந்தைகளுடனும் சிறிது நேரத்தையாவது செலவிடவேண்டும். அந்நேரத்தில் நாமும் சிறு குழந்தையாய் மாறி, நமது அன்றைய நாளின் வேலை களைப்பை மறந்துவிடுவோம்.

பொறுப்பான அக்கறையான பதிவு. நன்றி சௌந்தர்.

Kousalya Raj said...

நிறைய கேள்விகள் கேட்டு இருக்காங்க...

கேள்விக்கான பதில் பதிவிலா ?? அடுத்த பதிவிற்காக வெய்டிங் !! :))

MANO நாஞ்சில் மனோ said...

//* பெற்றோர் மீது அன்பு குறைகிறது அவர்கள் அன்பைத் தேடி தவறான வழிக்கு கூட செல்லலாம்...//

ஜாக்கிரதை.....

சீமான்கனி said...

உறவுகளின் சிறப்பாய் பற்றி ஆழமான பார்வை அருமை. சௌந்தர் ஜி...எனக்கு ரெம்ப நாளா உங்களிடம் கேட்க்க ஒரு கேள்வி இருக்கு நீங்க எப்படி இவ்வளவு இளமையா இருக்கீங்க???சொல்லணும் ஆமாம்...

வசந்தா நடேசன் said...

எனக்கென்னவோ, தல கேள்வி கேட்டு ஒரு வாரத்துக்கு மேட்டர் ரெடி பண்ணிக்கொண்டது போல ஒரு பீலிங்கு!! இதிலிருக்கும் உள்குத்தை தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன்.

சௌந்தர் said...

வசந்தா நடேசன் சொன்னது…
எனக்கென்னவோ, தல கேள்வி கேட்டு ஒரு வாரத்துக்கு மேட்டர் ரெடி பண்ணிக்கொண்டது போல ஒரு பீலிங்கு!! இதிலிருக்கும் உள்குத்தை தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன்.///

இதை வைத்து ஒருவாரம் ஓடினால் எல்லாம் அடிக்க வருவார்கள்...ஒரு நாள் தான்

ப்ரியமுடன் வசந்த் said...

நட்சத்திர வாரத்தின் முதல் பதிவே அருமையான சமூக அக்கறையான பதிவு..

நட்சத்திர வாழ்த்துகள் சௌந்தர் பட்டைய கிளப்புங்க...

கேள்வி : ஒரு இளம்பெண் உங்களை பார்த்த முதல் நாளிலே காதல் கொண்டு உங்களிடம் காதலை சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? இல்லையென்றால் அதற்கு விளக்கம் ஆமாம் என்றால் அதற்கும் விளக்கம் தேவை...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super post Soundar... kalakkal :)

 
;