காலை குளிர் நிலா பிரிந்திடலாம்
மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்
நம் ஆன்ம ஜீவன் கூட கரைந்திடலாம்
என் நிழலுக்கு துணையாய்
என்னோடு நீ மட்டும் என்றென்றும்....!
மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!
உருகிக் கொண்டிருக்கிறேன்
உன் கரிசனத்தால்....!!
பாசம் காட்டி கொல்பவள் நீ மட்டும் தான்!!!
மாலை நேர பூவாய்
மலர்ந்தாய் என்
மனதில்...!
பிரிகிறேன் என்றவுடன்
மீண்டும் மலர்ந்தாய்
ஆழமாக...!!!!
வாடாமல் பூத்து
மலர்கிறாய்
மனதில்....
தினம்..தினம்...!!!
குட்டிகுட்டி சண்டையிடும்
ராட்சஷியும் நீயே!
நித்தம் கொஞ்சும்
குழந்தையும் நீயே!
அன்பை வாரிதருவதில்
அன்னையும் நீயே!
மொத்தத்தில் என் அகத்தில்....
உனக்கு நிகர் நீயே...!
தனிமை
என்னையும் காதலிக்கிறது??
நீ தனிமையை
நேசிப்பதால்...
சூரியனை சுற்றும்
கோள்கள் போலே
என்னை சுற்றும் உன் நினைவுகளுக்கும்
என்றும் குறைவு இல்லை என் தோழியே !!
கரம் நீட்டுகிறேன்
வா என்னோடு...
வாழ்க்கை இருக்கும்
வரை கைகோர்த்து நடக்கலாம்
நட்போடு !!!
Tweet | |||||
46 comments:
Vadai,
Gayathri .M
Vadai
Gayathri.
கவிதை.. கவிதை...
ஹ்ம்ம்.. பிரமாதம்.. கலக்குறீங்க போங்க :-)))
//குட்டிகுட்டி சண்டையிடும்
ராட்சஷியும் நீயே!
//
...இப்பிடித் தான் சைக்கிள் கேப்-ல ராட்சசின்னு அவங்கள திட்டுறதா?? :)
mm kalakku raasa
கவிதை பிரமாதம்
தம்பிக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சோ!
என்ன இது சின்ன புள்ளதனமா கமெண்ட் மாடரேஷன் எல்லாம் வெச்சிக்கிட்டு
அருமைான கவிதை.
//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!
உருகிக் கொண்டிருக்கிறேன்
உன் கரிசனத்தால்....!!//
...எனக்கு ஒரு சுமால் டவுட்..
அதான் பிளான் பண்ணித்தானே.. தீக்குச்சியா.. வந்திருக்காங்க..
அப்புறம் என்ன.. உருகிரேன்.. மருகிரேன்னு புலம்பல்..! :-))
//பாசம் காட்டி கொல்பவள் நீ மட்டும் தான்!!!//
...இவ்ளோ நாள் விட்டு வச்சதே அவங்க பெரிய மனச காட்டுது.. :-))
@ரமேஷ்
//mm kalakku raasa //
டேய் வெண்ணை!! இந்த கமெண்ட் எல்லாம் பொது மக்கள் பார்த்துபாங்க. நாம நம்ம வேலை பார்ப்போம்.. :))
Nice.,
@சௌந்தர்
//மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்//
என்னாது மாலையில் வெண்சூரியனா? மதியம் தான் சூரியன் வெண்மையா இருக்கும். மாலையில் மஞ்சளாதான இருக்கும்? விளக்கம் தேவை... :))
@சௌந்தர்
//தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!//
அப்போ தீபெட்டி யாரு? :)
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@சௌந்தர்
//மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்//
என்னாது மாலையில் வெண்சூரியனா? மதியம் தான் சூரியன் வெண்மையா இருக்கும். மாலையில் மஞ்சளாதான இருக்கும்? விளக்கம் தேவை... :))////
கலரா பிரச்னை சூரியன் மறைந்தா போதும்.....
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்
//தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!//
அப்போ தீபெட்டி யாரு? :)///
அதானே யார் அது......
@சௌந்தர்
//பிரிகிறேன் என்றவுடன்
மீண்டும் மலர்ந்தாய்
ஆழமாக...!!!!//
அம்புட்டு சந்தோஷம் விட்டு போறதுல... :)
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்
//பிரிகிறேன் என்றவுடன்
மீண்டும் மலர்ந்தாய்
ஆழமாக...!!!!//
அம்புட்டு சந்தோஷம் விட்டு போறதுல... :)////
ஆமா ரொம்ப சந்தோஷம் தான்
@சௌந்தர்
//சூரியனை சுற்றும்
கோள்கள் போலே
என்னை சுற்றும் உன் நினைவுகளுக்கும் //
சனி அப்படினு ஒரு கோள் கூட சூரியனை சுத்துதாமில்ல.. :)
ஆஹா...மகளிர் தினத்தில் ஒரு அருமயான கவிதை
@சௌந்தர்
/வாழ்க்கை இருக்கும்
வரை கைகோர்த்து நடக்கலாம்
நட்போடு !!!//
நடுவுல கொஞ்ச நேரம் உக்காந்து ரெஸ்ட் எடுத்துட்டு போ ராசா. கால் வலிக்க போகுது.. :)
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்
//சூரியனை சுற்றும்
கோள்கள் போலே
என்னை சுற்றும் உன் நினைவுகளுக்கும் //
சனி அப்படினு ஒரு கோள் கூட சூரியனை :)////
ஆமா ஆமா அப்படி ஒன்னு இருக்கு ஆனா அந்த பக்கம் போறது இல்லை
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்
/வாழ்க்கை இருக்கும்
வரை கைகோர்த்து நடக்கலாம்
நட்போடு !!!//
நடுவுல கொஞ்ச நேரம் உக்காந்து ரெஸ்ட் எடுத்துட்டு போ ராசா. கால் வலிக்க போகுது.. :)////
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி டெரர்....அப்படியே ரெஸ்ட் எடுத்துட்டு போறோம்...!!!!
நல்லாருக்கு மச்சி வாழ்த்துக்கள் :)
ரைட் மச்சி வாழ்க்கை இருக்கும் வரை நடக்கலாம்னு சொல்லுறியே ?
எவ்ளோ தூரம் நடப்பீங்க ? கால் வலிக்காதா ? ஹி ஹி
//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!
/
ஹி ஹி ஹி .. எப்படியோ எரியப் போற ..
//தனிமை
என்னையும் காதலிக்கிறது??
நீ தனிமையை
நேசிப்பதால்...//
அருமையாய் இருக்கிறது சகோ :)
வரிகள் இயல்பாய் ஒரு நல்ல கவிதை
சௌந்தர், உங்கள் கவிதைகள் மெருகேறி வந்துள்ளது நன்கு தெரிகிறது. அழகு! பாராட்டுக்கள்!
//காலை குளிர் நிலா பிரிந்திடலாம்
மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்
நம் ஆன்ம ஜீவன் கூட கரைந்திடலாம்
என் நிழலுக்கு துணையாய்
என்னோடு நீ மட்டும் என்றென்றும்//
ஜீவன் கரைஞ்சு போன பின் உன்னோட எப்படி டா வரும் ...கற்பனைக்கு ஒரு அளவு இல்லையா சாமி ..போடா ..நீங்களும் உங்க கவிதையும்
//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!
உருகிக் கொண்டிருக்கிறேன்
உன் கரிசனத்தால்....!!
பாசம் காட்டி கொல்பவள் நீ மட்டும் தான்!!//
தீ குச்சி வச்சி மட்டும் எப்படி மெழுகுவர்த்தி பத்த வைப்பா ...அதை உரசுவதர்க்கு பெட்டி வேணும்ல ..லூசு பயலே ..
ஒவ்வொரு கவிதையும் உணர்வாய், அழகாய்,அருமையாய், மென்மையாய்,மிக தெளிவாய் !!
ரசித்து படித்தேன் சௌந்தர் !
வாழ்த்துக்கள்.
@பாபு...
//தீ குச்சி வச்சி மட்டும் எப்படி மெழுகுவர்த்தி பத்த வைப்பா ...அதை உரசுவதர்க்கு பெட்டி வேணும்ல//
இந்த தீக்குச்சி வரும் போதே எரிஞ்சிட்டே வந்திருக்கும்...! :))
அன்பு....
நேசம்....
பாசம்....
கவிதை...
nice feeling
////////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்
//மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்//
என்னாது மாலையில் வெண்சூரியனா? மதியம் தான் சூரியன் வெண்மையா இருக்கும். மாலையில் மஞ்சளாதான இருக்கும்? விளக்கம் தேவை... :))////////////
டேய்ய்ய் அதெல்லாம் ஜனங்க கேப்பாங்கடா.... நீ போயி ஆணிய புடுங்கு..........!
//கரம் நீட்டுகிறேன்
வா என்னோடு...
வாழ்க்கை இருக்கும்
வரை கைகோர்த்து நடக்கலாம்
நட்போடு !!!//
உயிர்ப்பான கவிதை அசத்தல்...
//கலரா பிரச்னை சூரியன் மறைந்தா போதும்.....//
ஆளை விட்டா போதும் ஹா ஹா ஹா ஹா....
//தீ குச்சி வச்சி மட்டும் எப்படி மெழுகுவர்த்தி பத்த வைப்பா ...அதை உரசுவதர்க்கு பெட்டி வேணும்ல ..லூசு பயலே ..//
அட கொக்கா மக்கா.....
ரொம்ப அழகா இருக்கு சௌந்தர்.
பொருத்தமான அழகான கவிதை ..வாழ்த்துக்கள் :)
அம்மா பகவான் - கறுப்பு உண்மைகள்-பாகம் 1
நல்லா இருக்கு சௌந்தர்
கவிதை மிகவும் ரசிக்கும் வகையில் அருமையாக உள்ளது சவுந்தர். கவிதையை முடித்த விதம் பிரமாதம் போங்க...!!!
//மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!
உருகிக் கொண்டிருக்கிறேன்
உன் கரிசனத்தால்....!!
பாசம் காட்டி கொல்பவள் நீ மட்டும் தான்!!!//
ரசித்த வரிகள்...சௌந்தர்
அவங்களுக்கு வாழ்த்துகளை சொல்லிவிடுங்க...
அருமயான கவிதை.வாழ்த்துக்கள்.
Super...:)))
(micham ellam thani kummiyaa varum...:)))
Post a Comment